Facebook Twitter RSS


பர்மாவில் மீண்டும் புத்தர்களின் வெறியாட்டம்: 11 முஸ்லிம்கள் மரணம்!


11 Rohingya Muslims killed in Myanmar
நேய்பிடவ்:மியான்மரின்(பர்மா)  மேற்கு ரக்ஹினே மாநிலத்தின்  சித்வே நகரில் உள்ள இரண்டு முஸ்லிம் கிராமங்களில் புத்த வெறியர்கள் உள்ளே நுழைந்து தீ வைத்தார்கள். இதில் குறைந்தபட்சம் 11 ரோஹிங்கியா முஸ்லிம்கள்  கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்தக் கோரச் சம்பவத்தை அரங்கேற்ற வந்த எராளமான புத்த வெறியர்களை இராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் தடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் தைரியம் பெற்ற புத்த வெறியர்கள் மம்ரா, மிரவ்ட் ஆகிய கிராமங்களில் உள்ள முஸ்லிம் வீடுகளுக்கு தீ வைத்தனர் என்று ரேடியோ பங்கா வானொலி கூறுகிறது.
அத்தோடு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் மியான்மரின் இராணுவப் படைகள் புத்தர்களுக்கு பெரிய பெட்ரோல் கேன்களைக் கொடுத்து முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கச் சொல்லி ஊக்குவித்துள்ளார்கள்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் அமைதி காப்பதால்  மியான்மரின் அரசுப் படைகளுக்கும், புத்த வெறியர்களுக்கும் குளிர் விட்டுப் போய் உள்ளது.
மியான்மரின் பெருன்பான்மையினரின் மதமான புத்த அரசாங்கம் ரோஹிங்கியா முஸ்லிம்களை சட்ட விரோதமாக குடிபெயர்ந்ததாக கருதுவதால் அவர்களை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். மேலும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்  பாரசீக, துர்க்கி, பெங்காலி, பதான் முஸ்லிம்களின் வழித் தோன்றல்களாகக் கூறப்பட்டாலும் அவர்கள் எட்டாம் நூற்றாண்டில் குடி பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 10 முதல் அரசுப் படைகளும், புத்த வெறியர்களும் முஸ்லிம்களின் கிராமங்களை எரித்து அழிச்சாட்டியம் புரிவதால் ஆயிரக்கணக்கான  ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதி முகாம்களில் மோசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிகின்றன.
அண்மைக் காலமாக நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரக்ஹினே மாநிலத்தில் சுமார் 650 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 1200 பேர் காணாமல் போய் உள்ளார்கள். 80000 பேர்  நாட்டை விட்டு இடம் பெயர்ந்து சென்றுள்ளார்கள்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: