Facebook Twitter RSS


மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்து செல்லாது:தமிழக அரசு




நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன், கெüதம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் வாதிட்டதாவது: மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். தற்போதைய ஆதீனகர்த்தரின் காலத்துக்குப் பின், அந்தப் பொறுப்புக்கு காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறை திகளின்படி அடுத்த சன்னிதானத்தை நியமனம் செய்ய இயலும்.
மேலும் மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒருவரை நியமிப்பதற்கென ஏராளமான நெறிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நெறிமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான நித்யானந்தாவை இளைய சன்னிதானமாக நியமித்து அருணகிரிநாதர் அறித்துள்ளது சட்டப்படி செல்லாது.
நித்யானந்தா மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, தார்மிக அடிப்படையிலும் கூட எந்த மத அமைப்பின் தலைவராகவும் செயல்படும் தகுதி நித்யானந்தாவுக்கு இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மதுரை ஆதீன வகாரம் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஏராளமான புகார்கள் கூறப்படும் நிலையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என கேள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஏ. நவநீதகிருஷ்ணன், மதுரை ஆதீன வகாரம் தொடர்பாக தீரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதருக்கு எதிரான புகார்கள் தொடர்பாக சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசு தீரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து வழக்கின் சாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரட்டனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: