Facebook Twitter RSS

கஃபாவின் தொழிலாளர்களுட் சேர்ந்து நோன்பு திறந்த சவுதி அரேபியாவின் ஷேய்ஹ் அல் சுதைஸ்
Ulama senior Masjidil Haram berbuka puasa bersama petugas bersih-bersih

நம்மை இயக்குவது பசி. மற்றையது செக்ஸ். இதில்
இரண்டாவதிற்கு கூட முதலாவது பூர்த்தி செய்யப்பட்டால்
மட்டுமே செயற்படவைக்க முடியும். இதை சொன்னவர்
கவிஞர் கண்ணதாசன். தனது குடும்பம் நலமாக வாழ
வேண்டும் என்பதற்காக கடல் கடந்து மத்தியகிழக்கின்
பாலைவனங்களில் அலையும் ஒட்டடகங்களை போல
தாங்கள் பார்க்கும் தொழில் உள்ள சிரமங்களையும்
பிரச்சனைகளையும் மனதில் அலையவிட்டபடி
கஸ்டப்படும் இலட்சக்கணக்கான ஆசிய முஸ்லிம்
தொழிலாளர்கள் இருக்கின்றனர். 

மக்காவின் கஃபாவில் சுத்திகரிப்பாளர்களாக பல்லாயிரம்
பேர் வேலை செய்கின்றனர். சவுதி அரசாங்கத்தின் நேரடி
கட்டுப்பாட்டில் இயக்கப்படும் ஸ்தலம் அது. எந்த குறையும்
நிகழாமல் எல்லாவற்றையும் வழமை போல வைத்திருக்க
விரும்பும் அதன் நிர்வாகம் மிகவும் கண்டிப்பானது. 

ரமழான் மாதத்தில் களைப்பிற்கு மத்தியில் தங்கள் நோன்பை
முடித்தது கொள்ளும் மஹ்ரிப்புடைய நோன்பு திறக்கும் நேரத்திற்கு
சற்று முன் அசுவாசமாக உட்காந்திருந்த ஆசிய தேச முஸ்லிம்
ஊழியர்களிற்கு அன்றைய தினம் ஒரு இன்பபேரதிர்ச்சி காத்திருந்தது.
 கடந்த மாதம் 27ம் திகதி நடந்த சம்பவம் இது.

கஃபாவின் பிரதம பேஷ் இமாம் மட்டுமல்லாது
மக்காவின் பிரபல வர்த்தகருமான Shaykh Abdurrahman As Sudais
அவர்கள் இந்த ஊழியர்கள் அமர்ந்திருந்த இடம் வந்தார்கள்.
படாரென நிலத்தில் உட்கார்ந்து விட்டார்கள். நோன்பை இனிதுர
திறந்து மகிழ்ந்தார்கள். நிர்வாக ஊழியர்களை பார்த்து இந்த
தொழிலாளர்கள் மேல் கருணை காட்டும் படி வேண்டினார்கள். 

இறுதியாக அவர் தன் காரில் ஏறிச்செல்லும் முன் சொன்ன
வார்த்தைகள் இவை. இங்கே வேலை செ்யகிறார்களே இவர்களது
வேலை போல் உன்னதமான மகத்தான வேலை உலகத்தில்
வேறெங்கும் இல்லை. இவர்கள் இறைவனின் இல்லத்தின் ஊழியர்கள்.
இவர்களிற்கு ஊழியம் செய்வதற்கு நாம் பழகி கொள்ள வேண்டும் எனவும் கூறிச்சென்றுள்ளார். 

உலகின் புகழ்பெற்ற இமாம் சுதைஷ். இவரது குரல் ஒலிக்காத வீடுகளே
இல்லை. அந்த மனிதனின் உள்ளத்தின் வாயிலின் திறக்கப்பட்ட ஒரு
கதவின் ஒலியில் வரைந்த வரிகளே இவை. ...

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: