Facebook Twitter RSS


பலஸ்தீனர்கள் ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும் : துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன்



அண்மையில் துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன், பலஸ்தீன் அரசியல் தலைவர்களை அலைபேசி வழி தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். பலஸ்தீன் அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷைல் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசிய அர்தூகன், பலஸ்தீனுக்குள் காணப்படும் உள்ளகப் பிரிவினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு வேண்டியுள்ளார். மிக அண்மையில் கெய்ரோவில் இடம் பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் குறித்துத் தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்த துருக்கியப் பிரதமர், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்குப் பலஸ்தீனர்களுக்கிடையே நிலவும் பிரிவினைகள் களையப்பட்டு, அவர்கள் ஒரே அணியில் திரள வேண்டும். பலஸ்தீனின் உள்ளகப் பிரிவுத் தலைவர்களுக்கு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை அன்காரா அரசு மிகுந்த ஆவலோடு அவதானித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


ஹமாஸ்- ஃபதஹ் இயக்கங்கள் கையெழுத்திட்ட நல்லிணக்க ஒப்பந்தம் அடுத்த மாதம் முதல் அமல்



நீண்ட காலத்திற்கு பிறகு ஹமாஸ்- ஃபதஹ் இயக்கங்கள் கையெழுத்திட்ட நல்லிணக்க ஒப்பந்தங்களை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த இரு அமைப்பினரும் தீர்மானித்துள்ளனர். வியாழக்கிழமை எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இரு அமைப்பின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.ஃபலஸ்தீன் ஐக்கிய அரசு உருவாக்குவதை ஒப்பந்தத்தில் முக்கியமானது என்று ஃபதஹ் தலைவர் அஸ்ஸாம் அல் அஹ்மத் பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவித்தார். காஸ்ஸாவில் வாக்காளர்களின் பதிவு நடவடிக்கைகளை ஃபலஸ்தீன் தலைமை தேர்தல் கமிஷன் பூர்த்தியாக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளது. ஃபதஹிற்காக தேர்தல் கமிஷன் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி காஸ்ஸாவை ஆளும் ஹமாஸ் அங்கு பதிவு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது. ஊடகங்கள் மூலமாக பரஸ்பரம் தாக்குதலை நிறுத்தவேண்டும், ஃபலஸ்தீன் கைதிகளின் விடுதலைக்காக ஒன்றாக செயல்படுதல் உள்ளிட்ட ஷரத்துக்களை கொண்ட ஒப்பந்தத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தர் நாட்டில் வைத்து இரு அமைப்புகளின் தலைவர்களும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் பல காரணங்களால் ஒப்பந்தம் அமல்படுத்தாமலிருந்தது. ஹமாஸ் – ஃபதஹ் தலைவர்களை உட்படுத்தி எகிப்திய வல்லுநர்கள் தலைமை வகிக்கும் குழு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும். ஃபதஹுடன் இணைந்து சுதந்திர அமைச்சரவையை உருவாக்குவது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்று ஹமாஸ் அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர் இஸ்ஸத் அல் ரஸாக் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

ஆர்.எஸ்.எஸ்., பாஜக முகாம்களில் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயிற்சி: ஷிண்டே புது குண்டு!



டெல்லி: பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முகாம்களில் தீவிரவாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே புது குண்டை வீசியுள்ளார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

 காவி தீவிரவாத பயிற்சி இது தொடர்பாக சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து:

 ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை இந்துத்துவா தீவிரவாத்தை உருவாக்குகின்றன. சில குண்டு வெடிப்பு சம்பவங்களின் விசாரணைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தங்களது முகாம்களில் பயிற்சி இந்துத்துவா தீவிரவாதத்திற்கு பயிற்சி அளித்து வருகின்றன. சமாஜ்வுதா எக்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என்பது ஷிண்டேயின் கருத்து. பாஜக கண்டனம் சுஷில் குமார் ஷிண்டேவின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், உள்துறை அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது. இந்த பேச்சு மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கு நாங்கள் பெரிதும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அவர்.

 ஹபீஸ் சையத்துக்கு கிடைத்தது ஆயுதம்!:

 உள்துறை அமைச்சர் சுஷில்குமார் தெரிவித்த கருத்தை லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையத் ஆதரித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஹபீஸ் சையத், இந்திய உள்துறை அமைச்சர் இந்து தீவிரவாதம் குறித்து அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


சுனில் ஜோஷியை கொன்றவர்கள் லோகேஷ் சர்மா, ராஜேந்திர சவுத்ரி – என்.ஐ.ஏ!

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை மலேகான் – சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் லோகேஷ் சர்மாவும், ராஜேந்திர சவுத்ரியும் கொலை செய்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் மத்தியபிரதேச மாநிலம்
இந்தூரில் இருந்து கைதான பல்பீர் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. சுனில் ஜோஷி கொலைக்கான சதித்திட்டத்தில் பல்பீருக்கும் பங்குண்டு என்று என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.
மலேகானில் 2006-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் சூத்திரதாரியாக செயல்பட்டவன் சுனில் ஜோஷி. இவன் ஹிந்துத்துவா தீவிரவாத குழுவில் பெண் தீவிரவாதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபொழுது கொலைச் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ கூறுகிறது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும், டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானி கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடைய லோகேஷ் சர்மாவுக்கு பல்பீர் நெருங்கிய கூட்டாளி ஆவான். இவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை என்.ஐ.ஏ ஃபாரன்சிக் சோதனைக்கு அனுப்பியுள்ளது.
2007 டிசம்பர் 29-ஆம் தேதி சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்டான். ஆனால், இவ்வழக்கில் தொடர்புடைய லோகேஷ் சர்மா இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜோஷி கொலையைக் குறித்து முதலில் விசாரணை நடத்திய மத்தியபிரதேச மாநில போலீஸ் 5 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


மலேகான்:சாட்சியை கொலைச் செய்ததாக ஹிந்துத்துவா தீவிரவாதி!



2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் குண்டை வைத்த டான்சிங்கை அடையாளம் கண்ட இளைஞரை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கொலைச் செய்துள்ளனர். என்.ஐ.ஏவின் காவலில் இருக்கும் டான்சிங், நேற்று முன் தினம் தன்னை அடையாளம் கண்ட இளைஞரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான். இக்கொலையில் நேரடியாக தொடர்பு இல்லை. ஆனால், சதித்திட்டத்தில் பங்குண்டு என்பதை டான்சிங் ஒப்புக்கொண்டுள்ளான். குண்டுவெடிப்பு நிகழ்ந்து 2 வாரங்கள் கழித்து செப்டம்பர் 26-ஆம் தேதி மலேகானில் வீட்டின் பின் பகுதியில் இறந்து கிடந்த அஸ்ஹர் பர்வேஸ் என்ற இளைஞனின் மரணம் கொலை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. புற்றுநோய் பாதித்த 38 வயது பர்வேஸ், மனக்கவலையால் தற்கொலைச் செய்தார் என்று போலீஸ் இவ்வழக்கை மூடிவிட்டது. இரண்டு கைகள் பிளக்கப்பட்ட நிலையிலும், இடது கணுக்காலில் ஆழமான காயம் பட்ட நிலையிலும் பர்வேஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறியதால் மரணம் சம்பவித்ததாக போஸ்ட் மார்ட்டம் அறிக்கை கூறியது. இறந்த உடலில் காயங்களும், அடி பட்டதன் அடையாளங்களும் இருந்த போதும் போலீஸ் வழக்கை அவசர அவசரமாக தற்கொலை என்று மூடிவிட்டது. புதிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க என்.ஐ.ஏ பரிசீலிக்கிறது. 2006 செப்டம்பர் எட்டாம் தேதி 31 பேர் பலியான மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அன்று,வெடிக்குண்டு பொருத்திய சைக்கிளுடன் வந்த டான்சிங்கை, சைக்கிளின் பின் சீட் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதை கண்டு ஆச்சரியமுற்ற பர்வேஸ் தடுத்து நிறுத்தி, இதனை எங்கு வாங்கினீர்கள்? இந்த சீட்டை என் மகனின் சைக்களில் இணைக்கவேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், பதில் எதுவும் கூறாமல் டான்சிங் சென்றுவிட்டான். குண்டுவெடித்த பிறகு பர்வேஸ் கண்ட சைக்கிளில் பொருத்திய குண்டுதான் வெடித்தது என்ற செய்தி வெளியானது. இதனை டி.வியில் கண்ட பர்வேஸ், குண்டுவைத்த நபரை தான் அடையாளம் கண்டுகொண்டதாக மலேகானில் ஜமாஅத்தே உலமாவின் மார்க்க அறிஞர்கள் உள்ளிட்டவர்களிடம் தெரிவித்தார் என்று பர்வேஸின் சகோதரர் மஸ்ஹர் கூறுகிறார். ஆனால், பர்வேஸின் கூற்றை நம்பாததுடன், இக்காரியத்தை போலீஸில் கூறவேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


யுவான் ரிட்லிக்கு விசா மறுப்பு:இந்திய அரசின் இஸ்லாமோஃபோபியா!



பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலருமான யுவான் ரிட்லிக்கு இந்தியாவுக்கு வர விசாவை மறுத்துள்ளது மத்திய அரசு.ஜமாஅத்தே இஸ்லாமி சார்பாக ஹைதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள யுவான் ரிட்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு வர விசாவுக்கு விண்ணப்படித்திருந்தார்.ஆனால், அவருக்கு விசா அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.ஏற்கனவே கேரள மாநிலத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொள்ள அவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தபோதும் இந்திய அரசு விசா அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், யுவான் ரிட்லி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக மாநாட்டில் உரையாற்றினார் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தனது கண்டனத்தை பதிவுச்செய்துள்ள யுவான் ரிட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது:பெண்கள் உரிமைகள் குறித்து 50 ஆயிரம் பெண்கள் மத்தியில் உரையாற்றும் வாய்ப்பை இந்திய அரசு மறுத்துள்ளது.டெல்லியில் கூட்டு பாலியல் கொடுமை போன்ற அக்கிரமங்கள் நடந்த பிறகும் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் அதன் தீவிரத்தன்மையை உணரவில்லை.பெண்களை 2-ஆம் தர குடிமக்களாகவே பார்க்கின்றனர் என்று யுவான் ரிட்லி கூறியுள்ளார். லண்டனில் வாழும் யுவான் ரிட்லி 2001 ஆம் ஆண்டு ஆப்கானில் பத்திரிகை பணிக்காக சென்றபொழுது தாலிபான் போராளிகளால் கைதுச் செய்யப்பட்டார்.2003-ஆம் ஆண்டு விடுதலைச் செய்யப்பட்ட யுவான் ரிட்லி பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


காஸியாபாத் மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு!ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைவரிசையா?...



காஸியாபாத்திற்கு அருகில் உள்ள தஸ்னாவில் உள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதில் திங்கள் கிழமை இரவு 10:20க்கு குண்டுவெடித்தது. குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வெடிப்பிற்கான காரணம் தெரியவரவில்லை. எனினும், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சதித்திட்டங்கள் வெளியாகி தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல தீவிரவாதிகள் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் காஸியாபாத் அருகே உள்ள மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கரங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குண்டு வெடிப்பில் அருகில் உள்ள வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரசாயனப்பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்ட் ரண்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


முர்ஸியின் கடந்த 6 மாத ஆட்சியை 63 சதவீத எகிப்தியர்கள் திருப்தி! - ஆய்வில் தகவல்!



இஃவானுல் முஸ்லிமீனை சார்ந்த டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்து நாட்டின் அதிபராக உள்ளார். இவரது கடந்த 6 மாத கால ஆட்சியில் 63 சதவீத எகிப்தியர்களும் திருப்தியை வெளியிட்டுள்ளனர் என்பது பஸீரா ஆன்லைன் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 6 சதவீத மக்களின் ஆதரவு முர்ஸியின் அரசுக்கும், முர்ஸிக்கும் அதிகரித்துள்ளது. முன்பு நடந்த சர்வேயில் 57 சதவீத மக்கள் மட்டுமே முர்ஸியை ஆதரித்தனர். தற்பொழுது 6 சதவீதம் அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்கள் நல திட்டங்களை முர்ஸி தொடர்ந்தால் விரைவில் அவரது ஆதரவு 78 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முர்ஸியை ஆதரிப்பவர்களில் 40 சதவீதம் பேர் அவரது முடிவுகளை ஆதரிக்கின்றனர். 23 சதவீதம் பேர் என்ன வந்தாலும் முர்ஸியை மட்டுமே ஆதரிப்பவர்கள் ஆவர். முர்ஸியை எதிர்ப்பவர்கள் 28 சதவீதம் பேர் ஆவர். அதில் 19 சதவீதம் பேர் முர்ஸியின் முடிவுகளை எதிர்க்கின்றனர். 9 சதவீதம் பேர் முர்ஸியையும், இஃவான்களையும் எதிர்ப்பவர்கள். மீதமுள்ள 9 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சர்வே கூறுகிறது. குறிப்பு: மேலும் நமது தூது நிருபர்கள் எடுத்த பேட்டியிலிருந்து முர்ஸிக்கு எதிராக ஊடகங்கங்களின் அதி மும்முரமாக வேலை செய்து வருவதால் இந்த சதவீதம் குறைவாக உள்ளது. இல்லையெனில் 80-85 சதவீதத்திற்கு மேல் திருப்தியாக இருக்கக் கூடும் என்று கருதப் படுகின்றது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

 பாலஸ்தீன அரசு என மாற்றம் பெற்றது பாலஸ்தீனம் .
 



பாலஸ்தீன அரசு என மாற்றம் பெற்றது பாலஸ்தீனம் .


ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அந்தஸ்து பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அனைத்து ஆவணங்களிலும் "பாலஸ்தீன அரசு'
என்ற வார்த்தையை பாலஸ்தீனம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பாஸ்போர்ட், அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமம், அஞ்சல் தலை உள்பட அனைத்து அரசு ஆவணங்களிலும் "பாலஸ்தீன நிர்வாகம்' (பாலஸ்தீனியன் அத்தாரிட்டி) என்ற வார்த்தைக்குப் பதில், "பாலஸ்தீன அரசு' என்ற வார்த்தையை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். பாலஸ்தீன அரசு என்ற உத்தரவாதத்துடன் கூடிய அரசாணையில், அதிபர் அப்பாஸ் சனிக்கிழமை முதன்முதலாகக் கையொப்பமிட்டார். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகளில், உள்ள தூதரகங்கள் பாலஸ்தீனம் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், "பாலஸ்தீன நிர்வாகம் ' என்பதற்குப் பதில், பாலஸ்தீன அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாலஸ்தீன உள்துறை அமைச்சகம் பாலஸ்தீன அரசு என்ற பெயருடன் கூடிய பாஸ்போர்ட்களை விநியோகிக்கும். இனி அரசு தொடர்பான ஆவணங்களில் பாலஸ்தீன நிர்வாகம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக "கல்ஃப் நியூஸ்' ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஐ.நா. பொதுக்குழுவில் நடந்த வாக்கெடுப்பில், பாலஸ்தீனத்துக்கு 138 நாடுகளின் ஆதரவுடன், "உறுப்பினர் அல்லாத நாடு' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

 பேஸ்புக், டுவிட்டரை கட்டுப்படுத்தக்கூடிய மென்பொருள்: வடிவமைக்கிறது ஈரான்

 சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தக்கூடிய நவீன மென்பொருளை ஈரான் வடிவமைத்துள்ளது.

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சடூக வலைத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகள், ஆபாச படங்கள் பரவுவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து ஈரானில் இணையத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், இவ்வாறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்படுமென தெரிவித்தது.

இந்நிலையில் ஈரான் காவல்துறை தலைவர் இஸ்மாயில் அகமது முகாதம் கூறுகையில், சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தக்கூடிய நவீன மென்பொருளை வடிவமைத்து வருகிறோம்.

இதன் மூலம் சமூகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை கட்டுப்படுத்தலாம்.

தற்போது இந்த மென்பொருளை சோதனை ரீதியாக பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை மட்டுமே பெறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


இந்தியாவில் நடைப்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதி


இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 16 குண்டுவெடிப்புகளை காவி பயங்கரவாத இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன, இதன் மூலம் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது, மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதி ஒருவர் இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான், 2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன, இந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த வாக்குமூலங்களின் வழியாக வெளிவந்துகொண்டிருக்கிறது, 2004 ஆம் ஆண்டு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ தீவிரவாதிகள் தற்போதைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின் சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது, தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று காவல்துறை கூறியிருந்தது. மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை கஷ்மீர் காவல்துறையினரிடம் தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் இந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா ? என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற்க்கு தொடர்பிருப்பதையும் ராஜேந்தர் செளத்ரியின் வாக்குமூலம் தெரிவித்துள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


2014க்குப் அமெரிக்கா ராணுவம் தொடர்ந்தும் ஆப்கானில் நிறுத்தப்பட்டால்....: தலிபான்கள் எச்சரிக்கை




காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைகொண்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஒட்டுமொத்தமாக 2014க்குள் வெளியேறியாக வேண்டும். அதன்பின் ஒரு அமெரிக்க ராணுவ வீரர்கூட ஆப்கானிஸ்தானில் இருக்கக் கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் 2014-ம் ஆண்டுக்குள் வெளியேறிவிடும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிலான அமெரிக்கா ராணுவத்தினர் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் அடுத்த வாரம் இது தொடர்பாக ஒபாமாவுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஹர்சாய் விவாதிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கூட ஆப்கானிஸ்தான் மண்ணில் இருக்கக் கூடாது. அமெரிக்கா ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்க ஹர்சாய் அரசு ஒப்புக் கொள்ளக் கூடாது. அதை மீறி ஆப்கானிஸ்தானில் நிலை கொள்ளும் அமெரிக்கா ராணுவத்தினர் எதிர்கொள்ளப் போகும் அழிவுகளுக்கு ஹர்சாய் அரசே பொறுப்பு என்று போர் பிரகடனம் அறிவித்திருக்கின்றனர்.




SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பள்ளிவாசலையும், முஸ்லிம்களையும் அகற்றக்கோரி பிக்குகள் ஆர்ப்பாட்டம்


இலங்கை முஸ்லிம்கள்
இலங்கை முஸ்லிம்கள்
அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும், அங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்திருக்கிறது.
சுமார் 300 பேர் வரையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பள்ளிவாசம் கடந்த ஹஜ்ஜுப் பெருநாளின்போது எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற சுமார் 42 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதி பௌத்த புனித பிரதேசத்துக்குள் வருவதாகக் கூறியே அங்கு வேறு மதங்களுக்கு இடம்கிடையாது என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
வெளியூர்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களே இந்தப் போராட்டத்தில் பெரிதும் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
பொலிஸார் தலையிட்டதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பது தடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை, அங்கு வந்த அந்த பிரதேசத்துக்கான துணை அரசாங்க அதிபர், 3 மாத காலத்துக்குள் அந்த முஸ்லிம் மக்களையும், பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மக்கள் குறித்து அரசின் உயர் மட்டத்தினருடன் முஸ்லிம் சமூகத்தலைமைகள் பேசுவதற்காக இருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் புனிதப் பிரதேசம் என்று காரணம் கூறப்பட்டு அநுராதபுரத்தில் வேறு இடத்தில் இருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: