Facebook Twitter RSS

வருமுன் காக்க நினைக்கிறதா சியோனிசம் ? - சிரிய இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகளை பென்டகன் நன்றாகவே அறிந்து வைத்துள்ளது.


சிரியாவின் புரட்ச்சி அமெரிக்க கணிக்புகளிற்கும் அப்பால் இஸ்லாமிய ஆட்சி எனும் எல்லைகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது அதன் எதிர்கால விபரீதங்கள் நன்றாகவே புரிந்து போயின இஸ்லாத்தின் எதிரிகளிற்கு. முர்ஸியின் இஸ்லாமியவாதம் தோற்கடிக்கப்பட்டு அந்நூர் ஸலபிகள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அது சவுதி அரேபியாவின் மன்னராட்சிக்கு எதிரான ஸலபிகளின் போராட்டமாக மாறும் என்பதை நன்குணர்ந்த அப்துல்லாஹ் 200 பில்லியன் டொலர்களை ஜெனரல் சிசியின் காலடியில் வைத்து இஹ்வானிய ஆட்சிக்கு குழி வெட்டினார். சிரியாவில் இஸ்லாமிய ஆட்சி உருவானால் அது எகிப்திலும் வலுவாக தன் ஆதிக்கத்தை செலுத்தும் என்ற உண்மையை உணர்ந்த அமெரிக்காவும், அதன் சியோனிஸ கோட்பாதர்களும் டீல் போட்டு நட்பு பாராட்டிய இஹ்வான்களிற்கு யூ டேர்ன் அடித்து சவுதியின் ஆட்சி கவிழ்ப்பிற்கு துணை போயினர். எகிப்திலும் துருக்கி போன்ற செக்யூலரிஸ ஆட்சியை உருவாக்கி இஸ்ரேலிற்கு எதிரான போர்களை தவிர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் அழிக்கப்பட்ட பின் அல்லது அகற்றப்பட்ட பின் சில வேளைகளில் இதே ஜெனரல் சிசியை மனித உரிமை என்ற பெயரில் விசாரணைகள் செய்யவும் அமெரிக்கா தயங்காது.

 தேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன்  எனும் நாசகார கங்காணியும்  அங்கு வரலாற்று நியாயங்களோடு  குடியமர்த்தப் பட்டான் .

                          இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல் தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence   அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .


                  மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .

                           இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது 'முர்சி ' மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .

                     பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான  முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .

                            நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி   ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத்  சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாம் .

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: