Facebook Twitter RSS

அல்-காய்தா ஏவிய மூன்று ஏவுகணைகளில் இரண்டு தடுத்து, அடித்து வீழ்த்தப்பட்டன!


எகிப்தின் சினாய் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், இரண்டு ஏவுகணைகளை தடுத்து அடித்து வீழ்த்தியுள்ளது, Iron Dome எனப்படும் இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு கருவி. மூன்றாவது ஏவுகணை திசை தப்பி, பாலைவனத்தில் போய் விழுந்து வெடித்தது.
எகிப்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை Iron Dome தடுத்து வீழ்த்தியிருப்பது இதுவே முதல் தடவை.
எகிப்து – இஸ்ரேல் எல்லைக்கு அருகே அமைந்துள்ள எய்லாட் (Eilat) விமான நிலையம் மீது எகிப்தின் சினாய் பகுதியில் இருந்து அல்-காய்தா ஆதரவு இயக்கத்தினர் ராக்கெட் தாக்குதல் நடத்தலாம் என்று இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த விமான நிலையம் சில மணி நேரத்துக்கு மூடப்பட்டது தொடர்பான செய்தியை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தோம்.
அதன்பின், எய்லாட் நகரம் மீது ராக்கெட் ஏவ சினாய் பகுதியில் இருந்து அல்-காய்தா ஆயத்தம் செய்துகொண்டிருக்க, இஸ்ரேலிய உளவு விமானம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில், அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் ராக்கெட் ஏவும் படைப்பிரிவின் தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டிருந்தோம்.
இப்போது, அதே சினாய் பகுதியில் இருந்து, அதே எய்லாட் நகரம் மீது ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளில் இரண்டை அடித்து வீழ்த்தியுள்ளது இஸ்ரேலிய Iron Dome.
அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, சினாய் பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்ட உடனேயே, எய்லாட் நகரின் ஆட்டோமேட்டிக் சைரன்கள் ஒலியெழுப்ப தொடங்கின. உடனடியாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். எ
கிப்து பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஒவ்வொன்றாக வர, இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு கருவி Iron Dome, முதல் இரு ஏவுகணைகளையும் அடித்து வீழ்த்தியது. அவை பலத்த ஓசையுடன் ஆள்நடமாற்றமற்ற பகுதியில் விழுந்து வெடித்தன. மூன்றாவது ஏவுகணை இலக்கு தவறி பாலைவனத்தை நோக்கி சென்றது.
இந்த ஏவுகணை தாக்கதலில் யாரும் நேரடியாக கொல்லப்படவில்லை. ஆனால், தடுத்து வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் எழுப்பிய எய்லாட் நகரில் பெரிய ஓசையை கேட்ட அதிர்ச்சியில் எய்லாட் நகரில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த ஏவுகணைகளை ஏவியது தாம்தான் என்று சினாய் பகுதியில் உள்ள இரு அல்-காய்தா ஆதரவு இயக்கங்கள் உரிமை கோரியுள்ளன. இந்த மூன்று ஏவுகணைகளையும் அவர்கள் ஒன்றிணைந்து ஏவினார்களா, அல்லது ஒரே நேரத்தில் தனித்தனியாக ஏவினார்களா என்பது தெரியவில்லை.
ஏவுகணைகளை அடித்து விழ்த்திய Iron Dome என்ற கருவி, mobile all-weather air defense system வகையை சேர்ந்தது. 4 கி.மீ. முதல், 70 கி.மீ. தொலைவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை தடுத்து, அடித்து வீழ்த்தக்கூடிய கருவி. Rafael Advanced Defense Systems என்ற இஸ்ரேலிய நிறுவனத்தின் தயாரிப்பு.



SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: