Facebook Twitter RSS

சவுதி அரசு ஒருபோதும் இஸ்லாமிய அரசு அல்ல ,அது ஒரு அமெரிக்க அடிவருடி அரசு!!!!!!!!!!PART-6

துரோகங்களின் உச்சத்தில் அரபு நாட்டு தலைவர்கள் - மூன்று அரபு நாடுகள் எகிப்திய ராணுவ அரசுக்கு ஆதரவு!


கிப்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மேலை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எகிப்திய அரசுக்கு ஆதரவாக மூன்று ‘பலம் வாய்ந்த’ அரபு நாடுகள் களம் இறங்கியுள்ளன.


சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும், எகிப்தின் ராணுவ ஆட்சித் தலைமைக்கு தமது ஆதரவை இன்று காலை வெளிப்படையாக தெரிவித்திருந்தன. சற்று நேரத்துக்குமுன், ஜோர்தான் நாடும், தமது ஆதரவை தெரிவித்துள்ளது.

சவுதி மன்னர் அப்துல்லா, “அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் ஆட்களை அடக்குவது, எகிப்திய அரசின் உரிமை. இதில் வெளியாட்கள் தலையிட்டால், சவுதி அரேபியா பார்த்துக்கொண்டு இருக்காது” என்றார்.

ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் நசீர் ஜூடே, “எகிப்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை கிளர்ச்சியாளர்கள் மீதான வன்முறையல்ல, தீவிரவாதத்துக்கு எதிராக நடந்த யுத்தம்” என்றார்!

எகிப்தில் ராணுவத்துக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் சுமார் 600 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அமெரிக்கா, எகிப்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், மூன்று அமெரிக்க ஆதரவு அரபு நாடுகள், எகிப்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: