Facebook Twitter RSS

மாறும் சிரிய சண்டைக்களங்கள் - மீண்டும் வெற்றிகளை நோக்கி முஜாஹிதீன்கள் - வீழ்ந்தது பஸர் அல்-அஸாத் பிறந்த கிராமம்!!




“எதிரி தன் தாக்குதல் வியூகங்களை மாற்றும் போது, நீ உன் போரியல்

மூலோபாயத்தையே மாற்று” - சன்சூ (Art of War)



 

சிரியாவில் இடம்பெறும் சண்டைக்களங்கள் இப்போது இன்னொரு
பரிணாமம் நோக்கி நகர்ந்துள்ளன. இஸ்லாமிய போராளிகளின்
அடர்ந்தெழுந்த தாக்குதலிற்கு முன் நிற்க முடியாமல் திக்கு முக்காடி தங்கள்
 டாங்கிகளின் பின்னால் ஒழிந்து கொண்டு பின்வாங்கிய நிலையில்
போராளிகள் உள்புகுந்து கைப்பற்றிய பிரதேசங்கள் மேல் மழையென
ஷெல் தாக்குதல்களையும்,  ரொக்கெட் தாக்குதல்களையும் பொழிந்து
விமானத்தாக்குதல்களை கண்மூடித்தனமாக மேற்கொண்டு கோர யுத்தம்
 செய்து, வெறியாட்டமாடி போராளிகளை பின்வாங்க வைத்து மீண்டும்
இழந்த நிலங்களை கைப்பற்றியது அஸாதின் இராணுவம். இதற்கு ஹோம்ஸ்
மாகாணம் நல்ல உதாரணம்.


வழக்கமான சண்டைகள் இழப்புக்களை மட்டும் ஏற்படுத்தும் நிலை
போராளிகளிற்கு. எதிரி பின்வாங்கி, முன்னேறவிட்டு பின்னர் அந்த
இடத்தையை தகர்த்தழிக்கின்றான். இதனை தான் குசைரின் தோல்வியின்
போது ஹஸன் நஸ்ருல்லாஹ் செய்யப்போவதாக சூளுரைத்தான்.
 அவன் கூறினான் “கைப்பற்றப்படும் சிரிய நிலப்பிரதேசங்கள் இஸ்லாமிய
 போராளிகளிற்கு சவக்கிடங்காக மாறும்” என.

போராளிகள் சிரிய போரியலில் ஒரு தீர்க்கமான கட்டத்தில் வந்து நின்றனர்.
இப்போது எடுக்கப்படும் முடிவே அவர்களது எதிர்கால இராணுவ
இருப்பிற்கான அடிப்படை எனும் ஒரு நிலை.

“வெற்றி என்பது குறித்த தருணத்தில் எடுக்கப்படும் வேகமான சரியான
 முடிவு”. இதனை சொன்னவர் அன்றைய சோவியத் ரஷ்யாவின் தலைவர் குருசேவ்.

சிரிய போராளிகளின் கொமாண்டும் இந்த இராணுவ விதிக்கமைய தன்
 உக்தியை மாற்றியது. பஸர் அல் அஸாதின் அலவி ஷியாக்கள் இருக்கும்
 நிலப்பிரதேசங்கள் நோக்கிய தாக்குதல் என அவர்கள் தங்கள் போரியல்
 மூலோபாயத்தை மாற்றியுள்ளனர். இருபத்தியொரு மில்லியன் சிரிய மக்கள்
தொகையில் 12% மானவர்கள் இந்த அலவி பிரிவினர். சூபித்துவத்தை
அடிப்படையாக கொண்டவர்கள். இவர்கள் வாழும் நகரங்கள், கிராமங்கள்
 நோக்கி போராளிகளின் இலக்கு திரும்பியுள்ளது. இந்த நிலங்கள் மேல் பஸர்
அல் அஸாதின் படைகளால் அழித்தொழிப்பு குண்டு வீச்சினை மேற்கொள்ள
முடியாது.

சிரிய சமர்க்களங்களின் நகர்ச்சி இப்போது டமஸ்கஸ்ஸை அண்டிய பகுதிகள்
நோக்கி வட்டமிட ஆரம்பித்துள்ளன. Lattakia மாகாணம் நோக்கி போராளிகள்
தங்கள் தாக்குதலை முனைப்புடன் ஆரம்பித்துள்ளனர். சடுதியாக பல கிராமங்கள்
 அவர்கள் வசம் வீழ்ந்துள்ளன. இங்கே ஆட்டிலறி மழை பொழிந்தால்
ஹிஸ்புல்லாக்கள் கதறி அழுவார்கள். 

பஸர் அல் அஸாதின் பிறந்த இடமான Karadaha இப்போது F.S.A.
போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது. அங்கு பல நூறு பீரங்கிகள், ஆட்டிலறிகள்,
ஆயிரக்கணக்கான ரைபிள்கள், துப்பாக்கி ரவைகள், பிக்அப் வாகனங்கள்
 என போராளிகள் எதிர்பார்க்காத பிரமிக்கத்தக்க சாதனங்கள் அவர்கள்
கரங்களில் வீழ்ந்துள்ளன.

இந்த வெற்றியானது பஸர் அல்-அஸாதின் இராணுவ வெற்றிகளின்
அடிப்படைகளை
வெடி வைத்து தகர்க்கும் நிகழ்வாகவே நோக்கத்தக்கது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: