Facebook Twitter RSS


மும்பை ரெயில் குண்டு வெடிப்பு புலனாய்வுத்துறையின் "டேப் - சதி" நீதிமன்றத்தில் அம்பலம்!

மும்பை குண்டுவெடிப்பில், தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாக கொண்டு, முஸ்லிம்கள் கைது செய்யப்பட வழக்கில், மேற்படி தொலைபேசி உரையாடல் குறித்த (CDR) "டேப்" அழிந்து விட்டதாக, கூறி நீதிமன்றத்தில் தலைகுனிந்து நின்றது,புலனாய்வுத்துறை.சென்ற ஆண்டில் "மும்பை லோக்கல் ரெயிலில்" குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட வழக்கில், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், கமால் அஹ்மத் அன்சாரி, டாக்டர் தன்வீர் அஹ்மத், முஹம்மத் பைசல் ஷேக், இஹ்திஷாம் சித்தீகி, முஹம்மத் மாஜித் ஷரீப், ஷேக் ஆலம், முஹம்மத் சாஜித் அன்சாரி, அப்துல் வாஹித், முசம்மில், சுஹைல் மஸ்வூத், சமீர் அஹ்மத், நவீத் ஹுசைன் மற்றும் ஆசிப் கான் ஆகிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக "ஜம்யியதுல் உலமா" (அர்ஷத் மதனி) சார்பில் தொடரப்பட்ட வழக்கில், முஸ்லிம்கள் சார்பில் ஆஜரான வக்கீல்களின் சரமாரிக்கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியாமல் திணறினார்,புலனாய்வுத்துறை சார்பில் ஆஜரான "அடிஷனல் சாலிசிட்டர் ஜெனெரல்" தார் யூஷ் கம்பாட்டா. குறிப்பாக, "தொலைபேசி உரையாடல்"களை முக்கிய ஆதாரமாக புலனாய்வுத்துறை கூறியிருந்தபடியால், அந்த உரையாடல்கள் அடங்கிய "டேப்" ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோரினர்,முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்கள். கைது செய்யப்பட்டவர்கள், குண்டுவெடிப்பின் போது சம்பவ இடத்தில் இருந்ததாக, புலனாய்வுத்துறை கூறியிருந்தது. மேலும், அவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதாக சொல்லப்படும் உரையாடல்கள் மற்றும் சம்பவம் நிகழ்ந்த போது அவர்கள் எங்கிருந்தனர்? போன்ற "தொலைதொடர்பு" ஆதாரங்கள் குறித்து கேள்வியெழுப்பியபோது, அது குறித்த ஆவணங்கள் அழிந்து விட்டதாக, அரசு வக்கீல் கூறினார். இதை கேட்டு கடும் கோபமடைந்தார் நீதிபதி "அபை தப்சே". தொலைபேசி உரையாடல் அழிந்து விட்டதென்றால், புலனாய்வுத்துறை அதிகாரிகளை-குறிப்பாக, கைது நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய "ராகேஷ் மாரியா" என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கோரிக்கை விடுத்தனர், நமது வழக்கறிஞர்கள். இதை குறித்துக்கொண்ட நீதிபதி, முதல்கட்ட "வாத-பிரதிவாதங்களுக்கு பிறகு, அது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடும்போது, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள், அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதர்கள், சம்பவ இடத்தில் அவர்கள் இருக்கவுமில்லை, தொலைபேசியில் பரஸ்பரம் பேசிக்கொள்ளவுமில்லை என்று வாதிட்டனர். அத்துடன், குறிப்பிட்ட நாளின்போது, இவர்கள் எந்த எல்லைகளில் இருந்தனர்? யாரோடு பேசினர்? போன்ற எல்லா விவரங்கள் குறித்தும், உரிய தகவல்கள்களை வழங்கிட, சம்மந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில், "ஜம்யியதுல் உலமா" சார்பில், யோக் சௌத்ரி, ஷரீப் ஷேக், வஹாப் கான், மற்றும் அன்சாரி தம்போலி ஆகியோர் வாதாடினர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அன்று (19/10/2012) "அக்பர் ஆபாதி" பள்ளிவாசல் தீர்ப்பு!


டெல்லி "சுபாஷ் பார்க்" வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய "அக்பர் ஆபாதி" பள்ளிவாசலை இடிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. (சென்னை "கோயம்பேடு" பஸ் நிலையம் எதிரில் "பூங்கா"விற்குள் பிரம்மாண்டமான "கோவில்" உள்ளது,கவனிக்கத்தக்கது). 400 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க இந்த பள்ளிவாசல், "முதல் விடுதலை போரின்போது" வெள்ளையரால் இடிக்கப்பட்டது.பிறகு இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களால் மறுநிர்மாணம் செய்யப்பட்டது. கடந்த ஜூன் 2012 வரை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ உள்ளிட்ட 5 நேரத்தொழுகைகள் நடைபெற்று வந்த நிலையில், கோர்ட்டு உத்தரவுப்படி பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை, இம்மாதம் அக்டோபர் 11 அன்று, டெல்லி ஹைகோர்ட்டில், நீதிபதிகள் எஸ்.கே.கோல், ராஜீவ் மற்றும் எம்.எல்.மெஹ்தா ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்றது. இறுதி விசாரணையின்போது, பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோர்ட் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை இன்றைக்கு (19/10) ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் மொத்தம் 5 தரப்பினர் சேர்ந்துக்கொண்டனர். முஸ்லிம்கள் தரப்பில், டெல்லி "மட்டியா மஹல்" தொகுதி எம்.எல்.ஏ.வான ஷுஐப் இக்பால், தனது வக்கீல்கள் மூலம், தொழுகை நடத்திட அனுமதி கோரினார். இதை "ஹிந்து மகாசபை" வக்கீல்கள், எஸ்.டி.பந்தீஷ் மற்றும் அமன் லக்கி ஆகியோர் எதிர்த்தனர். பழமை சின்னங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பள்ளிவாசலை இடிக்க தேவை இல்லை என்றும், முழுமையான ஆதாரங்கள் திரட்ட கால அவகாசம் கோரப்பட்டது. டெல்லி மாநகராட்சியின் வக்கீல் "சேத்தன் ஷர்மா" மற்றும் டெல்லி போலீசின் வக்கீல் "பவன் ஷர்மா" ஆகியோர் வாதிடுகையில், முஸ்லிம்களின் பிரதிநிதியான ஷுஐப் இக்பால், தனது பொறுப்பில் பள்ளியை இடிக்கும்படி, கோர்ட் உத்தரவிடவேண்டும்,என்று வாதிட்டனர். இது குறித்து எம்.எல்.ஏ., இக்பால் கூறும்போது, எனது உயிரை விட்டாலும், பள்ளிக்கு சிறு குந்தகம் ஏற்படவும் விடமாட்டேன் என்றார். அதே நேரம், இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ள நிலையில், அல்லாஹ்விடம் அதிமதிகம் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் எம்.எல்.ஏ. இக்பால் தலையிட்டுள்ளதால், அவருக்கு அரசின் சார்பில் பல தொல்லைகள் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பத்திரிகையாளர் செய்யித் முஹம்மத் அஹமத் காஸ்மியை பிணையில் விடுதலை!உச்சநீதிமன்றம்


கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் செய்யித் முஹம்மத் அஹமத் காஸ்மியை உச்சநீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே பிப்ரவரி 13 அன்று ஒரு காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பத்திரிகையாளர் காஸ்மியின் மகன் ஷவ்ஸாப் காஸ்மி இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட முதல் நாள் முதலே தன்னுடைய தந்தை அப்பாவி என்று தாங்கள் கூறி வந்ததாகவும், இந்த நம்பிக்கையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார். “நான் இந்த நீதிமன்றத்தை நம்புகின்றேன். என் தந்தைக்கு ஆதரவாகக் கூட நின்ற அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார். 50 வயது நிரம்பிய பத்திரிகையாளர் காஸ்மியை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்து மார்ச் 6ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்று இவரைக் கைது செய்த பின் அப்பாவி சிறுபான்மையினரைக் குறி வைப்பதில் பெயர் போன டெல்லி போலீஸ் கூறியது. ஆனால் ஊடகச் சகோதரர்கள் விடவில்லை. அவரது வழக்கில் நிறைய ஓட்டைகள் இருப்பதை அவர்களும், காஸ்மியின் குடும்பத்தாரும் சுட்டிக்காட்டினர். தலைமை நீதிபதி அல்தமஸ் கபீரின் தலைமையில் கூடிய அமர்வு அவருக்கு ஜாமீன் வழங்கியது. அத்தோடு அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. பத்திரிகையாளர் காஸ்மி கைது செய்யப்பட்டவுடன் “காஸ்மி ஆதரவுக் குழு” ஒன்று உருவாக்கப்பட்டது. அவரது விடுதலைக்காக பாடுபட்டு வந்த இந்த அமைப்பில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஒருங்கிணைந்திருந்தனர். பத்திரிகையாளர் காஸ்மி பிணையில் விடுதலை செய்யப்பட்டதை “காஸ்மி ஆதரவுக் குழு” வரவேற்றுள்ளது. ஆனால் அரசுத் தரப்பிலிருந்தும், டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவிலிருந்தும் காஸ்மிக்குக் கொடுக்கப்பட்ட தடங்கல்களை அது விமர்சித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவதற்குண்டான கால வரையறைக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியவில்லை டெல்லி போலீசாரால். இருந்தபோதிலும் அவரை சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவர்களுக்கு இருந்தது என்று காஸ்மி ஆதரவுக் குழுவினர் கூறினர். ஒரு சுதந்திர உர்து பத்திரிகையாளரான காஸ்மி மேற்காசியாவைப் பற்றி நன்கறிந்தவர். ஈரானுக்கு பத்திரிகை விஷயமாக அடிக்கடி சென்று வருபவர். இதனை வைத்து இவரைப் பிடித்து டெல்லி போலீஸ் அநியாயமாகக் கைது செய்தது. டெல்லியை மையமாக வைத்து பத்திரிகைப் பணிகளைச் செய்து வரும் பத்திரிகையாளர் காஸ்மியை டெல்லியில் லோதி சாலையிலுள்ள இந்திய இஸ்லாமியக் கலாசார மையத்திற்கு வெளியே வைத்து டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967ன் கீழ் கைது செய்தது. அவருடன் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய திருப்பம் கிடைத்துவிட்டது என்று ஆரம்பத்தில் டம்பம் அடித்த டெல்லி போலீசின் சுருதி நாட்கள் செல்லச் செல்ல மங்கிக் கொண்டே வந்தது. அவரது வங்கிக் கணக்கில் கணக்கில் வராத பணம் உள்ளது, சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற அவர் மீது வாரியிறைக்கப்பட்ட போலீசின் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்பதை பத்திரிகையாளர் காஸ்மியின் குடும்பத்தார் நிரூபித்தனர். அந்தப் பணம் அமீரகத்தில் ஷார்ஜாவில் பணி புரியும் அவருடைய மகன் ஷவ்ஸாப் அனுப்பியது. பத்திரிகையாளர் காஸ்மியின் குடும்பத்தார் தங்களை போலீஸ் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறினர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பர்மா: மக்கள் குடியிருப்புகளின் அழிவைக் காட்டும் சாட்டலைட் படங்கள்

மக்கள் குடியிருப்பு பிரதேசம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதை ஹியூமன்ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் சாட்டலைட் படங்கள்
மக்கள் குடியிருப்பு பிரதேசம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் சாட்டலைட் படங்கள் காட்டுகின்றன.


மேற்கு பர்மாவில் கரையோர மாவட்டமொன்றில் இன வன்முறைகளால் முழுமையாக எரித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் சாட்டலைட் படங்களை மனித உரிமைகள் அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்களின் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம்களே இந்த வன்முறைகளில் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.பர்மாவில் மேற்கே உள்ள ராக்கைன் மாநிலத்தில், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் சாப்ச்யூ நகரில் கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான கட்டடங்களும் குடியிருப்புகளும் எரிக்கப்பட்டுள்ளதை அந்தப் படங்கள் காட்டியுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைக்காலத்தில் நடந்த இன வன்முறைகளில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் எச்சரிக்கிறது.
இந்த அக்டோபர் மாதத்தின் 9ம் திகதியிலும் அதன்பின்னர் 25-ம் திகதியிலும் எடுக்கப்பட்ட சாட்டலைட் படங்களை ஒப்பிட்டுக் காட்டி ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
அக்டோபர் 9-ம் திகதி எடுக்கப்பட்ட படங்களில் மக்கள் குடியிருப்புகள் செறிந்துகாணப்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை எடுக்கப்பட்ட படங்களில், கிட்டத்தட்ட 35- ஏக்கர் பிரதேசம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறைகளில் எத்தனைப் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது பற்றிய தகவல்களை அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிடவில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் படகுகள் மூலம் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றிருக்கலாம் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


“ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்தே தீருவேன்!” : பராக் ஒபாமா சபதம்


obama and romny
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான் பதவியில் நீடிக்கும் வரை ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி பூண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக  மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே தொலைக்காட்சியில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு விவாதங்களுக்குப் பிறகு மிட் ரோம்னியின் கை சிறிது ஓங்கியிருந்தது.
மூன்றாம் கட்டமாக நடந்த விவாதத்தில், “நான் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் வரையில் ஈரானுக்கு ஒரு அணு ஆயுதம் கூட கிடைக்க விடமாட்டேன்” என்று பராக் ஒபாமா கூறினார்.
மேலும், இஸ்ரேல் தங்களுடைய உண்மையான நண்பன் என்றும், தங்களுடைய பகுதியின் மிகப் பெரிய நட்பு நாடு என்றும்  கூறி தன் இஸ்ரேலிய பாசத்தை வெளிப்படுத்தினார்.
இஸ்ரேல் தாக்கப்பட்டால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தோள் கொடுக்கும் தோழனாகத் திகழும் என்பதை  தான் அதிபர் ஆன காலம் முதல் தெளிவு படுத்தி உள்ளதாக ஒபாமா கூறினார்.
முன்னதாக “அணு ஆயுத ஈரான் உலகிற்கு ஒரு மிக பெரிய அச்சுறுத்தல்” என்றும், அது ஒபாமாவின் பயங்கரவாதக் கட்டமைப்புக்கு எதிராக உள்ளது என்றும் ரோம்னி தனது விவாதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த மூன்றாம் கட்ட விவாதத்திற்குப் பிறகு, ஈரான் குறித்த “புரட்சிகர” கருத்துகளை திருவாய் மலர்ந்ததற்குப் பிறகு ஒபாமாவின் கை சிறிது ஓங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


போருக்கான ஆயத்தம்: அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு பயிற்சி


isreal and america
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் பொருளாதார தடைகள் உட்பட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவருகின்றன. ஈரானுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கா – இஸ்ரேல் இரண்டு நாடுகளும் ஞாயிறு முதல் மூன்று வாரங்களுக்கு வான்வழி போர் பயிற்சியில் குதிக்க இருக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் ஈரான் குறித்த அமெரிக்காவின் அடுத்த நிலைப்பாடு என்னவென்ற கேள்விக்கான பதிலை ஒபாமா ஆட்சி அமைதியாக வழங்க இந்த ஏற்பாடு உதவும் என்று எதிர் பார்க்கலாம். இந்த பயிற்சியானது 38 மில்லியன் டாலர்களில் செய்யப்படுகிறது. 3500 அமெரிக்கப் படைகளும், 1000 இஸ்ரேலிய படைகளும் இதில் பங்கேற்கின்றன.
இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் மிகப்பெரிய வான்வழி தாக்குதல் பயிற்சி இதுவாகும். இந்தப் போர்ப்பயிற்சி ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறதா இல்லை சிரியாவிற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பதிலடி கொடுக்க நடத்தப்படுகிறதா என்பது தெளிவாக வரையறை செய்யப்படவில்லை.
இது நாடுகளும் சேர்ந்து போர் நடவடிக்கையில் ஈடுபடுவது எப்படியென்ற பரிசோதனை முயற்சி என்று கூறப்படுகிறது. அதேவேளை இந்த செயற்பாடு முழுமையான போர் மயமாக்கும் வேலை என்ற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது.
அனைத்து குற்றச் சாட்டுக்களையும் இஸ்ரேல் மறுத்துள்ளது. சிரியா – ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்று ஏற்கெனவே மிட் ரோம்னி வைத்த குற்றச்சாட்டுக்கு இந்த 38 மில்லியன் டாலர் பயிற்சி பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு போரை எதிர் கொள்ள வெறும் 38 மில்லியன் டாலரில் செய்யப்படும் பயிற்சி சரியான பயிற்சியாக அமையும் என்று கூற முடியாது. அமெரிக்க வாக்காளருக்கு காதில் பூ சுற்ற இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


காஸ்ஸாவில் முதல் தடவையாக நோம் சோம்ஸ்கி வருகை! இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்த கோரிக்கை!


Noam Chomsky attends Gaza conference
காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவைச் சார்ந்த பிரபல சிந்தனையாளரும், சமூக ஆர்வலருமான நோம் சோம்ஸ்கி கூறியுள்ளார். காஸ்ஸாவில் உள்ள இஸ்லாமிக் யூனிவர்சிட்டி நடத்திய சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் சோம்ஸ்கி. முதல் தடவையாக அவர் காஸ்ஸாவிற்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
“காஸ்ஸாவிற்கான பயணம் மிகவும் துயரம் நிறைந்தது. இங்கு வந்த நாங்கள், பல காரியங்களையும் நேரில் கண்டோம். இங்கு முன்னரே வந்திருக்கவேண்டும்” என்று சோம்ஸ்கி கூறினார்.
மொழி இலக்கியம் தொடர்பான கருத்தரங்கில் நோம் சோம்ஸ்கி பேசுகையில், சம கால நிகழ்வுகளையும் குறிப்பிட்டார். உரைக்கு பிந்தைய கலந்துரையாடலிலும் ஈரான், இஸ்ரேல் விவகாரங்கள் இடம்பெற்றன. சுதந்திரம் மற்றும் சமாதானத்துடன் வாழ ஃபலஸ்தீன் மக்களுக்கு உரிமை உண்டு என்று சோம்ஸ்கி கூறினார்.
2010-ஆம் ஆண்டு சோம்ஸ்கி மேற்கு கரைக்கு வரவிருந்தார். ஆனால், இஸ்ரேல் அரசின் அனுமதி கிடைக்காததால் பயணத்தை ரத்துச் செய்தார். காஸ்ஸா இஸ்லாமிக் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அரபு வசந்தத்தின் எதிர்காலம் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


இஸ்லாத்திற்கு மாறிய ஒரே காரணத்திற்காக     இளைஞர்கள் என்னைத் தாக்கி கற்பழிக்க முயன்றனர்-இஸ்லாத்திற்கு மாறிய அஸ்ஸாம் பெண் எம்எல்ஏ ரூமி நாத்



குவஹாத்தி: குடி போதையில் என்னையும், எனது கணவரையும் தாக்கிய இளைஞர்கள் எனது ஆடையைக் கிழித்தெறிந்தனர். என்னைக் கற்பழிக்கவும் முயன்றனர். இது மிகவும் அநாகரீகமான தாக்குதல் என்று அஸ்ஸாம் பெண் எம்எல்ஏ ரூமிநாத் குமுறல் வெளியிட்டுள்ளார்.
அஸ்ஸாமைச் சேர்ந்தவர் டாக்டர் ரூமி நாத். இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார். தனது கணவர் ராகேஷ் சிங் மற்றும் 2 வயது மகள் ஆகியோரைக் கைவிட்டு விட்டு, பேஸ்புக் மூலம் அறிமுகமான ஜாகிர் உசேன் என்பவரை மணந்து கொண்டு இஸ்லாமுக்கும் மாறி விட்டார்.
இது அஸ்ஸாமில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் தற்போது தனது 2வது கணவருன் வலம் வந்து கொண்டிருக்கும் ரூமிநாத், நேற்று கரீம் கஞ்ச் வந்து அங்கு ஒரு ஹோட்டலில் ஜாகிர் உசேனுடன் தங்கியிருந்தார். அப்போது கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
ரூமிநாத்தின் அறைக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்து ரூமி நாத்தையும், அவரது 2வது கணவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலிலிருந்து மீட்கப்பட்ட ரூமிநாத்தும், அவரது 2வது கணவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் குவஹாத்தியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் ரூமிநாத்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது திருமணம் என்பது எனது தனிப்பட்ட விவகாரம். இதில் யாரும் தலையிட உரிமையில்லை. இப்படி ஒரு தாக்குதலை தொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பலர் அத்துமீறி எனது உடலின் பல்வேறு இடங்களிலும் கையை வைத்து சில்மிஷம் செய்தனர். ஆடையை கிழித்தனர். குடிகார இளைஞர்கள் என்னைக் கற்பழிக்கவும் முயன்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் என்னிடம் நடந்து கொண்டனர். இது அநாகரீகமானது.
இது முழுக்க முழுக்க சங்கபரிவாரத்தின் சாதி வேலை என அவர் கூறினார்.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அமெரிக்க கடற்பகுதிக்குள் ரகசியமாக ஊடுருவி விட்டு திரும்பி வந்த ரஷ்ய நீர்மூழ்கி!நடுங்கும் அமெரிக்கா?


வாஷிங்டன்: ரஷ்யாவின் அணு சக்தியால் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கடற்படையின் அனைத்துக் கண்காணிப்புகளையும் மீறி அமெரிக்க கடற்பகுதியில் ஊடுருவி பல நாட்கள் உளவு பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.
ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலாகும்.
விளாடிமீர் புடின் மீண்டும் ரஷ்ய அதிபரான பிறகு இந்த ஆண்டில் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் நடந்துள்ளது. அது அமெரிக்க கடல் பகுதியை விட்டு வெளியே சென்ற பிறகு தான் இந்தத் தகவலே அமெரிக்கக் கடற்படையின் அட்லாண்டிக் பிரிவிவுக்குத் தெரியவந்துள்ளது.
ஆனாலும் இதை அமெரிக்கா வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டது. இந் நிலையில் இந்தத் தகவல் நேற்று தான் வெளியே கசிந்துள்ளது.
கடந்த மாதம் ரஷ்யாவின் பியர் எச் ரக குண்டுவீசும் விமானம் (Bear H strategic bomber) கலிபோர்னியா அருகே அமெரிக்க வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து அமெரிக்க விமானப் படை விமானங்கள் அந்த விமானத்தை நெருங்கியதையடுத்து அது திரும்பிச் சென்றது.
சர்வதேச விவகாரங்களில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சிகளில் புடின் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. சிரியா விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புடின் களமிறங்கி அந்நாட்டு அரசுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பர்மாவில் மீண்டும் புத்தர்களின் வெறியாட்டம்: 11 முஸ்லிம்கள் மரணம்!


11 Rohingya Muslims killed in Myanmar
நேய்பிடவ்:மியான்மரின்(பர்மா)  மேற்கு ரக்ஹினே மாநிலத்தின்  சித்வே நகரில் உள்ள இரண்டு முஸ்லிம் கிராமங்களில் புத்த வெறியர்கள் உள்ளே நுழைந்து தீ வைத்தார்கள். இதில் குறைந்தபட்சம் 11 ரோஹிங்கியா முஸ்லிம்கள்  கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்தக் கோரச் சம்பவத்தை அரங்கேற்ற வந்த எராளமான புத்த வெறியர்களை இராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் தடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் தைரியம் பெற்ற புத்த வெறியர்கள் மம்ரா, மிரவ்ட் ஆகிய கிராமங்களில் உள்ள முஸ்லிம் வீடுகளுக்கு தீ வைத்தனர் என்று ரேடியோ பங்கா வானொலி கூறுகிறது.
அத்தோடு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் மியான்மரின் இராணுவப் படைகள் புத்தர்களுக்கு பெரிய பெட்ரோல் கேன்களைக் கொடுத்து முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கச் சொல்லி ஊக்குவித்துள்ளார்கள்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் அமைதி காப்பதால்  மியான்மரின் அரசுப் படைகளுக்கும், புத்த வெறியர்களுக்கும் குளிர் விட்டுப் போய் உள்ளது.
மியான்மரின் பெருன்பான்மையினரின் மதமான புத்த அரசாங்கம் ரோஹிங்கியா முஸ்லிம்களை சட்ட விரோதமாக குடிபெயர்ந்ததாக கருதுவதால் அவர்களை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். மேலும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்  பாரசீக, துர்க்கி, பெங்காலி, பதான் முஸ்லிம்களின் வழித் தோன்றல்களாகக் கூறப்பட்டாலும் அவர்கள் எட்டாம் நூற்றாண்டில் குடி பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 10 முதல் அரசுப் படைகளும், புத்த வெறியர்களும் முஸ்லிம்களின் கிராமங்களை எரித்து அழிச்சாட்டியம் புரிவதால் ஆயிரக்கணக்கான  ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதி முகாம்களில் மோசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிகின்றன.
அண்மைக் காலமாக நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரக்ஹினே மாநிலத்தில் சுமார் 650 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 1200 பேர் காணாமல் போய் உள்ளார்கள். 80000 பேர்  நாட்டை விட்டு இடம் பெயர்ந்து சென்றுள்ளார்கள்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அயோக்கியர்களின் கூடாரம் இந்துத்துவா.... 


தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்துவா(ஆர்.எஸ்.எஸ்,ஸ்ரீராம் சேனை) அமைப்பினர்.. மங்களூர் மாணவிகள் குமுறல்



மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.
இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.
மீடியா கேமராமேனும் உடந்தையா...?
இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.






SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


L]PÖ «UÖ] ŒÛXV†‡¥
C•WÖÁLÖÛ] ‘z†‰ ÙNÁ¿ AÙU¡eL A‡LÖ¡L· «NÖWÛQ


ÙPÖWցÚPÖ, Ae.28-

TÖfÍRÖÁ f¡eÙLy A‚ ˜Á]Ö· ÚLPÁ B] C•WÖÁLÖÁ ÙRÊ¡e-C-CÁNÖ† GÁ\ AWpV¥ LypÛV ÙRÖPjf ARÁ RÛXYWÖL C£ef\ÖŸ. TÖfÍRÖÁ G¥ÛXeh· AÙU¡eL E[° «UÖ]• h| ®rYÛR C•WÖÁLÖÁ Lz†‰ Y£f\ÖŸ. CÛR Y¦¿†‡ AYŸ N—T†‡¥ ÚTW‚ SP†‡]ÖŸ.

CR¼fÛP›¥ C•WÖÁLÖÁ AÙU¡eLÖ«¥ R]‰ Lyp›]Ÿ ŒïVÖŸe SL¡¥ H¼TÖ| ÙNšR Œ‡ ‡Wy|• ŒL²op›¥ TjÚL¼L ‡yP–y| C£‹RÖŸ. L]PÖ SÖyz¨·[ ÙPÖWցÚPÖ «UÖ] ŒÛXV†‡¥ «UÖ]†‡¥ C£‹R AYÛW AÙU¡eL hz¡ÛU ‰Û\ A‡LÖ¡L· ‡{ÙWÁ¿ ‘z†‰ ÙNÁ¿ «NÖWÛQ SP†‡]ÖŸL·. AÙU¡eL h| ®oreh G‡WÖL i½V L£†‰ h½†‰ C•WÖÁLÖÂP• rUÖŸ 1 U‚ ÚSW• ‰£« ‰£« «NÖWÛQ SP†‡]ÖŸL·. ARÁ‘\h AYŸ ÙRÖPŸ‹‰ TVQ• ÙNšV AÄU‡ YZjf]Ÿ. C‰ T¼½ C•WÖÁLÖÁ R]‰ |®yPŸ R[†‡¥ i¿ÛL›¥, `«UÖ]†‡¥ C£‹R GÁÛ] AÙU¡eL A‡LÖ¡L· ‘z†‰ ÙNÁ¿ «NÖWÛQ SP†‡]ÖŸL·. CR]Ö¥ «UÖ] TVQ†ÛR ÙRÖPW ˜zVÖU¥ ÚTÖ]‰. ŒïVÖŸe SL¡¥ SP‹R ŒL²op›¨• TjÚL¼L ˜zVÖU¥ ÚTÖ]‰ Y£†R• A¸ef\‰. E[° «UÖ] h| ®or G‡WÖ] GÁÄÛPV L£†‡¥ UÖ¼\• C¥ÛX' G] h½‘y|·[ÖŸ.

IefV SÖ|L· NÛT RÛXÛU A¨YXL• ˜Á“• AYŸ BŸTÖyP• SP†R ‡yP–y| C£‹RÖŸ. B]Ö¥ Te¢† TzÛL LÖWQUÖL ÚTW‚ÛV W†‰ ÙNš‡£TRÖL C•WÖÁLÖÂÁ Lyp ‘W˜LŸ AÁYŸ i½]ÖŸ.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


"விளம்பரங்களில் நடிப்பவர்கள் மீதும் வழக்கு தேவை"




விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மீது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்கள் மற்றும் நிறுவன சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் வழக்கு தொடுக்கலாம் என்று தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர் ரகுபதி ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.
விளம்பரங்களில் நடிப்பவர்கள் மீது இன்றைய நிலையில் நுகர்வோர் சட்டத்தின் கீழ் இப்படியான வழக்கு தொடுப்பதற்கு சாத்தியமில்லை என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய உறுப்பினர் வாசுகி ரமணன். அதேசமயம், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.
வர்த்தக விளம்பரங்களில் நடிப்பவர்கள் தங்களின் பெயரை, புகழை, பிரபல்யத்தை பயன்படுத்தி, தாங்கள் தோன்றும் விளம்பரங்கள் மூலம், குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது பொருட்களையோ வாங்கும்படி நுகர்வோரை தூண்டுகிறார்கள் என்று கூறும் வாசுகி, இவர்கள் அந்த குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பொருட்களின் முகவர்களாகவே செயற்படுகிறார்கள் என்கிறார்.
அப்படி முகவராக தோன்றி நுகர்வோரை தூண்டும் இவர்களுக்கு தாங்கள் ஊக்குவிக்கும் நிறுவனம் அல்லது பொருட்களின் தரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும், தராதரம் தெரியாமல் நிறுவனங்களுக்கோ அல்லது பொருட்களுக்கோ முகவராக செயற்படக்கூடாது என்கிற பொறுப்புணர்வு இந்த நடிக, நடிகை மற்றும் பிரபலங்களுக்கு உருவாக வேண்டும் என்றும் கூறுகிறார்.
விளம்பரங்களில் நடிப்பவர்கள் தங்களின் வருமானத்தில் செலுத்தும் அக்கறையை, தாங்கள் ஊக்குவிக்கும் பொருள் அல்லது நிறுவனத்தின் தராதரம் பற்றி தெரிந்துகொள்வதிலும் செலுத்தவேண்டும் என்பதே நுகர்வோர் பாதுகாப்புக்காக குரல்கொடுக்கும் தன்னைப்போன்றவர்களின் கோரிக்கை என்கிறார் வாசுகி.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


காசா நோக்கிச் சென்ற படகை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது



இத்தாலியிலிருந்து இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புறப்பட்ட இந்த பின்லாந்து நாட்டுப் படகில் மருந்துப் பொருட்களும் கல்வி உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டன.
இத்தாலியிலிருந்து இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புறப்பட்ட இந்த பின்லாந்து நாட்டுப் படகில் மருந்துப் பொருட்களும் கல்வி உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டன.

காசா நிலப்பரப்புக்கான நுழைவாயிலில் இஸ்ரேல் ஏற்படுத்திவைத்துள்ள தடைகளையும் மீறி உள்ளே நுழைய முற்பட்ட படகை இஸ்ரேலிய படையினர் தடுத்துள்ளனர்.
பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் செயற்பாட்டாளர்கள் இந்தப் படகில் பயணித்துள்ளனர்.

படகில் இருந்தவர்களுடன் பலவந்தமாக நடந்துகொள்ளவில்லை என்றும், கடற்படையினர் அவர்களுக்கு உணவும் குடிபானமும் கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.காசா நிலப்பரப்புக்குள் படகுகள் நுழையாதபடி இஸ்ரேல் போட்டிருக்கின்ற தடைகளையும் மீறி படகு பயணிக்க முற்பட்டபோது, உள்ளே வரக்கூடாது என்று பல தடவைகள் அறிவித்தல் விடுத்தும் படகில் இருந்தவர்கள் அதனை ஏற்க மறுத்ததால் இஸ்ரேலிய கடற்படையினர் அந்தப் படகில் ஏறி தடுக்க வேண்டி ஏற்பட்டதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் கூறினார்.
குறித்த படகு இப்போது இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.
இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரிலிருந்து, பின்லாந்து நாட்டுக் கொடியுடன் அக்டோபர் 7-ம் திகதி புறப்பட்ட எஸ்த்தல் என்ற இந்தப் படகில் 8 நாடுகளைச் சேர்ந்த 20 பேர் அளவில் இருந்துள்ளனர்.
காசா நிலப்பரப்புக்குள் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கு மருந்துப் பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்களை எடுத்துக்கொண்டு இந்தப் படகு சென்றது.
ஐரோப்பிய நாடுகளின் அரசியல்வாதிகள் ஐந்து பேரும் இந்தப் படகில் சென்றவர்களில் அடங்குகின்றனர்.
காசா கரையோரப் பகுதியை 2007-ம் ஆண்டில் ஹமாஸ் இஸ்லாமியவாதிகள் கைப்பற்றிய பின்னர் அந்தப் பகுதிக்கான நுழைவாயிலில் இஸ்ரேல் தடைகளை ஏற்படுத்தியது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


கொள்ளையனை முறியடித்த ஆஸ்திரிய  மூதாட்டி
கொள்ளையனை முறியடித்த ஆஸ்திரிய மூதாட்டி



ஆஸ்திரியாவில் கிராம வங்கி ஒன்றைக் கொள்ளையிட துப்பாக்கி , மற்றும் கைக்குண்டுடன் வந்த கொள்ளையன் ஒருவனை , 82 வயதான பாட்டி ஒருவர் தன்னந்தனியாக முறியடித்தார்.

கிராம வங்கி ஒன்றை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்று கொண்டிருந்த இந்த கொள்ளையனின் பின் புறம் பதுங்கி முன்னேறிய, ஹெர்த்தா வாலெக்கர், அந்தக் கொள்ளையனின் முகமூடியைக் கிழித்தெறிந்து, அவனிடம் இருந்த கொள்ளைப்பணத்தையும் பிடுங்கி, " பணம் வேண்டுமென்றால் ஏதாவது வேலை செய்ய வேண்டியதுதானே " என்று அவனைக் கடிந்தும் கொண்டார்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெறுங்கையுடன் ஓடிய அந்தக் கொள்ளையனை, பின்னர் போலிசார் கைது செய்தனர்.
இந்த ஓய்வூதியம் பெறும் பாட்டி, பலர் கஷ்டபட்டு பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கையில்,ஒருவர் மட்டும் அதைத் திருடுவதா என்ற கோபமே தன்னைத் தூண்டியது என்று கூறினார். ஒருவேளை தனது துணிச்சல், தொலைக்காட்சியில் போலிஸ் தொடர்பான பல நிகழ்ச்சிகளைப் பார்த்ததாலும் வந்திருக்கலாம் என்றும் அவர் கூறிக்கொண்டார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


ஜெ.வுக்கு vote போட சொன்ன சமுதாய கட்சி எங்கே?

சிந்தியுங்கள் சகோதரர்களே.....காபிர்கள் எப்போதுமே நமக்கு எதிரான விஷயங்களில் ஒரே நிலையில் தான் உள்ளனர் 

   சேது சமுத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு: ஜெயலலிதாவுக்கு விஎச்பி- இந்து முன்னணி பாராட்டு மழை!


சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், ராம சேதுவை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியுள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணியும் விஸ்வ இந்து பரிஷத்தும் பெரும் பாராட்டை குவித்துள்ளன.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் விடுத்த அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம், ராம சேது பாதுகாப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் சேது சமுத்திர திட்டத்தை கைவிடவும், ராம சேதுவை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழக முதல்வரின் தெளிவான, துணிச்சலான முடிவை பாராட்டுகிறோம்.
உச்ச நீதிமன்றம் ராம சேதுவை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசின் கருத்தை கேட்டதற்கு, உறுதியான பதிலை தராமல், நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மழுப்பலாக பதில் அளித்தது.
பச்செளரி கமிட்டியின் அறிக்கை சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என்றும், மாற்றுப் பாதையை பொருளாதார ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் செயல்படுத்த முடியாது என்றும் கருத்து கூறிய நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நிபுணர்களின் கருத்தை கேட்காமலும், சேது கால்வாய் திட்டம் பற்றி முழு ஆய்வு பணியினை மேற்கொள்ளாமலும், மக்களின் கருத்தை அறியாமலும் அவசர கோலத்தில் சிலரது பைகளைப் பணத்தால் நிரப்பவே இத்திட்டம் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தால் பலன் அடைந்தவர்கள், அதில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத்:
அதே போல அகில உலக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஆலோசகர் எஸ்.வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ராமர் பாலத்தை இடிப்பது சம்பந்தமாக தொடர்ந்து எதிர்ப்பதை கண்டு தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மிக்க மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்றும், அதை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருப்பது கோடான கோடி இந்துக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
போலி மதச்சார்பின்மை பேசும் தீய சக்திகள் இந்து நிறுவனங்களின் உரிமையை பலவிதங்களில் பறிக்க நினைக்கும் சமயத்தில் ஜெயலலிதா அரசு அவற்றை எதிர்த்து தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் வரவேற்கிறது.
இந்துக்களின் உரிமைகளையும், இந்து ஸ்தாபனங்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசு எடுக்கும் எல்லா செயல்களுக்கும் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் ஆதரவு கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்து செல்லாது:தமிழக அரசு




நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன், கெüதம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் வாதிட்டதாவது: மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். தற்போதைய ஆதீனகர்த்தரின் காலத்துக்குப் பின், அந்தப் பொறுப்புக்கு காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறை திகளின்படி அடுத்த சன்னிதானத்தை நியமனம் செய்ய இயலும்.
மேலும் மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒருவரை நியமிப்பதற்கென ஏராளமான நெறிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நெறிமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான நித்யானந்தாவை இளைய சன்னிதானமாக நியமித்து அருணகிரிநாதர் அறித்துள்ளது சட்டப்படி செல்லாது.
நித்யானந்தா மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, தார்மிக அடிப்படையிலும் கூட எந்த மத அமைப்பின் தலைவராகவும் செயல்படும் தகுதி நித்யானந்தாவுக்கு இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மதுரை ஆதீன வகாரம் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஏராளமான புகார்கள் கூறப்படும் நிலையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என கேள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஏ. நவநீதகிருஷ்ணன், மதுரை ஆதீன வகாரம் தொடர்பாக தீரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதருக்கு எதிரான புகார்கள் தொடர்பாக சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசு தீரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து வழக்கின் சாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரட்டனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


குஜராத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை : ஜெர்மனி

narendra modi
புது தில்லி : நரேந்திர மோடி ஆளும் குஜராத் குறித்து ஜெர்மனி என்ன நிலைப்பாட்டை முன்பு எடுத்துள்ளதோ அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.
பிரிட்டனைப் போல் தாங்கள் நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்று அவர் தெளிவு படுத்தினார். குஜராத் மாநிலம் அடுத்த மாதம் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
2002ல் நரேந்திர மோடியின் ஆதரவுடன் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளுக்குப் பின் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேலை நாடுகள் குஜராத் மீது தடைகளை விதித்தன. குஜராத்துடன் தங்கள் அரசு ரீதியான தொடர்புகளை முறித்துக்கொண்டன. நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்கா விசா தர மறுத்தது.
ஆனால் கடந்த வாரம் பிரிட்டன் குஜராத் மீதான தன் நிலைப்பாட்டை மாற்றியது. குஜராத்துடன் அரசியல் ரீதியான தொடர்புகள் தொடரப்படும் என்று பிரிட்டன் அறிவித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் குஜராத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் ஜெர்மனி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறினார்.
“எங்கள் நிலையில் மாற்றம் இல்லை. அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல் ஆரம்பிக்கிறது. அது குறித்து நாங்கள் எந்த அறிக்கையும் வெளியிட விரும்பவில்லை. பிரிட்டன் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி அறிவிக்கும் முன்பு எங்களிடம் இப்படி அறிவிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் பிரிட்டனின் இந்த மாற்றம் எங்கள் நிலைப்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.
இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள ஜெர்மனியின் வியாபாரக் குழுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சியையும், கலாச்சார நிகழ்ச்சியையும் ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சுரங்க நிறுவனத்திடம் இருந்து எடியூரப்பா ரூ.20 கோடி லஞ்சம் பெற்றார்: சி.பி.ஐ. குற்றச்சாட்டு



புதுடெல்லி, அக். 17- 
 
கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி முதன் முதலாக ஆட்சி அமைத்த போது, முதல் - மந்திரியாக எடியூரப்பா நியமிக்கப்பட்டார். அப்போது பெல்லாரியை சேர்ந்த தனியார் சுரங்க நிறுவனமான சவுத் வெஸ்ட் கம்பெனிக்கு ராச்சேன ஹள்ளி பகுதியில் 1.12 ஏக்கர் நிலத்தை எடியூரப்பா ஒதுக்கினார். இந்த நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது.
 
இதன் மூலம், எடியூரப்பா மகன்கள் நிர்வகிக்கும் பிரேரனா கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி அந்த நிறுவனத்தால் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து எடியூரப்பா அவரது மகன்கள் ராகவேந்திரா எம்.பி., விஜயேந்திரா, மருமகன் சோஹன் குமார் ஆகியோர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உயர் அதிகார குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. விசாரணைக்கு பின் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், எடியூரப்பா உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உயர் அதிகார குழு சிபாரிசு செய்திருந்தது.
 
இதையடுத்து எடியூரப்பா அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோஹன்குமார், முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யா ஷெட்டி, சவுத்வெஸ்ட் சுரங்க நிறுவன உரிமையாளர் சுனில்சூத் உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் எப்.ஐ.ஆர். இந்த வழக்கு விசாரணை பெங்களூர் சி.பி.ஐ. கோர்ட்டில் நடக்கிறது.
 
இந்நிலையில் எடியூரப்பா உள்பட 13 பேர் மீதும் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
கர்நாடக முன்னாள் முதல் - மந்திரி எடியூரப்பா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். தனியார் சுரங்க நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளன. ராச்சேன ஹள்ளி பகுதியில் 1.12 ஏக்கர் நிலத்தை முறைகேடாக மறு அறிவிப்பு செய்து, சவுத்வெஸ்ட் நிறுவனத்துக்கு எடியூரப்பா வழங்கினார்.
 
இதன் மூலம் அதிக விலை மதிப்பு கொண்ட நிலம் அடிமாட்டு விலைக்கு வழங்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக அந்த நிறுவனத்தால் எடியூரப்பா குடும்ப கல்வி நிறுவனத்துக்கு ரூ.20 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது. அரசு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கிய வகையில், அரசு துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
 
இவ்வாறு குற்றப்பத்திரி கையில் கூறப்பட்டுள்ளது.
 
பாரதீய ஜனதா கட்சி மேலிட தலைவர்களுடன் கொண்ட மனக்கசப்பால், டிசம்பரில் புதிய கட்சி தொடங்கப் போவதாக எடியூரப்பா சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து எடியூரப்பாவின் நெருங்கிய நண்பரான முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய்குமார், பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
இந்நிலையில் தனியார் சுரங்க  நிறுவனத்திடம் இருந்து ரூ.20 கோடி லஞ்சம் பெற்றார் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருப்பது, எடியூரப்பாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பிஜேபி மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரானவை தான் : நீதிபதி சச்சார் !



லக்னோ : முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது. லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரான ராஜேந்தர் சச்சார் நிமேஷ் புலனாய்வு
அறிக்கையை உ.பி அரசு உடனே வெளியிட வேண்டும் என்று கூறினார். 2007 ல் உத்தரபிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆஸம்கரிலிருந்து காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது சம்பந்தமான உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்டது தான் நிமேஷ் கமிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது என்று வினா எழுப்பிய ராஜேந்தர் சச்சார் இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயமாகவும் உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் தான் மற்றும் பிற முஸ்லீம் சிறைவாசிகள் சிறையில் படும் உளவியல் பிரச்னைகள் குறித்து தாரிக் எழுதிய கடிதத்தையும் நிருபர்களிடம் காண்பித்தார் சச்சார்.
சமீப காலமாக முஸ்லீம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது முஸ்லீம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்க காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார் மேலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை நொறுங்கி போய் விடும் என்றும் கூறினார்.
பாஜக மாத்திரம் மதவாத கட்சி என்று கூறுவது தவறு என்று கூறிய சச்சார் மத்தியிலும் தில்லியிலும் காங்கிரஸ் அரசுகள் இருக்கும் போதும் முஸ்லீம்கள் தவறாக பெருவாரியாக தீவிரவாத குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தில்லியில் 16 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமியா ஆசிரியர்கள் சங்கத்தின் அறிக்கை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றார்.
புனேவின் யர்வாடா ஜெயிலில் போலீஸ் காவலில் கதீல் சித்திகி இறந்ததை குறித்து கருத்து தெரிவித்த சச்சார் நாஜிசம் ஒரு போதும் இந்தியாவில் வெற்றியடைய விட கூடாது என்றார். சவூதி அரேபியாவில் இந்திய உளவு துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அந்நிய முதலீடு குறித்து கருத்து தெரிவித்த சச்சார் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை அடிமைப்படுத்தியதை விட மோசமான அடிமைத்தனத்துக்கு வழிவகுக்கும் செயல் என்று கூறினார்.  இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சோசலிச கட்சியின் பொது செயலாளர் ஓம்கார் சிங் தாம் ஆட்சிக்கு வந்தால் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை சிறையில் இருந்து விடுவிப்போம் என்று சமாஜ்வாதி கட்சி கூறியதாகவும் ஆனால் சமாஜ்வாதி ஆட்சிக்கு பின் முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுவது அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது என்றும் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


நோபல் பரிசுக்கு போட்டியாக நபிகள் நாயகம்(ஸல் ) பெயரில் விருது - ஈரான் அறிவிப்பு!

News Service நோபல் பரிசுக்கு இணையாக,ஈரான் நாடு,நபிகள் நாயகம்பெயரில்,புதிய விருதை அறிவித்து உள்ளது. சர்வ தேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர் களுக்கு, 1901ம் ஆண்டு முதல், "நோபல் பரிசு' வழங்கப்பட்டு வருகிறது.கடந்த, 2003ல், ஈரான் நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஷிரின் எபாடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  
ஐரோப்பிய நாடுகள் தற்போது, ஈரான் மீது, அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான புகாரினால், பொருளாதாரத் தடை விதித்துள்ளன. அதுமட்டுமல்லாது, இந்த ஆண்டு ஐரோப்பிய யூனியனுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு உள்ளது. நோபல் பரிசு ஒரே ஒரு முறை தான், ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுக்குப் போட்டியாக, ஈரான் நாடு, நபிகள் நாயகத்தின் பெயரில், புதிய விருதை உருவாக்கி உள்ளது.
"முஸ்லிம் நாடுகளை சேர்ந்த, மூன்று தொழில்நுட்பத் துறைகளில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விருது வழங்கப்படும்' என, ஈரான் துணை அதிபர் நஸ்ரின் சோல்டாங்கா தெரிவித்து உள்ளார்

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


சாவேஸ் – மக்களின் நண்பன்… அமெரிக்காவின் எதிரி!

கியூபாவுக்கு சிகிச்சைக்குப் போன சாவேஸ் திரும்பி வரக்கூடாது என்றே அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆசைப்பட்டன. ஆனால், சாவேஸ் திரும்பினார். வெனிசுலா அதிபராக நான்காவது முறையும் வென்று காட்டினார். ”இந்தத் தருணமே… இப்போதே! நாளை அல்ல… நாளை என்பது மிகத்தாமதம்!” என்ற சொற்களின் மூலமாக வெனிசுலா மக்களைக் கட்டிப்போட்ட சாவேஸை மீண்டும் தேர்ந்து எடுத்ததன் மூலமாக சோஷலிசமே தங்களின் இலக்கு என்பதையும் வழி
மொழிந் துள்ளார்கள்!
கியூபாவின் ஃபிடெல் காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு எப்படி சிம்மசொப்பனமோ… அப்படித்தான் வெனி சுலாவின் ஹியூகோ சாவேஸும்.
”உலகில் எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்தியில் வெனிசுலா, பலம் பொருந்திய நாடு களில் ஒன்று. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெட்ரோலிய வளம் வெனிசுலாவில் இருக்கிறது. அவர்களுக்கு நம்முடைய எரிவாயுவும் எண்ணெய் வளமும் வேண்டும். ஏற்கெனவே, 100 ஆண்டுகளாக அதை அனுபவித்து விட்டனர். அவர்களிடம் இருந்து இப்போது நாம் மீட்டெடுத்து இருக்கிறோம். இனி, இது இந்த நாட்டில் உள்ள மக்களுக்கும் இந்தக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கும் உதவுமே தவிர, அவர்களுக்குக் கிடைக் காது. வெனிசுலா, வடஅமெரிக்காவின் காலனி ஆதிக்கத்துக்கு மீண்டும் ஒருமுறை ஆட்படாது. நிச்சயம் ஆட்படாது” என்று, பகிரங்கமாக சாவேஸ் அறிவித்ததுதான் கோபம்.
சாவேஸ் பதவிக்கு வந்தபோது அமெரிக்கா அவரை அன்போடு வரவேற்றது. வெள்ளை மாளி கையில் விருந்து வைத்தது. உலக வங்கி, உலக வர்த்தக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால், அனைத்து நிலைகளிலும் தன் நாடு, தன் மக்கள் என்றே சாவேஸ் பேசியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 2002, ஏப்ரல் 11-ம் நாள் வெனிசுலாவின் ‘பாதுகாப்புப் போர்’ திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த முயன்றவர்களை, தனது ராணுவத்தைக் கொண்டு சாவேஸ் முறியடித்தார். அப்போதுதான், வெனிசுலா உலகின் கண்ணில் தெரிய ஆரம்பித்தது. ஹியூகோ சாவேஸ் என்ற பெயரும் உச்சரிக்கப்பட்டது.
சாவேஸுக்கு இப்போது 58 வயது. 14 ஆண்டுகளாக வெனிசுலா அதிபராக இருக்கிறார். இதற்கு முன், அந்த நாட்டு ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக இருந்தார். பிறகு, ஐந்தாவது குடியரசு இயக்கத்தில் அங்கம் வகித்தார். அதுவே பின்னர் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியாக பெயர் மாறியது.
1992-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்கியதற்காகக் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது சாவேஸுக்கு பெரிய உத்வேகம் அளித்தவர் சல்வேடார் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஸ்காஃபிக் ஹாண்டல்.
”சாவேஸ்! உன்னிடத்தில் ஒரு போராளி குறை கிறான் என்றால், நான் இங்கு இருக்கிறேன். எனக்கு ஒரு துப்பாக்கியைக் கொடு” என்று உத்வேகம் கொடுத் தவர். அடுத்து, கியூபாவின் ஃபிடெல் காஸ்ட்ரோ… முழு தன்னம்பிக்கையை விதைத்தார். இரண்டும் சேர்ந்து 1998-ல் வெனிசுலாவின் ஆட்சியைப் பிடிக்க சாவேஸுக்கு அடித்தளம் அமைத்தது.
அதிகாரத்துக்கு வந்த பிறகு, வெறும் வாய் வீரராக இல்லாமல், வெனிசுலாவின் மண்ணையும் மக்களை யும் கவனிக்க ஆரம்பித்தார் சாவேஸ். தென் அமெ ரிக்கக் கண்டத்தில் எண்ணெய்வளம் மிக்க நாடாக வெனிசுலா இருந்தாலும், அதனுடைய வளம் சுரண்டலுக்கு உள்ளாகி இருந்தது. முதலில் அதை முழுமையாக அரசுக்கான சொத்தாக மாற்றினார் சாவேஸ். எண்ணெய் வளத்தை விற்று முழுமையாக மக்களுக்குப் பயன்படுத்தினார். பெரு நிறுவனங்கள் பலவற்றை நாட்டுடமை ஆக்கினார். வறுமை ஒழிப்பு ஒன்றையே தனது இலக்காகக் கொண்டார். கல்லாமை இல்லாத நாடு என்று பெருமையாக அறிவிக்கும் தைரியம் அவருக்கு இருந்தது.
வெறும் எண்ணெய் வளத்தை மட்டும் நம்பி இருக்காமல், பல்வேறு துறைகளையும் வளர்க்கத் திட்டமிட்டார். அவர் ஆட்சி நடந்த முதல் பத்தாண்டு காலத்தில் (1998-2008) விவசாயப் பொருட் களின் உற்பத்தி சுமார் 50 சதவிகிதம் உயர்ந்தது. விவசாயம் செய்யாமல் எந்த விளைநிலமும் இருக்கக் கூடாது என்ற நிலைமையை உருவாக்கினார். அடுத்த (2013-2019) ஆறு ஆண்டு காலத்துக்கு சாவேஸ் தனது இலக்காக வைத்திருப்பது விவசாயம்தான். அவரது லட்சியம் நிறைவேறினால், 300 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள்.
ஓர் ஆண்டு காலமாக அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கியூபாவில்தான் அவருக்கு சிகிச்சை தரப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபடி வெனிசுலாவில் உள்ள தனது அமைச்சரவை சகாக் களுக்கு வீடியோ கான்ஃபெரன்ஸில் பேசிய நேரத் திலும் சோஷலிசம் – பொருளாதாரம் ஆகிய இரண்டு வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தினார்.
”சோஷலிசப் பாதையில் இருந்து மாற மாட் டோம். அதேசமயம், பொருளாதாரப் புரட்சியை வெனிசுலாவில் உருவாக்குவோம். தொழில் வளர்ச் சிக்கு கூடுதல்நிதி ஒதுக்க வேண்டும். நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான புதிய தொழில்களை தொடங்க வேண்டும். அரசியல் புரட்சியை நடத்தி விட்டோம். பொருளாதாரப் புரட்சி செய்யாமல் அரசியல் புரட்சி மட்டும் செய்வதால் என்ன பலன்?” என்று கேட்ட சாவேஸ், ”அந்தப் பொருளாதாரப் புரட்சியை கிராமப்புறத்தில் இருந்து தொடங்க வேண்டும்” என்று, தனது அமைச்சரவைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பொதுவாக சோஷலிசம், கம்யூனிஸம், மார்க்சியம் என்ற வார்த்தைகளுக்குள் சிக்கி வறட்டுத்தனமாக வெளிப்படுவதை விட, யதார்த்தமான சிந்தனைகளை விதைப்பதாக சாவேஸின் பாணி இருப்பதால், வெனிசுலா மக்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. ”சோஷலிசம் என்பது நம் முன்னோர்களின் திட்டத்தை அப்படியே நகல் எடுப்பது அல்ல. கொள்கைகளை அப்படியே நகல் எடுத்ததுதான் 20-ம் நூற்றாண்டில் நாம் செய்த மிகப்பெரிய தவறு.  தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடு களோடு ஒவ்வோர் இனத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப் பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோஷலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்றார் சாவேஸ்.
இது, வெனிசுலாவுக்கு மட்டும் அல்ல… இந்தியா வுக்கும் சேர்த்து எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் சமூக சூத்திரம்!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: