Facebook Twitter RSS


இஸ்லாத்தை தழுவிய நெதர்லாந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர் மதீனா வருகை!...


      இஸ்லாத்திற்கு கடும் எதிர்ப்பாளராக திகழ்ந்த நெதர்லாந்து நாட்டின் அரசியல் தலைவரான அர்னுட்ஃபான் டூன் சவூதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு வருகை தந்துள்ளார். இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரித்த நெதர்லாந்தில் பிரசித்திப்பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர் கிரீட் வில்டேர்ஸின் கட்சியில் அர்னுட்ஃபான் டூன் முக்கிய தலைவர் ஆவார்.
இஸ்லாத்தையும், இறுதித்தூதரையும் அவமதிக்கும் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரிப்பதில் கிரீட் வில்டேர்ஸுக்கு உதவியர்களில் முக்கியமானவர் அர்னூட்ஃபான் டூன் ஆவார். இஸ்லாத்தைக் குறித்தும், முஹம்மது நபியைக் குறித்தும் ஆழமாக படித்ததை தொடர்ந்து கடந்த மாதம் டூன் இஸ்லாத்தை தழுவியிருந்தார். ஃபித்னா திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பே டூனுக்கு இஸ்லாத்தைக் குறித்து படிக்க தூண்டியது.
மதீனா மஸ்ஜிதில் இரண்டு இமாம்களுடன் சந்திப்பை நடத்திய டூன், புனித உம்ராவை நிறைவேற்ற மக்காவுக்கு புறப்பட்டார்.நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்றத்திலும், ஹேக் நகர சிட்டி கவுன்சிலிலும் உறுப்பினரான டூன், டிவிட்டரில் தான் இஸ்லாத்தை ஏற்றதை அறிவித்திருந்தார். க்ரீட் வில்டேர்ஸின் வலதுகரமாக செயல்பட்ட டூனின், இந்த அறிவிப்பை பலரும் நகைச்சுவையாக கருதினர். ஆனால், தனது நிலைப்பாட்டை உறுதிச் செய்யும் வகையில் சிட்டி மேயருக்கு டூன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவரதுமனமாற்றம் உறுதிச் செய்யப்பட்டது.
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது குறித்து டூன் கூறியது:இஸ்லாத்தைக் குறித்து மோசமான பல கதைகளையும் நான் கேட்பதுண்டு.கட்சி தலைவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் இஸ்லாத்தைக் குறித்து விரிவாக ஆராய நான் தீர்மானித்தேன். தொடர்ந்து திருக்குர்ஆனையும், முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையையும், ஹதீஸையும்(நபிகளாரின் போதனைகள்) ஆழமாக படித்தேன். இதன் மூலம் சத்தியத்தை உணர்ந்துகொண்டேன்.இஸ்லாத்தை நான் தழுவியது குறித்து நெதர்லாந்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள்  எழுந்துள்ளன.இவ்வாறு டூன் தெரிவித்தார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி குற்ற ஒப்புதல் வாக்குமூலம்!...


2007-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த மாதம் டெல்லியில் வைத்து கைதுச் செய்யப்பட்ட குஜராத்தைச் சார்ந்த பவேஷ் பட்டேல் ஜெய்ப்பூரில் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக குண்டுவைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
மாஜிஸ்ட்ரேட் முன்பாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று என்.ஐ.ஏ(தேசிய புலனாய்வு ஏஜன்சி) தெரிவித்துள்ளது.கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பின்னர் பெப்ருவரி 27-ஆம் தேதி முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜிதின் மீது குண்டுவீசிய வழக்கிலும் பவேஷ் பட்டேல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான்.
பவேஷ் பட்டேல் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக அளித்த வாக்குமூலத்தின் முக்கிய பகுதிகள்: குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு ஒரு வாரம் முன்பாக நான் அஜ்மீருக்கு வரவேண்டும் என்று குண்டுவெடிப்பில் தொடர்புடைய தற்போது தலைமறைவாக உள்ள சுரேஷ் நாயர் என்னிடம் கட்டளையிட்டார். நான் சம்மதித்தபோது இருவரும் ஒன்றாக செல்லலாம் என்று சுரேஷ் நாயர் கூறினான். தொடர்ந்து அக்டோபர் 10-ஆம் தேதி கோத்ராவிற்கு வந்தோம். சுரேஷ் நாயர், முகேஷ் வாஸ்னி, ஹர்ஷாத் ராஜ் ஆகியோரும் இதர மூன்று பேரும் அங்கே காத்திருந்தோம். கோத்ராவில் இருந்து புறப்பட்ட குழுவினர் மறுநாள் 11-ஆம் தேதி அஜ்மீரை அடைந்தோம். மாலையில் தர்காவிற்கு சென்ற குழுவினர் குண்டை வைத்தனர். ஆனால், அஜ்மீர் பயணத்தின் நோக்கம் குறித்து எனக்கு தெரியாது. அஹ்மதாபாத்திற்கு திரும்ப செல்ல பேருந்தில் ஏறும் போது சுரேஷ் நாயர் அஜ்மீர் செல்வதன் நோக்கத்தை கூறினான். அஜ்மீர் தர்காவில் குண்டு வைக்கும் திட்டத்தை தயாரித்தவர் மனோஜ் பாய் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில் ஜோஷி ஆவான். இவ்வாறு பவேஷ் பட்டேல் தனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
அஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கும் திட்டத்தை தயாரித்த சுனில் ஜோஷியை சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹிந்துத்துவா தீவிரவாதிகளே சுட்டுக்கொலைச் செய்துள்ளனர். இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ஹர்ஷத் ராஜ் முன்னர் கைதுச் செய்யப்பட்டான். தலைக்கு என்.ஐ.ஏ 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதி சுரேஷ் நாயர் பல வருடங்களாக தலைமறைவாக உள்ளான். ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் சூத்திரதாரிகளான ராம்ஜி கல்சங்கராவும், சந்தீப் டாங்கேவும் தலைமறைவாக உள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பர்மா: முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை பொலிஸார் வேடிக்கை பார்த்தனர்  


வன்முறைக் கும்பல் வீடுகளுக்கு தீவைப்பதையும் வீடியோ காட்டுகிறது.
வன்முறைக் கும்பல் வீடுகளுக்கு தீவைப்பதையும் வீடியோ காட்டுகிறது.
பர்மாவின் மெய்க்டீலா நகரில் பௌத்த வன்முறைக் கும்பல் சிறுபான்மை முஸ்லிம்களைத் தாக்குவதை பொலிஸ் அதிகாரிகள் உடனிருந்து வேடிக்கை பார்ப்பது போன்ற பொலிஸ் வீடியோக்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன.
முஸ்லிம் உரிமையாளரைக் கொண்ட நகைக்கடை ஒன்றை ஆத்திரம் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி அழிப்பதையும் வீடுகளுக்கு தீ வைப்பதையும் இந்த வீடியோவில் காண முடிகிறது.

ஒரு முஸ்லிம்  தீப்பிடித்து எரிவதும் இந்த வீடியோவில் வருகிறது. 
மண்டலே பகுதியில் உள்ள மெய்க்டீலா நகரில் எவ்விதமாக வன்முறை அரங்கேறியது என்பதை முழுமையாக விளக்குவதாகவும், தடையங்களைக் காண்பிப்பதாகவும் பிபிசிக்கு கிடைத்துள்ள வீடியோ அமைந்துள்ளது.
அதிலே ஒரு காட்சியில், உடலில் தீவைக்கப்பட்ட ஒரு ஆள் தரையில் புரள அதனை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தினர், "தண்ணீரெல்லாம் எடுத்துவர வேண்டாம் அவன் அப்படியே சாகட்டும்" என்று கூறுகின்றனர்.
இன்னொரு காட்சியில் தப்பித்து ஓட முயலும் ஒரு இளைஞனைப் பிடித்து ஒரு கும்பல் தாக்குகிறது. புத்த பிக்கு ஒருவரும் அவரை அடிக்கிறார்.
இந்த வீடியோக்களில் பெரும்பகுதியை பர்மீய பொலிசாரே படம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற மாதம் எடுக்கப்பட்ட வீடியோ இது.
அச்சமயம் மெய்க்டீலாவில் நடந்த வன்முறைகளில் குறைந்தபட்சம் 43 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிக்கபடுகிறது.
இதிலும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யும் ஐரோப்பிய ஒன்றியம்.இனியாவது விழித்துகொல்லுமா முஸ்லிம் நாடுகள்?

பொருளாதார தடை விலக்கல்?

பர்மாவில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் சீர்திருத்தங்களுக்காக அந்நாட்டின் மீது தாம் விதித்திருந்த தண்டனைத் தடைகளை விலக்கிக்கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு ஒன்றை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஒரு வருட காலமாக தண்டனைத் தடைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பர்மாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் பற்றி கவலைகள் எழுந்திருந்தாலும் தண்டனைத் தடைகளை நிரந்தரமாக விலக்கிக்கொள்வது என்றே ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுக்கும் என்று கருதப்படுகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரியாவின் முக்கிய ராணுவத்தளம் போராளிகளின் வசம் வீழ்கிறது


சிரியாவின் முக்கிய ராணுவத்தளம் போராளிகளின் வசம் வீழ்கிறது

 சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் அதிபரின் படை பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் சிரியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள் ஹோம்ஸ் நகரில் உள்ள டாபா ராணுவத்தளத்தை கைப்பற்றும் நோக்கில் கடந்த சில நாட்களாக போராளிகள் கடும் சண்டையிட்டு வருகின்றனர். லெபனான் அருகில் உள்ள இந்த பகுதியை தங்களுடைய ஆளுகையின் கீழ் கொண்டுவர நடந்த இந்த உச்ச கட்ட சண்டையில், இன்று அந்த ராணுவத்தளத்தின் பெரும்பகுதியை போராளிகள் கைப்பற்றியுள்ளனர்.
தலைநகர் டமாஸ்கசுடன் நேரடி தொடர்பில் இருந்த இந்த ராணுவத்தளம் போராளிகள் வசம் வீழ்ந்து வருவது அதிபர் ஆசாத்துக்கு மிகப்பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் போராளிகள் சண்டையிட்டு வருவதாக ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரியாவின் முக்கிய ராணுவத்தளம் போராளிகளின் வசம் வீழ்கிறது
 

 
சிரியாவின் முக்கிய ராணுவத்தளம் போராளிகளின் வசம் வீழ்கிறது

 சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் அதிபரின் படை பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் சிரியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள் ஹோம்ஸ் நகரில் உள்ள டாபா ராணுவத்தளத்தை கைப்பற்றும் நோக்கில் கடந்த சில நாட்களாக போராளிகள் கடும் சண்டையிட்டு வருகின்றனர். லெபனான் அருகில் உள்ள இந்த பகுதியை தங்களுடைய ஆளுகையின் கீழ் கொண்டுவர நடந்த இந்த உச்ச கட்ட சண்டையில், இன்று அந்த ராணுவத்தளத்தின் பெரும்பகுதியை போராளிகள் கைப்பற்றியுள்ளனர்.
தலைநகர் டமாஸ்கசுடன் நேரடி தொடர்பில் இருந்த இந்த ராணுவத்தளம் போராளிகள் வசம் வீழ்ந்து வருவது அதிபர் ஆசாத்துக்கு மிகப்பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் போராளிகள் சண்டையிட்டு வருவதாக ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பொது பல சேனாவை தடைசெய்யுமாறு கல்முனை மாநகரசபையில் தீர்மானம்


கல்முனை மாநகரசபை அரசாங்கத்தின் கூட்டுக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியில் இருக்கிறது
கல்முனை மாநகரசபை அரசாங்கத்தின் கூட்டுக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியில் இருக்கிறது
இலங்கையில் பௌத்த அமைப்பான பொது பல சேனாவை வன்முறை இயக்கம் என்று குறிப்பிட்டு அதனை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
கல்முனை மாநகர சபை ஆட்சி அதிகாரம் அரசாங்கத்தின கூட்டுக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் உள்ளது.

நாட்டின் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டார்கள் என்ற குற்றத்திற்காக அந்தஅமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேணடும் என அந்த தீர்மானத்தில் அரசாங்கத்தை கோரியுள்ளதாவும் அதற்கான பிரேரணையை சபையில் முன்வைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ. எம். பிர்தௌஸ் தெரிவிக்கின்றார்.அந்த அமைப்புக்கு அரசாங்கத்தின் ரகசிய உதவிகள் இருக்குமானால் அவை நிறுத்தப்பட வேண்டும், பொது பல சேனா ஏனைய மதங்கள் தொடர்பான தனது கொள்கையை மீளாய்வு செய்யத் தவறுமானால் அந்த அமைப்பு நாட்டின் நலன் கருதி தடை செய்யப்பட வேண்டும் என்றும் மாநகரசபையின் தீர்மானம் கோருகிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் செயல்பாடுகள் அதிகரித்து செலகின்றது. ஆனால் இவ்விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் காட்டும் அக்கறை முஸ்லிம்களை பொறுத்தவரை திருப்திகரமானதாக இல்லை என்றும் தமது சபை உள்ளுராட்சி சபையாக இருந்தாலும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் கவனத்திறகு இதனை கொண்டு வருவதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தத் தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பர்மா : பௌத்தர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள்


பற்றி எரியும் பர்மா
பற்றி எரியும் பர்மா


பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் மீது, அங்கு அண்மையில் ஏற்பட்ட மத வன்செயல்கள் பெரும் கறையை ஏற்படுத்தியிருக்கின்றன.
கடந்த வருடத்தில் அங்கு மேற்கு ரக்கைன் மாகாணத்தில் ஏற்பட்ட வன்செயல்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தார்கள். இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பானமையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாகிவரும் றொஹிஞ்ஞா முஸ்லிம் சிறுபான்மையினர்.
தற்போது அந்த வன்செயல்கள் நாட்டின் இதயப் பகுதிக்கும், அதாவது முன்னாளைய அரச தலைநகரான மாண்டலேக்கு தென்கே பரவியிருக்கிறது.
ஒரு பௌத்த பிக்கு கொல்லப்பட்டு விட்டதாக பரவிய செய்தியை அடுத்து மெய்ட்டிலா நகரில் ஆத்திரமடைந்த கும்பல் தாக்கியதில் 40 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
பல தலைமுறைகளாக அங்கு கணிசமான சிறுபான்மையினராக அந்தப் பகுதிகளில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் இந்த தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டனர்.
பல கடும்போக்கு பௌத்த பிக்குகளே இந்த தாக்குதலுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
முஸ்லிம்கள் பர்மாவில் அனைத்து துறைகளிலும் ஆக்கிரமிப்பதாகக் கூறி பௌத்தர்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ஆனாலும், மையநீரோட்டத்தில் உள்ள பிக்குகள் இப்படியான வன்முறைகளில் சம்பந்தப்படுவதில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
முஸ்லிம் வணிக நிறுவனங்களுக்கு எதிராக பல பிரச்சாரங்களையும் பௌத்தர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பர்மா எங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் என்பது மிகவும் உச்சத்தில் காணப்படுகின்றது. அதிகரித்து வருகின்ற சகிப்புத்தன்மை இன்மையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து புதிய அரசாங்கம் தெளிவில்லாமல் இருக்கிறது.
முன்னே நகர்ந்து முன்னேற வேண்டும் என்று நினைக்கின்ற இந்த நாட்டுக்கு இது ஒரு பின்னடைவுதான்.
இவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


நேட்டோ வான் தாக்குதலில் ஆப்கானிய "சிறார் பத்து பேர் பலி"


ஆப்கானிஸ்தான் வரைபடத்தில் குனார்
ஆப்கானிஸ்தான் வரைபடத்தில் குனார்
ஆப்கானிஸ்தானின் வடக்கிலுள்ள குனார் மாகாணத்தில் நேட்டோ சர்வதேச படைகள் மூன்று கிராமங்களில் நடத்திய வான் தாக்குதலில் சிறார்கள் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அம்மாகாண கிராமவாசிகளும் அதிகாரிகளும் கூறுகின்றனர்.
பிள்ளைகள் வாழ்ந்துவந்த வீடுகளின் மேல் குண்டு விழுந்து மேற்கூரை இடிந்து விழுந்ததில் இவர்கள் உயிரிழந்தனர் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே நடந்துள்ள இந்தத் தாக்குதலில் பெண்கள் இருவரும், கிளர்ச்சிக்காரர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நேட்டோ தாக்குதல் நடவடிக்கையில் சாதாரண பொதுமக்கள் யாரும் கொல்லப்பட்டதாக தமக்கு தகவல் இல்லையென்றும், விசாரணை செய்யப்படுவதாகவும் சர்வதேச கூட்டணியான ஐ எஸ் ஏ எஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுக்கும் ஆப்கானிய அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலையின் முக்கியக் காரணமாக நேட்டோ தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுகின்ற விவகாரம் இருந்துவருகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரியாவின் தென் எல்லை ராணுவ முகாமை போராளிகள் கைப்பற்றினர்

  


 
 
சிரியாவின் தென் எல்லை ராணுவ முகாமை போராளிகள் கைப்பற்றினர்
சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டி அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராளிகள் கடந்த 2 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் போராளிகள் சில முக்கியப்பகுதிகளை பிடித்து வருகின்றனர். இந்த சண்டையில் இதுவரை அங்கு 75000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜோர்டான் எல்லைப்பகுதியில் உம் அல் மயாதென் ராணுவ முகாமில் இருந்த அதிபர் ஆசாத்தின் படையினருடன் போராளிகள் கடந்த ஒரு வாரகாலமாக தீவிர சண்டையிட்டனர். அதன் பிறகு அவர்களை விரட்டியடித்து, பின்னர் அப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக போராளிகள் அறிவித்துள்ளனர்.
இந்த சண்டையில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முழுவிவரங்கள் கிடைக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: