Facebook Twitter RSS

சிரியா ராணுவம் கடும் யுத்தத்தின் பின் கைப்பற்றிய ‘ஹொம்ஸ் நகரம்’ பார்க்க வேண்டுமா?



சிரியாவில் நடைபெரும் உள்நாட்டு யுத்தத்தில், சுமார் ஒரு மாத கால முற்றுகையின் பின் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஹொம்ஸ் நகரம் ராணுவத்திடம் வீழ்ந்தது குறித்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஹொம்ஸ் நகரம் இப்போது ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.
ரஷ்யா மற்றும் ஈரானின் பின்னணி உதவிகளுடன் யுத்தம் புரிந்துவரும், சிரியா ராணுவம், ஹொம்ஸ் நகரை கைப்பற்றியதுடன், மிக முக்கிய வெற்றி ஒன்றை பெற்றிருக்கிறது. இந்த வெற்றியைக் கொடுத்த யுத்தம், எவ்வளவு மூர்க்கமாக நடந்தது என்று பார்க்க வேண்டுமா?
அதற்கு யுத்தத்தின் பின் ஹொம்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களின் இன்றைய தோற்றம் எப்படி இருக்கிறது என்று பார்த்தாலே புரிந்துவிடும். கீழேயுள்ள லிங்கில், யுத்தத்தின் பின் ஹொம்ஸ் பகுதி எப்படியுள்ளது என்று காட்டும் சில போட்டோக்களை தேர்ந்தெடுத்து தந்திருக்கிறோம்.
தற்போது ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள ஹொம்ஸ் நகரம்தான், சிரியா அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட இடம். போராளி அமைப்பினர் இந்த நகரை ‘சுதந்திரத்தின் தொடக்கம்’ என்று அழைத்து வந்தனர். ஒரு காலத்தில் 6.5 லட்சம் மக்கள் வசித்த நகரம் இது. சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமும் இதுதான்.
இதுவரை சிரியாவில் நடந்த யுத்தத்தில், மிகக் கடுமையாகவும் மூர்க்கமாகவும் யுத்தம் நடைபெற்றதும், இங்குதான்.
போராளி அமைப்பினருக்கு ஆதரவான மக்கள் வசித்த இந்த நகரத்தில் இருந்து, போராளிப்படையினர் அனைவரையும் வெளியேற்றுவதற்காக ராணுவம், ஒவ்வொரு பில்டிங்காக குறிவைத்து தாக்கியது. பெரும்பாலும் ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்தான். ராக்கெட் வந்து விழுந்து வெடிப்பதில் இருந்து தப்பித்த பில்டிங்கே நகரில் கிடையாது.
1-வது, 2-வது 3-வது போட்டோக்கள் ஏரியல் வியூவில் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ட்ராபிக் ஜாம் ஏற்படும் வீதிகள், மக்கள் கூட்டம் அலைமோதும் சந்தைகள், பளிளிகள், வீடுகள் எல்லாம் எப்படி மாறிப்போய் உள்ளன பாருங்கள். நகரமே ஏதோ புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால நகரம் போல இருப்பதை பாருங்கள்.
4-வது போட்டோவில் நீங்கள் பார்ப்பதுதான், பிரபல காலித் அபின் அல்-வாலித் பள்ளிவாசலின் உட்புறம். ஒரு காலத்தில், உலகின் பல பகுதிகளில் இருந்தும் இஸ்லாமிய யாத்திரிகர்கள் வந்து சென்ற இடம் இது. இப்போது அதன் தோற்றத்தை பாருங்கள்.
5-வது போட்டோ, ஹொம்ஸ் நகருக்கு வெளியேயுள்ள புறநகரப் பகுதியில் எடுக்கப்பட்டது. இங்கு பெரிதாக தாக்குதல்கள் நடைபெறவில்லை என்பதை, அப்பார்ட்மென்ட் பில்டிங்குகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ராணுவம் இங்கே வருவதற்குமுன், போராளி அமைப்பினரால் வெடிக்கப்பட்ட கார் வெடிகுண்டு சேதமாக்கிய கார் ஒன்று வீதியோரமாக நிற்பதை பாருங்கள்.
6-வது போட்டோவில், பிசாசு நகரம்போல வெறிச்சோடியுள்ள ஹொம்ஸில், ராணுவ வீரர்கள் ரோந்து புரிவதை காணலாம். இடிந்த பில்டிங்குகளுக்குள் ஒருவேளை போராளிப்படையினர் இருந்து தாக்கலாம் என்பதால், இடிந்த பில்டிங் பில்டிங்காக தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபடுவதை 7-வது போட்டோவில் பாருங்கள்.
8-வது போட்டோ ஒரு கிளாசிக் ஷாட். இடிந்து நொருங்கிய பில்டிங்குகள் உள்ள குறுகலான வீதி ஒன்றின் ஊடாக, ராணுவ டாங்கி ஒன்று ரோந்து செய்வதை பாருங்கள்.
இறுதி போட்டோவில் இந்த நகரத்தை கைப்பற்றிய சிரியா ராணுவத்தில் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், தாம் வெற்றிபெற்ற இடத்தில் நின்று போஸ் கொடுப்பதை பாருங்கள். தமது சொந்த நாட்டுக்குள் உள்ள ஒரு நகரத்தை இப்படி இடித்து தள்ளியிருப்பதில் இவர்களுக்கு மனவருத்தம் கிடையாதா?
போட்டோக்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.
see the photos of homes city



SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: