Facebook Twitter RSS

பிர் அவ்னை தட்டிக்கேட்க நும்ரூதின் கூட்டணியா? !


 சிரியாவில் சிவிலியன்கள் மீதான இரசாயன ஆயுதப் பிரயோகத்தின் பின் அதை காரணமாக வைத்து அமெரிக்கத் தலைமையிலான NATO கூட்டுக் கொலைகாரக் கொள்ளையர்கள் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வரும் செய்தியே இன்று மீடியாக்களின் பிரதான HOT NEWS ஆக மாறியிருக்கிறது.

             தனது அரசியல்,இராஜ தந்திர,பொருளாதார நிர்ணயங்களுக்காக சில சூழ்நிலைகளை திட்டமிட்டு உருவாக்குதல், உருவாகியுள்ள சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தல் என்பதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படையான செயல் விதி.


           அந்த வகையில் முஸ்லீம்களிடம்  மிக வேகமாக எழுந்து வரும் இஸ்லாத்தின் தேடல்,இஸ்லாத்தை முதலாளித்துவ  ஜனநாயக மதச் சார்பின்மையின் வரைவிலக்கணமான மஸ்ஜித்களோடு முடக்கும் மத வடிவத்தை மீறிய ஆர்வமாக வடிவெடுப்பது,ஒரு பலத்த சவாலாகவே மாறியது. 

          அந்த வகையில் மிக வேகமாக எழுந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி அலைக்கு திட்டமிட்டு அணைபோடும் அரசியல்,இராணுவ நகர்வுகளாகவே நடப்பு நிலவரங்களை எம்மால் கணிக்கக் கூடியதாக உள்ளது.மாறாக சிரிய மக்கள் மீதுள்ள அக்கறையின் காரணமான ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக இது அமையவில்லை.

             சிரியாவில் பசர் அல் அசாதின் கொடூரமான மக்கள் அழிப்பு சம்பவம் இந்த விஷவாயு தாக்குதலால் மட்டுமே நிகழவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தகு தாக்குதல் சிரியாவில் முதல் தடவையாக நடத்தப் படவுமில்லை.முன்னரே சிரியப் போராளிகள் சில இடங்களில் அசாதின் இராணுவத்தால் 'கெமிகல் வெபன்ஸ் ' பாவிக்கப் பட்டதை பற்றி கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது . மேலும் இத்தகு சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கும் முடிவுடன்தான் போராளிகளும் இருந்தனர் .

                 மேலும் இராஜதந்திர ரீதியில் ரஷ்யாவை கட்டுப்படுத்தி இருந்தாலே அசாதின் தரப்புக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்க முடியும் . ஆரம்பத்தில் இருந்தே அத்தகு நடவடிக்கைகள் எதிலும் அமெரிக்காவும் அதன் கூட்டுக் களவானிகளும் முயற்சி எடுக்காமல் சிரிய யுத்தத்தின் திசையில் முஸ்லீம்களின் அழிவோடு கூடிய இன்னொரு அரசியலை விதைக்கவே விரும்பினர் .அந்தத் தீர்வு . சிரியப் போராளிகள் பலவீனமடைந்த நிலையில் சமரசத்தின் மூலம் சுலபமாக பின்வரும் அடிப்படையில் விதைக்க நினைத்தனர் .

1. தேசிய சிரியா .
2. செக்கியூலரிச ஜனநாயகம் .
3. இஸ்லாத்தை பெயரளவாக கொண்ட சரீயாவின்  முன்னுரிமை.

        என்ற தெரிந்த விடைக்குள் அது  அமைத்திருந்தது. லிபியாவைப்போல , எகிப்தைப்போல , சிரியாவை மடக்கி விடவே முயன்றனர் . அந்த நிலையை தாண்டி விடயங்கள் வந்த போது தான்  ஒரு இராணுவ நடவடிக்கைக்கான அவசியத்தை உணர்ந்தனர் .இத்தகு இராணுவ நடவடிக்கை நிச்சயமாக பசர் அல் அசாத்துக்கு எதிரானதல்ல .தெளிவாகவே இஸ்லாத்துக்கு எதிரானது என்பதுதான் உண்மையாகும் .

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: