Facebook Twitter RSS

மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

டந்த ஆகஸ்டு 21-ம் தேதி இரவு 9 மணிக்கு புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் வளாகத்திற்கு வெளியே அந்த சம்பவம் நடைபெற்றது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ABVP) சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். தாக்குதலுக்கு காரணமாக ஏபிவிபி சொன்னது, மாணவர்கள் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கபீர் கலா மஞ்ச் போன்ற தேசவிரோத, நக்சலைட்டுகளுக்கு மேடை அமைத்து தருகிறார்கள் என்பதுதான்.
கபீர் கலாமஞ்ச் - நிவேதா
கபீர் கலாமஞ்ச் (கோப்புப் படம்)
சினிமா உலகமே வியந்தோதும் புனே திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து ஒரு சில விதிவிலக்குளைத் தவிர்த்து பிரபலமான சினிமா படைப்பாளிகள் எவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதே நேரம் தில்லி தேசிய நாடகப் பள்ளி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள் தமது எதிர்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பதிவு செய்துள்ளனர்.
மூடநம்பிக்கை மற்றும் சாதி எதிர்ப்பு போராளியான நரேந்திர தபோல்கர் அதற்கு முந்தைய தினம் தான் புனே நகரத்தில் தனது காலை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அதனை கண்டித்து நகரத்தில் அன்று பல கட்சிகளும் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. எனவே புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களும், யுக்பத் என்ற சமூக விவாத அரங்கும் இணைந்து முன்னரே திட்டமிட்டிருந்த ஆனந்த் பட்டவர்த்தனின் ஜெய் பீம் காம்ரேடு ஆவணத் திரைப்படத்தின் திரையிடலை தள்ளிவைக்குமாறு பல்வேறு முற்போக்கு அமைப்புகள் அவர்களிடம் கோரிக்கை வைத்தன. ஆனால் இத்திரையிடல் மற்றும் அதற்கடுத்து கபீர் கலா மஞ்ச் அமைப்பின் சாதித் தீண்டாமைக்கெதிரான சில கலைநிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால், அந்த நிகழ்ச்சியை நடத்துவதுதான் தபோல்கருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனக் கருதிய அம்மாணவர்கள் நிகழ்ச்சியை தள்ளி வைக்காமல் அன்றே நடத்த முடிவு செய்தனர்.
கூட்டம் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து எட்டு மணிக்கு கபீர் கலா மஞ்ச் அமைப்பினரின் கலை நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது. பத்திரிகையாளர்களும், போலீசாரும் வெளியே சென்ற பிறகு, வந்திருந்த 12 ஏபிவிபி நபர்கள் மாணவர்களை அணுகி, எப்படி நக்சலைட்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களை நீங்கள் மேடையேற்றலாம் எனக் கேட்கிறார்கள். “நீங்களெல்லாம் கூட நக்சலைட்டுகள் தான்” என்றும் கூறுகிறார்கள். மஞ்ச் அமைப்பினரின் கலைநிகழ்ச்சியானது சாதிக்கு எதிராக இருந்ததாகவும், எனவே அவர்கள் தேச விரோத சக்திகள் தான் என்றும் ஏபிவிபி யினர் கூறினார்கள்.
காயமடைந்த மாணவர்
தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஸ்ரீராம் ராஜா (படம் : நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்)
ஏற்கெனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசின் கடுமையான ஒடுக்குமுறை கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்கள் மீது இருந்து வந்த சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மேடையேறிய மஞ்ச் கலைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை மாணவர்கள் பாதுகாப்புடன் வெளியேற்ற முயலும் போது, ஏபிவிபி ரவுடிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கருதி ‘ஏபிவிபி வாழ்க’ என்றும், ‘நக்சல்பாரியே ஓடிப் போ’ என்றும் முழக்கமிட்டுள்ளனர். முன்னதாக கலை நிகழ்ச்சியின் போது தாங்கள் நக்சல்பாரிகளின் வாரிசுகள் என கபீர் கலா மஞ்ச் அமைப்பினர் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டனர்.
அத்துடன் முன்னணியில் நின்ற கிஸ்லே திவாரி என்ற மாணவரை ஏபிவிபி யினர் தாக்கவும் ஆரம்பிக்கின்றனர். ஸ்ரீராம் ராஜா என்ற மாணவரை ஹெல்மெட்டால் தலையில் தாக்குகின்றனர். அவர் தலையில் ரத்தம் வர ஆரம்பித்தவுடன் “ஜெய் நரேந்திர மோடி”, “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டதுடன் மாணவர்களையும் அப்படி முழக்கமிடவும் வற்புறுத்தி இருக்கின்றனர். அப்படி சொல்லாதவர்கள் எல்லாம் நக்சலைட்டுகள்தான் என்றும் தீர்மானமாகக் கூறியுள்ளனர். தாங்கள் கலைஞர்கள் என்றும், கட்சி அரசியலை சாராதவர்கள் என்றெல்லாம் மாணவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறிய போதிலும் அதையெல்லாம் ஏபிவிபி யினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மதவெறி போதையால் ஆடும் வானரங்களிடம் வார்த்தைகளுக்கோ இல்லை வாய்மைக்கோ என்ன மதிப்பிருக்கும்?
அஜயன் அதத், அன்சர் ஷா, சமீன் ஆகிய இன்னும் 3 மாணவர்களும் தாக்கப்பட்டனர். தாக்குதலை வளாகத்திற்கு வெளியே வந்த பிறகுதான் இந்து மதவெறியர்கள் துவக்கியுள்ளனர். அதுவரை வாய்ச்சண்டை போட்ட படியே மாணவர்களை வெளியே வர வைத்து, கொண்டு வந்திருந்த கொடி என்ற பெயரிலான குண்டாந்தடிகளால் அவர்களைத் தாக்கியுள்ளனர். சிவிலியன் உடையில் வந்த போலீசுக்காரர் ஒருவர் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலைஞர்களை நோட்டமிட்டு விட்டு, பின்னர் தாக்குதல் நடக்கும்போது ஏபிவிபி அமைப்பினருடன் இருந்திருக்கிறார். ஆனால் மாணவர்கள் மீது அவர்கள் நடத்திய தாக்குதலை அவர் தடுக்க முற்படவில்லை. இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் மீதான வழக்கில் அவர்கள் சட்ட விரோதமாக கூடியிருந்ததாகவும், கலவரம் செய்ததாகவும் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்தாக்குதலில் இந்துமத வெறியர்களுக்கு ஆதரவாகத்தான் போலீசே செயல்பட்டுள்ளது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சங்கம், “நாங்கள் எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர்கள் அல்ல. இசை, நடனம், திரைப்படம் என ஊடகங்கள் வழியாக எங்களது கருத்துக்களை சொல்ல சுதந்திரம் உள்ளதாக நம்பும் படைப்பாளிகள் நாங்கள். மைய நீரோட்டத்தில் கலக்காத, அதை எதிர்த்து செயல்படும் தனிநபர் அல்லது அமைப்பை தேச விரோத சக்தி என வரையறுக்க ஆரம்பித்தால் எப்படி பாசிசம் வளரும் என்பதற்கு சரியான உதாரணம் தான் தபோல்கரது படுகொலை. இக்கொலைக்கும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் எதிராக அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கண்டன ஊர்வலம்
மாணவர்கள் நடத்திய கண்டன ஊர்வலம் (படம் : நன்றி dnaindia.com)
இதற்கிடையில் கடந்த ஆகஸ்டு 25-ம் தேதி மாலையில் இத்தாக்குதலை கண்டித்து மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் புனே திரைப்படக் கல்லூரியில் இருந்து தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்ட ஓம்கரேஸ்வரர் பாலம் வரை ஊர்வலம் செல்ல திட்டமிட்டனர். காவல்துறை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. சமூக விரோத சக்திகள் ஊர்வலத்தில் புகுந்து மாணவர்களை தாக்கும்போது தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறி அனுமதியை மறுத்தது காவல்துறை. மாணவர்கள் வீதியில் இறங்க தயாரான பிறகு கடைசியில் காவல்துறை அனுமதி தர வேண்டியதாயிற்று.
பாசிச சக்திகளுக்கு எதிராக ஜனநாயக உரிமையை நிலைநாட்டிட, தபேல்கரின் கொலை மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மௌன ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பல ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் இறுதியில் பேசிய மாணவர் கிஸ்லே திவாரி, பிறரது கருத்துக்களை வெளியிட விடாமல் தடுக்கும் முயற்சியில் வலதுசாரிகள் இருப்பது நாடறிந்த உண்மை என்றும், அவர்களது அடாவடித்தனத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறினார். இது போன்ற சிறிய தாக்குதலை எதிர்க்க தவறினால் தபோல்கர் போன்றவர்களை நாம் இழக்க வேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தபோல்கரை போன்றவர்களை இழப்பது மட்டுமின்றி, சாமான்ய இந்து பக்தர்களை தீவிரவாத பீதியூட்டி மதவெறியர்களாக மாற்றி வருவதன் ஒரு அங்கம்தான் இந்த தாக்குதல். மக்களுக்காக போராடும், தேச விடுதலைக்காக போராடும் ஜனநாயக சக்திகளை, சாதியை எதிர்ப்பதால் தேச விரோதி என்றும், நரேந்திர மோடி வாழ்க எனச் சொல்லாவிட்டால் தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி பிரச்சாரம் செய்யும் சங் பரிவார கும்பலின் முயற்சிதான் இந்த தாக்குதல்.
கடந்த வாரம் அகமதாபாத் நகரில் நடந்த பாகிஸ்தான் ஓவியர்களின் கண்காட்சி மீதான தாக்குதல் சம்பவம், தலித் பேராசிரியர் ஒருவர் சாதிரீதியான ஒடுக்குமுறையை விமர்சித்து வகுப்பறையில் பேசியதற்காக வெளியே தாக்கப்பட்டது, பால் தாக்கரே மரணத்திற்கு பிந்தைய தங்களது முகநூல் கருத்துக்காக இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது என இந்து மதவெறியர்களும், காவல்துறையும் தொடர்ந்து நடத்தி வரும் பாசிச கூட்டணியின் விளைவுகளில் ஒன்றுதான் இந்த ஏபிவிபி தாக்குதல். இத்தகைய தாக்குதலின் ஒரு அங்கமாகத்தான் இந்துமத வெறியர்கள் தற்போது உத்திர பிரதேசத்தில் ஆடத் துவங்கியுள்ள ராமர் கோவில் கட்டுதற்கான யாத்திரையாகும்.
எனவே மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஓட்டுச்சீட்டு அரசியலின் மூலம் இந்துமத வெறியர்களை தனிமைப்படுத்தலாம் என்று நினைத்தால் அது இத்தகைய தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது. ஏனெனில் இந்துமத வெறியர்கள் எக்காலத்திலும் ஜனநாயகம், நீதிமன்றம், சட்டம் போன்றவற்றை மயிரளவிலும் மதிப்பதில்லை. ஆகவே இந்தியாவை பிளக்கும் இந்த மதவெறியர்களை வீதியில் இறங்கி நேருக்கு நேர் எதிர் கொண்டு தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று கூறும் புரட்சிகர சக்திகளின் வழிமுறைதான் காலம் கோரும் வழிமுறை.
- வசந்தன்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சீனாவில் 22 உய்குர் முஸ்லிம்கள் சுட்டு கொலை - இஸ்லாமிய வணக்கங்களில் கூட்டாக ஈடுபட்டமை பயங்கரவாத செயற்பாடு என சீன பொலீஸார் அறிவிப்பு!!

22 Muslim Uighur Chinese police shot dead while praying on charges of "terrorism"சீனாவின் ஷின்-ஷியாங் மாகாண முஸ்லிம்கள் மீண்டும் சீன பொலீஸாரினால் வேட்டையாடப்பட்டுள்ளனர். யாருமே பார்க்க முடியாத மியன்மார் களம் இன்று ஷின்-ஷியாங்கில் அரங்கேறி வருகிறது. இவர்களது போராட்டம் தொடர்பாக கைபர் தளத்தில் கடந்த வருடம் ஒரு பதிவு வெளியாகியிருந்தது.  கடந்த செவ்வாய்கிழமை (8/27/2013) இந்த தகவல் வெிளியிடப்பட்டுள்ளது. உய்குர் இன முஸ்லிம்கள் 22 பேரை சீன பொலீஸார் சுட்டு படுகொலை செய்துள்ளனர். அவர்களின் பிணங்களின் மேல் பங்கரவாதிகள் என்ற பிரசுரங்களை போட்டு விட்டு சென்றுள்ளனர். இவர்கள் சீன பாலைவன எல்லையான Yilkiqi Kargilik (Yecheng in Chinese)-வில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த தகவலை பிறீ ஏசியா ரேடியோ Free Asia (FRA) தெரிவித்துள்ளது. இவர்கள் கடந்த ஒகஸ்ட் 20ம் திகதி இந்த தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தாமதமாகவே வெளியாகியுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது. இவர்களது வீடுகளில் வைத்து பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக FRA தகவல் வெளியிட்டுள்ளது. 

இவர்கள் மீது சீன பொலீஸார் முன்வைத்த குற்றச்சாட்டு “ தடை செய்யப்பட்ட மார்க்க செயற்பாடுகளை செயற்படுத்தியமையும், அதனை செய்ய மற்றவர்களை ஊக்குவித்தமையுமாகும். இதன சீன அரசு “பயங்கரவாத செயற்பாடு” என பிரகடனம்  செய்துள்ளதுடன் இதனை செய்தவர்களை “பயங்கரவாதிகள்” என்றும் குற்றம் சுமத்தியுள்ளது. 

பிறீ ஏசியா ரேடியோவிற்கு ஷின்-ஷியாங் தலைமை பொலீஸ் அதிகாரி Osman Batur Yilkiqi தகவல் தருகையில் சீன குடியரசின் பொலீஸார் பயங்கரவாதிகள் 22  பேரை வெற்றிகரமாக உயிருடன் பிடித்ததாகவும், இவர்கள் மதப்பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் சொல்லும் மதப்பயங்கவாதத்தின் மறுவார்த்தை என்பது இஸ்லாமிய வணக்க வழிபாடுகள், மதப்பிரச்சாரம், மத ஒன்றுகூடல் போன்றனவாகும். 

கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு நாட்கள் பொலிஸ் கஷ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு தகவல்கள் பெற முயற்ச்சிக்கப்பட்ட நிலைகயில், கைகள் பின்புறம் கட்டப்பட்டு நீல் டவுனில் (முழங்காலில் முட்டியிடப்பட்டு) பின் பிடறியில் சுடப்பட்ட நிலையில் இந்த 22 உடல்களும் கறுப்பு கனத்த பொலிதீன் பேக்களில் போடப்பட்டு வீசப்பட்டிருந்தன. இதனை தாம் கண்டதாக Mahmut Han தெரிவித்துள்ளார். இவரே Yilkiqi City-யின் தலைமை நிர்வாகி. 

urban மலையுச்சியில் இவர்களது உடல்கள் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளன. இன்னொரு பிரதேசவாசியின் தகவல்படி இவர்கள் கைது செய்யப்படவேயில்லை. இவர்கள் கூட்டாக தொழுகை நாடாத்திக் கொண்டிருக்கும் போது சீன போலீஸார் சடுதியாக உள் நுழைந்து இவர்கள் மேல் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அதனை மறைக்க அவர்கள் கைகளை பின்புறம் கட்டி தலையில் சுட்டு தண்டனையை நிறைவேற்றியது போல் காட்சிகளை மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் வசம் 06 கத்திகளும், கோடரிகளும் இருந்ததாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆயுதங்களுடன் தடைசெய்யப்பட்ட வணக்க வழிபாடுகளிற்கு ஒன்று கூடியது பயங்கரவாத செயல்களில் ஈடுபடவேயென சீன பொலீஸார் நிலைமைகளை சோடித்துள்ளனர். 

சீனாவை பொருத்தவரை Xinjiang-இன் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் அனைவருமே பயங்கரவாதிகள் ஆவர். ஜேர்மனியின் பேர்லினில் உள்ள World Uyghur Congress (WUC), இந்த காட்டுமிராண்டித்தனமான சீன பொலீஸாரின் தாக்குதல்களை மிக வன்மையாக கண்டனம் செய்துள்ளனர். 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா ஏன் போர் தொடுக்கிறது?

இது அமெரிக்க யுத்தமல்ல இலுமினாட்டிகளின் யுத்தம்

டந்த வாரம் இரசாயன ஆயுதத்தாக்குதல் என கூறப்படும் குற்றச்சாட்டு கூற்றை அடுத்து அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் சிரியாவிற்கு எதிராகப் போரைத் தொடுக்க விரைவாக செயற்படுகின்றன. நாட்டை அடிபணிய வைப்பதற்கான ஏவுகணை தாக்குதல்கள் சில நாட்களுக்குள் தொடங்கலாம். மற்றொரு மக்கள் ஆதரவற்ற போரை மக்களை ஏற்கவைப்பதற்கு, செய்தி ஊடகத்தில் இருந்து வரும் பிரச்சார முயற்சிகள் அதிஉயர் வேகத்திற்கு திருப்பப்பட்டுவிட்டன.

நீண்ட காலத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்த கொள்கையை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு, உடனடித் தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ காரணங்களாக, போலிக்காரணங்களினதும் மற்றும் ஆதாரமற்ற பொய்களின் ஒரு தொகுப்பு கொடுக்கப்படுகின்றன.
இச்சமீபத்திய போருக்கான உண்மையான காரணங்களை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின், மற்றும் முழு உலக ஏகாதிபத்திய அமைப்பின் பூகோள-அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் உள்ளடக்கத்திற்குள் தான் புரிந்து கொள்ள முடியும்.

முதலாவது: ஒரு பூகோள-அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, சிரியாவிற்கு எதிராக நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுள்ள போர், 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர், தனது உலக மேலாதிக்கத்தை இராணுவ பலத்தின் மூலம் உறுதிப்படுத்த, வாஷிங்டனின் நடத்தும் பிரச்சாரத்தில் மற்றொரு நடவடிக்கை ஆகும். ஒருகாலத்தில் உலகப் பொருளாதாரத்தில் அது கொண்டிருந்த மேலாதிக்க நிலையின் நீடித்த சிதைவை எதிர்கொள்ளும் அமெரிக்கா, அதன் மேலாதிக்க நிலையை ஸ்தாபிக்க இராணுவ பலத்தை வழிவகையாகக் காண்கிறது. 1992 இன் ஆரம்பத்திலேயே பென்டகனுடைய பாதுகாப்பு திட்டமிடல் வழிகாட்டி, அமெரிக்கக் கொள்கை, அமெரிக்காவிற்கு ஒத்த முறையில் போட்டி நாடாக எந்த சக்தி வெளிப்படுவதையும் தடுக்கும் நோக்கத்தை கொண்டது எனக் கூறியது. 2002ல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், அமெரிக்கா இதை அடையவதற்கு முன்கூட்டியே தாக்கும் போரை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது.

அமெரிக்க இராணுவவாதத்தின் உலக வெடிப்புத் தன்மையின் மத்திய கூறுபாடு, மத்திய கிழக்கில் மட்டும் இல்லாமல், யூரேசிய நிலப்பகுதி முழுவதிலும் ஒரு மேலாதிக்க நிலையைப் பெறுவது என்னும் வாஷிங்டனின் உந்துதலாகும். சமீபத்திய ஆண்டுகளில் 19ம் நூற்றாண்டுக் கடைசி, மற்றும் 20ம் நூற்றாண்டு ஏகாதிபத்திய மூலோபாயவாதி சேர் ஹால்போர்ட் மக்கிண்டெருடைய (Sir Halford Mackinder) படைப்புக்கள் மீண்டும் அடிப்படை நூல்களாக வெளியுறவுத்துறை, பென்டகன் மற்றும் CIA இல் உள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கு தேவையான நூல்களாக ஆகிவிட்டன. ஏராளமான நூல்களிலும், கணக்கிலடங்காக உயர்கல்வி ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலும், மக்கிண்டெரால், ஜேர்மனியின் கிழக்கு எல்லையில் இருந்து சீனாவின் மேற்கு எல்லை வரை பரந்துள்ள “உலகத் தீவு” என அழைக்கப்படுவது, அமெரிக்காவிற்கும் அதன் மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் தீர்க்கமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகின்றது.

ஒரு சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துவதாவது: “யூரேசிய நிலப்பகுதிகள் மேற்கின் மூலோபாய முயற்சிகளின் கவனம்செலுத்தும் முனையாக இருக்க வேண்டும்… மேற்கத்தைய சரிவின் ஆரம்ப நிகழ்ச்சிப்போக்கு நிறுத்தப்பட்டுப் பின்நோக்கி திருப்ப வேண்டும் என்றால், யூரேசியாவின் பூகோள-அரசியல் முக்கியத்துவம் குறித்த நல்ல விளக்கம் தேவை. அதற்கான போராட்டமும், அதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மிகவும் முக்கியமானது.” [ The World Island: Eurasian Geopolitics and the Fate of the West, by Alexandros Petersen] அனைத்து ஏகாதிபத்திய உலக மேலாதிக்க மூலோபாயங்களைப் போலவே இதிலும் அதை அடைவதற்குத் தடைகளாக உள்ளன எனக்கருதப்படும் சக்திகளுடனான போராட்டம் இன்றியமையாததாகிறது. யூரேசியாவின் மீது மேலாதிக்கம் என்பது ரஷ்யா, சீனாவுடனான மோதலாக தவிர்க்கமுடியாதபடி விரிவாக்கம் அடையும்.

1990களில் இருந்து பால்கன்களில், மத்திய கிழக்கில், மத்திய ஆசியாவில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர்கள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு எவரும் சவால் விடக்கூடாது எனக் கருதும் செயற்பட்டியலின் ஒரு பகுதி ஆகும். உலக மேலாதிக்கம் என்பது நூற்றுக்கணக்கான மில்லியன் உயிர்களைப் பறிக்கும் போர்களை நடத்தாமல் சாதிக்க முடியாது. ஒருவேளை அவை பூமியையே அழிப்பதாக இருந்தாலும் வாஷிங்டனை அதை நோக்கிச் செல்லும் உந்துதலில் இருந்து தடுக்கவில்லை.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு என்னும் இந்த மூலோபாயம் கிறுக்குத்தனமாக இருக்கலாம், ஆனால் அப்படித்தான் ஹிட்லரும் இருந்தார். அவருடைய பூகோள-அரசியல் நோக்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிட்டால் சிறிய அளவு எனத் தோன்றும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியை முன்கூட்டிக் கண்ட ட்ரொட்ஸ்கி 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்: “ஜேர்மனிக்கு இது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும் பிரச்சினை’ ஆக இருந்தது. ஐக்கிய அமெரிக்கா உலகை “ஒழுங்கமைக்க” வேண்டும்.
ஐரோப்பிய சக்திகளை பொறுத்தவரை, தற்போதைக்கு அவை தங்கள் சொந்த ஏகாதிபத்திய முனைவுகளை பென்டகனுடைய சிறந்த வருங்காலத்தில் பிணைத்துக் கொள்வதின் மூலம் அடைந்துவிடலாம் எனக் காண்கின்றன. அமெரிக்கப் போர்களின் கொள்ளையில் தாம் பங்கு பெறலாம் என அவை நம்புகின்றன. இந்த வழிவகையில் ஆபிரிக்காவில் பிரான்சின் போர்களைப்போல் தங்கள் சொந்த கொள்ளைச் செயல்களையும் நியாயப்படுத்துகின்றன.

இரண்டாவது: பொருளாதார ரீதியாக, உலக முதலாளித்துவம் அதன் பெருமந்த நிலைக்குப் பிந்தைய காலத்தில் ஐந்தாவது ஆண்டாக ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. இது பொருளாதார தேக்கம், பரந்த வேலையின்மை, இடைவிடாத வாழ்க்கத்தர சரிவுகளை உருவாக்கியுள்ளது. அதிக நம்பிக்கையற்ற பொருளாதார நிலைமை, ஆழ்ந்த கடன்கள், மதிப்பிறக்கப்பட்ட நாணயங்கள், உக்கிரமான சர்வதேசப் போட்டிகள் மேலும் பொறுப்பற்ற மற்றும் வன்முறையான வெளியுறவுக் கொள்கைகளுக்கு உந்துதல் கொடுக்கின்றன.

1930களின் பெருமந்த நிலை இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது, முதலாளித்துவ அமைப்புமுறையின் நோய்களுக்கு தீர்வாக ஏகாதிபத்திய சக்திகள் போரை காண முற்பட்டன. 2008ல் தொடங்கிய பெருமந்த நிலை, குறையும் அடையாளத்தை இன்னும் காண்பிக்கவில்லை என்பதோடு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கிறது. உலக நிதியமயமாகுதல் நிகழ்ச்சிப்போக்குடன் தொடர்புடைய சமூகத்தின் ஒரு சிறு பிரிவின் செல்வக் கொழிப்பு, பெரும் அளவில் சூறையாடுதல் மூலம் சாதிக்கப்படும் பொருளாதார ஒட்டுண்ணித்தன வடிவங்கள் அதன் இயல்பான இணைப்பை வெளியுறவுக் கொள்கையில் காண்கிறது. அது அதன் இலக்குகளை குற்றம் சார்ந்த வன்முறை மூலம் அடைய முற்படுகிறது.

குறிப்பாக பாதுகாப்புக் குழுவில் ரஷ்யா மற்றும் சீனா தடுப்பதிகாரங்களைக் கொண்டுள்ளதால், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையை ஒதுக்கித்தள்ளி ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல்கூட இல்லாமல் போருக்குத் தயாராகிறது. இவ்வகையில்தான் நாடுகளின் கழகம் (League of Nations) 1935ல் இத்தாலி  அபிசீனியா மீது படையெடுத்தபின் சரிந்து போயிற்று.

மூன்றாவது: அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் எப்போதும் இல்லாத மோசமான சமூக நெருக்கடியை முகங்கொடுக்கின்றன. இவை வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க அழுத்தங்களை அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் மக்களில் செல்வந்த 10 வீதத்தினர் கிட்டத்தட்ட நாட்டின் முக்கால் பகுதி செல்வத்தை உடமையாகக் கொண்டுள்ளனர். உயர்மட்ட 1 வீதத்தினர் அதில் பாதியை ஏகபோக உரிமையாகக் கொண்டுள்ளனர். பொறுப்பற்ற முறையில் ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் இடையறாமல் தாக்கப்படுவதால் நகரங்கள் திவால்தன்மைக்கு தள்ளப்படுகின்றன.

ஐரோப்பாவில், ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே எழும் அழுத்தங்களால் ஐரோப்பிய ஒன்றியம் சிதைவுற்றுக் கொண்டிருக்கிறது. வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்கள் கிரேக்கத்தின் சமூக பேரழிவு மூலம் சித்தரிக்கப்படுகின்றது. பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கிடையே எவ்வளவிற்கு கசப்பான, அடக்க முடியாத மோதல்கள் இருக்கின்றனவோ அந்தளவிற்கு அவை இன்னும் அதிகமாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு திரும்புகின்றன. அது ஒன்றுதான் அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் ஒரே கொள்கையாகும்.

ஏகாதிபத்திய சக்திகள் பெருகிய முறையில், தங்கள் மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்படுவதில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் வழிமுறையாக போரை காண்கின்றன. தற்போதைய போரின் நேரம், தெளிவாக எட்வார்ட் ஸ்னோவ்டேன் ஏராளமான, சட்டவிரோத ஒற்றாடல்கள் உளவுத்துறை அமைப்புக்களால் அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளுடைய மக்களுக்கு எதிராக செய்யப்பட்டது வெளிப்படுத்தப்பட்டதால் தூண்டிவிடப்பட்ட அரசியல் நெருக்கடியுடன் தொடர்புபட்டது. ஏகாதிபத்திய இராணுவ வாதம், அத்துடன் பயனற்ற ஆனால் அழிவு தரும் போர் வழிவகைகளும் சமூக அழுத்தங்களை வெளிநோக்கி தள்ளிவிடும் அடிப்படை வழிவகையாக ஆளும் உயரடுக்கால் பார்க்கப்படுகிறது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டு ஆளும் வர்க்கங்கள் தங்களை முதலாளித்துவத்தின்  திவாலில் இருந்து தப்பிக்கொள்ள இராணுவ வாதம் என்னும் சூதாட்ட மேசையில் வெற்றியைத்தான் நம்பியிருந்தன என்பதைக் கற்பிக்கிறது. ஆனால் இது பின்னர் வரலாறு அவர்களுக்கே எதிரானதாக போனதையும், அவர்கள் சில மோசமான பந்தயங்களை கட்டியிருந்தனர் என்பதையும் காட்டுகிறது.

ஈராக், ஆப்கானிஸ்தானிய போர்களைப் போன்றே, சிரியப் போரும் பெருமளவிலான இறப்புக்களையும் இடர்களையும் உருவாக்குவதுடன், உலகப் பொருளாதார, அரசியல் நெருக்கடியைத் தீவிரமாக்கி மனிதகுலத்தை பேரழிவிற்கு அருகே இட்டுச்செல்லும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

அமெரிக்காவின் சிரியா மீதான தாக்குதல் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பமாகலாம் !!

ஸ்ரேலிய பத்திரிகையில் அமெரிக்கா சிரியா மீதான தனது நீண்ட நாள் தாக்குதல் கனவை இன்று முதல்  (08/31/2013) ஆரம்பிக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது. அதனையடுத்து தொடர்தாக்குதல்கைள அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபரை சந்திக்கும் புதன்கிழமையின் (4/9) பின்னர் தொடர் தாக்குதலாக நீடிக்கலாம் என இன்போ வோர் எனும் இஸ்ரேலிய நாளேடு தெரிவித்துள்ளது. இன்போ வோர் எனும் நாளேடானது அமெரிக்க உயர் மட்ட  அதிகாரிகளுடனும் இஸ்ரேலிய உயர் மட்ட அதிகாரிகளுடனும் மிக நெருங்கிய உறவுகளை கொண்டுள்ள நாளேடாகும். ஈராக்கிய யுத்தம், லெபனான் சண்டைகள், லிபிய விவகாரம் போன்ற பலவற்றில் இது குறிப்பிட்டது போன்றே அமெரிக்க தாக்குதல்கள் அமைந்திருந்தன. அந்த வகையில் இந்த நாளேட்டின் கணிப்புக்களை புறந்தள்ள முடியாத நிலையுள்ளது. 

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரண்டு தேசங்களும் சிரியா மீதான தாக்குதலிற்கான முழு அளவு தயாரிப்புக்களை செய்துள்ளன. இந்த தாக்குதலின் முதற் கட்டமாக சிரியாவினுள் தரைப்படைகளை நகர்த்தி உள் நுழையாமல் போர்க்கப்பல்களில் இருந்தும், நீர்மூழ்கிகளில் இருந்தும் Tomahawk cruise ஏவுகணைகளை வீசி சிரியாவின் இனங்காணப்பட்ட முக்கிய இலக்குகளை தகர்த்தழிப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மொஸாட்டின் முன்னாள் இயக்குனர் Danny Yatom இது பற்றி தெரிவிக்கையில் எல்லாம் தயாராகவே உள்ளது. பச்ச சமிக்ஞை மட்டும் எஞ்சியுள்ளது. அதுவும் கூட காட்டப்பட்டு விடும்,ஆனால் பஸர் அல்-அஸாத் சிரியாவில் உள்ள ஐ.நா.வின் இரசாயன பரிசோதகர்கள் குழுவை ஹியூமன் சீல்ட்டாக பிடித்து வைத்து விடாத வரை. அவர்கள் சிரியாவில் இருந்து வெளியேறிய எந்த நிமிடமும் எமது ஏவுகணைகள் சிரியாவை நோக்கி சீறிப்பாயும் என்கிறார். 

அமெரிக்க தாக்குதல்களிற்கு பதிலாக அமெரிக்காவை தாக்க வல்லமை கொண்டில்லாத சிரியா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி சண்டையை இன்னொரு களம் நோக்கி நகர்த்த முற்படும். அவ்வாறு இஸ்ரேல் மீது விழும் ரஷ்ய ஏவுகணைகள் இஸ்ரேலில் அழிவுகளை உருவாக்கினால் மூன்றாம் அணியாக அமெரிக்க பிரித்தானிய படைகளுடன் இணைந்து சிரியாவை தாக்கும் திட்டத்தை இஸ்ரேல் கொண்டுள்ளது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

“சிரியாவில் இருந்து ஏவுகணை எந்த நிமிடமும் வந்து விழலாம்” இஸ்ரேலிய எச்சரிக்கை-viruviruppu

தமது நாட்டின்மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வது தொடர்பான முன்னேற்பாடுகளில் சீரியசாக இறங்கியுள்ளது இஸ்ரேல். இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு, போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் அவசர கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.
சிரியாவில் இருந்து எந்த நிமிடமும் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலை நோக்கி நடத்தப்படலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது எதைக் காட்டுகிறது என்றால், சிரியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் தாக்குதல் நிச்சயம் என்பதையே காட்டுகிறது. மேற்கு நாடுகள் சிரியா மீது தாக்கினால், சிரியா அவர்கள் மீது திருப்பித் தாக்குவதற்கு முன், இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தும் என்று ஊகிப்பது சுலபம்.
இன்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு கூட்டிய கூட்டத்தில், சிரியாவில் இருந்து தொலைதூர ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் வரை ஏவப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேலதிக தாக்குதல்கள் லெபனான், மற்றும் காசா பகுதியில் இருந்தும் இடம்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பதுபோல ஒருவேளை சிரியா மீதான தாக்குதல் இடுத்த சில தினங்களுக்குள் தொடங்கினால், அதன் பின் விளைவுகள் மிக மோசமானதாகவே இருக்கப்போகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

டமஸ்கஸ் சர்வதேச விமான நிலைய விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன - ஏகாதிபத்தியம் கால்பதிக்க இன்னொரு இடம் தயாராகி வருகிறது!!

மஸ்கஸ் எயார் போர்ட்டின் விளக்குகள் அனைக்கப்பட்டு விட்டன. ஓடு தளத்தில் பாதையை காட்டும் ஒளிர் விளக்குகளும் அனைக்கபட்டு விட்டன. இந்த விமானத்தளத்தை சூழ 03 மிலிட்டரி பேஸ்கள் அதன் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்தன. விமான நிலையம் முழுவதும் சிரிய கொமாண்டோக்கள் எப்போதும் இருந்து வந்தனர். அமெரிக்க வான் தாக்குதலின் முதல் இலக்கு சிரியாவின் டமஸ்கஸ் சர்வதேச விமானத்தளமாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளதால் இப்போது அங்குள்ள இராணுவத்தினர் அங்கிருந்து ட்ரக் வண்டிகளிலும், துருப்புக்காவி கவச வாகனங்களிலும் ஏற்றப்பட்டு விமான நிலையத்தை அண்டிய நகரனா al-Awameen Huran-இற்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

சிரிய பாதுகாப்பு தலைமை கட்டளைப்பீடத்தில் இருந்து அதன் அதிகாரிகளும் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இராணுவ ஆராய்ச்சி மையங்கள் என்ற பெயரில் இயங்கி வந்த கட்டிடங்களை விட்டும் அதன் உத்தியோகத்தர்கள், காவலர்கள் வெளியேறியுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு டமஸ்கஸ்ஸின் உயர் பாதுகாப்பு வலைய பிரதேசங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இரவிரவாக ட்றக் வண்டிகளின் உறுமல்கள் கேட்ட வண்ணமேயிருந்தன. ஒரு சில அரசியல் ஆர்வலர்களின் தகவல்களின் படி இந்த ட்ரக் வண்டிகள் துறைமுகம் நோக்கியே சென்றதாக தெரிவித்துள்ளனர். இங்கே தான் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

பஸர் அல்-அஸாத்திற்கு சத்தாம் ஹுஸைனிடமும், முஹம்மர் கடாபியிடமும் கற்றுக்கொண்டவை நிறையவேயுள்ளது.

அதேவேளை ஈராக்கின் அமைச்சர்களும், லிபியாவின் அமைச்சர்களும் பேசிய வீர வசனங்களும், சூளுரைகளம், சவால்களும் இப்போது சிரிய அமைச்சர்களால் விடுக்கப்படுகின்றன. அமெரிக்க தாக்குதலை முறியடிக்க நாம் எப்போதும் தயார் என்று முழங்குகின்றனர் அவர்கள். எம்மை தாக்கினால் ஐரோப்பாவில் இரசாயன தாக்குதல் நடாத்தப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று எச்சரிக்கைகளை விடுக்கின்றனர். இவற்றை வைத்தது பார்க்கும் போது சிரிய சண்டையிட தயாராவது போல தெரியவில்லை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரிய போரிற்கு முன்னதாக ஈராக்கில் கொலின் பவல் ஆடிய நாடகத்தை ஆட முனையும் ஜோன் கெர்ரி

நேற்று அமெரிக்க வெளிவிவகாகார செயலர் ஜோன் கெர்ரி தேசியத் தொலைக் காட்சியில் தோன்றி சிரியா மீது வரவிருக்கும் அமெரிக்க-நேட்டோ தாக்குதலுக்கு பொது மக்கள் ஆதரவுக் கருத்தை ஈர்க்கும் நோக்கம் கொண்ட பொய் அறிக்கை ஒன்றைக் கூறினார். இது அவருடைய சொந்த “கோலின் பவெல் தருணம்” ஆகும்.

பெப்ருவரி 5, 2003ல் அப்பொழுது புஷ் நிர்வாகத்தில் வெளிவிவகாகார செயலராக இருந்த பவெல், ஐ.நா.வில் இழிவான விளக்கக்காட்சியை ஒன்றைச் செய்தார். புகைப்படங்கள், வரைபடங்கள், ஒலிப்பதிவு நாடாக்கள் இவற்றின் துணை கொண்டு இரண்டு மணி நேரம் அமெரிக்காவின் தலைமை இராஜதந்திர அதிகாரி ஈராக்கிற்கு எதிரான போர் நடத்துவதற்கான வழக்கை நிலைநிறுத்த முற்பட்டார். தான் அளித்த ஆதாரங்கள், ஈராக் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டவை என்பதற்கான சான்று என்றும், அவை உலகின் மீது கட்டவிழ்க்கப்பட உள்ளன என்றும் தெரிவித்தார். 

செய்தி ஊடகமும், இரு கட்சி அரசியல் வாதிகளும், ஈராக் பாரியளவிலான பேரழிவு ஆயுதத் திட்டங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு முன்னாள் தளபதி சிறப்பான வாதத்தை கொடுத்துள்ளார் என அறிவித்து, பவெலின் செயற்பாட்டைப் பாராட்டினர். ஆறு வாரங்களுக்குப் பின்னர், அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கியதோடு ஈராக் மீது குண்டுகள் பொழியப்பட்டன.

பொய்களின் ஒரு தொகுப்பே பவெல் உடைய உரையாகும். 

நைஜீரியாவில் இருந்து மஞ்சள் கேக் யுரேனியம், அலுமினியம் குழாய்கள் அல்லது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஆயுதங்கள் பற்றிய அவருடைய கூற்றுக்கள் எதுவுமே உண்மை அல்ல. அந்நேரத்தில் சுருக்கமாக உலக சோசலிச வலைத் தளம் போருக்கான வாதம் “இழிவான மற்றும் ஏமாற்றுத் தன்மை கொண்ட இராஜதந்திர போலித்தனம்.... ஒரு மகத்தான பொய்யை முன்கணித்து: அதாவது வரவிருக்கும் படையெடுப்பு, ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றியது அல்லது அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் உலக சமாதானத்திற்கு பாக்தாத்தின் அச்சுறுத்தல் எனக் கூறப்படுவது முற்றிலும் இழிந்த பொய்.” என நாம்எழுதியது உண்மை என நிரூபணம் ஆயிற்று.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், கெர்ரி கொடுத்துள்ள உரை நேர்மையற்ற தன்மையில் சிறிதும் குறைந்ததல்ல, சிடுமுஞ்சித்தனத்திலும் குறைந்ததல்ல. உண்மையில், ஒப்புமையில் பவெலின் விளக்கக்காட்சி, விவரங்களைப் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தது.

சிரியா ஆட்சிக்கு எதிரான, கெர்ரியின் முழு விவரங்களும் இரசாயன ஆயுதங்களைப் பற்றிய பொது ஒழுக்கநெறி கண்டனமாகும். கூத்தாவில் இரசாயன ஆயுதங்கள் தாக்குதல் என்று கூறப்படுபவற்றில் “குடல்-பிரிந்த தோற்றங்கள்” குறித்து விளக்குகையில்: “பொதுமக்களை பொறுப்பின்றி படுகொலை செய்துள்ளது, மகளிரையும் குழந்தைகளையும், நிரபராதியாக உள்ள பார்வையாளர்களையும் இரசாயன ஆயுதங்கள் மூலம் கொலை செய்தது, ஒழுக்கநெறியில் மிக இழிந்த செயலாகும்” என அவர் கூறினார்.

அமெரிக்க அரசாங்கமும் அதன் பிரித்தானிய, பிரெஞ்சு, ஜேர்மனிய நட்பு நாடுகளும் உலகிற்கு இரசாயனப் போர்முறை அல்லது வேறு எந்தவித “ஒழுக்க நெறியின் இழிந்த தன்மை” பற்றி உபதேசிக்கும் தகுதியற்றவர்களாவர். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள், கொடூரங்கள் பற்றி முழுமையான ஆவணக்குறிப்பு எழுதவேண்டுமாயின், பல நூல் தொகுதிகளை நிரப்ப வேண்டும்.

வாஷிங்டன் முழு ஈராக்கிய நகரங்களையும் குறைந்த யுரேனியம், வெள்ளை பாஸ்பரஸால் நச்சுப்படுத்தியுள்ளது. முன்னதாக இது 75 மில்லியன் லீட்டர்கள் இரசாயன ஆயுதமான Agent Orange என்பதை வியட்நாமில் பொழிந்தது. அது மில்லியன் கணக்கான மக்களை பாதிப்பிற்குள்ளாக்கியது. பாதுகாப்பற்ற நகரங்களின் மீது அணுவாயுதங்களை பயன்படுத்திய உலகின் ஒரே நாடு அமெரிக்காதான்— ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி மீது ஒரு முறை அல்ல, இரண்டு முறை. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து—நச்சு வாயுவை முதலில் பயன்படுத்தியவை—இவை மில்லியன் கணக்கான மக்கள் இறப்பிற்கு கூட்டாகப் பொறுப்பை கொண்டவை.

இரசாயன ஆயுதங்கள் மூலம் கண்மூடித்தனமான கொலைகள், “ஒழுக்க நெறியின் இழிந்த தன்மை” எனக் கூறுகையில், ஒபாமா நிர்வாகம், எகிப்தில் கடந்த மாதம் மட்டும் ஆயிரக்கணக்கான நிராயுதபாணி எதிர்ப்பாளர்களை தெருக்களில் படுகொலை செய்த எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவிற்கு தொடர்ந்து நிதியளித்து வருகிறது. 

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் படைகள் கூத்தாவில் இரசாயனத் தாக்குதலை நடத்தின என்பதை நியாயப்படுத்த அவருடைய இழிந்த குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் கெர்ரி ஒரு உண்மைச் சான்றைக்கூட முன்வைக்க முடியவில்லை.

அதற்கு பதிலாக, அவர் கூறினார்: “ஏற்கனவே சிரியாவில் நடந்துள்ளது பற்றி நாம் அறிந்து கொண்டுள்ளது, உண்மையைத் தளமாக கொண்டது, மனச்சாட்சி கூறுவது, பொது அறிவு வழிகாட்டுவது.... இரசாயன ஆயுதங்கள் சிரியாவில் பயன்படுத்தப்பட்டன. மேலும் சிரிய ஆட்சி இந்த ஆயுதங்களை பாதுகாப்பாக தக்க வைத்துள்ளது என்பதையும் நாம் அறிவோம். சிரிய ஆட்சி இதே தாக்குதலை ராக்கெட்டுக்கள் மூலமும் நடத்தும் திறனையும் கொண்டுள்ளது.”

இத்தகைய வாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை. கெர்ரி அதை தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பு போராளிகள் இரசாயன ஆயுதங்களை அணுகவும் முடியும், அவற்றைப் பயன்படுத்தியுமுள்ளனர். எதிர்த்தரப்பு குழுக்கள் யூ-ரியூப் களில் எப்படி நச்சு எரிவாயுவை தயாரிக்க இயலும் என்று தங்கள் திறமையை பெருமை பேசியுள்ளனர். ஐ.நா. அதிகாரிகள் பல முறை சிரியாவிற்குள் நடந்த விசாரணைகளில் அசாத் ஆட்சி என்று இல்லாமல் எதிர்த்தரப்பு சக்திகள்தான் முந்தைய இரசாயனத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என தெரிவித்துள்ளனர்.
மிக அதிக அளவில் உலகத் துணை இராணுவ அமைப்பாக மாற்றப்பட்டுவிட்ட CIA, அத்தகைய ஆயுதங்களை அணுக இயலும், எதிர்த்தரப்பிற்கு எளிதில் கிடைக்கவும் செய்ய முடியும்.

சிரியாவிற்கு எதிரான தன் குற்றச்சாட்டுக்கள், “பொது அறிவை” அடிப்படையாக கொண்டது என்னும் கெர்ரியின் கூற்று பொய்யானது: பொது அறிவு என்பதை சிரிய நிலைமைக்கு பயன்படுத்தினால், துல்லியமாக எதிர் முடிவிற்குத்தான் இட்டுச் செல்லுகிறது.

போரில் தோற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்தரப்பு ஓட்டம் பிடிக்கிறது: அவர்களின் ஒரே நம்பிக்கை அதன் அமெரிக்க, ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு ஆதரவாளர்களின் பாரிய இராணுவத் தலையீடுதான். முன்பு ஒபாமா நிர்வாகத்தால் “சிவப்புக் கோடு” என்று விவரிக்கப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதல் என்பது இத்தலையீட்டிற்கு தேவையான போலிக்காரணத்தை அளிக்கிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க அறிக்கையில், வாஷிங்டன் அசாத்திற்கு எதிரான அதன் குற்றச்சாட்டுக்களுக்கு சான்றுகளை அளிக்க விரும்பவில்லை என்பதை கெர்ரி பின்புறமாக ஒப்புக் கொண்டுள்ளார். “பான் கி-மூன் கடந்த வாரம் கூறியபடி, ஐ.நா. விசாரணை, எவர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதை நிர்ணயிக்காது, ஏற்கனவே உலகம் இது குறித்து நன்கு அறியும்” என்றார். அதாவது, தாக்கியவர்களின் அடையாளம் பற்றி விசாரணையில் என்ன காட்டினாலும், வாஷிங்டன் அதைப் போலிக் காரணமாக பயன்படுத்தி சிரிய அரசாங்கத்தின் மீது தாக்குதலை நடாத்தும்.

தாக்குதல் என்பது குறித்து விசாரணை நடத்த "கட்டுப்பாடற்ற" அணுகுதலை சிரியா அனுமதிக்க வேண்டும் என்று கோரிய பின்னர், கெர்ரி, இக்கோரிக்கையை அரசாங்கம் ஏற்றது குறித்து, அது எப்படியும் ஒரு விஷயமே இல்லை என்று அறிவித்து, ஏனெனில் “நம்பகத்தன்மை இனி வருவதற்கில்லை” என்றார். இக்கோரிக்கைகள் அனைத்தின் நோக்கமும் போருக்கு வழிவகை செய்வதுதான். சிரிய அரசாங்கத்தால் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு நாட்டைத் திறந்துவிடுவது என்பதைத் தவிர சற்றும் குறைவான எந்தச் செயலாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுதி எச்சரிக்கைகளை திருப்தி செய்ய முடியாது.

ஈராக் பற்றி 2003 உரை நிகழ்த்திய சில மாதங்களின் பின்னர் பவெல் முற்றிலும் தெரிந்தே பொய் கூறியிருக்கிறார் என்பது தெளிவாயிற்று. வரவிருக்கும் மாதங்களில், ஒரு காலத்தில் வியட்நாம் போரை எதிர்த்த கெர்ரியும் சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதலின் அடித்தளத்தில் அவருடைய பொய்கள் இணையம் முழுவதும் வெளிப்பட இருப்பதைக் காண்பார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச் செய்யும் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச் செய்ய மஹராஷ்ட்ரா அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
கடந்த 2,3 ஆண்டுகளாக அவ்வமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்து ஆதாரங்கள் இல்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கா மஸ்ஜித், மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர்  ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை சதித்திட்டம் தீட்டி நடத்திய அபினவ் பாரத் அமைப்பை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) படி தடைச் செய்யவேண்டும் என்று கடந்த மாதம் மத்திய அரசு மஹராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அபினவ் பாரத்தின் இயக்க கட்டமைப்பைக் குறித்தோ, தலைமை மற்றும் உறுப்பினர்களை குறித்தோ தெளிவான விபரம் இல்லை என்று கடிதம் கூறுகிறது.
யு.ஏ.பி.ஏ சட்டத்தின் படி ஒரு அமைப்பை தடைச் செய்ய நீதிமன்றத்தின் அங்கீகாரம் தேவை. மறு ஆய்வு கமிட்டியும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதற்கு தேவையான ஆதாரங்கள் கைவசம் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது.
அபினவ் பாரத்தின் பிரபல தலைவர்களான லெஃப்டினண்ட் கர்னல் புரோகித், சன்னியாசினி ப்ரக்யா சிங் தாக்கூர், லோகேஷ் சர்மா, சுவாமி அஸிமானந்தா, கமல் சவுகான், ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வமைப்பு தற்போது மஹராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் பெயரளவில் மட்டுமே இயங்குகிறதாம். ஆகையால் தடைச் செய்யவேண்டாம் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
2008-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் அஹ்மதாபாத், உஜ்ஜையின், ஃபரீதாபாத், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், புனே, நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரகசிய கூட்டங்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
2012-ஆம் ஆண்டு மும்பை நீதிமன்றத்திலும் அபினவ் பாரத்தை தடைச் செய்ய மஹராஷ்ட்ரா அரசு கோரிக்கை விடுத்தது.
வினாயக் தாமோதர் சாவர்க்கரின் சகோதரனுடைய மருமகளும், காந்தியை படுகொலைச் செய்த நாதுராம் கோட்சேயின் பேத்தியுமான ஹிமானி சாவர்க்கர் என்ற ஹிந்துத்துவா பெண் தீவிரவாதிதான் இவ்வமைப்பின் தலைவராக கருதப்படுகிறார். இவ்வமைப்பு ரகசிய இடங்களில் ஆயுதப்பயிற்சி நடத்தி வருவதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு ஹிந்துத்துவா அமைப்புகளின் உறுப்பினர்களும் இவ்வமைப்பில் இணைந்து செயல்படுகின்றனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

தடையை மீறி அயோத்திக்கு பேரணி செல்ல முயற்சி! அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா உட்பட 350 பேர் கைது!

உ.பி., அரசின் தடையை மீறி அயோத்திக்கு யாத்திரை செல்ல விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சரயு நதிக்கரையில் பூஜை செய்ய முயன்ற தொகாடியா கைது செய்யப்பட்டார்.
முன்னதாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அயோத்திக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் யாத்திரைக்கு தடை விதித்து அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார்.
உத்தரபிரதேசத்தில் 6 மாவட்டங்கள் வழியாக 252 கி.மீ. தூரம் செல்லும் இந்த யாத்திரைக்கு ‘கோசி பரிக்கிரமா யாத்திரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 13 ந்தேதி வரை யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த யாத்திரைக்கு உத்தரபிரதேச அரசும், கோர்ட்டும் தடை விதித்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது. இதையடுத்து மாநில அரசு அயோத்தி மற்றும் 6 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அயோத்தியில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். நகரை சுற்றிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அலகாபாத் நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்பட்டன.
மேலும் யாத்திரைக்கு ஏற்பாடு செய்த விஷவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 70 பேரை முன் எச்சரிக்கையாக கைது செய்ய பைசா பாத் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் முன் எச்சரிக்கை கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது விஷவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள், தொண்டர்கள் என 350 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதற்காக அயோத்தியையொட்டியுள்ள பைசாபாத் நகரில் உள்ள 10 பள்ளிக்கூடங்கள் தற்காலிக ஜெயிலாக மாற்றப்பட்டு உள்ளன. மேலும் 22 தற்காலிக ஜெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு பிரவீண் தொகாடியா தலைமையில் அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் பூஜை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் பூஜை நடைபெறவில்லை.
இன்று காலை மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி நோக்கி பேரணி வந்தவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 50 ஆயிரம் பேர் வரை பேரணியாக அயோத்தி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதனால் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.
இதற்கிடையே யாத்திரையில் பங்கேற்க மூத்த தலைவரான அசோக் சிங்கால் இன்று பாட்னா விமான நிலையம் வந்தார். அயோத்திக்கு செல்ல விடாமல் அவரை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். இதேபோல் மற்றொரு தலைவரான வேதாந்தியும் அயோத்தியில் நுழைய முயன்றபோது கைதானார். யாத்திரை ஒருங்கிணைப்பாளர் நிர்த்திய கோபால் இன்று காலை அயோத்திக்குள் நுழைய முயன்றபோது கைதானார்.
யாத்திரையில் பங்கேற்க தொண்டர்களுடன் வந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராம்சந்திர யாதவ் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி புறப்பட்டவர்கள் அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
யாத்திரை என்ற பெயரில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விபின் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இஸ்ரேலிற்காக அமெரிக்காவின் சிரியா மீதான படையெடுப்பு - ஜனநாயகத்தின் பொய் முகங்கள்

மெரிக்க அரசாங்கத்தின் பேரழிவு ஆயுதங்கள் (WMD) என்று இல்லாத ஆயுதங்களைப் பற்றிய பொய்களை அடிப்படையாகக் கொண்டு ஈராக் மீது அமெரிக்க அரசாங்கம் போர் தொடுத்து 10 ஆண்டுகளுக்குப்பின், சிரியாவிற்கு எதிரான புதிய ஆக்கிரமிப்பு போரை நியாயப்படுத்த கொடூரத்தில் சற்றும் குறைவற்ற ஆத்திமூட்டல் பாரிஸ், லண்டன் மற்றும் வாஷிங்டனால் தயாரிக்கப்படுகிறது. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் கடந்த புதனன்று டமாஸ்கஸுக்கு அருகே கூத்தாவில் (Ghouta) பெரும் இரசாயன ஆயுதங்கள் தாக்குதலை நடத்தினார் என்னும் குற்றச்சாட்டுக்களுக்கு எத்தகைய நம்பகத்தன்மையும் கிடையாது.

அசாத் ஆட்சி அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு எந்த நோக்கமும் கொண்டிருக்கவில்லை. புதன் வரை, அதன் படைகள் மெச்சத்தக்க வகையில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தாமலேயே, அமெரிக்க ஆதரவுடைய எதிர்ப்பு போராளிகளை தோற்கடித்து வருகின்றது. மக்களிடையே ஆதரவின்மை, பலமுறை கண்ட தோல்விகள் இவற்றின் விளைவாக எதிர்த்தரப்பு கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்களாக சிதைந்து கொண்டுள்ளது; கூத்தா தாக்குதலுக்குப் பின் இந்நிலை அல்குவேடா பிணைப்புடைய எதிர்த்தரப்புப் படைகளின் அறிவிப்பான, அவர்கள் அசாத்தின் அலாவி நம்பிக்கையுடையவர்களை கைப்பற்றினால் கொல்வோம் என உறுதியளித்ததின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசாத் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டுக்கள் ஒரேயொரு நோக்கத்திற்கு மட்டுந்தான் உதவுகின்றன: வாஷிங்டனுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் சிரியாவைத் தாக்க ஒரு போலிக் காரணம் கொடுப்பதற்கு, ஆட்சி இரசாயனத் தாக்குதல் நடத்தினால் சிரியா தாக்கப்படும் எனப் பலமுறை அவை அச்சுறுத்தியுள்ளன. கூத்தாவில் இரசாயனத் தாக்குதல் நடந்தது என்பது உண்மையானால், பிரான்சுவா ஹாலண்ட், டேவிட் காமரோன் மற்றும் பாரக் ஒபாமா அது செயல்படுத்தப்பட்டது குறித்து பஷர் அல்-அசாத்தைவிட அதிகம் அறிந்திருப்பர்.

ஒரு இரசாயனத் தாக்குதல் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் வெளிவருமுன்னரே மற்றும் அது குறித்த விசாரணை தொடங்கு முன்னரே—உண்மையில்  வழக்கமாக தெருவில் நடக்கும் ஒரு குற்றம் குறித்து போலீஸ் துறைகள் குற்றச்சாட்டை வெளியிடும் அவகாசத்திற்கும் குறைந்த நேரத்தில்— பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் அசாத்துடன் போர் வேண்டும் என அழைப்பு விடுத்தனர். தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவதற்கு மறுநாளே பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ் “வலிமை” ஒன்றுதான் உரிய விடை என வலியுறுத்தினார்.

ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள், தங்கள் போர்த்திட்டத்தைத் தொடர்வதற்கு முன், ஒரு ஐ.நா. விசாரணை அல்லது சான்றுகள் தேவையில்லை என்றே கூறிவிட்டனர். நியூ யோர்க் டைம்ஸிடம் நேற்று அவர்கள் சிரியாவில் அமெரிக்கத் தாக்குதல்களுக்கான இலக்குப்பட்டியல் ஏற்கனவே வெள்ளை மாளிகையில் சுற்றி வருகிறது எனவும், தாங்கள் “ஐ.நா. விசாரணையாளர்கள் இடத்தை அணுகுவது குறித்த நீடித்த விவாதத்தில் ஈடுபடத்தயாராக இல்லை என்றும், இதற்குக் காரணம் இப்பொழுது நம்பகத்தகுந்த கண்டுபிடிப்புக்களை அவர்கள் கொண்டுள்ளனர்” என்றும் கூறினர்.

ஒபாமா நிர்வாகத்தின் கூற்றுக்களான இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு என்னும் “சிவப்புக் கோடு” மீறப்பட்டுவிட்டது குறித்த கவலையால் என்பது, முற்றிலும் மோசடித்தனமானதாகும். கூத்தாவில் என்ன நடந்தது என்பது குறித்து அது விசாரணை செய்யத் தயாராக இல்லை. மாறாக அசாத் ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் அது தொடங்க உள்ள இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு, செய்தி ஊடகத்திற்கு “நம்பகத்தன்மை உடையது” என அளிப்பதற்கு ஒரு  போலிக்காரணத்தைப் பெற அது விரும்புகிறது.

பாரிஸ், லண்டன் மற்றும் வாஷிங்டன் நீண்ட விளைவுகளைக் கொண்ட ஒரு போரை நடத்த விரைகின்றன. ஏவுகணை அழிக்கும் ஆற்றல் உடைய அமெரிக்க கப்பல்கள் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்குச் செல்கின்றன, சிரியாவை தாக்குவதற்கு; இராணுவத் திட்டமிடுவோர் பாரிய குண்டுத் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துகின்றனர், சிரியாவில் இருக்கும் இஸ்லாமியவாத எதிர்த்தரப்பு போராளிகளுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் சிரியாவின் நட்பு நாடுகளான ஈரான் மற்றும் ரஷ்யா கொடுக்கும் அப்பட்ட எச்சரிக்கைகளை: சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல் பிராந்தியம் முழுவதும் கடுமையான விளைகளை ஏற்படுத்தும் என்று அவை கூறுவதை உதறித்தள்ளுகின்றனர்.

சிரியாவிற்கு எதிரான போர்த்தயாரிப்பு உந்துதல்களில் இருக்கும் புவி மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய மூலோபாயமியற்றுவோரில் ஒருவரான மூலோபாய, சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அன்டனி கோர்ட்ஸ்மனால் இரசாயனத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட நாளுக்கு இரு தினங்களுக்குப் பின் ஒரு நீண்ட அறிக்கையில் வெளியிடப்பட்டது.

அவர் எழுதினார்: “பஷர் அல் அசாத்  போரில் வென்றாலும், சிரியாவின் பெரும்பகுதி மீது கட்டுப்பாட்டைக் கொடுக்கும் வகையில் தப்பினாலும், ஈரான் ஈராக் சிரியா மற்றும் லெபனான் மீது பிளவுற்றிருக்கும் மத்திய கிழக்கின் மீது புதிய அளவு செல்வாக்கை கொண்டிருக்கும்; பிராந்தியம் சுன்னி, ஷியைட் என்று பிரிந்துள்ளது, உறுதியாக சிறுபான்மையினரை நாட்டை விட்டு வெளியேறச் செய்துள்ளது. அது இஸ்ரேலுக்கு புதிய இடர்களை அளிக்கும்; அது அமைதியாக இருக்கும் அசாத் என்ற நிலையை நம்ப முடியாது. 

இது ஜோர்டானையும் துருக்கியையும் வலுவிழக்கச் செய்யும்; இன்னும் முக்கியமாக ஈரானுக்கு வளைகுடாவில் கூடுதல் செல்வாக்கைக் கொடுக்கும். BP, ஈராக்கும் ஈரானும் ஒன்றாக கிட்டத்தட்ட உலகின் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களில் 20% ஐ கொண்டுள்ளன என மதிப்பிட்டுள்ளது, அதேவேளை மத்திய கிழக்கு 48%க்கும் மேல் கொண்டுள்ளது.”

அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், மத்திய கிழக்கின் பரந்த எண்ணெய் இருப்புக்கள் மீது தங்கள் கட்டுப்பாட்டிற்கு வரக்கூடிய அனைத்து தடைகளையும் அகற்றுதல் என்னும் நோக்கத்தை அடைய, ஈராக்கில் செய்தது போல் நூறாயிரக்கணக்கான சிரியர்களின் மரணங்களை களிப்புடன் செய்வர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்திடையே மற்றொரு எண்ணெய், பூகோள அரசியல் நலனுக்காக ஒரு போரில் ஈடுபடுத்தப்படுவது குறித்து ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக்கணிப்பு, சனிக்கிழமை வெளியிடப்பட்டது, அமெரிக்க மக்களில் 9%தான் சிரியாவில் அமெரிக்கத் தலையீட்டை ஆதரிக்கின்றனர் என்றும் 25%தான் அசாத் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதை ஆதரிப்பர் என்றும் காட்டுகிறது.

இந்த பொதுமக்கள் உணர்வை நன்கு அறிந்துள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தி ஊடகங்கள், போர்த்திட்டங்களின் அடித்தளத்தில் உள்ள நலன்கள் குறித்து ஏதும் கூறுவதில்லை, அச்சக்திகள் அல்குவேடாவுடன் பிணைந்துள்ளவை, வாடிக்கையாக செய்தி ஊடகத்திடம் பொய் கூறுபவை என அறிந்தும் இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டுக்களை திறனாய்வதும் இல்லை. அரச கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் செய்தி ஊடகத்தால் நடத்தப்படும் இச்சமீபத்திய செயற்பாட்டை சூழ்ந்துள்ள பொய்களின் துர்நாற்றம், மற்றொரு ஆக்கிரமிப்பு போரை நியாயப்படுத்த பேரழிவு ஆயுதங்கள் பொய்கள் தொகுப்பை அளிப்பது போல்தான் உள்ளது.

சிரியக் குடிமக்களை பாதுகாப்பதற்கு என்னும் மனிதாபிமான உந்துதலால் தாங்கள் சிரியாவை தாங்கள் தாக்குகிறோம் என்னும் ஏகாதிபத்திய சக்திகளின் கூற்றுக்களை பொறுத்தவரை, இவை இழிவுடன் கருதப்பட வேண்டியவை ஆகும். எகிப்தில் அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சிக்குழு பல்லாயிரக்கணக்கான ஆயுதம் அற்ற எதிர்ப்பாளர்களை படுகொலை செய்ய அனுமதித்த சில நாட்களுக்குப் பின் மற்றொரு குருதி கொட்டும் போரைத் தொடங்க இவை நடவடிக்கை எடுக்கின்றன.

வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் இப்பொழுது சிரியாவில் கட்டவிழ்த்து விடப்போவதாக அச்சுறுத்தும் போரை தொழிலாளர்களும் இளைஞர்களும் கட்டாயம் எதிர்க்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தால் ஏகாதிபத்திய சக்திகள் தடுத்து நிறுத்தப்படாதவரை, கோர்ட்ஸ்மன் கோடிட்டுக்காட்டியுள்ள செயற்பட்டியலை தொடர அவர்கள் சிரியாவுடன் போர் என்பதற்கு அப்பாலும் செல்வர். ஏற்கனவே சிரிய போர் விளைவுகளால் அழிவிற்கு உட்பட்ட லெபனான், ஈராக் போன்ற நாடுகளைத் தவிர, ஏகாதிபத்திய சக்திகள் ஈரானையும் இறுதியில் ரஷ்யா, சீனாவையும் தங்கள் பார்வையில் கொண்டுள்ளன.