Facebook Twitter RSS

ஓநாய்களின் பாசறை (பகுதி 03)








  பாலஸ்தீனை அபகரிக்க யூதப் பொறிமுறை உதுமானிய கிலாபாவை தனது கவர்ச்சிகரமான திட்டங்களுடன் அணுகியபோது அதன்அது  சாதகமாகவில்லை .கிலாபா அரசு பலவீனமான தனது இறுதி நிலைவரை பாலஸ்தீனை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. யூத அதிகார நிலத்தின் எதிர்பார்ப்புகளை கைவிட யூதர்களும் தயாரில்லை .எனவே இறுதித் தூதுக்குழு கலீபாவுடன் நிகழ்த்திய பேச்சுக்களை முடித்து திரும்பியது .


     கைபரின் பழைய நினைவுகளோடு முஸ்லீம்களின் கழுத்தைக் கடிக்கும் ஆர்வத்தை காட்டும் பற்களை கடித்தவாறு அந்த ஓநாய்கள் சோக 'மோஷனில்' முகத்தை வைத்துக்கொண்டு வெளியேறின .கலீபாவுக்கு தெரியாமல் தமக்குள் கண்களை சிமிட்டிக் கொண்டன ! அதன் அர்த்தம் அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் பிரித்தானியாவுக்கும் மட்டுமே அன்று தெரிந்த விடயம். 1948 இல் உலகத்துக்கும் புரிந்தது .

            உண்மையில் ஒரு சமூகம் மேலாதிக்கம் பெற மூன்று முக்கிய காரணிகள் அவசியமாகின்றன. இவற்றில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் இவற்றுக்கு இடையிலான இடைத் தொடர்பை பேணிக்கொள்வதில் இருந்தே அது ஒரு அரசியல் நாகரீகமாக பரிணமிக்க முடியும் .அது ஒருசுதந்திரமான  அதிகாரமாக பிரகடனப்படுத்த முடியும்.காலத்தால் சூழ்நிலையால் மாறுபாடுகள் இருந்த போதும் இதுவே நிலையான உண்மையாகும் .

1. முன்மாதிரி மிக்கதும் தன்னை பிரத்தியோகமாக அடையாளப் படுத்தக்கூடியதுமான அடையாளத்தை கொண்டிருத்தல் .(இதுவே அந்த நாகரீகத்தின் அடிப்படை )

2. இராணுவ தொழில்நுட்ப அரசியல் பயன்பாடும் பிரயோகமும் .

3. அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடும் பிரயோகமும் .

                     என்பதே அவைகளாகும் .இதிலே  முதலாவது விடயத்தை வைத்தே அந்த ஆட்சியின்  தரமும் பொதுவான மனித சமூகத்தை பொறுத்தவரை அதன் அரசியல் பொருளாதார நலமும் தீர்மானிக்கப்படும் .இதன் மூலமே நாகரீக மாற்றமும் ஏற்படும் .
இந்த முதலாவது பண்புக்கூறை மிகச் சிறப்பாக பயன்படுத்தியதன் காரணமாகவே இஸ்லாமிய கிலாபா ஆட்சியை முஸ்லீம் அல்லாதோரும் (யூதர்கள் உட்பட )சிறந்த ஆட்சியாக கூறும் அளவுக்கு இஸ்லாமிய நாகரீகம் என  வரலாறு படைத்தது . 

          உலகத்தில் தோன்றி ஆதிக்கம் செலுத்திய, செலுத்திக் கொண்டிருக்கும் அணைத்து மேலாதிக்கங்களும் இந்த மூன்று காரணிகளையும் கொண்டியங்கினாலும் ,நடத்தை பண்பை பொறுத்தவரை இரண்டாம் மூன்றாம் காரணிகளை பயன்படுத்தி முதலாவது நிலையை தக்கவைத்துள்ளன .ஒரு வகையான நிர்ப்பந்த நாகரீக நியதியையும் கடைப்பிடிக்கின்றன .கிலாபா ஆட்சியின் பெயரிலும் இஸ்லாம் சொல்லும் அதிகார அரசியல் வடிவத்தை தவறாக பயன்படுத்திய கலீபாக்களும் அதிகாரிகளும் உண்டு .இதை வைத்து இஸ்லாத்தின் அரசியல் வடிவத்தை குறைகூறும் அதிகமானோரை நாம் காண்கிறோம் . 

            இப்படியானவர்கள் ஒரு வரலாற்று உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் ஆசியாவின் இந்திய தீபகற்பம் முதல் ஐரோப்பாவின் ஸ்பெயின் வரை இஸ்லாம் அதிகாரமாக கால் பதித்தது . அந்த வீச்செல்லையை பயன்படுத்தி ஒரு பலாத்கார நாகரீக திணிப்பை மேட்கொள்ளவில்லை . இஸ்லாம் மனித சமூகத்துக்கான ஒரு பொது சுதந்திரத்தை வரையறுத்தது . இஸ்லாத்தின் அடிப்படையிலான இந்த சுதந்திரத்தின் காரணமாகவே இந்தியா இன்றும் ஒரு இந்து நாடாக இருக்கின்றது .

                                                                         (இன்ஷா அல்லாஹ் தொடரும் ..)

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: