Facebook Twitter RSS

சினாயை நெருங்கும் எகிப்திய இராணுவம் - கடல் அரண் அமைக்கும் கடற்படை - அழித்தொழிப்பு சண்டைகளிற்கு தயாராக..

48 மணி நேர கால அவகாசத்தினுள் சினாயில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளை அழித்தொழிப்போம். அவர்கள் கூண்டில் அடைபட்ட எலிகள் போல் எம்மிடம் மாட்டிக்கொண்டனர். சினாயின் எல்லையை விட்டு அவர்களால் வெளியேற முடியாது. அவர்களது வெற்றுடலங்கள்தான் வெளியேற்றப்படும்”. இந்து சூளுரையை முழங்கியது யார் என்று யோசிக்கிறீர்களா? வேறு யாரும் அல்ல, எகிப்தின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் சிஸியின் காபந்து அரசின் உள்துறை அமைச்சகமாகும்.



சினாயில் உள்ளக தகவல்களின் படி சுமார் 500 முதல் 800 வரையான போராளிகள் உள்ளனர். அவர்களை சுற்றி வளைத்து அழித்தொழிக்கும் தாக்குதல் திட்டத்துடன் எகிப்திய இராணுவத்தின் மூன்றாம் பட்டாலியனும், கடற்படையும் சினாயை நெருங்கியுள்ளன. குறுந்தூர தாக்குதல் சிறப்பு பயிற்ச்சி பெற்ற படையினர் இதில் உள்ளனர்.

உள்துறை அமைச்சின் Mohammed Ibrahim இது பற்றி தகவல் தருகையில் சினாயின் எல்லையில் இஸ்ரெல் இருப்பதனால் எமக்கு இங்கு இராணுவ நெருக்கடிகள் மட்டுமன்றி இராஜதந்திர நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. ஆகவே எமது படையினரின் இலக்கு சினாயில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை விரட்டியடிப்பதாகும் என தெரிவித்துள்ளார். 

மதச்சார்பற்ற, மேற்கத்தைய கலாச்சார நாகரீகசிந்தனை இன்றைய எகிப்திய ஆட்சியாளர்கள் இஸ்லாமிய விரோத மனப்பான்மை மிக்கவர்களாக உள்ளனர். கமால் அப்தல் நாஸர் காலத்தின் சோஸலிச சிந்தனா தாக்கம் காரணமாக இஸ்லாத்தை விட்டு முரண்சிந்தனைகளின்பால் இட்டுசெல்லப்பட்ட எகிப்திய இராணுவம் பின்னர் துருக்கிய இராணுவம் போல் மதச்சார்பற்ற மேற்கத்தைய மோகம் கொண்ட இராணுவமாக மாறியது.

எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்ச்சி என்பது ஹுஸ்னி முபாரக்கின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிரான மக்களின் உரிமை போராட்டம் என்பதே யாதார்த்தம். ஆனால் அதனை இஹ்வான்கள் “மாபெரும் இஸ்லாமிய எழுச்சியாக” சித்தரித்தனர். (உண்மையிலேயே அது இஸ்லாமிய எழுச்சியாக இருந்திருந்தால் நாமும் அதில் திளைத்திருப்போம்). விகிதாச்சார ரீதியில் முர்ஸி அனைத்து கட்சிகளையும் கூட்டாளிகளாக்கி ஆட்சியை பிடித்தார்.

இராணுவ உயர் நிலை அதிகாரிகள் சிலரை மாற்றினால் இராணுவமே மாறி விடும் என கனவு கண்டார். விளைவு....

நேற்றைய தினம் கெய்ரோவில் நடந்த இராணுவ அரசிற்கு எதிரான மக்கள் பேரணியினை எகிப்திய இராணுவம் தாக்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர். 4500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். வெருண்டோடிய சன நெருசலில் சிக்குண்டவர்கள் இதில் அதிகம்.

சினாயின் நெருக்கடி என்பது எகிப்தின் உள்விவகாரம் மட்டுமல்ல. அது சிரியாவின் எதிரொலி. புரிகிற பாஷையில் சொன்னால் சிலுவை யுத்த வீரர்களிற்கும் யஹுதிகளிற்கும் எதிரான இறுதி புனிதப் போரின் ஆரம்ப ஓசை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: