Facebook Twitter RSS

டமஸ்கஸ்ஸில் சிரிய இராணுவம் 'விஷவாயுவினை' உபயோகித்து தாக்குதல் !! 1300 பேரிற்கு அதிகமானவர்கள் பலி.



மஸ்கஸ்ஸில் தம் பரம வைரிகள் நுழைவதை தாங்க முடியாமல் பஸர் 
அல் அஸாதின் இராணுவம் முஸ்லிம் போராளிகள் தாக்குதல்களை மேற்
கொள்ளும் கள முனைகள் நோக்கி விஷ வாயு குண்டுகளை கொண்டு தாக்கியுள்ளது. 
கடந்த புதன்கிழமை (21 / 8) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டமஸ்கஸ் மாகாணத்தின் Ghouta மாவட்டத்திலேயே இந்த நச்சு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகாலையில் நடாத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் 
அப்பாவி பொது மக்கள் பரிதாபகரமாக தங்கள் உயிரை இழந்துள்ளனர். 


மக்கள் நெருக்கம் மிக்க Jobar பகுதியில் இந்த குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. டமஸ்கஸ்ஸிற்கு 03 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஷவாயு குண்டுகளை ஏந்திய முனைகளை ரொக்கட்களில் பொருத்தியே இந்த
 தாக்குதல் நிகழ்த்ப்பட்டுள்ளது. 

Tahrir al-Sham Brigade அமைப்பினரின் தாக்குதல் அணியான Fadi al-Shami-ஐ இலக்கு
 வைத்தே இந்த குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. Jobar-Zamalka பகுதிகளை
 தம் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக முன்னேறிய போதே அதிகாலை 02.30-03.00
 மணியளவில் இந்த குண்டுகள் ரொக்கெட்கள் மூலம் ஏவப்பட்டுள்ளன. இவை 
அப்பட்டமான இரசாயன தாக்குதல்கள் என்பது உறுதியாகியுள்ள போதும் சிரிய
 அதனை நிராகரித்துள்ளதுடன் தாங்கள் எந்த விஷ குண்டு தாக்குதல்களையும்
 தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது நிகழ்த்தவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. 
இந்த கொலைகார ஆட்சியாளர்களிற்கு ஆதரவாக ரஷ்யாவும் தன் பங்கிற்கு
 சிரியாவில் இரசாயன தாக்குதல்கள் நிகழ்த்தப்படவேயில்லை என கூறியுள்ளது. 

1988-ல் சதாம் ஹுஸைன் குர்திஷ் போராளிகள் மேல் நடாத்திய இரசாயன 
ஏவுகனைத் தாக்குதல்களில் பல்லாயிரம் குர்திஷ் பொது மக்கள் பலியாகினர்.
 இப்போது அதனை விடவும் மோசமான தாக்குதல்களை சிரிய ஆட்சியாளர்கள்
 செய்துள்ளனர். அண்ணலவாக 1300 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
 1000 இற்கும் அதிகமானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், சிறுவர் 
சிறுமிகளாவர். 

“பாசிஸம் தன் தோல்வி தன்னை நெருங்கும் போது முதலில் தன்னை சூழ 
இருப்பவர்களையும் அழிக்க முற்படும்” என்பதே விதி. 

டமஸ்கஸ் மாகாணம்  சிரிய ஆட்சியாளர்கள் வசம் இருப்பதனால் இந்த 
படுகொலைகள் எகிப்திய படுகொலைகள் போல் ஊடகங்களால் வெளிக்கொணர 
முடியாத நிலையே இன்றும் உள்ளது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: