Facebook Twitter RSS

சினாய் வளைகுடாவில் சண்டையிடும் பலமிக்க அணி “Ansar Bait al-Maqdis”


Ansar Bait al-Maqdisஇவர்கள் தான் இன்று எகிப்தின் ஸினாய் பகுதியில் உள்ள முதன்மை போராளிகள் இயக்கம். இவர்களின் தாய் அமைப்பு  “இஸ்லாமிக் ஜிஹாத்” எனும் அமைப்பாகும். 1970 முதல் செயற்படும் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பானது உலகின் பல பாகங்களிலும் நடைபெறும் போராட்டங்களில் தங்கள் போராளிகளை அனுப்பி வைத்திருந்தது. ஆப்கானிஸ்தான் முதல் காஸா வரை இவர்களது போராளிகள் சண்டைகளில் ஈடுபட்ட வந்தனர். வருகின்றனர். அவ்வகையில் அல்-காயிதாவுடன் நெருக்கமான தொடர்புகள் இருந்த போதும் இவர்கள் இஃவானிய சிந்தனை பிரிவிற்குட்பட்டவர்களாக விளங்கினர். இவர்களின் இன்றைய வடிவமே சினாயின் அன்சார் பைத் அல் மக்திஸ் ஆகும். ஜெரூஸலத்தை மீட்பதை இலக்காக கொண்டு இவர்கள் செயற்படுகின்றனர். முர்ஸியின் ஆட்சி கவிழ்ப்பானது இவர்களது சண்டைக்களங்களிற்கான திறவு கோலாக அமைந்துள்ளது. அதன் காரணமாக இவர்கள் சினாயில் பல தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன் அங்கு சக்தி மிக்க அமைப்பாகவும் உருவெடுத்துள்ளனர். 



இவர்களது ஆதிக்கமும், தாக்குதல் வலுவும் தென் சினாய் பகுதியில் அண்மைகாலமாக வெகுவாக அதிகரித்து வருகின்றது. அங்கு வாழும் மக்களும் இனக்குழுக்களும் இவர்களை உள்வாங்கியவர்களாகவுள்ளனர். எகிப்திலும் குறிப்பாக சினாய் பகுதியிலும் இவர்கள் பல தாக்குதல்களை பரவலாக மேற்கொண்டுள்ளனர். அதில் முக்கியமான ஒரு முயற்ச்சியும், தோல்வியில் முடிந்த முயற்ச்சியுமே, எகிப்தின் உள்துறை அமைச்சர் முஹம்மத் இப்ராஹிம் மீதான படுகொலை முயற்ச்சியாகும். இந்த அமைப்பினர் எகிப்திய அரசிற்கு மட்டுமல்லாமல். இஸ்ரேலிய அரசிற்கும் பிரச்சனைக்குரிய சக்தியாக மாறியுள்ளனர். இஸ்ரேலின் தனிப்பட்ட வேண்டுகோளின் பேரில் ஜெனரல் சிசி சினாயில் இவர்களை வேட்டையாடுமாறு தனது இாணுவத்தை ஏவியுள்ளார். 

எகிப்திய இராணுவத்துடன் இணைந்து இவர்களை அழித்தொழிக்கும் வேலையில் இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சு ஈடுபட்டுள்ளது. எகிப்தியர்களை மட்டும் போராளிகளாக கொண்டிருந்த இந்த அமைப்பு இப்போது பல நாட்டு போராளிகளையும் கொண்டதாக கடந்த ஆறு மாத காலங்களுள் வளற்ச்சியடைந்துள்ளது. இதில் அநேகமானவர்கள் மத்தியகிழக்கின் அராபியர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இஸ்மாயிலிய்யா மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள இராணுவ சாவடிகள், பொலிஸ் ரோந்து அணிகள் மீது தினமும் ஒரு தாக்குதல் எனும் அளவிற்கு இவர்களது பலம் அதிகரத்துள்ளது. காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக நிகழத்தப்படும் தாக்குதல்களிற்கு ஒப்பாக இப்போது சினாயில் தாக்குதல்கள் நடக்கின்றன. இந்த அமைப்பின் போராளிகள் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணி வருகின்றனர் . 

பெதுனிகள் என்று அல்லது பது என்று அழைக்கப்படும் நாடோடி இன குழுவினரே சினாயில் அதிகம் உள்ளனர். இவர்கள் பல குழுக்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து வாழ்கின்றனர். கடினமான நாடோடி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள். பாலை நிலங்களில் முகாமமைத்து வாழ்வதை இவர்கள் அதிகம் விரும்புவர். கழுகு, கழுததை, குதிரை, ஓட்டகம் போன்றவற்றை விருப்பமாக வளர்ப்பர். இவர்கள் சவுதி அரேபியாவில் 14 இலட்சம் பேர் வாழ்கின்றனர். இந்த இனத்தினரில் பல இன்று அன்சார் அல் பைத் போராளிகளாக மாறியுள்ளனர். மத்திய கிழக்கின் பல பது கோத்திரங்களின் இளைஞர்களும் இப்போது சினாயை நோக்கி எகிப்திய மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக சண்டையிட உவப்புடன் நகர ஆரம்பித்துள்ளனர். சுமார் 40,000 பது இனத்தவர் பலஸ்தீனில் வாழ்கின்றனர். கட்டார்,குவைத்,எமிரேட்ஸ்,பஹ்ரைன்,அல்ஜீரியா,லிபியா,மொராக்கோ,சிரியா,ஜோர்தான்,யெமன்,டுனீஷியா,இஸ்ரேல் என உலகின் பல பகுதிகளிலும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களது கவனம் இப்போது சினாயை நோக்கி திரும்பியுள்ளது. போராட்ட குணமுள்ள, இழப்புகளிற்கு அஞ்சாத ஒரு இனம் இப்போது சினாயில் சண்டையிடுகின்றது. இது ஒரு கடினமான சமர்களங்களை உருவாக்க வல்லதாய் எதிர்காலத்தில் அமையும். 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: