Facebook Twitter RSS


மியான்மரில் மீண்டும் கலவரம்: 10 பேர் மரணம்! ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


மத்திய மியான்மரில் மீக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த இனக்கலவரத்தில் ஒரு புத்த சன்னியாசி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் 3 முஸ்லிம் மஸ்ஜிதுகளை வன்முறையாளர்கள் தீக்கிரயாக்கியுள்ளனர். அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.நகரத்தில் ஒரு நகைக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கலவரத்தில் முடிந்துள்ளது. 200க்கும் மேற்பட்டவர்கள் நகரத்தில் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டதாக போலீஸ் கூறுகிறது. காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த இப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை தொடர்ந்து இப்பகுதியில் இருந்து ஏராளமானோர் புலன்பெயர்வதாக அல்ஜஸீரா கூறுகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:




மும்பைக் கலவரம்:சுதந்திரமாக சுற்றித்திரியும் சிவசேனா தீவிரவாதிகள்! – நீதியின் ஓரவஞ்சனை!



1992-ஆம் ஆண்டு டிசம்பரிலும் 1993 ஜனவரி மாதமும் மும்பை வீதிகளில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை உயிருடன் தீயில் பொசுக்கி, துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலைச்செய்த சிவசேனா தீவிரவாதிகள் இன்றும் மும்பையில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
மும்பைக் குண்டுவெடிப்புக்கு காரணமே அன்று மும்பையில் நடந்த கலவரமாகும் என்று குண்டுவெடிப்பு வழக்கை விசாரணைச் செய்த சி.பி.ஐயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கலவரத்தை நடத்தியது சிவசேனாக்காரர்களும், அதற்கு தலைமை தாங்கியது பால்தாக்கரேயும் என்று மும்பைக் கலவரத்தைக் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை கூறியது. ஆனாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவோ அரசுகள் தயாராகவில்லை.
கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அவர்களின் நிறுவனங்களையும், சொத்துக்களையும் இழந்துவிட்டு சேரிகளில் தங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதிச் செய்தது சர்ச்சையை கிளப்பும் வேளையில் குண்டுவெடிப்புக்குக் காரணமான மும்பைகலவரம் குறித்து யாரும் வாய் அசைக்கவில்லை.
மும்பைக் கலவரத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையின் படி 900 பேர் கொல்லப்பட்டனர். 2036 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 2000க்கும் மேற்பட்டவர்கள் கலவரங்களில் கொல்லப்பட்டனர். சிவசேனாவிற்கு கலவரத்தில் பங்கு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் முஸ்லிம்களை தேடிப்பிடித்து திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் அவ்வமைப்பின் தலைவர் பால்தாக்கரே முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கியதே நூற்றுக்கணக்கான நபர்களின் உயிர் பறிபோக காரணம் என்று ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை கூறியது.
ஒரு முஸ்லிம் கூட சாட்சி கூற மீதம் வைக்கக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தவர் பால்தாக்கரே. ஆனால், சாம்னாவுக்கும், அதேபோல விஷம் கக்கும் செய்திகளை வெளியிட்ட நவகால்பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு தயாராகவில்லை. அதேவேளையில் மஹராஷ்ட்ரா அரசின் விளம்பரங்கள் தாராளமாக இப்பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. பால்தாக்கரேக்கு எதிராக சுண்டுவிரலை அசைக்க கூட அரசு தயாராகவில்லை. அதேவேளையில் தாக்கரே மரணித்தபோது பரிபூரணமான அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது அரசு.
சிவசேனா முன்னாள் எம்.பிக்கள் சர்போட்தார், ரமேஷ் உள்ளிட்டவர்கள் முஸ்லிம்களை கொன்றொடுக்க அழைப்பு விடுத்ததை கமிஷன் கண்டறிந்தது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு சில கண் துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அவை பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளாக அமைந்தன.மதுகர் சர்போட்தாரை கலவரத்தை தூண்டும் விதமாக உரையாற்றினார் என்று கூறி மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு தண்டனை விதித்தது. ஆனால், தீர்ப்பு வெளியாகி ஒரு மணிநேரத்தில் சர்போட்தாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2010-ஆம் ஆண்டு சர்போட்தார் மரணிக்கும் வரை சிறைக்கு வெளியேதான் வாழ்ந்தார்.
கலவரத்தில் லட்சக்கணக்கான மதிப்புடைய தொழிற்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மஹராஷ்ட்ரா அரசு வெறும் ரூ.4 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கியது.தனது விலைமதிக்கமுடியாத ஐந்து ஆண்டுகளையும், அரசு கஜானாவில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தையும் ஏன் வீணாக்குகின்றீர்கள்? என்று தனது அறிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொள்ளாதற்காக ஸ்ரீகிருஷ்ணா அங்கலாய்த்தார்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் இதற்கான பொறுப்பில் இருந்து நழுவிட முடியாது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையும் வழங்க வகைச் செய்யும் கம்யூனல் அண்ட் டார்கெட்டட் வயலன்ஸ் மசோதாவை அமல்படுத்துவோம் என்பது 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தேர்தல் வாக்குறுதியாக அமைந்தது. ஆட்சிக் கட்டிலில் ஏறி பத்தாண்டுகள் கழிந்த பிறகும் ஐ.மு அரசு இம்மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

 ஏவுகணை எச்சரிக்கை கோள் விண்ணில் செலுத்தியது அமெரிக்கா ஈரானைத் தாக்கினால் இஸ்ரேலிய நகரங்களை அழிப்போம்
 

 
ஏவுகணை எச்சரிக்கை செயற்கை கோள் விண்ணில் செலுத்தியது அமெரிக்கா

உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும், அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை, அமெரிக்கா,விண்ணில் செலுத்தியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வல்லரசு நாடுகளும், வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளன. அவற்றை எப்போது ஏவினாலும், அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை அமெரிக்கா தயாரித்தது. அமெரிக்காவின், புளோரிடா பகுதியிலுள்ள கேப் கெனவரெல் ஏவுதளத்தில் இருந்து, "ஜியோ-2' என, பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், "அட்லஸ்-5' ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட்டது. அகசிவப்பு கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த செயற்கைக்கோள், உலகின் எந்த பகுதியில் இருந்தும்,எதிரி நாட்டு மீது ஏவுகணை ஏவப்பட்டால், உடனடியாக அது குறித்து, அமெரிக்காவுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும். ஏற்கனவே, "ஜியோ-1' என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வெற்றிகரமாக செயல்படவில்லை என்றாலும், 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளது.

ஈரானைத் தாக்கினால் இஸ்ரேலிய நகரங்களை அழிப்போம் - அயதொல்லா காமேனி
அணுஆயுத நடவடிக்கைகளை கைவிடாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. இந்நிலையில் ஈரான் மதத்தலைவர் அயதொல்லா காமேனி துபாயில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை தரைமட்டமாக்குவோம்.
கடந்த சில வருடங்களாகவே ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்து பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளன. துடிப்பு மிக்க ஈரானை எந்த ஒரு நாடும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது.
ஈரான் குடிமக்களின் பயன்பாட்டிற்காகவே அணு ஆயுத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பெற்றோருடன் அப்துல் நாஸர் மஃதனி சந்திப்பு! பிரார்த்தனையின் போது கண்ணீர் விட்டு அழுதார்!


ஐந்து தினங்கள் ஜாமீன் கிடைத்ததன் மூலம் கர்நாடகா அரசிடமிருந்து நீதியின் புதிய சூரிய உதயம் உருவானதாக நான் நம்பவில்லை என்று பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் மத்தியில் உரையாற்றினார் அவர்.
மகள் ஷமீராவின் திருமணத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்துல் நாஸர் மஃதனி. அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது:
அரசுகளிடமிருந்து கிடைக்கும் சித்திரவதைகளால் நான் நிராசையடையவில்லை. சில கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததால் என்னை சிறையில் அடைத்தார்கள். ஆனால், ஒரு தவறும் செய்யாத மலப்புறத்தைச் சார்ந்த ஸக்கரியா என்ற பதினைந்து வயது சிறுவன் உள்பட ஏராளமானோர் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக முன்பு இரண்டு பேருக்கு நீதிமன்றம் நான்கு தினங்கள் ஜாமீன் வழங்கியதால் நிர்பந்தமான சூழலில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. பொது சமூகத்தின் தலையீடு ஜாமீன் கிடைக்க காரணமானது.
பெங்களூரில் சந்திக்கும் நீதி மறுப்பு கோயம்புத்தூரை விட பயங்கரமானது. முந்தைய காலங்களில் எனது உரை பாணியில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. இந்த தவறுக்காக சங்குமுகம் கடற்கரையில் நடந்த மாநாட்டில் கேரள சமூகத்திடம் நான் மன்னிப்புக் கோரியுள்ளேன். அதற்கு பிறகும் எனக்கு எதிரான அரசின் நிலைபாடு மாறவில்லை என்பது வேதனையானது. நான் ஒரு உரையை நிகழ்த்தும் சூழலில் இல்லை. கேரள சமூகம் என்னோடு உள்ளது என்பது எனக்கு பலம் தந்துள்ளது.
வலது கண்ணின் பார்வை முற்றிலும் இழந்துவிட்டது. இடது கண்ணின் பார்வை 60 சதவீதம் இழக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் சித்திரவதைகளால் நிராசையடையவில்லை. இறைவன் அளிக்கும் சோதனைகள் என்னை திடப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதுகிறேன். இவ்வாறு அப்துல் நாஸர் மஃதனி கூறினார்.
மஃதனி உரை நிகழ்த்தும்பொழுது தொண்டர்கள் உணர்ச்சி மிகுந்து காணப்பட்டனர். அப்பொழுது மஃதனி, உணர்வுகள் எல்லை மீறினால் தான் மீண்டும் வருவது தாமதமாகும் என்று அறிவுறுத்தினார்.
மஃதனி உரை நிகழ்த்தும்போது கர்நாடக போலீஸ் பல முறை கட்டுப்படுத்த முயன்றது. அவர் தனது உரையில் கட்சி பேதமின்றி தனது ஜாமீனுக்காக பாடுபட்ட முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், பிணராய் விஜயன், இ.டி.முஹம்மது பஷீர் உள்ளிட்ட அனைவரது பெயரையும் எடுத்துக் கூறி நன்றி தெரிவித்து தனது உரையை இருபது நிமிடங்கள்  நிகழ்த்தினார்.
அதன் பிறகு அன்வாருச்சேரியில் தனது பெற்றோர்களை சந்தித்தார்.நோய்வாய்ப்பட்டுள்ள தந்தை அப்துல் ஸமது மாஸ்டர் மற்றும் தாயார் அஸ்மாபீவி ஆகியோரை சந்தித்த மஃதனி அவர்களுடன் மதிய உணவை சாப்பிட்டார்.
மதிய தொழுகையான லுஹரில் தலைமை வகித்த அப்துல் நாஸர் மஃதனி தொழுகைக்கு பிறகு நடந்த பிரார்த்தனையின் போது கண்ணீர் விட்டு அழுதார். “நான் குற்றவாளி என்றால் என்னை தண்டித்துவிடு. நான் நிரபராதி. தேசத் துரோகம் குற்றம் சாட்டி அடக்கி ஒடுக்க முயற்சிக்கின்றார்கள்.பிறந்த மண்ணை நேசிப்பவர்கள் நாங்கள். நீதிக்காக மரணிக்கவும் தயார்” என்று மஃதனி பிரார்த்தனையின்போது கூறினார்.
பின்னர் அவர் அங்கிருந்தவர்களுடன் நலம் விசாரித்துவிட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். இன்று அவர் சிறைக்கு திரும்புவார் என்று பி.டி.பி வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பாக்-இரான் எரிவாயுக் குழாய் திட்டம் தொடக்கம்


இரான் பாகிஸ்தான் எரிவாயுக்குழாய் திட்டம்
பாகிஸ்தான் மற்றும் இரானின் அதிபர்கள் , இரு நாடுகளையும் இணைக்கும் எரிவாயுக் குழாய்த் தொடரை தொடங்கி வைத்துள்ளனர்.
பாகிஸ்தானின் எரிசக்திப் பற்றாக்குறையைக் குறைக்கும் ஒரு வழியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.
ஆனால் பகிஸ்தானின் உடனடி எரிசக்திப் பற்றாக்குறையை இது தணிக்காது என்று கூறும் அமெரிக்கா, இரானின் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு எதிராக தடைகளைக் கொண்டுவரப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறது.
இந்த இரு நாடுகளுக்குமிடையே உள்ள எல்லைப்புறத்தில் நடந்த வைபவத்தில் பேசிய , இரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத், இந்த எரிவாயுக்குழாய்க்கும் அணு சக்தித்திட்டத்துக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
இரான் இத்திட்டத்தில் அதன் பங்கை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அதன் பகுதிக் கட்டுமானத்தை இன்னும் தொடங்கவில்லை.
இத்திட்டம் முன்பு இரானிய எரிவாயுவை, பாகிஸ்தானைத் தவிர, இந்தியாவுக்கும் கொண்டு செல்வதாக இருந்தது. ஆனால் இந்தியா இத்திட்டத்திலிருந்து விலகிவிட்டது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



பட்கல் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு தீவிரவாதியின் உருவம் மனதில் தோன்றும் அளவுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரத்தை இண்டலிஜன்ஸ் ஏஜன்சியும்(ஐ.பி), ஊடகங்களும் களங்கப்படுத்தியுள்ளன.
பட்கல் – வடக்கு கர்நாடகாவில் கடலோர பகுதியில் அமைந்துள்ள நகரம். இந்நகரத்தை பெயரை களங்கப்படுத்தியது ஐ.பியும், மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையும், இவர்கள் அளிக்கும் செய்தியை கதைகளை ஜோடித்து வெளியிடும் ஊடகங்களுமாகும்  என்று இந்நகர மக்கள் கூறுகின்றனர்.
ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பிற்கு பிறகு பட்கலின் பெயர் மீண்டும் ஊடகங்களில் செய்தியாக மாறியுள்ளன. பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று ஐ.பி, பல்வேறு மாநில ஏ.டி.எஸ்ஸுகளால் (தீவிரவாத எதிர்ப்பு படையினரால்) குற்றம் சாட்டப்படும் ரியாஸ் ஷாஹ்பந்தரி, சகோதர இக்பால் ஷாஹ்பந்தரி, யாஸீன் என்று அழைக்கப்படும் சித்தி பாபா ஆகியோர் பட்கலைச் சேர்ந்தவர்கள் என்பது இந்நகரத்தை குட்டி பாகிஸ்தானாகவும், இந்திய முஜாஹிதீனின் புகலிடமாகவும் சித்தரிக்கப்பட காரணமாகும்.
பட்கல் தீவிரவாதத்தின் உறைவிடம் என்பது பொய்ப் பிரச்சாரம் என்று கூறுவது இங்குள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல.பா.ஜ.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி, ஏ.எஸ்.பி ஆகியோர் ஐ.பியின் பொய்ப் பிரச்சாரம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இங்குள்ள மக்களின் வாழ்க்கையை நேரடியாக பார்க்காமல் பட்கலை தீவிரவாத மையமாக ஊடகங்களும், ஐ.பியும் முத்திரைக் குத்துவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.ஜே.டி.நாயக் கூறுகிறார்.
ரியாஸ், இக்பால், யாஸீன் ஆகியோர் இங்கு என்ன தீவிரவாத செயல்களை புரிந்துவிட்டார்கள்? என்பது குறித்து தொடர்புடையவர்கள் விளக்கமளிக்கவேண்டும் என்று நாயக் கூறுகிறார்.
ஐ.பி கூறுவதைப் போல பட்கலில் தீவிரவாத செயல்களோ, ஸ்லீப்பர் செல்களோ கிடையாது என்று பா.ஜ.க தலைவரும், முன்னாள் அமைச்சருமான சதாசிவ நாயக் கூறுகிறார். பா.ஜ.கவின் முன்னாள் எம்.எல்.ஏ சித்தரஞ்ச்ன் கொலை வழக்கில் யாஸீன் உள்பட 3 பேருக்கு தொடர்பிருப்பதையும் அவர் மறுக்கிறார். சம்பவம் நடக்கும்பொழுது ரியாஸ் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்தார்.சி.பி.ஐ விசாரணையில் கூட ரியாஸ் குறித்த விமர்சனம் இல்லை என்று சதாசிவ நாயக் தெரிவிக்கிறார்.
பட்கலை குறித்து வெளியாகும் கதைகள் ஜோடிக்கப்பட்டது என்று வடக்கு கன்னடா எம்.பியான கே.டி.பாலகிருஷ்ணா குற்றம் சாட்டுகிறார்.இங்கு தீவிரவாதிகள் எவரும் இல்லை.இந்தியன் முஜாஹிதீனின் தலைவர்கள் மஹராஷ்ட்ராவில்தான் உள்ளனர். பட்கலில் இல்லை என்று அவர் கோபத்துடன் தெரிவிக்கிறார்.
“பட்கலில் நான் எனது சொந்த பைக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி சுதந்திரமாக சஞ்சரிக்கிறேன்” என்று பட்கல் பாதுகாப்பு பொறுப்பை வகிக்கும் எ.எஸ்.பி சுதீர் ரெட்டி கூறுகிறார். ரிஸர்வ் ஃபாரஸ்டோடு சேர்ந்துள்ள வீட்டில் வசிக்கும் தனக்கு இதுவரை எவ்வித மிரட்டலும் விடுக்கப்படவில்லை என்று சுதீர் ரெட்டி மேலும் கூறுகிறார்.
கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் இருந்து கைது செய்யப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூதும், யாஸீன் பட்கலும் இங்குள்ள அஞ்சுமன் காலேஜ் ஆஃப் இன்ஜீனியரிங்கில் பயின்றார்கள் என்பது ஐ.பியின் வாதமாகும். கல்லூரி ஆவணங்களில் யாஸீன் இங்கு படித்ததற்கான ஆதாரம் இல்லை. அதுமட்டுமல்ல, யாஸீன் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
2010-ஆம் ஆண்டு யாஸீனின் சகோதரர் அப்துல் ஸமதை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் 2010-ஆம் ஆண்டு மங்களூர் விமானநிலையத்தில் வைத்து கைது செய்தது. துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய வேளையில் இந்த கைது நிகழ்ந்தது. பெரிய தீவிரவாதியொருவர் கைது செய்யப்பட்டதாக அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூட செய்தியாளர்களிடம் தம்பட்டம் அடித்தார். பின்னர் யாஸீன் என்று தவறாக புரிந்து கைது செய்துவிட்டதில் வருந்துவதாக கூறி அப்துல் ஸமதை விடுதலைச் செய்தனர்.
ஐ.பியும், ஊடகங்களும் பட்கலை தீவிரவாத மையமாக சித்தரித்தபோதிலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் உயரமான சிவனின் சிலையை காண்பதற்கு வருகை தரும் ஹிந்துமதத்தைச் சார்ந்த பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எவ்வித பாதுகாப்பு பிரச்சனைகளோ, மிரட்டல்களோ உருவாகவில்லை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



ஹமாஸ்-பதாஹ் கூட்டரசாங்கம்: புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

நீண்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மீண்டும் கூட்டரசாங்கம் ஒன்றினை நிறுவும் நோக்குடன் ஹமாஸ் மற்றும் பதாஹ் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு முன்னரும் எத்தனையோ தடவை இவர்களுக்கு மத்தியில் உடன் பாட்டை ஏற்படுத்துவதற்கான பல முயற்சிகள் பல தரப்பினராலும் நடந்தேறின. ஆனால்,  ‘பலஸ்தீனின் தேசிய நலன்’என்ற பெயரில் சர்வதேச சக்திகளின் எஜன்டாக்களை தனது தலையில் சுமந்து வந்து தேசியவாத பதாஹ் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்ததால் அவை சாத்தியப்பட வில்லை.

என்றாலும், இம்முறை கூட்டரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகள் சற்று நம்பிக்கையளிப்பது போல் தோன்றுகின்றது. காரணம், இம்முறை பதாஹ் மற்றும் ஹமாஸ் இடையிலான புரிந்துணர்வுப் பேச்சுவார்த்தை என்ற சிந்தனை எழுந்த சூழமைகள் முன்னைய காலங்களை விட வித்தியாசமாக அமைந்திருப்பதாகும்.
அண்மையில் மேற்குக் கரையை தனது அதிகாரத்தில் கீழ் வைத்திருக்கும் பதாஹ்வும், காஸாவை தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் ஹமாஸும் பெற்றுக் கொண்ட இரு முனை வெற்றிகளும், உலகின் பரவலான எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் தன்பாட்டில் அதிகரித்து வரும் குத்ஸ் பிரதேச குடியேற்றங்களும், பதாஹ்வையும் ஹமாஸையும் கூட்டாக செயற்படுவதே நலன் என்ற புள்ளியில் இணைத்திருக்கின்றன.
இதுவே இம்முறை உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை இரு சாராருக்கும் உணர்த்திய நேரடிக் காரணங்கள் எனலாம். 
இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், அண்மைக் காலமாக ஹமாஸிற்கு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கிடைத்து வரும் அங்கீகாரமும், பல நாட்டு இராஜ தந்திரகளின் காஸா விஜமும் பதாஹ்வை சற்று சிந்திக்க வைத்துள்ளது போன்று தென்படுகிறது.
குறிப்பாக காஸா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹமாஸிற்கான ஆதரவு பதாஹ் ஆளுகை பிராந்தியமான மேற்குக் கரையில் பாரியளவில் அதிகரித்தது. அது மாத்திரமன்றி, சர்வதேச ஊடகச் சேவையொன்று நடாத்திய கருத்துக் கணிப்பில், மேற்குக் கரையில் பதாஹ்விற்கான ஆதரவில் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதாவது கிட்டத்தட்ட 54% மாக இருந்த அறபு தேசியவாதத்தை பின்புலமாகக் கொண்ட பதாஹ்விற்கான ஆதரவு 44% வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய நிலைமாற்று தோற்றப்பாடுகளும் பதாஹ்விற்கு ஹமாஸுடன் கைகோர்ப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியது என்பதனையும் மறுக்க முடியாது. அத்துடன் அறபு இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றங்களும், இஸ்லாமியவாதிகளது எழுச்சியும் தேசியவாத பதாஹ்வை இஸ்லாமியப் பின்புலம் கொண்ட ஹமாஸுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நோக்கி நகர்த்தியமைக்கு பங்களித்த மற்றொரு முக்கிய உள்ளகக் காரணியாகும். 
பதாஹ் பலஸ்தீனப் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வை முன்னுரிமைப்படுத்துகிறது. ஹமாஸ் ஆயுத ரீதியான தீர்வை முற்படுத்துகிறது. இதனால் சர்வதேசத்தின் ஆசிர்வாதத்தோடு இவர்கள் இருவரும் ஒன்று சேரும் புள்ளிகள் மிக அரிது.
எனவே சமீபத்திய இஸ்லாமியவாதிகளுக்கு சார்பான அரசியல் சூழமைவுகளே இவர்களை ஒன்று சேர்ப்பதில் கூடிய பங்கு வகித்திருக்கிறது என்கிறார் பஹ்மி ஹுவைதி.
மேற்கூறப்பட்டவைகள் போக, கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை சார்ந்த 3 முக்கிய அம்சங்கள் இம்முறை இடம் பெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையை தருவதாக அல்ஜஸிராவின் அரசியல் ஆய்வாளர் பிராஸ் அபூ ஹிலால் குறிப்பிடுகிறார்.
அவை யாவன:
*      இம்முறையும் கூட்டரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல அமர்வுகளாக இடம்பெறவுள்ளன. அவற்றுக்கிடையிலான கால இடைவெளி மிகவும் குறுகியதாக உள்ளமை சாதகமான ஒரு அம்சமாகும். ஏனென்றால், முன்பெல்லாம் அமர்வுகளுக்கிடையிலான கால இடைவெளி பாரியதாக இருந்தன. இதனால், வெளிச்சக்திகளின் தலையீடுகள் பல எற்பட்டு அடுத்த கட்ட அமர்வுகள் நடைபெறாமலேயே சென்றுள்ளன.
*      இவ்வுடன்படிக்கைக்கு பலம் சேர்க்கும் மிக முக்கியமான இன்னொரு அம்சம்; எகிப்தின் தலைமையில் பதாஹ் மற்றும் ஹமாஸ் உறுப்பினர்கள் அடங்கலான ஒரு குழு, பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செயற் படுத்தப்படுவதனை உறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளமையாகும்.
அத்துடன், இம்முறை பேச்சு வார்த்தைக்கு தலைமை தாங்குவதனை முர்ஸி தலைமையிலான புதிய எகிப்து பொறுப்பேற்பதும் நம்பிக்கையளிக்கும் ஒரு மாற்றம். ஏனென்றால், இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, ஹூஸ்னி முபாரக் தலைமையிலான எகிப்து, அமெரிக்கா என்பன மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பதாஹ்விற்கு சார்பாகவே நின்றன. ஆனால் இம்முறை பேச்சு வார்த்தைகளின்போது பழைய  பக்கசார்பான காட்சிகள் மீட்டப்படும் நிலை தவிர்க்கப்படலாம் என்பது உறுதியாக சொல்லக் கூடியாதாக இருக்கின்றமை.
*      அடுத்ததாக, பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலப்பகுதியில் பதாஹ் ஹமாஸைப் பற்றியோ அல்லது ஹமாஸ் பதாஹ்வைப் பற்றியோ எதிர்மறை ஊடக அறிக்கைகள் விடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதற்கு பரஸ்பர எதிர்மறை ஊடக அறிக்கைகளும் காரணமாக இருந்தன. இதனால் இம்முறை கலந்துரையாடல்களுக்கான நிபந்தனைகளில், ஊடக அறிக்கைகளை தவிர்ப்பது சீரியஸாக அவதானிக்கப்படும் என எகிப்து தெளிவாகவே தெரிவித்துள்ளமை நோக்கத்தக்கது.
*      இதுவரை இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளில் பல முக்கியமான அம்சங்களில் இரு சாராருக்கும் மத்தியில் நியாயமான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளமை பேச்சு வார்த்தைகளின்  வெற்றியை எதிர்வு கூறும் மிக முக்கியமான அம்சமாகும். உதாரணமாக,  ஒரு பொதுத் தேர்தலின் பின்னர், கூட்டரசாங்கம் ஒன்றிற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதனையே அப்பாஸ் தலைமையிலான பதாஹ் வலியுறுத்தி வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் சிலபோது பதாஹ்விற்கு எதிராகவோ அல்லது ஹமாஸூக்கு எதிராகவோ அமைந்தால், அது பேச்சுவார்த்தையின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதனால் ஹமாஸ் அதனை கடுமையாக எதிர்த்தது. என்றாலும், இம்முறை பதாஹ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தேர்தலுக்கு முன்னரே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்வந்துள்ளமை சாதகமான அம்சமாகும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!...


அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்த தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைதுச் செய்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் மஃபத்லால் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. இவர் இந்த வாரத்தில் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்படும் 2-வது ஹிந்துத்துவா தீவிரவாதி ஆவார். இன்று மஃபத்லாலை ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ ஆஜர்படுத்தும்.
2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மஃபத்லால் முக்கிய பங்கு வகித்துள்ளதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பவேஷ் பட்டேல் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை என்.ஐ.ஏ கைது செய்திருந்தது. பவேஷ் பட்டேலை ஜெய்ப்பூர் நீதிமன்றம் 15 நாட்கள் என்.ஐ.ஏ கஸ்டடியில் எடுக்க உத்தரவிட்டது.
பட்டேல் மற்றும் மஃபத்லாலை அஜ்மீர் குண்டுவெடிப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ஹிந்துக்கள் அஜ்மீர் தர்காவிற்கு வருவதை தடைச் செய்ய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.
நேற்று முன் தினம் நொய்டாவில் வைத்து கைது செய்யப்பட்ட பவேஷ் பட்டேல் இதனை என்.ஐ.ஏவிடம் விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.இரண்டு குண்டுகள் வைத்ததில் ஒரு குண்டு வெடிக்காதது குறித்தும், மரண எண்ணிக்கை குறைந்தது குறித்தும் கோத்ராவில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மீளாய்வு செய்தனர்.
கேரளாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதி சுரேஷ் நாயர், முகேஷ் வாஸ்னிக், மெஹுல், பட்டேல் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்த ரகசியக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அஜ்மீர் தர்காவில் வைத்த இரண்டு குண்டுகளில் ஒரு குண்டுவெடிக்காததற்கு காரணம், குண்டை வெடிக்கச் செய்ய டைமராக பயன்படுத்திய சிம்கார்டை காலாவதியானதால் மொபைல் கம்பெனி ரத்துச் செய்துவிட்டது. இதனால் அந்த குண்டு வெடிக்கவில்லை என்று விசாரணையின் போது பவேஷ் பட்டேல் கூறியுள்ளான்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள்! – நீதிபதி கட்ஜு எச்சரிக்கை


நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்குப் பதில் அளித்து கட்ஜூ வெளியிட்டுள்ள கடிதத்தில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றின் போது மீடியா நிறுவனங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன், நிதானத்துடன் செயல்பட வேண்டும். யார் மீதும் எந்த துவேஷ உணர்வும் ஏற்படாத வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.
யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணை முடியவில்லை. ஆனால் அதற்குள் பல மீடியாக்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வெளியி்ட்டு வருகின்றன. அது தவறானதாகும்.
முஸ்லீம்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற ஒரு இமேஜை சிலர் உருவாக்கி வைத்து விட்டனர். இதனால் எந்தத் தாக்குதல் நடந்தாலும் உடனே இஸ்லாமியர்களை சந்தேகப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மேலும் எந்த ஒரு வழக்கிலும் முஸ்லீம் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஜாமீன் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. அவர் அப்பாவியாகவே இருந்தாலும் தன்னை நிரூபிக்க அவர் கடுமையாக போராடும் நிலை ஏற்படுகிறது. இது மிகவும் வருத்ததிற்குரியதாகும். ஒருவரை காரணமே இல்லாமல் சிறையில் நீண்ட காலம் அடைத்து வைக்க யாருக்கும் உரிமை கிடையாது. நமது நாட்டில் தவறான, பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே டிவி சேனல்கள் ஒரு முஸ்லீம் அமைப்பின் பெயரைச் சொல்லி இதுதான் நடத்தியது என்று செய்தி வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது பொறுப்பற்ற போக்காகும். இப்படிச் செய்வதன் மூலம் எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால் அது முஸ்லீம்களின் செயல்தான் என்று மக்கள் தவறாக கருத ஆரம்பிக்கும் நிலை ஏற்படும். மேலும் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், குண்டு போடுபவர்கள் என்ற தவறான கருத்தும் மக்கள் மனதில் பதிவாகி விடும்.
எனவே மீடியாக்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


இஸ்ரேலை நோக்கி எகிப்தில் இருந்து லட்சக் க்ணக்கில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக் கிளிகள்!


கெய்ரோ: எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி லட்சக்கணக்கான பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுத்துச் செல்கின்றன. இதனால் விமானம் மூலம் அவற்றை தாக்கி அழிக்கும் மருந்துகளை தெளிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. எகிப்தில் பாலைவன வெட்டுக் கிளிகள் பயிர்களை நாசம் செய்து மிகப் பெரும் துயரை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருந்தன. தற்போது இவை எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் லட்சக் கணக்கில் படையெடுத்து சென்றிருக்கின்றன. சுமார் 30 மில்லியன் வெட்டுக்கிளிகள் இஸ்ரேலை தாக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் வெட்டுக் கிளிகள் நுழையும் போதே விமானத்தில் இருந்து மருந்து தெளித்து அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் முடிவெடுத்திருக்கிறது. பாலைவன வெட்டுக்கிளிகளே இதற்கு முன்னரும் இஸ்ரேலில் பல ஏக்கர் பயிர் நிலங்களை நாசப்படுத்தியிருக்கின்றன.

 ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.                                                                                                                    அல்குர்ஆன்  7:133

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



மதுரை:பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது!

ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில்  வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா?  போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும்   கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



வெனிசூலாவின் 'புரட்சித் தலைவர்' சாவேஸ் மரணம்!




காரகாஸ்: வெனிசூலா அதிபர், அந்நாட்டின் இணையற்ற தலைவர் எனப் புகழப்பட்ட ஹியூகோ சாவேஸ் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. வெனிசூலாவின் புரட்சித் தலைவர் என்று புகழப்பட்டவர் சாவேஸ். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிஸ அரசாங்கங்களில் முதலிடம் வெனிசூலாவுக்குதான். காரணம் சாவேஸ். இதனால் அந்நாட்டின் புரட்சித் தலைவர் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டார். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பிரமாண்ட வெற்றி பெற்று நான்காவது முறையாக அவர் அதிபரானபோதுதான், உலகம் அவரது மக்கள் செல்வாக்கை உணர்ந்தது. உலகின் எண்ணெய் வளமிக்க நாடுகளில் முதன்மையானது வெனிசூலா. அமெரிக்காவின் ஆதிக்கம் இங்கு நிலைகொள்ள முடியாமல் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் சாவேஸ். ஆனால் இந்த வெற்றியையும் அவர் நினைத்த அரசியல் மாற்றங்களையும் செய்ய முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டார் சாவேஸ். புற்று நோய் தாக்கப்பட்ட சாவேஸ், கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தன. எனவே அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிகிச்சை முடிந்து வெனிசுலா அதிபர் சாவேஸ் 19-ம் தேதி நாடு திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த சாவேசுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஹியூகோ சாவேசுக்கு நேற்று புதிய நோய் தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து அவர் வெனிசுலா நாட்டின் நேரப்படி நேற்று மாலை 4.25 மணிக்கு மரணம் அடைந்ததாக துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார். சாவேஸின் மரணம் அந்நாட்டு மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்குப் பின் வெனிசூலாவின் அரசியல் நிலைமை என்னாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பெண் சாமியார் பிரக்யா சிங்குக்கு ஜாமீன் இல்லை

பெண் சாமியார்  பிரக்யா சிங்குக்கு  ஜாமீன்  இல்லை
போபால்:-- மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர் , தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவரது தந்தை சந்திரபால் சிங் என்பவர் 2 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் எடாவாவில் மரணமடைந்தார்.
அவரது குடும்பத்தார் பிரக்யாசிங் ஜாமீனில் வரும் வரை இறுதிச்சடங்குகள் செய்யப் போவதில்லை எனக்கூறினர். இறந்தவரது உடல் மத்தியபிரதேசத்தில் இருக்கும்  அவரது சொந்த கிராமமான  லஹருக்கு எடுத்துச் செல்லப் பட்டது.
கடந்த 3 ஆம் தேதி பிரக்யா சிங்குக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்  கணேஷ் ஸோவானி மனு செய்திருந்தார். 4ஆம் தேதி நடக்கும் இறுதிச் சடங்கிலும் 13 நாள் துக்கத்திலும் பங்கேற்க ஜாமீன் கோரி மனு செய்திருந்தார்.ஆர் எஸ் எஸ் ஊழியர் சுனில் ஜோஷி கொலையிலும்  பிரக்யாசிங் கைது செய்யப்பட்டிருப்பதால் அதற்காகத் தனியாக மற்றொரு  மனுவும் அளிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் பாண்டே ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டு , இறுதிச்சடங்கில் மட்டும் பங்கெடுக்க ஒரு நாள் அனுமதி வழங்கினார்.  4 ஆம் தேதி இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு இன்று  5 ஆம் தேதி மீண்டும் சிறைக்குத் திரும்பும்படி உத்தரவிட்டார்


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல் மீது தாக்குதல்



இலங்கையில் மசூதிகள் மீது தொடரும் தாக்குதல்கள் ( ஆவணப்படம்)
இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.


இன்று திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒப்பநாயக்க பள்ளி வாசல் மீதும் அடையாளந் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளி வாசல் சிறைச்சாலைக்குரிய காணியில் அமைந்திருந்தாலும் உள்ளுர் முஸ்லிம்களே தொழுகையில் ஈடுபட்டுவருவதாக பள்ளி வாசல் நிர்வாகியொருவர் தெரிவித்துள்ளார்.

இப் பள்ளிவாசலை அகற்றுமாறு ஒரு மாதத்திற்கு முன்னர் சிறைச்சாலைகள் மற்றும் புனர் வாழ்வு அமைச்சு தங்களுக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

மஹர பள்ளிவாசல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள் பள்ளிவாசல் சுவரில் பன்றியை வரைந்து ஆங்கிலத்திலும் சிங்களத்தீலும் ஹலால் பன்றி என எழுதிவிட்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு செயல்பாடுகளுக்கும் இடமளிக்கப்படமாட்டது என அரசாங்க தரப்பிலிருந்து அவ்வப்போது உறுதிமொழிகளும் உத்தரவாதங்களும் வழங்கப்பட்டு வந்தாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்வதாக முஸ்லிம்கள் பலரும் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

முஸ்லிம் அமைப்புகளின் தகவல்களின்படி அண்மைக்காலங்களில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் சில இடங்களில் இடம் பெற்றுள்ள போதிலும் எவரும் கைதானதாக தகவல்கள் இல்லை என்பதும் இங்கு குறிப்பித்தக்கது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புலனாய்வு ஏஜன்சிகளா? -



பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை தவிர்க்கவே மத்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தியது தான் ஹைதராபாத் இரட்டைக்குண்டுவெடிப்பு என்று சிவில் உரிமை அமைப்பான ரிஹாய் மஞ்ச் குற்றம் சாட்டியுள்ளது.
தீவிரவாதிகள் என்று பொய்க் குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக பாடுபடும் அமைப்புதான் ரிஹாய் மஞ்ச். தேசிய ஊடகங்கள் வலதுசாரிகளின் வளர்ப்பு மிருகங்களைப் போல செயல்படுவதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டுகிறது.

ரிஹாய் மஞ்சின் பொதுச் செயலாளரும் முன்னாள் போலீஸ் ஐ.ஜியுமான எஸ்.ஆர்.தரபுரி  கூறியதாவது: “முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து ஹிந்துத்துவா சக்திகளின் ஆதரவைபெறுவதற்கான அரசியல் நாடகத்தை அரசு நடத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் புதிய ‘சர்’ ஆவார். அஜ்மல் கஸாபையும், அப்ஸல் குருவையும் தூக்கிலிட்டதற்கு பழிவாங்கவே தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள் என்று ஷிண்டே கூறியது, பா.ஜ.கவை விட பெரிய ஹிந்துத்துவா வாதியாக மாறுவதற்கான முயற்சியாகும். கூடவே அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளை சமாளிக்கலாம்.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஜெய்ப்பூரில் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற்றதும், பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பை நிகழ்த்தியதும், ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஷிண்டேவின் கீழ் இயங்கும் உளவுத்துறை ஏஜன்சிகள்தாம் நிகழ்த்தியுள்ளன என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். இதன் மூலம் பல்வேறு குண்டுவெடிப்புகளில் சிக்கிய ஹிந்துத்துவாதீவிரவாதிகளை பாதுகாக்க முடியும். இதற்காகவே தீவிரவாதத்திற்கு எதிராக ஹிந்துத்துவா சக்திகள் ஹைதராபாத்தில் முழு அடைப்பை நடத்தினர்.” இவ்வாறு தரபுரி கூறினார்.

ரிஹாய் மஞ்சின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சுஹைப் கூறியது: இந்தியன் முஜாஹிதீன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உருவாக்கமாகும். அரசுகள் அரசியல் நெருக்கடியை சந்திக்கும்போது இந்தியன் முஜாஹிதீனை உபயோகித்து தப்பிக்க முயலுகின்றன. ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே நான்கு இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்று கூறப்படுவோரின் வாக்குமூலங்கள் ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது? இது விசாரணையை திசை திருப்புவதற்கான முயற்சியா? ஹைதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ள சூழலில் ஏன் அவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படவில்லை? இது சங்க்பரிவார் கொடுத்த அழுத்தமா? அல்லது தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள் என்ற சங்க்பரிவாரின் கருத்தை தான் உள்துறை அமைச்சரும் பரப்புரைச் செய்கின்றாரா? குண்டுவெடிப்பை நிகழ்த்தியபாணி இந்தியன் முஜாஹிதீனுடையது என்று கூறும் வேளையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும் இதே பாணியில் நடத்திய குண்டுவெடிப்புகளை ஏன் காணாதபோல் நடிக்கவேண்டும்? மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்த முஸ்லிம் இளைஞர்களை மீண்டும் வேட்டையாடுவது ஏன்? குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இயங்கவில்லை என்று கூறும்பொழுது தாடி வைத்த நபர்தாம் குண்டுவைத்தார் என்று எவ்வாறு கூறமுடிகிறது? உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



மும்பையிலிருந்து புதுவைக்கு வந்த சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிக்குண்டு வைத்த பயங்கரவாதி கைது!




மும்பையிலிருந்து புதுவை வரும் சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிவசங்கர் என்ற பயங்கரவாதி  கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது.

இதுதொடர்பாக சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே திருச்சி போலீசார் ஆரணி துறையூரை சேர்ந்த சிவசங்கர் (வயது-36)  என்ற வாலிபரை மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.  அப்போது சிவசங்கரிடம் விசாரணை நடத்திய போது புதுவை ரயிலில் வெடிகுண்டு வைத்தது’ நான் தான்’ என்று கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இத்தகவலை புதுவை போலீசாருக்கு அளித்தனர்.

இதையடுத்து புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

 “குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும்” விசாரணையில் கூறி இருக்கிறான். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா?  போன்ற விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எஞ்சியுள்ள இன்னும் 2 நாட்கள் விசாரணையில் இவை தெரியவரும்  என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அதன் வெளிப்பாடு??? 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



குண்டுவெடிப்புகளின் பெயரால் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு வாழ்க்கை சித்திரவதையாக மாறும் வேளையில் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு ராணுவம் தொடர்ந்து சம்பளமும், இதர படிகளையும் வழங்கி வருகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் துயரத்தில் வாடுகின்றன. பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய சூத்திரதாரி என்று என்.ஐ.ஏ கண்டுபிடித்த ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு அரசு கஜானாவில் இருந்து சம்பளம் செல்லும் அவலம் இந்நாட்டில் தொடருகிறது.

புனேயில் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ் கண்ட்ரோலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளித்துள்ளார். புரோகித்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

புரோகித்தை கஸ்டடியில் பெற்று விசாரணைச் செய்யவேண்டும் என்று என்.ஐ.ஏ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு பரிசீலனையில் உள்ளது. ஆனால் இதுக்குறித்து எதுவும் தெரியாது என்று கண்ட்ரோலர் பதில் அளித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு புரோகித் கைதானதைத் தொடர்ந்து ஆயுதப்படை தீர்ப்பாயத்தின்(எ.எஃப்.டி)  விசாரணை கமிஷன் இவரை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், தனது முன்னிலையில் முக்கிய சாட்சிகளை விசாரிக்கவில்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்த தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும் எனவும் புரோகித் கோரியதைத் தொடர்ந்து புதிய விசாரணை தேவை என்று எ.எஃப்.டி ராணுவத்திடம் அறிவுறுத்தியது. இவ்விசாரணை முடிவுற்று விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் புரோகித்தை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவில்லை. இதன் காரணமாக புரோகித் சம்பளம் மற்றும் இதர படிகளை பெற தகுதியுள்ளவர் என்று உயர் ராணுவ அதிகாரியொருவர் கூறுகிறார்.

அதேவேளையில், மூத்த ஹிந்துத்துவா தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனில்(டி.ஆர்.டி.ஓ) ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோவாக பணியாற்றிய அஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் நீக்கிவிட்டனர் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது ஜாமீனில் விடுதலையான மிர்ஸா மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க கூட தேசிய புலனாய்வு ஏஜன்சியால் இயலவில்லை. இவ்வழக்கில் இதர இரண்டு நபர்கள் மீது ஆதாரங்களை சமர்ப்பிக்க கூட முடியவில்லை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


முஸ்லிம் வேட்டை:பாராளுமன்றம் விரைவில் விவாதிக்கும்!




தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைக்கும் விவகாரம் குறித்து பாராளுமன்றம் விரைவில் விவாதிக்க உள்ளது.
நேற்று முன் தினம் லாலுபிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், பசுதேவ் பட்டாச்சார்யா, இ.டி.முஹம்மது பஷீர் ஆகியோர் சபாநாயகர் மீரா குமாரிடம் இவ்விவகாரம் குறித்து தனியாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை
விடுத்திருந்தனர். இவ்விவகாரம் குறித்து எழுப்பினால் விவாதிக்கலாம் என்று மீராகுமார் பதில் அளித்து இருந்தார். இரண்டு மாதத்திற்குள் விவாதம் நடக்கும் என கருதப்படுகிறது.
சட்டத்திற்கு சாதி, மதம் வித்தியாசம் இல்லை. எனினும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை கூட இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: