Facebook Twitter RSS

சவுதி அரசு ஒருபோதும் இஸ்லாமிய அரசு அல்ல ,அது ஒரு அமெரிக்க அடிவருடி அரசு!!!!!!!!!!part-4

எகிப்திய இஹ்வானிய அரசை கவிழ்பதற்கு நிதியுதவியளித்த சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் - ”பேராண்மை”

Saudi Arabia plans to fund Syria rebel army
மகால அரசியலில் சவுதி அரேபிய அரசின் பெயர் அடிக்கடி இடம்பெறும் விடயமாகி விட்டது. அமெரிக்க அரசியல் அஜன்டாவின் மத்திய கிழக்கின் ஏஜென்டாக தொழிற்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும். எகிப்திய புரட்சியில் அமெரிக்காவின் பங்கு அதிகம்.  ஜெஸ்மின் புரட்ச்சி என்ற பெயரில் மத்திய கிழக்கினை புரட்டி போட்டது முதல் தஹ்ரீர் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது, இஹ்வான்களுடன் டீல் போட்டது, முர்ஸியின் அரசை கவிழ்த்தது என அது குறுங்காலத்தில் பல பங்களிப்புக்களை பின்புலத்தில் இருந்து செய்துள்ளது. அண்மையில் நடந்த எகிப்திய இராணுவ புரட்ச்சியின் பின்னாலும் அமெரிக்காவே இருந்துள்ளது. அந்த புரட்சிக்காக நிதியுதவியை வழங்கிய தேசம் சவுதி அரேபியா !!.

Mujtahid Bin Hareth Bin Hammaam. சவுதி அரேபிய அரசியலில் மாற்றுக்கருத்துடைய அரசியல்வாதி. டிவீட்டரில் இவரை @Mujtahidd என்றால் எல்லோருக்கும் தெரியும். சர்ச்சைக்குரிய கருத்துக்களை சவுதி அரசியல் பற்றி வெளியிடுவதில் புகழை தேடிக்கொண்ட மனிதர். சவுதி அரேபியாவின் ஜீலியன் அஸன்ஜே எனவும் இவரை குறிப்பிடுவர். சவுதி அரேபிய ரோயல் குடும்பத்தின் உள்விவகாரங்கள் முதல் அதன் அமைச்சர்களின் நிதி கையாள்கை வரை இவர் பேசுபவர். சுமார் 250000 பேர் இவரது டிவீட்டரில் பளோவர்களாக உள்ளனர். 


எகிப்திய இஹ்வான்களின் அரசினை கவிழ்ப்பதற்காக அந்நாட்டின் பிரதம இராணுவ தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான 
General Abdel Fattah al-Sisi இற்கு ஒரு பில்லியன் டொலர்களை (one billion dollars) சவுதி அரேபிய அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

எகிப்திய பிரதம இராணுவ தளபதியை முஹம்மட் முர்ஸி நீக்கிய போது அமெரிக்கா முர்ஸி அரசிற்கு பரிந்துரைத்த பெயரே அப்தல் பதாஃ அல் சிஸி. முர்ஸியும் அவரை பிரதம தளபதியாக்கி அழகு பார்த்தார். இப்போது அந்த தளபதியே அடித்துள்ளார் ஆப்பு முர்ஸிக்கு. ஏனென்றால் அவர் அமெரிக்காவினால் நொமினேட் செய்யப்பட்டவர் ஆயிற்றே. இஹ்வானிய அரசியலின் இழுக்கான பக்கங்களில் இதுவும் ஒன்று. 

சவுதி ஆட்சியாளர்களிற்க ஒரு விடயம் நன்றாகவே தெரியும். மிக உறுதியான இஸ்லாமிய அரசின் ஆட்சி உதயமானால் அது சவுதியின் வீழ்ச்சிக்கு அத்திவாரமாகிவிடும் என்று. சவுதி அரேபிய அரசிற்கு எதிரான அரசியல் கொள்கைகள் மத்தியகிழக்கில் உருவாவதற்கு இது வாய்ப்பாகிவிடும் என்று. இதனாலேயே எகிப்திய ஆட்சிக்கவிழ்ப்பில் சவுதி அரேபிய கரங்களும் ஈடுபட்டுள்ளன. 

சவுதி ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல், நிதி, ஊடக பலங்களினால் எகிப்திய இராணுவ புரட்சிக்கு ஆதரவான ஒரு களநிலையை உருவாக்க பெரிதும் முயன்று வருகின்றனர். இவர்கள் தங்கள் செல்வாக்கின் மூலம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தேசத்தலைவர்களை எகிப்திய இராணுவ புரட்சியினால் உருவாக்கப்பட்ட அரசிற்கு எதிராக கடும் போக்கை கைக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டனர். 

ஜனநாயகம் பற்றி பேசும், அந்த ஜனநாயகத்திற்காக இறைமையுள்ள தேசங்களின் தலைவர்களை கொலை செய்யும் அமெரிக்கா, பல தசாப்பதங்களின் பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை கவிழ்க்க அல்லது கவிழ்த்தவர்களிற்கு உதவுவது எந்த வகை ஜனநாயகம் என்பது என்றைக்குமே ஒரு கேள்வியல்ல.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: