Facebook Twitter RSS

சிரியாவில் இஸ்லாமிய எழுச்சி இன்ஷா அல்லாஹ்


சிரியாவில் அல் கொய்தாவிற்கான தலைவர் அல்-ஜசீரா சேனலுக்கு அளித்த பேட்டியில் சிரியாவின் உள்நாட்டு போர்  முடிவுக்கு நெருங்குகிறது என்றும் தங்களுடைய கை இறைவனின் அருளால் மேலோங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜபத் அல்-நுஸ்ரா என்ற போராளி இயக்கத்தின் தாலைவர்  அபூமுஹம்மத் அல்-ஜுலானி தன்னுடைய முதல் தொலைக்காட்சி பேட்டியில் சிரியா அதிபரின் அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தை நிராகரிப்பதாகவும்,ஈரான்-அமெரிக்கா உறவால் சவுதி அரேபியாவிற்கு மிகவும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.
மேலும் கூறுகையில் 70% நிலம் தாங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்,மீதமுள்ளது தான் ஆசாத்தின்  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.இன்னும் சில நாட்களில் இன்ஷா அல்லாஹ் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
இஸ்லாமிய ஆட்சி கீழ் ஒரு சிரியா  அரசு நிறுவ வேண்டும் என்று ஜபத் அல்-நுஸ்ரா போராடிக்கொண்டிருக்கிறது.அதனாலேயே இந்த போராளி அமைப்பை ஐ.நா மற்றும் ஐரோப்பிய (அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ்)நாடுகள் தீவிரவாத அமைப்பு என்று கூறிவருகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

அலெப்போ நகரில் விமானப்படை தாக்குதல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு


சிரியாவில் அதிபர் ஆசாத் குடும்பத்தினர் 40 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வருகின்றனர். இவரது ஆட்சிக்கு எதிராக போராளிக்குழுக்கள் கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் படையினர் பின்னடைவை சந்தித்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போராளிகள் வசமுள்ள வர்த்தக நகரான அலெப்போவின் மீது நேற்று விமானப்படையினர் 25 பேரல் (பீப்பாய்) குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு பேரல் குண்டில் 100 கிலோவுக்கு மேலான வெடிப்பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
குடியிருப்பு பகுதிகளில் போடப்பட்ட இந்த குண்டுகளால், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் 125 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலெப்போ நகரின் 10 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இடிபாடுகளில் இன்னும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதனால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர்கள் மூலம் பேரல் குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வீசப்பட்டன என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் முதல் முறையாக ஐ.நா. வின் உணவுப்பொருட்கள் விமானம், ஈராக் வழியாக சிரியாவின் வடக்கு பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
6 ஆயிரம் சிரியா அகதிகள் குடும்பத்தினர் தங்கியுள்ள அங்கு கடும் குளிர் நிலவுவதால் கம்பளி ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்களை இன்னும் 12 நாட்களில் வழங்குவது குறித்து ஐ.நா. அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
- See more at: http://tamilnews.cc/news.php?id=49089#sthash.0RMDZTgI.dpuf

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பாக்தாத்தில் குண்டுவீச முன் பாரிஸில் உளவுத்துறை மொசாத் செய்த இரட்டை கொலை!


ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலுள்ள பாலஸ்தீன் மெரிடியன் (Palestine Meridien) ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 1988-ம் ஆண்டு நடந்த ஆயுத வியாபாரிகளின் டீல் பற்றி “ஆயுத வியாபாரிகளை பாக்தாத் ஹோட்டலில் உளவு பார்த்த மொசாத் உளவாளி” என்ற கட்டுரை வெளியிட்டபோது, அதே ஹோட்டலில் அதற்கு சில வருடங்களுக்கு முன் நடந்த குண்டுவீச்சின் பின்னணியில் மற்றொரு சுவாரசிய சம்பவம் உள்ளது என குறிப்பிட்டிருந்தோம்.
அந்தக் கட்டுரை முடிந்தபின், மற்றைய சம்பவம் பற்றியும் எழுதுவோம் என குறிப்பிட்டிருந்தோம்.
“ஆயுத வியாபாரிகளை பாக்தாத் ஹோட்டலில் உளவு பார்த்த மொசாத் உளவாளி” கட்டுரைக்கு அதிக வாசகர்கள் அதன் கீழுள்ள லிங்கில் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள். விளம்பரங்களின் வருமானத்திலேயே இந்த இணையத்தளத்தை தொடர்ந்து நடத்த முடியும். தமிழில் அதிகம் வெளியாகாத இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து தர முடியும்.
அதிக வாசகர்கள் ஆதரவு தந்த காரணத்தால், உடனடியாக இந்த கட்டுரை வெளியாகிறது. இந்தக் கட்டுரைக்கும் வாசகர்கள் ஆதரவு இருக்கும் என நம்புகிறோம். இதோ, கட்டுரை:
1980-ம் ஆண்டு, ஜனவரி மாதம். புதுவருடம் பிறந்து ஓரிரு நாட்கள்.
இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு நம்பத்தகுந்த உளவுத் தகவல் ஒன்று கிடைத்தது. பிரான்ஸ் ரகசியமாக ஈராக்குக்கு அணுஆயுதத் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உதவுகிறது என்பதே அந்த உளவுத் தகவல்.
உதவியின் முதல் கட்டமாக தங்களிடம் இருந்த சக்தி வாய்ந்த அணுசக்தி ரியாக்டர் எந்திரம் ஒன்றையும், கொடுத்து அதை ஈராக்கில் நிறுவுவதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களையும் பிரான்சில் இருந்து அனுப்பி வைக்க போகிறார்கள் என்ற தகவல் மொசத்தின் தலைமையகத்தைச் சென்றடைந்தது.
தகவல் கிடைத்தவுடன் மொசாத் சுறுசுறுப்பாகியது.
மேலதிக உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கு ஈராக்குக்கும் பிரான்ஸூக்கும் ஏஜன்ட்டுகளை அனுப்பி வைத்தது மொசாத். அப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிடைத்த விபரங்கள்-
- ஈராக்கில் அணு ஆயுதத் தயாரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவது நிஜம்தான்.
- அதற்காக பிரான்ஸ் தமது தொழில்நுட்ப வல்லுனர்கள் சிலரை ஈராக்குக்கு அனுப்பி வைத்திருக்கிறது என்ற தகவலும் நிஜம்தான்.
- பிரெஞ்ச் தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்னமும் ஈராக்கிலேயே தங்கியிருக்கிறார்கள்.
- பிரான்ஸால் அனுப்பிவைக்கப்பட்ட ரிபாக்டர் எந்திரம் ஈராக்குக்குள் வந்துவிட்டது. அணு ஆயுதத் தொழிற்சாலை அமையவிருக்கும் பில்டிங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.
- ஈராக்கில் இந்த பில்டிங் இருப்பது பக்தாத்துக்கு வடக்கேயுள்ள அல்-ருவெய்த்தா என்ற சிறு நகரத்தில்.
இவ்வளவு விபரங்களையும் தமது உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட மொசாத், தகவல்களை இஸ்ரேலியப் பிரதமரின் பார்வைக்கு அனுப்பியது. இஸ்ரேலிய அரசு உயர்மட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன. இறுதியில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது.
அந்தத் தீர்மானம் -
அல்-ருவெய்த்தாவிலுள்ள அணு ஆயுத தொழிற்சாலை மீது, விமானத் தாக்குதல் நடத்தி, முழுமையாக அழிப்பது!
இந்த தாக்குதலை மிக விரைவில் செய்ய விரும்பியது இஸ்ரேலிய அரசு. காரணம், ஈராக்கின் அணு ஆயுத தொழிற்சாலை அப்போதுதான் அமைக்கப்பட்டு வந்தது. பில்டிங்கில் ரியாக்டர் எந்திரம் இருந்தாலும் இன்னமும் தயாரிப்பு ஆரம்பமாகவில்லை. யுரேனியம் ரொட்கள் (uranium rods) இன்னமும் ஈராக்குக்குள் போய்ச் சேரவில்லை.
யுரேனியம் ரொட்கள் தொழிற்சாலைக்குள் போவதற்கு முன்பே தொழிற்சாலையையும் அதிலுள்ள ரியாக்டர் எந்திரத்தையும் தரைமட்டமாக்கி விடவேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் என்னாகும்? யுரேனியம் ரொட்கள் தொழிற்சாலைக்கு உள்ளே போய்ச் சேர்ந்தபின் தாக்குதல் நடத்தினால், அந்தப் பகுதி முழுவதும் அணுக் கதிர்வீச்சு ஏற்பட்டு விடும்.
அணுக் கதிர்வீச்சு பரவி இஸ்ரேல் வரை வந்தாலும் வரலாம்.
இஸ்ரேலிய அரசு இப்படியான தீர்மானம் ஒன்றுக்கு வந்து விட்டாலும், ஈராக்கின் தொழிற்சாலையை குண்டுவீசி அழிக்கும் யோசனையை ஒருவர் எதிர்த்தார்.
அவர்தான் யிட்சாக் கோஃபி. இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் அன்றைய தலைவர்.
எதிர்ப்புத் தெரிவித்ததற்கு அவர் கூறிய காரணம்: இந்த விமானக் குண்டுவீச்சு தாக்குதலை ரகசியமாகச் செய்ய முடியாது. இஸ்ரேலிய விமானப்படை விமானங்களில் இருந்து குண்டு வீசப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு உள்ளேயே கதை வெளியே தெரியவந்து விடும். – இஸ்ரேல்தான் குண்டுவீச்சின் பின்னணியில் உள்ளது என்ற விபரமும் வெளியே வந்து விடும்.
அதன்பிறகு மேலை நாடுகளின் அரசியல் ரீதியான எதிர்ப்பை இஸ்ரேல் சமாளிக்க வேண்டியிருக்கும்.
  அதைவிட மற்றுமோர் அபாயமும் இதில் இருந்ததை மொசாத்தின் தலைவர் யிட்சாக் கோஃபி சுட்டிக் காட்டியிருந்தார். ஒரு வேளை இஸ்ரேலிய விமானங்கள் ஈராக்கின் அணு ஆயுத தொழிற்சாலை பில்டிங்கில் குண்டு வீசுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அதே பில்டிங்கில்ல் பிரான்ஸ் அரசால் அனுப்பிவைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களும் இருந்தால்?
அவர்களும் கொல்லப்படுவார்கள்.
அப்படி நடந்து விட்டால், இஸ்ரேலுக்கும் பிரான்ஸூக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும்.
அது மட்டுமல்ல, பிரான்ஸின் உளவுத்துறை அதுவரை காலமும் பாரிஸில் வைத்து நடைபெற்ற மொசாத்தின் ரகசிய நடவடிக்கைகள் எதிலும் தலையிட்டதில்லை. மொசாத்தும், தங்களது ஐரோப்பிய ரகசிய ஆபரேஷன்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள், (சில சந்தர்ப்பங்களில் ஆட்கடத்தல்கள் உட்பட) அனைத்தையும், பாரிஸில் வைத்துச் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
உளவுத்துறை மொசாத்துக்கு பாரிஸ் நகரில் சேஃப் ஹவுஸ் எனப்படும் பல பாதுகாப்பான வீடுகள் இருந்தன. ரகசிய சந்திப்புக்களை ஐரோப்பாவில் நடத்த வேண்டும் என்ற நிலை வரும்போது மொசாத்தின் முதல் தேர்வு, அந்த நாட்களில் பாரிஸ் நகரில் உள்ள அவர்களது பாதுகாப்பான வீடுகள்தான்.
இதெல்லாம் பிரெஞ்ச் உளவுத்துறைக்கும் தெரியும். ஆனால், அவர்கள் இவர்களது சோலியில் தலையிடுவதில்லை.
இப்போது ஈராக் மீது குண்டு வீசப்போய் பிரான்ஸ் அனுப்பிவைத்த ஆட்கள் கொல்லப்பட்டால், பிரெஞ்ச் உளவுத்துறை பாரிஸிலுள்ள மொசாத்தின் பாதுகாப்பான வீடுகளில் கை வைத்தாலும் வைக்கலாம். மொசாத்தின் ரகசிய தளம் ஒன்று ஐரோப்பாவில் இருப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஈராக்கில் இருந்து மொசாத் உளவாளிகள் அனுப்பியிருந்த தகவல்களின்படி, பிரான்ஸின் தொழில்நுட்ப வல்லுனர்கள் தினமும் ஈராக்கின் தொழிற்சாலை பில்டிங்குக்கு போகிறார்கள். அங்கே நேரடியாக நின்று தொழிற்சாலை அமைவதை மேற்பார்வை செய்கிறார்கள்.
எனவே இந்த பில்டிங் மீது விமானத்தில் இருந்து குண்டு வீசினால், பிரான்ஸின் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொல்லப்பட சான்ஸ் மிக அதிகம்.
மொசாத் தலைவர் இவ்வளவு காரணங்களை சொல்லி, இப்போது அவசரம் வேண்டாம். நாம் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொன்னாலும், இஸ்ரேலிய அரசு உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இதற்கு தலைகீழாக இருந்தது.
குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றே முடிவெடுத்திருந்தார்கள் அவர்கள். சதாம் ஹூசேனின் கைகளில் அணு ஆயுதம் ஒன்று கிடைத்துவிட்டால், அதை உடனடியாக அவர் தயங்காமல் இஸ்ரேலை நோக்கி உபயோகிப்பார் என்று இஸ்ரேலிய அரசு உறுதியாக நம்பியது.
எனவே, எப்படியாவது அந்த அணு ஆயுத உற்பத்தியை ஆரம்பத்திலேயே அழித்துவிட விரும்பியது.
“குண்டு வீச்சுத் தாக்குதலை கைவிட வேண்டும் என்ற நினைப்பையே விட்டுவிடுங்கள். தாக்குதல் நடைபெறத்தான் போகிறது. தாக்குதலை எப்படி நடத்தினால் நல்லது – அதற்கு மொசாத்தினால் எந்த வகையில் உதவ முடியும் என்பதைக் கூறுங்கள். அது போதும்” என்று இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து, மொசாத்தின் தலைவருக்கு சொல்லப்பட்டது.
அதன்பின் மொசாத் சில முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது.
மொசாத்தின் உளவாளிகள் அதுவரை கொடுத்திருந்த தகவல்களின்படி, பிரான்ஸ் தயாரித்த ரியாக்டர் எந்திரம் ஈராக்வரை பத்திரமாகச் சென்றுவிட்டது என்று கூறினோமல்லவா. அந்த எந்திரம் ஒன்றை மட்டும் வைத்து அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாது.
யுரேனியம் ரொட்களை இந்த ரியாக்டரில் செலுத்துவதற்கு ஒரு இணைப்பு எந்திரம் தேவை. அதுவும் பிரத்தியேகமாக, பிரென்ச் ரியாக்டருக்கு பொருந்தும்படியான இணைப்பு எந்திரமாக இருக்க வேண்டும்.
எனவே, இந்த இணைப்பு எந்திரத்தையும் பிரான்ஸே உருவாக்கி கொடுக்க சான்ஸ் அதிகம் என்று யோசித்தார் கோஃபி.
இதையடுத்து மொசாத்தின் உளவாளிகள் பிரான்ஸின் சிறு நகரங்களில் எல்லாம் ஊடுருவ விடப்பட்டனர். ஓரிரு நாட்களில் மொசாத் எதிர்பார்த்த தகவல் கிடைத்தது.
பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் Toulonக்கு அருகே La Seyne-sur-Mer என்ற சிறிய நகரத்தில் (இந்த நகரத்தை La Seyne என்றும் அழைப்பார்கள்) உள்ள ஒரு தொழிற்சாலையில் இந்த இணைப்பு எந்திரத்தை பிரான்ஸ் ரகசியமாக உருவாக்கி வருவது தெரிந்தது.
இந்த தகவல் போதாதா மொசாத்துக்கு? கடகடவென காரியங்களில் குதித்தது மொசாத். 
படித்தது பிடித்திருந்ததா? தமிழில் அதிகம் வெளிவராத இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து தரமுடியும். நாம் முன்பே குறிப்பிட்டபடி, இதே கட்டுரையை ஆங்கிலத்திலும் வெளியிடவில்லை. ஆனால், மற்றொரு கட்டுரையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இஸ்ரேலிய வீரரை சுட்டு வீழ்த்திய லெபனான் ராணுவ சினைப்பர் எங்கே?

இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர், லெபனான் ராணுவத்தை சேர்ந்த சினைப்பர் (தொலைவில் இருந்து குறிபார்த்து சுடுபவர்) ஒருவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற இஸ்ரேலிய ராணுவ அறிவிப்பு, இஸ்ரேல்-லெபனான் எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, ஏராளமான இஸ்ரேலிய ராணுவத் துருப்புகள் எல்லைப் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, இஸ்ரேலிய வீரரை சுட்டு வீத்தியதாக கூறப்படும் தமது ராணுவ வீரருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என லெபனான் ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, லெபனான் வீரர் தப்பியோடி மறைந்திருக்கலாம். இரண்டாவது, லெபனான் வீரரை, இஸ்ரேலியர்கள் சிறைப்பிடித்து இருக்கலாம். (அல்லது மூன்றாவதாக, லெபனான் ராணுவமே அரசியல் காரணங்களுக்காக தமது வீரரை மறைத்து வைத்திருக்கலாம்)
கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர், 31 வயதான ஷ்லோமி கோஹன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். எல்லைப் பகுதியில் ரோந்து சென்ற இஸ்ரேலிய படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், லெபனான் எல்லைக்குள் பிரவேசித்ததை அடுத்து, தொலைவில் இருந்து குறிபார்த்துக் கொண்டிருந்த லெபனான் ராணுவ ஸ்னைப்பர் இவரை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்பதே, லெபனான் தரப்பில் கூறப்படும் தியரி.
லெபனான் பகுதிக்குள் தமது ராணுவ வீரர்கள் பிரவேசிக்கவில்லை என்கிறது, இஸ்ரேல்.
இந்த சம்பவம் இஸ்ரேலிய எல்லைக்குள் ரொஷ் ஹனிக்ரா பகுதியில் நடந்ததாக இஸ்ரேல் கூறுகிறது. எல்லைக்கு மறுபுறம், லெபனானின் ரஸ் நகோரா என்ற இடம் உள்ளது. அங்கு இருந்துதான் லெபனான் வீரர் துப்பாக்கியால் சுட்டதாக இஸ்ரேலிய தரப்பில் சொல்கிறார்கள்.
லெபனான் இஸ்ரேலை நேரடியாக குற்றம்சாட்டவில்லை. ஆனால், லெபனான் அரசு ஆதரவு மீடியாக்கள், இந்த சம்பவம் நடந்தபின் லெபனானின் ரஸ் நகோரா பகுதிக்குள் அதிரடியாக புகுந்த இஸ்ரேலிய படைப்பிரிவு ஒன்று, துப்பாக்கியால் சுட்ட லெபனான் ராணுவ சினைப்பரை கைப்பற்றி, கடத்திச் சென்றிருக்கலாம் என எழுதுகின்றன.
ஒருவேளை அப்படி நடந்திருந்தால், நிலைமை மோசமாகும். (இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டதை அடுத்தே, இஸ்ரேல்-லெபனான் யுத்தம் தொடங்கியது என்பதை ஞாபகம் வைத்திருங்கள்)
லெபனான் ராணுவ சினைப்பர், 6 முதல் 10 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டதாகவும் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு, இந்த தாக்குதல் தொடர்பாக ‘உரிய பதில் நடவடிக்கை’ எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எல்லையின் எந்தப் பக்கத்தில் இருந்து ஏவுகணை கிளம்ப போகிறதோ!




SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இந்துத்துவக் கொடுங்கோன்மையில் முசாஃபர் நகர் முகாம்கள்

சுமார் 2°C வெப்பநிலை வரை குறைந்து அடிக்கும் குளிர் காற்றிலிருந்து பிறந்து 20 நாட்கள் மட்டுமேயான தனது மகனை காப்பாற்ற இயலாமல் போன தனது தற்போதைய வறுமை நிலைமையை எண்ணி குமுறுகிறாள் மர்சிதா கடூன் (வயது 25). அவளது பிளாஸ்டிக் கூடாரத்தை சுற்றிலும் மனிதக் கழிவுகளும், குப்பைகளுமாக இருக்கின்றன. இது போன்ற கூடாரங்களில் வசிக்கும் அந்த அகதிகள் முகாமின் மொத்த மக்கள் தொகை 4,500. உத்திர பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டம் ஷாம்லி மாவட்ட எல்லைக்கருகில் உள்ள மாலக்பூர் அகதிகள் முகாம் தான் அது. குளிர் கால நோய்களும், கொசுக்களும் அங்கு அதிகமாக உள்ளன.
அசாரா கிராமம்தென்மேற்கு பருவ மழை காலமான செப்டம்பரில் துவங்கிய முசாஃபர் நகர் கலவரத்தில் இதுவரை அதிகாரபூர்வமாக 63 பேர் வரை இறந்துள்ளனர். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 58 அகதிகள் முகாம்களில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முசுலீம்கள் தான். கடுங்குளிர் அடிக்க துவங்கிய நவம்பரில் ஒவ்வொரு அகதிகள் முகாம்களிலும் அதனைத் தாங்க முடியாத குழந்தைகளும், முதியவர்களும் அதிக அளவில் மரணத்தைத் தழுவி உள்ளனர். அப்படி இறந்த குழந்தைகளில் ஒன்றுதான் மர்சிதா கடூன் உடைய குழந்தையும். அந்த குழந்தை இறந்த பிறகு அவளது குடும்பத்திற்கு தாக்கும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு விறகுக் கட்டை தரப்பட்டுள்ளதாம். ”ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கு எப்படி இது போதுமானது” என்று ஏமாற்றத்துடன் அப்பாவியாக கேட்கிறாள் அந்த குழந்தையை இழந்த தாய்.
அவள் இருந்த மாலக்பூர் அகதிகள் முகாமில் மட்டும் நவம்பர் மாதம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரணமடைந்தவர்களில் 25 பேர் ஒரு மாதத்திற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள். இங்கு வசிக்கும் குழந்தைகளை இழந்த தாய்களில் தில்சானா பேகமும் ஒருத்தி. கடன் வாங்கியும், தங்களிடமிருந்த மோட்டார் சைக்கிளை ரூ 15 ஆயிரத்துக்கு விற்றும் தனது ஐந்து மாத குழந்தைக்கு முகாமிலிருந்து வெளியே போய் வைத்தியம் பார்த்திருக்கிறாள். கடைசி சொட்டு மீதமிருந்த பணம் வரை செலவிட்ட பேகத்தால் தன் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. முதலில் சாதாரண வயிற்றோட்டமாக துவங்கிய பிரச்சினைதான் குழந்தையில் மரணத்தில் போய் நின்றது.
குர்ஃபன், பதேரி குர்ட், பர்னாபி போன்ற அருகிலுள்ள பிற முகாம்களிலும் சாவு எண்ணிக்கை 8 வரை உயர்ந்துள்ளது. அதில் நால்வர் 30 நாட்களுக்குட்பட்ட குழந்தைகள். உள்நாட்டில் அகதிகளாக இருக்கும் இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடியாத காரணத்தால் முகாம்களுக்கு அருகில் உள்ள இடுகாடுகளிலேயே இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்கின்றனர்.
திறந்த வெளி அகதிகள் முகாம்
திறந்த வெளி அகதிகள் முகாம்
போதுமான குளிர் காக்கும் ஆடைகள் இல்லாததும், ஒழுகாத கூடாரத் துணிகள் வழங்கப்படாததும், முறையான கழிப்பிட வசதி செய்து தரப்படாததும் தான் இந்த மரணங்களுக்கு காரணமாகும். அரசு மருத்துவர் குளிர் காலம் துவங்கிய பிறகு முகாமை பார்வையிட வரவே இல்லையாம். சக்பூர் மற்றும் பாசிக்கான் முகாம்களில் நான்கு மரணங்களும், லாய் முகாமில் 12 மரணங்களும் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளன. மருத்துவ அலுவலரை கேட்டால் ஒன்றிரண்டு மரணங்கள் வேண்டுமானால் நிகழ்ந்திருக்கலாம் என சர்வ அலட்சியமாக பதிலளிக்கிறார்.
முசாஃபர் நகர் கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சகாய் கமிஷனின் விசாரணை காலத்தை இன்னும் ஆறு மாத காலத்திற்கு உத்திர பிரதேச மாநில உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதுவரை 650 பிரமாண பத்திரங்களை பதிவு செய்துள்ள நிலையில் இன்னும் இதே அளவுக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சகாய் அரசிடம் நீட்டிப்புக்கான காரணத்தை விளக்கியிருந்தார். இதுவரை முசாஃபர் நகரில் இருந்து வந்த கமிசனின் விசாரணை அலுவலகத்தை தற்போது லக்னோவுக்கு மாற்றி உள்ளனர்.
தற்போதைய நிலையிலேயே அறிக்கையை வெளியிடலாம் எனக் கூறுகிறார் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக். அதாவது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா போன்றவர்களுக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளதையும், தற்போது சரண்டராகி உடனடியாக பிணையில் வந்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சியையும் மனதில் கொண்டே இப்படி கூறியிருக்கிறார். சாத்வி ஜாட்டுகளின் மகா பஞ்சாயத்துகளில் கலந்து கொண்டு கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார் என்பதுதான் குற்றச்சாட்டு.
மலக்பூர்
மலக்பூர் திறந்தவெளி கூடாரங்கள்
அதாவது 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குள் கமிசன் அறிக்கை வெளியானால் தங்களுக்கு சாதகம் என்று பாஜக கருதுகிறது. பாஜக கலவரத்தை தூண்டும் வகையிலான  வீடியோவை முசாராபாத் பகுதியில் அவுட்சோர்சிங் முறையில் வெப்ஸ்ட்ரீக்ஸ் என்ற நிறுவனம் மூலமாக இணைய தளம் மற்றும் செல்பேசிகளில் பரவ விட்ட விசயங்கள் தற்போது கண்டறியப்பட்டு அவர்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் 177 பேர் கைதாகி உள்ளனர். 25 பேர் சரண்டராகி உள்ளனர். பதிவான 538 வழக்குகளின் பேரில் 6,244 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 111 பேர் மீது பாலியல் வல்லுறவு வழக்குகள் உள்ளன. எனினும் இப்பகுதியில் ஜாட்டுகளின் மேலாதிக்கம் காரணமாக வழக்குகளை வாபசு பெறச் சொல்லி முசுலீம்களை ஜாட்டுகள் மிரட்டி வருகிறார்கள்.
தொடர்ந்து நிம்மதியாக வாழ வேண்டுமானால் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முசுலீம்கள், அதற்காக தங்களை அணுகும்போது ஏன் என்று கூட போலீசார் விசாரிக்காமல் விட்டு விடுகின்றனர். இப்படி வாபஸ் வாங்கியவர்களில் ஒருவர் சம்யுதீனின் மகன் ஆலம். பொது இடத்தில் குரானை இழிவாகப் பேசியது, எரித்தது மற்றும் மசூதியை இடித்தது போன்ற குற்றச்சாட்டுகளை 16 பேர் மீது அவர்களது முகவரியுடன் சுமத்தியிருந்த இவர் தற்போது முசாஃபர் நகர் சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று அவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்று கூறி தனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார்.
அடுத்து, சலீம் என்பவர் தன் மீது தாக்குதல் நடத்தி விட்டு, குடியிருந்த வீட்டுக்கும் தீ வைத்தவர்கள் என்று முன்னர் தன்னால் அடையாளம் காட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்களை, தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறி இப்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். தப்பித்துள்ளவர்கள் அனைவருமே அவரது அண்டை வீடுகளில் வசித்த ஜாட் ஆதிக்க சாதி இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடாரங்கள்
600-க்கும் மேற்பட்ட கூடாரங்கள்
புகானா கிராமத்தை சேர்ந்த ஜமீல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது மனைவி அண்டை வீடுகளில் குடியிருந்த ஆதிக்க சாதி இந்துக்களால் கலவரத்தின்போது கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார். அப்போது புகார் அளித்திருந்த ஜமீலுக்கு இப்போது ஆதிக்க சாதி இந்துக்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறதாம். ஏற்கெனவே கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 63 ஆக குறைத்து காட்டும் நோக்கில் அரசு அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்யாமல் பிணங்களை எரிக்கச் சொல்லியிருந்தனர். தற்போது இப்படி கணக்கில் வராமல் இறந்தவர்களுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகையை பெற முடியாமல் கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் தவிக்கின்றனர்.
நவம்பர் 21-ம் தேதி விசாரணையை மாநில அரசிடமிருந்து மாற்றக் கோரிய மகா ஜாட் பஞ்சாயத்தின் கோரிக்கையை ஏற்று உச்சநீதி மன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பியது. முன்னதாக உ.பி மாநில அரசு தாக்கல் செய்த மனுவில் முகாம்களில் இருக்கும் 51 ஆயிரம் பேரில் 41 ஆயிரம் பேரை அவர்களுடைய பழைய குடியிருப்புகளுக்கு அனுப்பி விட்டதாக நீதிமன்றத்தில் சொல்லி இருந்தது. அப்படி முசுலீம்களை அனுப்பும் பட்சத்தில் அவர்கள் சொந்த கிராமத்திற்கு வருவதை ஜாட் சாதியினர் பரவலாக எதிர்க்கின்றனர். பால்டா கிராமம், புதானா பகுதியிலுள்ள சில கிராமங்களில் இத்தகையை எதிர்ப்பை ஆதிக்க சாதி இந்துக்கள் போலீசு ஐ.ஜி. அசுதோஷ் பாண்டே மற்றும் மாவட்ட நீதிபதி காஸல்ராஜிடம் நேரில் தெரிவித்துள்ளனர்.
பசிகலான் அகதிகள் முகாமில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒரு கமிட்டி அமைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். ஆனால் அங்கு போவதற்கு அவர்களில் பலருக்கும் தயக்கமாக இருந்தது. எனவே அக்கமிட்டி  பால்டாவுக்கு அருகில் நிலத்தை வாங்கி அங்கிருந்த குடும்பங்களுக்கு அந்நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்துக் கொடுத்தது.
முசாஃபர் நகருக்கருகிலுள்ள தியோபந்த் நகரில்தான் இந்தியாவிலேயே பெரிய இசுலாமிய மார்க்க கல்வி நிறுவனம் உள்ளது. அங்குள்ள ஜமியாத் உலெமா இ-ஹிந்த் என்ற அமைப்பு (அர்ஷத் மதானி) முசுலீம் அகதிகளுக்கான நிலத்தின் மதிப்பில் பாதித் தொகையை தருவதாகவும், ஒரு அறை கொண்ட வீடு ஒன்றை தலா ஒரு குடும்பத்திற்கு கட்டித் தருவதாகவும் முன் வந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.
மதரசாக்கள்
அகதி முகாம்களாக மாற்றப்பட்ட மதரசாக்கள் – கண்ட்லா, கைரானா கிராமங்கள்.
சொந்த ஊருக்கு போக விரும்பாத அகதிகளுக்கு ரூ 5 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து அவர்களது புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புக்காக மாநில அரசு வழங்குகிறது. அப்படி ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு கண்காணாத இடத்திற்கு போக நினைத்தாலும் வழக்குகளை வாபஸ் பெறச் சொல்லி அவர்களை தாக்கியவர்கள் நெருக்குகிறார்கள். அரசும், நீதித்துறையும், காவல்துறையும் ஆதிக்கசாதி இந்துக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. சொந்த கிராமங்களுக்கு போனால் மீண்டும் தாக்கப்படுவோம் என்று அஞ்சிய 950 குடும்பங்கள் அதனை எழுதிக் கொடுத்துவிட்டன. இவர்களுக்கு இது தவிர எந்த அரசு இழப்பீட்டு தொகையும் கிடைக்காது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே இவர்களுக்கு பணம் கணக்கில் சேர்ந்தது.
இப்போது அகதி முகாம்களில் பல ஜோடிகளின் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. லாய் முகாமில் முன்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பெண்களின் திருமணம் ஒரே நேரத்தில் நடைபெற்றது. கலவரத்தில் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம், நகைகள், சொத்துக்கள் போன்றவற்றை முழுவதும் இழந்து விட்ட இவர்களைப் போன்ற குடும்பத்தினர் அகதி முகாமில் இருக்கும் ஏதாவதொரு பையனுக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர்.
அப்படி உருவாகும் புதிய குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் தொகையும், ஒரு பிளாஸ்டிக் கூடாரமும், சில அடிப்படை பாத்திரங்களும் வழங்கப்படும் என்பதால் திருமண வயதை எட்டாத பெண்களுக்கு கூட திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் உள்ளனர். ஏனென்றால் ஒரே குடும்பமாக இருந்தால் கிடைக்கும் நிதி உதவி மூலமாக குளிரைத் தாங்குமளவுக்கு உணவு தர இயலாது என்பதுதான் எதார்த்தம்.
மேலும் ”திருமணம் செய்து கொடுத்து விட்டால் அதன்பிறகு பெண்ணை பாதுகாப்பது அவளது கணவனின் கடமை” என்கிறார் தன் 17 வயது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ள லாய் அகதி முகாமின் 35 வயது தாய் சமீம் கடூன். முகாம்களுக்குள் ஆதிக்க சாதி இந்துக்கள் புகுந்து கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் அபாயம் இருப்பதாலும், வெளியில் போகும் பெண்களையும் எப்போதுமே பாதுகாப்பது நடைமுறையில இனி இயலாது என்பதாலும் பையன் நல்லவனா, கெட்டவனா என்று கூட பார்க்காமல் திருமணங்களை நடத்தியாக வேண்டிய சூழலில் முகாம்களில் உள்ள முசுலீம் பெற்றோர்கள் இருக்கின்றனர். ஜேக்கியா கேரி கிராமத்தில் உள்ள அகதி முகாமில் திருமணமான ஒரு இசுலாமிய பெண்ணை கும்பல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றத்திற்காக இரு ஜாட் சாதி இளைஞர்கள் கடந்த மாதம் 4-ம் தேதி கைதாகினர் என்பது போன்ற சம்பவங்களும் முகாமில் உள்ள முசுலீம்களை முடிவில்லாத அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
காந்தா முகாமில் நடந்த மூன்று பெரிய அளவிலான திருமணங்களில் கலந்து கொண்ட ஜோடிகளின் எண்ணிக்கை 400. சபூர் முகாமில் 160, ஜொல்லா முகாமில் 72 என இதுவரை 700-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளதாக சொல்கிறார் இவற்றை நடத்தி வைக்கும் ஜமியாத் உலெமா இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மெஹ்மூத் மதானி. அவர்கள் சார்பாக தலா ஒரு ஜோடிக்கு ரூ 15 ஆயிரம் தருவதாக வாக்குக் கொடுத்துள்ளனர். சில முகாம்களில் தொகையினை தந்தாலும் பெரும்பாலான முகாம்களில் தரப்படவில்லை. சிறுபான்மையாக இருக்கும் கிராமங்களில் உள்ள முசுலீம்கள் முகாம்களில் இருந்து ஊருக்கு திரும்பச் செல்லும் போது அவர்களில் ஏழை இசுலாமியர்களை மட்டுமே குறி வைத்து செயல்படும் இந்த அமைப்பினர் குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்து வைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
பொதுவாக முகாமில் இருக்கும் பலத்த காயமடைந்த நபர்களுக்கு அரசு தரும் உதவித் தொகை என்பது மாதமொன்றுக்கு ரூ 400 மட்டுமே. உச்சநீதி மன்றமோ முசுலீம்களுக்கு மட்டும் நிவாரணம் தரக் கூடாது, தங்களது இடங்களுக்கு தைரியமாக திரும்பியிருப்பினும் ஜாட்டுகளுக்கும் இழப்பீடு தர வேண்டும் என்று நவம்பர் 21-ம் தேதி உத்திரவிடுகிறது.
பாஜக தான் இந்த கலவரத்தின் அடிக்கொள்ளி என்பது வெள்ளிடை மலை. சிறுபான்மை மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த காங்கிரசு உள்ளிட்ட பல ஓட்டுச்சீட்டு கட்சிகளும் இப்பிரச்சினையில் எப்படி நாடாளுமன்றத்திற்கு ஓட்டுக்களை அறுவடை செய்யலாம் எனக் காத்துக் கொண்டிருக்கின்றன. முலாயம் சிங் யாதவ் சிறுபான்மையினரின் காவலனாக தன்னை இப்போது சொல்லிக் கொண்டாலும் பெரும்பான்மை ஜாட்டுகளை பகைத்துக் கொள்ளாமல் இசுலாமிய ஓட்டுக்களை அறுவடை செய்ய விரும்புகிறார். போலி கம்யூனிஸ்டுகளுக்கும், தலித் அமைப்புகளுக்கும் இந்தப் பகுதியில் செல்வாக்கு இல்லாத காரணத்தால் அவர்கள் தில்லி கருத்தரங்குகள் மற்றும் அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
நுஷத் அகமது கான் என்ற பெண் வழக்குரைஞர் உச்சநீதி மன்றத்தில் முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக சட்டரீதியாக போராடி வருகிறார். அவர் மீது கடந்த டிசம்பர் 2 அன்று தில்லியில் ஜாட் சாதியினரால் தாக்குதல் நடத்தப் பெற்றுள்ளது. மதியம் 2 மணிக்கு திபாகி தியாகி என்ற ஜாட் சாதியினை சேர்ந்த ரியல் எஸ்டேட் மாஃபியாவும், அவரது 20 கூட்டாளிகளும் சேர்ந்து இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இதுபற்றி காவல்துறை, சிறுபான்மை கமிசன், பெண்கள் கமிசன், சோனியா காந்தி போன்றோருக்கு அவர் புகார் அனுப்பியுள்ளார்.
திறந்த வெளி முகாம்கள்
தூரத்திலிருந்து வண்ணமயமாக காட்சியளிக்கும் அவல முகாம்கள்
சட்டபூர்வமான அனைத்து பிரிவினரும் ஆதிக்க சாதி ஜாட்டுகளுக்கு ஆதரவாகவே உள்ளனர். முசுலீம்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது கலவரத்தில் மட்டுமின்றி அவர்களை நடத்தும் அரசின் குறிக்கோளிலும் இருக்கிறது. முசாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஜாட் சாதி நிலப்பிரபுக்களின் கால்நடைகளை பராமரித்துக் கொண்டிருந்த ஏழை முசுலீம்கள் மீது நிலப்பிரபுக்களின் ஆதிக்கமும், அரசின் கூட்டுக் களவாணித்தனமும், ஜாட் சாதி இளைஞர்களை கொம்பு சீவி விடும் சங் பரிவாரங்களின் நயவஞ்சக அரசியலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துகின்றன. ஓரளவு பசையுள்ள முசுலீம்களை தனிக் குடியிருப்புக்கு மாற்றும் வேலையை பாஜக எதிர்பார்ப்பது போல, ஜாட்டுகள் எதிர்பார்ப்பது போல முலாயம்சிங் யாதவ் செய்து முடிக்கிறார்.
எங்கும் போக முடியாமல் பயந்து போய் முகாம்களில் அகதிகளாகவே தொடரும் ஏழை முசுலீம்களுக்கு குளிரை தாங்க முடியாத மரணங்களும், குழந்தை திருமணங்களும், கல்வி மறுப்பும் தொடர் கதைகளாக மீந்துள்ளது. கொசுக்களுக்கும், குளிருக்கும் தோதாக இந்த மரணங்களை அங்கு போகாத அரசு மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள். பிரிவினைக் கால இந்தியாவின் துயரத்தை போலவே ஒரு காட்டுமிராண்டித்தனமான உலகத்திற்குள் ஜாட்டுகளின் மகா பஞ்சாயத்து தேசத்தை இழுக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கெதிராக போராடியாக வேண்டும் என்பது வரலாற்றுக் கடமை.
-    வசந்தன்
நன்றி:வினவு 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

அற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).


  அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் விசேடமாக குறிப்பிட்டுக் கூறக்கூடியவை . அத்தகு விடயங்கள் இஸ்லாத்தின் சித்தாந்த வெற்றியை எதிர்வு கூறியிருப்பதோடு சில ஆற்றல் மிக்க மனிதர்களை உதாரணப் படுத்தி நிற்கிறது . அத்தகு மனிதர்களின் சராசரி மனிதப் பலவீனங்களை தாண்டி இஸ்லாத்தின் இலட்சியக் கொடியை ஏந்தி நிற்பதிலும் பாதுகாப்பதிலும் ,அதன் ஆதிக்க எல்லையை விரிவு படுத்துவதிலும் அவர்கள் செய்த தியாகங்கள் சேவைகள் எழுத்தில் வடிக்க முடியாதது . அத்தகு வியக்கத்தக்க மனிதரில் ஒருவரே  உமர் இப்னு கத்தாப் (ரலி )ஆவார்கள் .

   அது இஸ்லாத்தை சுமந்த மனிதர்களின் மிக இறுக்கமான மக்கா காலப்பகுதி . இரகசியப் பிரச்சார எல்லைகளை தாண்டி அந்த முஸ்லீம் உம்மா இஸ்லாம் எனும் சித்தாந்த அறிமுகத்தை பகிரங்கப் படுத்த ஏறத்தாழ சற்று தலைகாட்ட தொடங்கிய நேரம் . ஹம்சா (ரலி )அவர்களின் இஸ்லாமிய தழுவல் குரைசிக் குப்பார்களின் இதயத்தை மிக ஆழமாகவே காயப்படுத்தி இருந்தது . அப்போது இன்னொரு அதிர்ச்சி அது வெந்த புண்ணில் கூரான ஈட்டியை செருகியது போல் இருந்தது உமர் (ரலி )அவர்களின் இஸ்லாமிய தழுவல் !

    இஸ்லாமிய வரலாற்றில் உமர் (ரலி ) அவர்களின் பங்களிப்பு மற்றும் பணிகள் தொடர்பில் யாராலும் குறை மதிப்பீடு செய்ய முடியாது . அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களின் கணிப்பில் அடிப்படையிலான பிரார்த்தனை அபூஜஹல் ,அல்லது உமர் (ரலி ) ஆகிய இருவரில் ஒருவரை இஸ்லாமிய அணியின் பக்கம் வேண்டுவதாக இருந்தது .அந்த வகையில் உமர் (ரலி )அவர்களின் இஸ்லாமிய இணைவு தூதர் (ஸல் )அவர்களின் வேண்டுதல் இறைவனின் தேர்வு என்ற வகையில் மிகப் பிரசித்தமானதே.

     அடிக்கடி கோபப்பட்டு வாளை ஏந்திக்கொண்டு வரும் இவரிடம் அப்படி என்ன சிறப்பம்சம் இருந்திடப் போகிறது !? மிகை வீரம் ,தியாகம் ,அர்ப்பணிப்பு என சராசரி சஹாபிகளை விட இந்த உமர் (ரலி )எந்த இடத்தில வித்தியாசப் படுகிறார் !? எனும் கேள்வி எனக்குள் அவரிடமிருந்து விசேடமாக எதையோ தோடச் சொன்னது ."உமரின் (ரலி ) நாவில் அல்லாஹ் பேசுகிறான் " , " எனக்குப் பின் ஒரு நபி வருவதாக இருந்தால் அது உமராகத்தான் இருக்கும் " என்ற நபிமொழிகள் இது விடயத்தில் என்னை இன்னும் ஊக்கப் படுத்தியது .அது எது ?


       ஒரு சித்தாந்தத்தை அரசியல் வடிவப் படுத்தி பரவலாக்கம் செய்பவர்களை சித்தாந்த சிற்பிகள் என பொதுவாக அழைப்பர் .ஒரு சராசரி மனிதன் ஒரு சிற்பியை பார்க்கும் போது அவனது அசைவுகள் ,நகர்வுகள் சிலபோது புரியாத ஒன்றாகவும் ,இன்னும் சிலபோது தேவையற்றதாகவும் தோன்றலாம் . இன்னும் சிலபோது அவன் செதுக்குகிறானா ,சிதைக்கின்றானா !? என சந்தேகமும் தோன்றலாம் . அதன் இறுதி நிலை ஒரு உருவத்தை காட்டி நிற்கும் போதே அந்த பார்வையாளனுக்கு உண்மை புரியும் .

    அதேபோல ஒரு சித்தாந்த சிற்பி என்பவன் தான் சுமந்த சித்தாந்த அடிப்படையில் ,இலக்குகள் ,நிலைப்பாடுகள் சிதையாமல் அரசியல் வடிவமாக விரிவுபடுத்தி பாதுகாக்கும் கலைஞன். இவனது நடைதைகளிலும் செயல்களிலும் ,ஒரு சராசரி பாமரன் ஒருவனால் ஊகிக்க முடியாத பல நகர்வுகள் காணப்படும் . அந்த வகையில் இஸ்லாம் எனும் சித்தாந்தத்துக்கு உலகளாவிய அரசியல் அதிகார அங்கீகாரத்தை (அடுத்த மனிதர்கள் விரும்பியோ விரும்பாமலோ ) உமர் (ரலி )அவர்களின் ஆட்சியில் இருந்தே கிடைக்கப் பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை .

   அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) தொடங்கி அபூபக்கர் (ரலி )அவர்களின் ஆட்சிக் காலம் வரை DEFENSIVE வேண்டிய STATE POLITICS தான் மதீனாவில் இருந்தது . யர்மூக் களம் கூட ரோமர்களை அச்சப்படுதுவதன் ஊடாக மதீனா இஸ்லாமிய அரசை பாதுகாப்பது என்ற அரசியலையே கொண்டிருந்தது . பாரசீகம் ரோம் உட்பட அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) காலத்தில் இஸ்லாத்தின் தூதுச் செய்தி அனுப்பப் பட்டிருந்தாலும் ஜிஹாதா ,ஜிஸ்யா வா ? என்ற இஸ்லாத்தின் வெளிநாட்டுக் கொள்கைக்கு உறுதியான நடைமுறை வடிவம் கிடைத்தது அன்றைய வல்லரசான பாரசீகம் வீழ்த்தப் பட்டதன் பின்னரே ஆகும் , அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) ஹிஜ்ரத்தின் போது எதிர்வு கூறப்பட்ட இந்த வெற்றி உமர் (ரலி )கலீபாவாக ஆனபின்பே நிகழ்ந்தது . இன்னும் பைத்துல் முகத்திஸ் உள்ளடங்கலான பாலஸ்தீனம் இஸ்லாத்தின் அதிகாரத்தின் கீழ் வந்ததும் இந்த உமர் (ரலி )அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஆகும் . அந்தவகையில் இஸ்லாத்தின் அரசியல் அதிகார வடிவத்தை OFFENSIVE தரம் நோக்கி நகர்த்திய அரசியல் சிற்பியாக இந்த உமர் (ரலி ) காணப்படுகின்றார் . 
                                                      (இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் ..)  

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

'தாருல் குப்ர்' இல் முஸ்லிமின் வாழ்வும் போராட்டமும். சில குறிப்புகள். (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)



தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு  அரசியலில் தான் முடியும் .



                                                                       அனேகமாக ஒவ்வொரு சிறுபான்மை வாழ்விடங்களிலும் இன ,மத வாத பெரும்பான்மை அரசியலின் இரத்தம் குடிக்கும் மேலாதிக்க அரசியல் இருந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப் படாத விதி!இந்த விடயத்தில் அடிப்படைக் காரணத்தை பற்றி தெளிவு பெறாமல் விளைவுப் பகுதியில் இருந்து தீர்வு நோக்கி சிறுபான்மையை  நகர்த்துவது ஒரு தவறான அணுகு முறை . இந்தத் தவறுதான் மிகச் சிறந்த போராட்ட பாதையாக ஒவ்வொரு சிறுபான்மை நிலங்களிலும் உணர்த்தப் படுகின்றது . எல்லோராலும் மார்தட்டிப் பேசப்படும் ஜனநாயகமும் இந்த பக்கச் சார்பு அரசியலில் பெரும் பான்மையின் பக்கமிருந்து தான் தனது நியாயத்தை காட்டி நிற்கும் .


                        பெரும்பான்மைக்கு எதிராக வெளிப்படையாக சிறுபான்மையின் எந்த நடவடிக்கையும் பெரும்பான்மையின் ஆக்ரோசமான எதிர்ப்பு நிலையை மேலோங்கச் செய்து , மூர்க்கத் தனமாக சிறுபான்மைகள் மீது அத்து மீறவைக்கும் . மிக அண்மைய தசாப்த இன,மத  வாத அரசியல்  நிகழ்வுகளில்இதற்கு சிறந்த ஆதாரங்களை எம்மால் காண முடியும் . 


                                                             இந்த அடிப்படையில் வன்முறையோ , சார்பு ,எதிர் நிலை அரசியலோ பெரும்பான்மையை எதிர் கொள்வதில் ஒரு வெற்றிகரமான பாதையாக உணர முடியாதுள்ளது . ஒரு தேசிய எல்லைக்குள் சிறுபான்மை உள்வாங்கப் படும் போதே ஒரு வகையான அடிமை வரையறைக்குள் புதைந்து போய் விடுகின்றன .  இந்த பக்கச் சார்பு ஆதிக்க அரசியலின் அதி உச்ச நிகழ்வுதான் பெரும்பான்மையின் வன்முறை அடக்கு முறைகள் . இந்த அநியாயத்தின்  சூட்டில் இருந்து தான் சிறுபான்மை தனது வாழ்வுக்கான போராட்டப் பாதையை நியாமாக சிந்திக்க வேண்டியுள்ளது . 


                                                             உரிமைகள் சலுகைகள் போல் காட்டப் பட ,தப்பிப் பிழைத்து முடிந்தால் வாழு என்ற 'jungle law ' பெருந்தன்மையுடன் அள்ளி வீசப்பட ,பெரும்பான்மை அபிலாசை மீது  நேர்ந்து விடப்பட்ட பலிக்கடா வாழ்வே சிறுபான்மை வாழ்வாகும் .மேலும் பெரும்பான்மை எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு அரசியல் வடிவமெடுக்க  சிறுபான்மை முயலும் சந்தர்ப்பங்களில் அத்தகு சிறுபான்மை தலைமைகள் திட்ட மிட்டு அழிக்கப்படும் , சிதறடிக்கப்படும் என்பதும் நாம் கண் கண்ட உண்மைகள் .


                                        ஆகவே சிறுபான்மையை பொருத்தவரை (மற்றும் பொதுவாகவும் )ஜனநாயகம் ஒரு  தோல்வி நிலை கோட்பாடுதான் என்பதில் சந்தேகமில்லை .அதில் தீர்வை விட பக்கச் சார்பும் ,அத்து மீறலும் அதிகமாக இருக்கின்றது .இந்த அரசியல் வடிவத்தை ஏற்றுக்கொண்டு சிறுபான்மை உரிமை ,மற்றும் சுயாதிபத்தியம் பற்றி சிந்திப்பது ஒரு வீண் வேலையாகும் .

                                                         அப்படியானால் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ? அதற்கான விடை மிக அவசரமாக இஸ்லாமிய அகீதாவின் ஆழ்ந்த தெளிவில் இருந்து தனது சிந்தனைத் தரத்தையும், கருத்து வெளிப்பாட்டையும் ,நடத்தையையும் தீர்மானிப்பதோடு ,இஸ்லாத்தின் சித்தாந்த வாதத்தின் கருத்தியலை முற்படுத்திய பகிரங்க பிரச்சாரத்தை பெரும்பான்மை நோக்கி செய்வதாகும் .



                                         இதன் பிரதி விளைவாக இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும் அதன் உலகியல் தேவைப் பாட்டை புரிந்து கொண்ட நிலையில் ,பெரும்பான்மைக்குள் இருந்து ஒரு சார்பாளர் வட்டத்தை 
உருவாக்க முடியும் . இந்த நிலை முஸ்லீம் உம்மாவை இன ,மத அடையாளப் படுத்தலை தாண்டிய அதன் இயல்பான தோற்றத்தை காட்ட முடியும் .


                                                   மேலும் இஸ்லாத்தின் பொதுத் தலைமையான 'கிலாபா ' அரசியல் எனும் ஒரே  தலைமையின் கீழான ஒன்றிணைவு தொடர்பில் ஆழமானதும் தெளிவானதுமான அறிவையும் அது பெற்றுத் தரும் 'இன்ஷா அல்லாஹ் '.

                      "இமாம் ஒரு கேடயம் ஆவார் .அவருக்கு பின்னால் இருந்து மக்கள் போர் புரிவார்கள் .அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள் "
                                                                                                    (முஸ்லீம் )

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட கொமாண்டர் காலித் இப்னு வலீத் (ரலி ) - சிறப்பு பதிவு

காலித் இப்னு வலீத்(ரலி.). இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த சைனியங்களை எதிர்கொண்டு களங்களில் வெற்றிவாகை சூடியவர். எதிரி படைகளின் பலவீனமான முனைகளை இனங்கண்டு அதனுள் ஊடுருவும் வியூகங்களை வகுப்பதில் வல்லவர் இவர். தனது படையினரை அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்யும் மனோநிலையை வலுப்படுத்தி அவர்களது தீரமிகு தாக்குதல்களின் ஊடாக எதிரியை நிலைகுலைய வைத்து வெற்றிகளை வளைத்து போடுபவர்.





யர்மூக் யுத்தமும் அதில் அவர் காட்டிய தலைமைத்துவமும் இதற்கு சிறந்த சான்றாகும். ரோமானிய படைகளின் கட்டளைத்தளபதிகளில் ஒருவர் ஜர்ஜாஹ். காலித் இப்னு வலீத்தின் போர் ஆற்றலை வியந்து அவரது முகாமில் அவரை சந்தித்து வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்டார். அதற்கு அவர் தனது திறமைகளை பற்றியோ யுத்தவியல் புலமைகளை பற்றியோ பதிலளிக்கவில்லை. மாறாக “நாங்கள் ஓரிறை கொள்கையை நம்புபவர்கள். அதற்காக உழைப்பவர்கள். அதனால் அந்த இறைவன் “அல்லாஹ்” எமக்கு உதவுகிறான்” என்று ஆணித்தரமாகவும், உறுதியாகவும் விடையிறுத்தார்கள்.  இந்த பதில் ரோமானிய படைத்தலைவரை பிரமிக்க வைத்தது.
அவர் கேட்டார் “உங்கள் கொள்கையில் இணைந்தால் நானும் வெற்றியாளனாகி விடுவேனா?” என்று. மீண்டும் காலித் சொன்னார், “ஆம். நிச்சயமாக. என்னிலும் பன்மடங்கு அதிகமான வெற்றிகளை பெறுவீர்கள். என்னை விட சிறந்த தளபதியாக உங்களால் சண்டையிடவும் முடியும்”. இந்த பதில் ரோமானிய கிறிஸ்தவ தளபதியை அதிர வைத்தது. குளறி அழுதார். அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் முஸ்லிம் தளபதியாக மாறி நின்றார்.  இதுதான் காலித் இப்னு வலீத். இது தான் இஸ்லாமிய வரலாறு. 

ஒரு  மிகப்பெரும் வீரர், தன்னிகரில்லா தளபதி, அல்லாஹ்வின் வாள் எனும் சைபுல்லாஹ் பட்டத்தை நபியவர்களின் திருவாயினால் பெற்றவர், ஜிஹாத் வேறு அவர் வேறு என்று பிரித்து பார்க்க முடியாத முஜாஹித். ஆனால் அவரிற்கு கூட ஷுஹதாவாக மரணிக்கும் களத்தின் வீர மரணம் கிட்டவில்லை. ஒரு கட்டிலில் அல்லாஹ்வின் பாதையில் நான் வெட்டப்படவில்லையே என்ற விம்மிய நெஞ்சுடன் குமுறி அழுதபடி தான் மரணித்தார். 

ரண்டாம் உலக மகா யுத்தத்தில் அடோல்ப் ஹிட்டலரின் முதல் நிலை தளபதிகளில் ஒருவர்  Erwin Johannes Eugen Rommel. பாலைவன நரி என வரலாற்றில் புகழ் பெற்றவர். ஜேர்மனிய படைகளின் பீல்ட் மார்ஷல் எனும் உயர் பதவியை வகித்தவர். ஜேர்மனில் இவரை “இரண்டாம் ஹிட்லர்” என அழைப்பார்கள் அவரின் கைகளில் குவிந்த அதிகாரங்களின் காரணமாக. நாஸிகளின் வெற்றிகளிற்கு மிக முக்கியாக விளங்கிய சண்டைகளை வழி நடாத்தியவர். வட ஆபிரிக்க வெற்றிகளின் சொந்தக்காரர். ஜேர்மனிய இராணுவமும் அடோல்ப் ஹிட்லரும் சடுதியாக உயர்வதற்கு உழைத்த முக்கியமான ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஹிட்லர் யுத்தங்களை ஆரம்பித் போது, அவரை ஹெய்ல் ஹிட்லர் என அனைவரும் துதித்த போது, அவரை பெயர் சொல்லி அழைக்கும் துணிவு பெற்ற தளபதி ரோமல்.

ஹிட்லர் ஒரு முறை பெர்லினின் மக்கள் சதுக்கத்தில் பேசும் போது கூறினார், “எமது வெற்றிகளிற்கு காரணம் நமது வொக்ஸ் கவச வாகனங்களா? அல்லது எமது மெஸ்ஸர் சண்டை விமானங்களா? அல்லது ஜெனரல் ரோமலா? என்பதில் நான் அடிக்கடி குழம்பி விடுகிறேன். இறுதியில் அது ரோமலால் தான் என்ற முடிவுடன் தூங்கச் செல்கிறேன்” என்று. 

கைப்பற்றிய இடங்களில் ஜெர்மனிய படைகள் பல அநியாயங்களை செய்தன. போலந்து முதல் பிரான்ஸ் வரை இது நிகழ்ந்தது. ஆனால் ரோமல் அதனை செய்யவில்லை. எதிரி தேச பெண்களை தனது படையினர் கற்பழிப்பதற்கு அனுமதிக்கவில்லை. சிறுவர்களையும் வயோதிபர்களையும், மத துறவிகளையும் கொலை செய்ய வேண்டான் என கண்டிப்பான கட்டளையிட்டார். பயிர் நிலங்களை தீயிடுவதை தடுத்தார். சரணடைந்த கைதிகளுடன் நியாயமாக நடந்து கொண்டார். கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு படைத் தளபதிகளை சித்திரவதை செய்து கொல்லாமல் தனது டின்னரில் அவர்களையும் அழைத்து, தன்னுடன் எதிர்த்து நின்ற அவர்களது வீரத்தை கண்ணியப்படுத்தினார். 

இவரது இந்த நடவடிக்கை ஜேர்மனிய சீக்கிரட் சேர்விஸ் எனும் ஹிட்லரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு பிரிவினரால் திரிவுபடுத்தப்பட்டு ஹிட்லிரிற்கு தெரியப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜேர்மனிய வெற்றிகளின் பின்னால் அடோல்ப் ஹிட்லறின் உரைகளும், ரோமலின் வெற்றிகளுமே இருப்பதாக மக்கள் பேசுவதையும் கேள்விப்பட்ட ஹிட்லரிற்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ரோமலை பீல்ட் மார்ஷல் தரத்திற்கு கீழான பதவிக்கு நியமனம் செய்தார். பிரான்ஸின் பாதுகாப்பு தளபதியாக அனுப்பினார். பின்னர் மீண்டும் ஜேர்மனிக்கு அழைத்து கொண்டார். 

சண்டைகளின் போக்கு மாறியமையும், நேசப்படைகளின் தாக்குதல்கள் வேகம் பெற்றமையும் ஜேர்மனிய இராணுவ தளபதிகளிடையே முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கியது. சண்டை வியூகங்களில் ஹிட்லரிற்காக மரணிக்க வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கி சிப்பாய்களின் வீரத்தை உயர்நிலையில் பேணி வெற்றிகளை கண்டவர் ஜெனரல் ரோமல். ஆனால் அவர் இறுதியில் ஹிட்லரின் இராணுவ வியூகங்களை விமர்சனம் செய்தார். கொளரவத்திற்காகவும், புகழிற்காகவும் எதிரியின் பலம் பொருந்திய முனைகளை தேர்வு செய்து சண்டைகளை ஆரம்பிப்பது கூட்டு தற்கொலைக்கு சமானம் என்று ஹிட்லரிற்கு நேரடியாகவே கடிதமனுப்பினார் ரோமல்.

ஹிட்லரின் முரட்டுத்தனமான, முட்டாள்தனமான இறுதி நடவடிக்கைகளால் விரக்தியடைந்த இரு ஜெனரல்கள் மேலும் மூன்று கேர்ணல்களுடன் இணைந்து ஹிட்லரை கொலை செய்து விட்டு ஜேர்மனியை காப்பாற்றுவது பற்றி திட்டமிட்டனர். அதற்கு “ஒப்பரேஷன் வல்கரீன்” என்று பெயரிட்டு அடோல்ப் ஹிட்லரை ஒரு நேரக்குண்டு வெடிப்பின் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு அதில் தோல்வியை தழுவினர். இந்த தாக்குதல் நடவடிக்கையை பற்றியும், ஹிட்லர் இல்லாத ஜேர்மனிக்கு ஜெனரல் ரோமல் தலைமையேற்க வேண்டும் என்றும் வேண்டினர்.  அவர்கள் ஜெனரல் ரோமலிற்கும் தங்கள் எண்ணங்களை அறியப்படுத்தினர். ரோமால் அதனை வெகுவாக எதிர்த்தார். “ஒரு சாதாரண ஜேர்மனிய வீரனாக எல்லையில் சாவது, ஜேர்மனிய அரசை சதி செய்து கவிழ்த்து அதன் தலைவனாவதை விட எவ்வளவோ மேல்” என திட்டத்தை சாடினார். 

கொலையாளிகள், திட்டமிட்டவர்கள் எல்லோரும் இனங்காணப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை ஹிட்ல் நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஜெனரல் ரோமலிற்கு ஒரு தகவல் ஹிட்லரினால் அனுப்பப்பட்டது. அதனை ஹிட்லரின் நெருங்கிய சகாக்களான இரண்டு ஜெனரல்கள் அதனை ரோமலிடம் கொண்டு சென்றனர். வில்ஹம் பேர்க்டோம், ஏர்னஸ் மய்சல் என்பவர்களே அந்த ஜெனரல்கள். “ஹிட்லரை படுகொலை செய்து ஜேர்மனியை எதிரிகளிடம் தாரை வார்க்கும் துரோக கும்பலில் நீங்களும் ஒருவர் என மக்கள் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவது உங்கள் தேர்வா? அல்லது நீங்களே உங்களை தலையில் சுட்டு மரணிப்பதன் ஊடாக கௌரவமான ஜேர்மனிய ஜெனரலாக நல்லடக்கம் செய்யப்படுவது உங்கள் தேர்வா?. 30 நிமிடங்களில் இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.” இது தான் ஹிட்லர் அனுப்பிய கடிதத்தின் வாசகங்கள். 

ஜெனரல் ரோமல் தற்கொலையை தேர்ந்து கொண்டார். 1944-ல் ஒரு பிஸ்டலில் இருந்து புறப்பட்ட தோட்டா மூலம் உலகை வெற்றி கொண்ட தளபதி தனது ஓபல் காரினுள் வைத்து தன் கதையை முடித்துக்கொண்டார். ஹிட்லரிற்காக கோயபல்ஸ் ஒரு அறிக்கை தயாரித்து இருந்தான். அதில் “ஜெனரல் ரோமல் தனது உடலில் ஏற்பட்ட ரணங்களின் காரணமாகவும், நோர்மண்டி தோல்வியின் காரணமாகவும் தனது உயிரை தானாகவே மாய்த்து கொண்டதாகவும், இது ஜேர்மனிய இராணுவத்திற்கும், ஜேர்மனிய மக்களிற்கும், தலைவர் அடோல்ப் ஹிட்லரிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் வீரனாக வாழ்ந்து வீரனாக மரணித்தார்.” என்று குறிப்பிட்டிருந்தான். ஜேர்மனிய வானொலி தேசிய துக்கதினத்தை பிரகடனம் செய்து, ஸ்வஸ்திகா கொடியை அவர் பேழையின் மேல் போர்த்தி பூரண அரச, இராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தது. 

ஜெனரல் ரோமல் தனது இராணுவ வாழ்வியல் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதன் பெயர் “பேப்பர்ஸ் ஒப் ரோமல்” என்பதாகும். அதில் அவர், அரேபிய தளபதி காலித் இப்னு வலீத்தை இராணுவ, மற்றும் தத்துவ ரீதியாக பின்பற்றியதாகவும், தனது வெற்றிகளின் பின்னால் தளபதி காலித்தின் உக்திகள் துணை நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு சுத்த இராணுவ வீரனாக தளபதி காலித்தை பார்க்கவில்லை என்றும், பண்பாடுகளும் மனிதாபிமானங்களும் நிறைந்த முழுமையான ஒரு மனித நேயம் கொண்ட ஒரு நபரை பார்த்ததாகவும், சண்டைகளில் மட்டுமன்றி போஸ்ட் ஒப் வோர் எனும் சண்டைகளிற்கு பின்னரான நாட்களிலும் கூட தான் தளபதி காலித்தை பின்பற்றியதாகவும் எழுதியுள்ளார். 

தளபதி காலித்தின் தந்திரங்களில் தன்னை கவர்ந்தவதை, எதிரியின் பலவீனமான முனைகளை தகர்ப்பதன் ஊடாக வெற்றியை வசமாக்குவதும், வீரர்களை தங்கள் உயிர்களை தத்தம் செய்து யுத்தம் செய்யும் மனோநிலையில் பேணுவதும் என்றும் அதனை தான் தலைமையேற்ற 37 சண்டைகளில் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அதில் 33 சண்டைகளில் தான் பரிபூரண் வெற்றியை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் யார் என்று தான் தேடியதாகவும், ஆனால் யாரையும் தன்னால் கண்டு கொள்ள முடியமாமல் போனதாகவும், அவரை வழிநடாத்தியது இஸ்லாம் எனும் மதன் என்பதை தான் கண்டறிந்ததாகவும் குறித்துள்ள தளபதி ஜெனரல் ரோமல் சண்டைகளின் நெருக்கடிமிக்க காலங்கள் காரணமாக அந்த காலித்தை வழிநடாத்திய இஸ்லாத்தை கற்க முடியாமல் போனது தனது வாழ்வின் பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.

நாம் இரண்டு தளபதிகளின் வரலாறுகளை மேலே பார்த்தோம். ஆனால் இன்று இஸ்லாமிய உம்மாவை வழி நடாத்தும் ஆட்சியாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்கா மீதும், மேற்கின் ஆயுதங்கள் மீதும் தவக்கல் வைக்கிறார்கள். தங்கள் அரசியல், இராணுவ செயற்பாடுகளை பேணும் விடயங்களில் குப்பார்கள் காட்டித்தந்த விதிமுறைகளை பேணுவதில் அதீத கரிசனம் காட்டுகிறார்கள். வெற்றியின் பாதையாக சடவாதத்தை விரும்பி தேர்ந்துள்ளார்கள். இது ஆட்சியாளர்களிற்கு மட்டுமல்ல. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் கூட முஸ்லிம்கள் இஸ்லாத்திலும் இறைவனின் வார்த்தைகளிலும், நபியின் சுன்னாவிலும் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

மார்க்க நம்பிக்கை என்பதும், மார்க்கத்தின் விதிகளின்படி ஒழுகுதல் என்பதும் வெறுமனே வாழ்வியல் செயற்பாடுகளில் மட்டும் தான் எஞ்சி  நிற்கிறது முஸ்லிம்களிடத்தில். வணக்க வழிபாடுகள், திருமண தேர்வுகளும் பந்தங்களும், தொழில் ரீதியான செயற்பாடுகள், சொத்துக்களை பகிர்தல் போன்ற பல விடயங்களில் இஸ்லாத்தை இறுக அணைத்து அதன் படி நடக்கும் முஸ்லிம்களால், தங்களிற்கான அரசியல் பாதை, தங்களிற்கான பாதுகாப்பு என்ற விடயங்கள் தங்களை அணுகும் போது முற்றிலும் இஸ்லாத்தின் தீர்வுகளை புறக்கணித்து விட்டு குப்பாரிய வழிமுறைகளை, அவர்கள் காட்டித்தந்த செயல்முறைகளை நாடி ஓடுகிறார்கள். எதிரியிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்கிறார்கள். குப்பாரை திருப்தி படுத்துவதன் ஊடாக தங்கள் இருப்பை பேணும் அரசியல் சாணாக்கியம் மிக்கவர்களாக தங்களை முன்னிறுத்துகிறார்கள். 

முல்லாக்கள் முட்டி மோதுகிறார்கள். எதற்காக என்று பார்த்தால் ஒரு பிக்ஹ் மசாயிலாக அது நிச்சயமாக இருக்கும். இரண்டு வழுக்கை தலையர்கள் ஒரு சீப்பிற்காக சண்டையிடுவது போல. யர்மூக் சண்டைகளின் போது தளபதி அபூ உபைதா, தளபதி யசீத், தளபதி முஆவியா, தளபதி அம்ர் இப்னு ஆஸ் போன்ற பலர் இருந்தனர். இவர்கள் காலித் இன்னு வலீத்துடன் விவாதம் நடத்தவில்லை. பரஸ்பரம் பத்வா கொடுக்கவில்லை. முன்னாலும் பின்னாலும் பழித்தும் இழித்தும் பேசவில்லை. அந்த புரிதலை அவர்களிற்கு வழங்கியது புனித இஸ்லாம். 
ஆனால் இன்று நம் நிலை தான் என்ன? எமக்கான தலைமைத்துவம் இல்லாமையே இதற்கெல்லாம் அடிப்படை. அதனால் தான் நாம் சடவாதத்திடமும், ஜனநாயகத்திடமும், தாகூத்திடமும் முழந்தாளிட்டு அடைக்கலம் தேடுகின்றோம். எமக்கான கிலாபாவை நாம் தொலைத்து விட்டு குப்பாரின் கால்களின் இடையே அதனை தேடுகின்றோம். 

கிலாபா குப்பாரின் தொடைகளில் இல்லை. அது இஸ்லாத்தில் இருக்கிறது. மறைந்த இஸ்லாமிய உன்னதமான ஆன்மாக்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருக்கிறது. சற்று அவர்களது வாழ்க்கையை தேடிப்பாருங்கள். ஜெனரல் ரோமலைப் போல. அப்போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். தாகூத்தை வீழ்த்திய தாவூத்களாக...

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

“ஒரு சத்தியப் போராளியின் இலட்சிய வாசகங்கள்” - ஜமாத் -ஏ- இஸ்லாமி தலைவரின் இறுதி வார்த்தைகள் !

“ஷஹீத் என்பவன் யார் தெரியுமா?. இறைவனின் சட்டங்கள் தனது வாழ்வினை விடவும் பெறுமதியானது என்பதனை தனது மரணத்தின் மூலம் நிரூபணம் செய்பவன்” - செய்யது குதுப்


ரண்டு முறை பிற்போடப்பட்ட மரண தண்டனைக்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை வழங்கியது. வெள்ளிக்கிழமை டாக்கா மத்திய சிறைச்சாலையில் அப்துல் காதிர் முல்லா தூக்கிலிடப்பட்டார். 1971-ல் நிகழ்ந்த போர் குற்றங்களிற்கு காரணாமாக இருந்தவர்களின் ஒருவர் என்பதே, இவர் மீதான மரணதண்டனைக்காக நியாயப்படுத்தப்பட்ட அரசு தரப்பு காரணம். அவரது பிறப்பிடமான பரீத்பூரில் வைத்து அவரின் சகோதரரிடம் முல்லா அப்துல் காதிரின் உடலம் கையளிக்கப்பட்டு பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அரச உளவாளிகள் உட்பட.


பெப்ரவரியில் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதரை மீண்டும் நீதி மன்றத்திற்கு அழைத்து மரண தண்டனை வழங்கிய விசித்திரம் வங்க தேசத்தில் நிகழ்ந்துள்ளது. அவரது சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் காரணம் கூறப்படாமலே நிராகரிக்கப்பட்டன. அப்பீலும் மறுக்கப்பட்டது. எல்லாமே அவசர அவசரமாக ட்றயல் முறையில் நடாத்தி முடிக்கப்பட்டன. ஒரு இராணுவ ஜுண்டா அரசு செயற்படும் விதத்தில் பங்களாதேஷ் அரசு செயற்பட்டு தீர்ப்பை எழுத வைத்து நிறைவேற்றியும் உள்ளது. வங்க அரசின் பின் எந்த ஏகாதிபத்தியம் உள்ளது. அது எதனை செய்ய நினைக்கிறது என்பது பற்றிய பதிவை இன்ஷாஅல்லாஹ் வரும் காலத்தில் பதிவிடுவோம்.

தனது மரணத்திற்கு முன்னர் அவர் எழுதிய செய்தியொன்றை islam21c.com  வெளியிட்டுள்ளது. அதில் அவர்....

“ நான் அநியாயமாக கொல்லப்பட்டால் இறைவனிடத்தில் அவனது மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணித்த தியாகியாக ஏற்றுக்கொள்ளப்படுவேன். இதில் கவலைகொள்ள எந்தவொரு காரணமும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்கள் என்னை அநியாயமாக கொலை செய்யவுள்ளனர். எனது கொலைக்கு காரணம், நான் இஸ்லாமிய இயக்க செயற்பாடுகளில் முனைப்பாக இருந்ததும், எனது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பியதுமாகும். இது தான் நான் செய்த குற்றம். இது குற்றம் என்றால் இந்த குற்றத்தை நான் எனது சுவாசம் இருக்கும் வரை திரும்ப திரும்ப செய்வேன். ”

”எனது உடலில் இருந்து சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தமும் இஸ்லாமிய இயக்கத்திற்கு உரம் ஊட்டுவதாக அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அது நிச்சயம் நடக்கும். நான் எனது வாழ்நாள் முழுவதையும் பங்களாதேஷ் இஸ்லாமிய இயக்கத்தின் செயல் நடவடிக்கைகளிற்காகவே அர்ப்பணித்தேன். நான் தவறான ஆட்சியாளர்களின் இஸ்லாமியவிரோத அரசியல் முடிவுகளிற்கு ஆதரவாக பேசவில்லை. அதனை கடுமையாக எதிர்த்தேன். விமர்சித்தேன். 1971-ல் நான் எதை செய்தேனோ அதனைத்தான் 2013-இலும் செய்து கொண்டிருக்கின்றேன். இஸ்லாத்திற்கு எதிரான எந்த ஜனநாயகத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.இது தான் ஆட்சியாளர்களிற்கு என் மேல் கோபம் ஏற்படவும், என் கருத்துக்களின் மேல் அச்சம் ஏற்படவும் காரணமாக அமைந்தது. எனது மரணம் எனது சிந்தனையின், எனது செயலின், எனது பிரச்சாரத்தின் சத்தியத்தன்மைக்கு சான்று பகர்வதாக அமைவதையிட்டு நான் திருப்தி அடைந்தவனாகவே உள்ளேனன். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” 

என அவர் தெரிவித்திருந்தார். 

ஒரு இஸ்லாமிய ஊழியன் தனது கடைசி நிமிடங்களில் எவ்வாறு நடந்து கொள்வான் என்பதற்கான சான்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இறைவனின் பாதையில் அவனது மார்க்கத்திற்காக உழைத்த ஒரு இறைவனின் அடிமை தனது வாழ்வை அவர் சுமந்த கொள்கைக்காக அர்ப்பணம் செய்துள்ளார். எகிப்தில் அன்று அப்துல் காதர் அவ்தாவும், செய்யது குதுபும் காட்டிய தியாகத்தின் பாதை புற்களும் பற்றைகளும் மண்டி தடம் தெரியாமல் போயிருந்த வேளை நேற்று அந்த பாதையின் வெளிச்சத்தை ஒரு உன்னத மனிதன் தன் உயிரின் மூலம் துப்பரவு செய்து எமக்கு காண்பித்துள்ளான். 

“ஜனநாயகம் என்ற பெயரில் ஆளும் தாகூத்திய சக்திகளின் கொள்கைகளிற்கு அடிபணியாமல் இஸ்லாத்தை ஆட்சியின் தலைமையில் கொண்டு வர உழைத்த ஒரு மனிதனின் கதை முடிவிற்கு வந்துள்ளது. இதில் நாம் என்ன படிப்பினையை கண்டு கொண்டுள்ளோம் சகோதரா?...”
அன்னாரின் பர்சக்குடைய வாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் இறைவனிடத்தில் நாம் நாம் பிரார்த்தனை செய்வோமாக. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: