Facebook Twitter RSS

எகிப்தில் ராணுவ புரட்சிக்கு அமெரிக்கா அங்கீகாரம்! ராணுவத்திடம் காணப்படுவது மிகச்சிறந்த பங்களிப்பாம்!


                எகிப்தில் முஹம்மது முர்ஸியை அராஜகமான ராணுவ புரட்சியின் மூலம் நீக்கம் செய்த ராணுவப் புரட்சிக்கு அமெரிக்கா பகிரங்கமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏற்கனவே முர்ஸியின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு அமெரிக்கா பணம் வழங்கியதை அல்ஜஸீரா ஆதாரத்துடன் அம்பலபத்தியிருந்தது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்ததாவது; ‘ராணுவம் எகிப்தில் ஜனநாயகத்தை மீட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான முர்ஸி எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கியதால் ராணுவம் தலையிட்டுள்ளது. ராணுவத்திடமிருந்து மிகச்சிறந்த பங்களிப்பே இதுவரை ஏற்பட்டுள்ளது.’ என்று கூறியுள்ளார்.
முர்ஸியை அராஜகமாக வெளியேற்றிய நிகழ்வை ராணுவப் புரட்சி என்று இதுவரை அமெரிக்கா ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுடைய விருப்பத்திற்கு இணங்காத முர்ஸியை வீழ்த்த அமெரிக்கா பெரும் அளவில் பணத்தை அளித்துள்ளதை அல்ஜஸீரா ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருந்தது.
ஜனநாயகரீதியாக போராடும் மக்களை கொடூரமாக ராணுவம் சுட்டுத் தள்ளியபோது அமெரிக்கா மெளனமாக வேடிக்கை பார்த்தது. இந்நிலையில் ராணுவ புரட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய அமெரிக்காவிற்கு எகிப்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: