Facebook Twitter RSS

சீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் மீது பதட்டங்கள் உக்கிரமடைகின்றன

பாமா நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால் எரியூட்டப்பட்டுள்ள அபாயங்களின் மற்றொரு அறிகுறியாகசீன கடலில் ஒரு"வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை" (ADIZ) சனியன்று சீனா அறிவித்ததுஇந்த புதிய மண்டலம் இதேபோன்ற ஜப்பானிய ADIமண்டலத்திற்கு உள்ளே வருகிறதுமேலும் அப்பிராந்தியத்தின் வெடிப்பு புள்ளிகளில் ஒன்றாக விளங்கும் மற்றும் இருநாடுகளும் தங்களுக்கென்று உரிமைகோரும் சென்காகூ தீவுகளையும் (சீனாவில் இது தியாவூ என்றழைக்கப்படுகிறதுஉள்ளடக்கி உள்ளது.

சீனாவின் ADI மண்டலத்தை அமெரிக்காவும் ஜப்பானும் நிராகரிப்பதாக அறிவித்தனதவறான மதிப்பீடுகளினாலோ அல்லது சீன உத்தரவுகளை அமெரிக்க மற்றும் ஜப்பானிய யுத்த விமானங்கள் மதிக்க மறுப்பதனாலோ,ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடியஇராணுவ விமானங்களுக்கு இடையிலான அபாயகரமான தாக்குதல்களுக்கு இது களம் அமைக்கிறது. "அப்பிராந்தியத்தில் அமெரிக்கா எவ்விதத்தில் இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகிறதோ, அது எவ்விதத்திலும் சீனாவின் அறிவிப்பால் மாறப் போவதில்லை," என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல் அறிவித்தார்செக்காகூ/தியாவூ தீவுகள் மீது சீனாவுடன் ஏற்படக்கூடிய ஒரு யுத்த சம்பவத்தில் அமெரிக்கா தானாகவே முன்வந்து ஜப்பானை ஆதரிக்கும் என்ற ஒபாமா நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

பெரும்பாலான சர்வதேச ஊடக வடிகால்கள் "நடைமுறை நிலைமையை மாற்றவிழைந்ததற்காக மற்றும் பிராந்திய ஸ்திரப்பாட்டு அச்சுறுத்தலுக்காக"ஒரு தாக்குதல் தொடங்கும் சீனாவைகுற்றஞ்சாட்டுகின்றனஎதார்த்தத்தில்,ஜப்பானை இராணுவரீதியில் புதுப்பிக்க மற்றும் அதன் பிராந்திய அபிலாஷைகளை உறுதிப்படுத்த ஜப்பானுக்கு வாஷிங்டன் வழங்கும் ஊக்குவிப்பால் உருவான பல ஆத்திரமூட்டல்களுக்கு சீனா விடையிறுப்பு காட்டிக் கொண்டிருக்கிறது.

முன்பில்லாத அளவிற்கு 2010க்குப் பின்னர்அந்த சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகிலுள்ள கடலில் ஜப்பானிய கடற்படை ஒரு சீன மீன்பிடி கப்பல் கேப்டனைக் கைது செய்த போதுஅதையொரு முக்கிய இராஜாங்க அமளியாக தூண்டிஒபாமா நிர்வாகம் நீண்ட காலமாக இருந்துவரும் இந்த கடல்வழி சர்ச்சையில் டோக்கியோவிற்கு ஆதரவளித்துள்ளதுதிருப்புமுனை செப்டம்பர் 2012இல் வந்ததுஜப்பானின் முந்தைய ஜனநாயக கட்சி அரசாங்கம் ஒருதலைபட்சமாக சென்காகூஸை "தேசியமயமாக்கியபோதுசீனாவுடன் எப்போதுக்குமான ஒரு முரண்பாட்டிற்கு இட்டுச் சென்றது

அதற்கு விடையிறுப்பாகஜப்பானிய கட்டுப்பாட்டிற்கு சவாலாக, பெய்ஜிங் கடலோர உளவு கப்பல்கள்விமானங்கள் மற்றும் டிரோன்களை அப்பகுதிக்கு அனுப்பி ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுத்தது.
வலதுசாரி தாராளவாத ஜனநாயக கட்சி அரசாங்க பிரதம மந்திரி ஷின்ஜோ அபே கடந்த டிசம்பரில் அதிகாரத்திற்கு வந்த பின்னர் பதட்டங்கள் படிப்படியாக தீவிரப்பட்டனஒரு "வலுவான இராணுவத்துடன்ஒரு"வலுவான தேசத்தைஉருவாக்க உறுதிபூண்டுஜப்பானிய மீள்-இராணுவமயமாக்கலின் ஓர் அடித்தளத்தின் மீது அபே நின்றிருந்தார்பதவிக்கு வந்ததில் இருந்தேஅபே அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்களையும் மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவ ஆயத்தங்களுக்குள் ஜப்பானை ஒருங்கிணைப்பதையும் அதிகரித்துள்ளது.

இத்தகைய தயாரிப்புகள் டோக்கியோவில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு இடையே நடந்த வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் அளவிலான கூட்டங்களின் போது அக்டோபரில் காட்சிக்கு வந்தன. “முன்னெடுப்புக்கு"அமெரிக்கா ஏற்ற பொறுப்பைக் குறித்து ஆசிய அரசாங்கங்களுக்கு மத்தியில் நிலவும் கவலைகளுக்கு இடையேநீண்டகால குளோபல் ஹாவ்க் (Global Hawke)உளவு டிரோன்கள் மற்றும் செங்குத்தாக பறக்கத் தொடங்கும் F-35B ஸ்டீல்த் யுத்த விமானங்கள்அத்தோடு நவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புமுறைகள் ஆகியவை உட்பட ஜப்பானில் ஒரு பாரிய அமெரிக்க இராணுவ கட்டமைப்பை அறிவிக்க வாஷிங்டன் அந்த கூட்டத்தில் சமர்பித்த கூட்டறிக்கையை பயன்படுத்தியது.

அனைத்திற்கும் மேலாகயுத்த சம்பவத்தில் மற்றும் "முன்னெச்சரிக்கை தாக்குதல்கள்தொடங்குகையில்அதாவதுஜப்பான் அதன் சொந்த ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்துகையில்அமெரிக்க எதிர்பலங்களோடு ஜப்பானிய இராணுவம் நெருங்கி செயல்பட அனுமதிக்கும் வகையில் ஜப்பானிய அரசியலமைப்பின் ஒரு மறுதிருத்தத்திற்கு வாஷிங்டன் வெளிப்படையாகவே அழுத்தம் அளித்து வருகிறது. “தென்மேற்கு அவசரநிலைமைகளின்போதுஅதாவது சீனாவுடனான மோதலில்விரைவாக துருப்புகளை நிறுத்தஒரு கடற்படையை ஸ்தாபகம் செய்வது உட்படஒரு பரந்த இராணுவ விஸ்தரிப்புக்கு அபே தாமே அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஒகினாவா பிராந்தியத்தில் முடிவுற்ற பெரியளவிலான இரண்டு வார ஜப்பானிய இராணுவ ஒத்திகையின் போது சீனாவிற்கான உட்குறிப்புகள் வெளிப்படையாக இருந்தன. 34,000 துருப்புகள் மற்றும் 350 யுத்த விமானங்கள் பங்கெடுத்த அந்த ஒத்திகைஅப்பிராந்தியத்தில் சீனாவின் ஒரு தாக்குதலை உருவகப்படுத்தி ஏவுகணை தடுப்பு கப்பல்களைப் பயன்படுத்துவதன் மீதும் மற்றும் அத்தோடு பிரதான தீவுகளைக் கைப்பற்ற நிலத்திலும் நீரிலும் தரையிறங்குவதின் மீதும் குவிந்திருந்ததுஇத்தகைய உத்திகள் அனைத்தும் பெண்டகனின் வான்நீர் யுத்த மூலோபாயத்தின் (AirSea Battle strategy)பாகங்களாகும்அதில் கடலில் முற்றுகையிடுவதோடு சேர்ந்துசீனாவின் மீது ஒரு நாசகரமான விமான மற்றும் ஏவுகணை தாக்குதலும் உள்ளடங்கி இருந்தது.

அமெரிக்க மற்றும் ஜப்பானிய இராணுவ தயாரிப்புகளை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியில் சீனா அதன் கிழக்கு சீன கடல் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை அறிவித்துள்ளதுமுதல் சான்றாகமுக்கிய உளவு செய்திகளைச் சேகரிக்க பல தசாப்தங்களாக சீன கடற்பகுதிகள் மற்றும் திறன்மிக்க இராணுவ தளங்களுக்கு மிக நெருக்கமாக பறந்துள்ள அமெரிக்க இராணுவ விமானங்கள் அப்பகுதியை அணுகுவதைத் தடுக்கும் முயற்சியில் அந்த மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளதுமிக பரந்தளவில்அமெரிக்க மற்றும் அதன் பங்காளிகளிடமிருந்து அதிகரித்துவரும் இராணுவ அழுத்தத்திலிருந்து பெய்ஜிங்கால் நீண்ட காலத்திற்குப் பின்வாங்க முடியாது என்ற சீன பாதுகாப்பு வட்டாரங்களில் உள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் அது உள்ளது.

அமெரிக்காவுடன்அத்தோடு ஜப்பானுடனும் சீனா யுத்தத்திற்கு இராணுவரீதியில் தயாராக இருக்க வேண்டியுள்ளதாக சீனாவின் தேசியவாதகுளோபல் டைம்ஸின் ஒரு தலையங்கம் இன்று அறிவித்ததுஅது குறிப்பிட்டது: “ஓர் இராணுவ விபரீதம் உடைத்துக் கொண்டு வரும்போது அந்த மோசமான தருணத்தை மக்கள் விடுதலை இராணுவம் கணக்கில் எடுத்து பார்க்க வேண்டி உள்ளது என்பதில் நாங்கள் உடன்பட்டுள்ளோம்இந்த சீனோ-ஜப்பானிய பிராந்திய விவகாரத்தில் வாஷிங்டன் தலையீடு செய்ய முயன்றால்சீனா அதன் சகவாசத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது,” என்றது.

அதேவேளையில்ஜப்பானில் உள்ள அபே அரசாங்கத்தைப் போன்றேசீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) தலைமையும் அங்கே உள்நாட்டில் வளர்ந்துவரும் சமூக பதட்டங்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியில் தேசியவாத உணர்வுகளைத் தூண்டி வருகிறதுஇந்த மாத தொடக்கத்தில் நடந்த CCP மத்திய கமிட்டி உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட சந்தை-சார்பு மறுகட்டமைப்பிற்கான நீண்டகால திட்டங்களின் ஒரு விளைவாக ஏற்கனவே சீனாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான ஆழமான இடைவெளி ஆழமடைந்து மட்டுமே செல்லும்சமூக அமைதியின்மை மீது பெய்ஜிங் ஆளும் வட்டாரங்களில் நிலவும் அச்சம், 2009க்கு பின்னர் உள்நாட்டு பாதுகாப்பு செலவுகள் இராணுவ செலவுகளை விஞ்சி உள்ளது என்ற உண்மையால் அடிக்கோடிடப்பட்டுள்ளன.

சீனா இராணுவ ஆயத்தங்கள் அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளால் நடத்தப்படும் ஒரு தாக்குதல் அபாயத்தை தடுக்கப் போவதில்லைஓர் ஆழ்ந்த நிதியியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த "முன்னெடுப்புமற்றும் இராணுவ கட்டுப்படுத்தல்களை ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஒரு முக்கிய சவாலாக உருவாகும் சீனாவை எதிர்கொள்ள ஒரே வழியாக கருதுகிறது.

அனைத்திற்கும் மேலாகசீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் படைகளின் சமநிலையை மாற்றுவதற்கு முன்னர்இந்த நோக்கத்தை எட்ட அமெரிக்க ஆளும் வர்க்கம் சீனாவின் மீது அதன் தற்போதைய பெரும் இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்த அதிகளவில் ஆர்வமாக உள்ளது.
இந்த தீவிரமடைந்துவரும் ஆயுதப் போட்டி சீனாஜப்பான்அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் ஆபத்துக்களைக் கொண்டுள்ளதுஅனைத்து அரசாங்கங்களால் தூபமிடப்பட்டு வரும் தேசியவாதம் ஒரு பொறியாகும்

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

அங்கோலாவில் இஸ்லாத்துக்கு தடை- மசூதிகளை மூடவும் இடிக்கவும் உத்தரவு!!

அங்கோலாவில் இஸ்லாத்துக்கு தடை- மசூதிகளை மூடவும் இடிக்கவும் உத்தரவு!!
லுவாண்டா: உலக நாடுகளிலேயே முதல் முறையாக இஸ்லாத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது. அத்துடன் மசூதிகளையும் மூடுவதற்கும் இடிப்பதற்கும் அந்நாடு நாடு உத்தரவிட்டிருப்பது பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அங்கோலா நாட்டின் கலாசார துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எனும் பொய்க்கு  முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா அதிபர் ஜோஸே ஈடுர்டோ, இந்த நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

“Liwa al-Tawhid“-ன் தலைவரும் பிரதம கொமாண்டருமான Abdul Qader Saleh அவர்கள் மரணம் !!

Liwa al-Tawhid சிரிய போராட்டக்களத்தில் உள்ள இன்னொரு முன்னணி அமைப்பு. இதனை “தவ்ஹீத் பிரிகேட்” என்றும் அழைப்பர். சிரிய இஸ்லாமிய விடுதலை முன்னணி எனும் பொது அமைப்பில் அங்கம் வகிக்கிறது. கட்டார் தேசத்தின் ஆதரவு இந்த அமைப்பிற்கு நிறையவேயுண்டு. இதன் சீப் கொமாண்டரும் தலைவருமான அப்துல் காதர் அல் சாலேஹ் அவர்கள் அலிபோவில் சிரிய வான்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மரணத்தை தழுவியுள்ளார். தனது ஏனைய சகாக்களுடன் ஒரு முக்கியான மசூராவில் (ஆலோசணைியில்) ஒரு பாடசாலையில் இருந்த போது அந்த பாடசாலை மீது வான் தாக்குதல் மிக மிக துல்லியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஜெனீவா பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய போராளி அமைப்புக்களை கொண்டு வரும் அமெரிக்க நரித்தனமான இராஜதந்திரத்தை முற்றாக இவர் நிராகரித்திருந்தார். “சிரியாவின் இஸ்லாமிய ஆட்சியின் உதயத்தின் பின்னர் நான் எதைப்பற்றியும் யாருடனும் பேசத்தயார்” என ஆணித்தரமாக கூறியிருந்தார் சகோதரர் அப்துல் காதர் சாலேஹ் அவர்கள். 

சிரிய ஜிஹாத்தின் “வோர் லோர்ட்ஸ்” என நோக்கப்படும் சவுதி அரேபியாவும், லிவா அல்-தவ்ஹீத் அமைப்பிற்கு பல வழிகளிலும் நிதி மற்றும் ஆயுத உதவி புரிந்த கட்டாரும் கூட இந்த அமெரிக்க அஜண்டாவிற்கமைவாக பேச்சுவார்த்தை மேசைக்கு “லிவா அல்-தவ்ஹீத் பிரிக்கேட்டை” கொண்டு வர பாரிய அழுத்தங்களை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் கட்டளை கலந்த வேண்டுகோளினை உறுதியாக மறுதலித்திருந்த நிலையில் இவர் கொல்லப்பட்டுள்ளார். 

இவர்களின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்கியவர்கள் யார்?. சிரிய விமானப்படை நேராக வந்து பாடசாலையையும் அதனை அண்டிய பகுயையும் மட்டும் தாக்கி விட்டு சில நிமிடங்களில் எப்படி சென்றன போன்ற கேள்விகள் சிரிய ஜிஹாத் எனும் பின்புல அரசியலில் விடைகாணக்கூடியவையே.

மேற்படி தாக்குதலில் லிவா அல்-தவ்ஹீத் பிரிக்கேட்டின் புலனாய்வு துறைப்பொருப்பாளரும், அலிபோவிற்கான கட்டளை தளபதியுமான யூசுப் அல் அப்பாஸ் அவர்களும் பலத்த காயமடைந்துள்ளார்கள். ஒரே நேரத்தில் அதியுயர் கட்டளைத்தளபதிகள் இருவரை இழந்த நிலையில் பலத்த தலைமைத்துவ பின்னடைவுகளை சந்தித்துள்ள ஒரு கடுமையான காலகட்டத்தினுள் பிரவேசித்துள்ளது Liwa al-Tawhid அமைப்பு.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

“டாக்டர் நஸ்ருத்தீன் ஹக்கானி” சுட்டுக்கொலை - “ஹக்கீமுல்லாஹ் மசூத்தின்” கொலைக்கு பின்னர் நடக்கும் இரண்டாவது இழப்பு !

மௌலவி ஜலாலுத்தீன் ஹக்கானி. ஆப்கானிஸ்தானின் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்ககு எதிரான விடுதலை போரின் முதன்மையான தலைவர்களில் முக்கியமானவர். நஜீபுல்லாஹ் அரசு கவிழ்க்கப்பட்டு சோவியத் யூனியன் தன் படைகளை வாபஸ்பெற்ற பின்னர் பல போராட்ட குழுத்தலைவர்கள் தங்கள் ஆயுத போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர். மௌலவி யூனிஸ் காலிஸ் அணியினரை உதாரணமாக குறிப்பிடலாம். தலிபான்களின் எழுச்சிக்குப்பின் மேலும் சில தலைவர்கள் களத்தில் இருந்து காணமலே போய் விட்டனர். அவர்களில் ஒருவர் ஹிஸ்பி இஸ்லாமியின் தலைவர் ஹிக்மதியார். ஈரானில் தஞ்சமடைந்ததுடன் அவர் கதை முடிந்தது. ஆனால் இன்று வரை அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடும் ஒரு தலைவரே ஹக்கானியாவார். அமெரிக்கா “ஹக்கானி நெட்வோர்க்” என இவரது அணியை அழைக்கிறது. ஹக்கானி அவர்களின் மூத்த புதல்வர் டாக்டர் நஸ்ருதீன் ஹக்கானியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள ராவல்பிண்டி நகரில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாண் விற்பனை செய்யும் ஒரு பேக்கரியின் வாயலில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் இவரது உடல் சல்லடையாக துளைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோக முறையானது இவரது மரணத்தின் அத்தியாவசியத்தை வெகுவாக உணர்த்தி நிற்கின்றது. 

இவரின் சகோதரர் பதுருதீன் ஹக்கானி கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க ட்ரொன் தாக்குதில் கொல்லப்பட்டிருந்தார். ஹக்கானி அணியின் கட்டளைத்தளபதியாக செயற்பட்டவர் அவர். இப்போது இன்னொரு சகோதரரான “சிராஜுதீன் ஹக்கானி” தற்போது தலைமைத்துவ செயற்பாட்டில் இயங்கி வருகிறார் தனது தந்தையின் வழிநடாத்தலுடன். 

அமெரிக்கா குறிப்பிடும் ஹக்கானி நெட்வோர்க்கின் நிதி கையாள்கையும் கட்டுப்பாடும் டாக்டர் நஸ்ருதீன் ஹக்கானியினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. டோகா கட்டாரில் அமையவிருநத்த தலிபான் அலுவலகம் தொடர்பான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவுடன் நடாத்தப்படவிருந்த பேச்சுவார்த்தைகளிலும் முன்னணி செயற்பாட்டாளராக இவரே விளங்கினார். 

அவரது உடல் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மீரான் ஷா எனும் அவர்களின் ஆதரவு பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தை போல வசிரிஸ்தானில் தனது செயற்பாடுகளையோ அல்லது வதிவிடத்தையோ அமைக்காமல் இஸ்லாமாபாத்தில் தனது அமைவிடத்தை தேர்ந்திருந்தார் டாக்டர் நஸ்ருதீன் ஹக்கானி. இது அவரிற்கு பல நாடுகளிற்கும் விஜயம் செய்து நிதிகளை வசூலிக்கவும் பல நாட்டு தலைவர்களையும் ஆதரவாளர்களையும் சந்திக்கவும் வாய்ப்பான தளமாக அவரிற்கு இருந்தது. 

இவர் எந்தவொரு புகைப்படத்திலும் தான் தோன்றாதவாறு பார்த்துக்கொண்டவர். மிக வசதிபடைத்த மனிதர்கள் அணியும் ஆடைகளையும் பெறுமதிக்க வாகனங்களையும் பயன்படுத்தி வந்தார். ஆப்கானின் ஒரு முரட்டு தலிபானிய கோலத்திற்கு 100 சதவிகிதம் மாற்றமான தோற்றப்பாட்டை இவர் மேற்கொண்டிருந்தார். யாருக்கும் இவர் ஹக்கானியின் புதல்வர் என்பது தெரியாது. அவரது உயர்கல்விக்கே உரித்தான நாகரீக நடத்தையுடன் அவர் செயற்பட்டு வந்தார். 

இவரது மரணம் ஹக்கானி நெட்வோர்க்கில் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தரீக் ஏ தலிபான் தலைவர் “ஹகீமுல்லா மசூதின்” மரணத்தின் பின்னர் ஆப்கானிய போராட்டத்திற்கு ஏற்பட்ட இன்னொரு பேரிழப்பு இவரது மரணமாகும். பாகிஸ்தானிய மண்ணில் இவர் இருப்பது பாகிஸ்தானிய உளவமைப்பான ஐ.எஸ்.ஐ.யினரிற்கு நன்றாகவே தெரியும். இவரது அனைத்து நகர்வுகளும் அவர்களால் கண்காணிக்கப்பட்டே வந்துள்ளது. பாகிஸ்தானிய மண்ணில் இவர்  கொல்லப்பட்டமையானது இவரது கொலையின் பின்னணி பற்றிய கேள்விகளை வெகுவாக எழுப்பியுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இஸ்லாத்தின் பார்வையும் முஸ்லீம்களின் பாதையும்

 தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு  அரசியலில் தான் முடியும் .

                                                                       அனேகமாக ஒவ்வொரு சிறுபான்மை வாழ்விடங்களிலும் இன ,மத வாத பெரும்பான்மை அரசியலின் இரத்தம் குடிக்கும் மேலாதிக்க அரசியல் இருந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப் படாத விதி!இந்த விடயத்தில் அடிப்படைக் காரணத்தை பற்றி தெளிவு பெறாமல் விளைவுப் பகுதியில் இருந்து தீர்வு நோக்கி சிறுபான்மையை  நகர்த்துவது ஒரு தவறான அணுகு முறை . இந்தத் தவறுதான் மிகச் சிறந்த போராட்ட பாதையாக ஒவ்வொரு சிறுபான்மை நிலங்களிலும் உணர்த்தப் படுகின்றது . எல்லோராலும் மார்தட்டிப் பேசப்படும் ஜனநாயகமும் இந்த பக்கச் சார்பு அரசியலில் பெரும் பான்மையின் பக்கமிருந்து தான் தனது நியாயத்தை காட்டி நிற்கும் .

                        பெரும்பான்மைக்கு எதிராக வெளிப்படையாக சிறுபான்மையின் எந்த நடவடிக்கையும் பெரும்பான்மையின் ஆக்ரோசமான எதிர்ப்பு நிலையை மேலோங்கச் செய்து , மூர்க்கத் தனமாக சிறுபான்மைகள் மீது அத்து மீறவைக்கும் . மிக அண்மைய தசாப்த இன,மத  வாத அரசியல்  நிகழ்வுகளில்இதற்கு சிறந்த ஆதாரங்களை எம்மால் காண முடியும் . 

                                                             இந்த அடிப்படையில் வன்முறையோ , சார்பு ,எதிர் நிலை அரசியலோ பெரும்பான்மையை எதிர் கொள்வதில் ஒரு வெற்றிகரமான பாதையாக உணர முடியாதுள்ளது . ஒரு தேசிய எல்லைக்குள் சிறுபான்மை உள்வாங்கப் படும் போதே ஒரு வகையான அடிமை வரையறைக்குள் புதைந்து போய் விடுகின்றன .  இந்த பக்கச் சார்பு ஆதிக்க அரசியலின் அதி உச்ச நிகழ்வுதான் பெரும்பான்மையின் வன்முறை அடக்கு முறைகள் . இந்த அநியாயத்தின்  சூட்டில் இருந்து தான் சிறுபான்மை தனது வாழ்வுக்கான போராட்டப் பாதையை நியாமாக சிந்திக்க வேண்டியுள்ளது . 

                                                             உரிமைகள் சலுகைகள் போல் காட்டப் பட ,தப்பிப் பிழைத்து முடிந்தால் வாழு என்ற 'jungle law ' பெருந்தன்மையுடன் அள்ளி வீசப்பட ,பெரும்பான்மை அபிலாசை மீது  நேர்ந்து விடப்பட்ட பலிக்கடா வாழ்வே சிறுபான்மை வாழ்வாகும் .மேலும் பெரும்பான்மை எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு அரசியல் வடிவமெடுக்க  சிறுபான்மை முயலும் சந்தர்ப்பங்களில் அத்தகு சிறுபான்மை தலைமைகள் திட்ட மிட்டு அழிக்கப்படும் , சிதறடிக்கப்படும் என்பதும் நாம் கண் கண்ட உண்மைகள் .

                                        ஆகவே சிறுபான்மையை பொருத்தவரை (மற்றும் பொதுவாகவும் )ஜனநாயகம் ஒரு  தோல்வி நிலை கோட்பாடுதான் என்பதில் சந்தேகமில்லை .அதில் தீர்வை விட பக்கச் சார்பும் ,அத்து மீறலும் அதிகமாக இருக்கின்றது .இந்த அரசியல் வடிவத்தை ஏற்றுக்கொண்டு சிறுபான்மை உரிமை ,மற்றும் சுயாதிபத்தியம் பற்றி சிந்திப்பது ஒரு வீண் வேலையாகும் .

                                                         அப்படியானால் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ? அதற்கான விடை மிக அவசரமாக இஸ்லாமிய அகீதாவின் ஆழ்ந்த தெளிவில் இருந்து தனது சிந்தனைத் தரத்தையும், கருத்து வெளிப்பாட்டையும் ,நடத்தையையும் தீர்மானிப்பதோடு ,இஸ்லாத்தின் சித்தாந்த வாதத்தின் கருத்தியலை முற்படுத்திய பகிரங்க பிரச்சாரத்தை பெரும்பான்மை நோக்கி செய்வதாகும் .

                                         இதன் பிரதி விளைவாக இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும் அதன் உலகியல் தேவைப் பாட்டை புரிந்து கொண்ட நிலையில் ,பெரும்பான்மைக்குள் இருந்து ஒரு சார்பாளர் வட்டத்தை உருவாக்க முடியும் . இந்த நிலை முஸ்லீம் உம்மாவை இன ,மத அடையாளப் படுத்தலை தாண்டிய அதன் இயல்பான தோற்றத்தை காட்ட முடியும் .

                                                   மேலும் இஸ்லாத்தின் பொதுத் தலைமையான 'கிலாபா ' அரசியல் எனும் ஒரே  தலைமையின் கீழான ஒன்றிணைவு தொடர்பில் ஆழமானதும் தெளிவானதுமான அறிவையும் அது பெற்றுத் தரும் 'இன்ஷா அல்லாஹ் '.

                      "இமாம் ஒரு கேடயம் ஆவார் .அவருக்கு பின்னால் இருந்து மக்கள் போர் புரிவார்கள் .அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள் "
                                                                                                    (முஸ்லீம் )

ஜாஹிலீய அதிகாரங்களும் எமது நிலையம் !

         இன்றைய ஜாஹிலீய  மேலாதிக்க உலகு,  முஸ்லீம்கள் விடயத்தில் இறைவனோடு நேரடி தொடர்புள்ள அழுத்தமான ஆன்மீக தொடர்பு பற்றியோ , இபாதாக்கள் பற்றியோ அச்சம் கொள்ளவில்லை . மாறாக அது  அச்சம் கொள்வதெல்லாம் ஒரு முஸ்லீம் வாழ்க்கையையே வணக்கமாக்கி தனது(அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல்  போன்ற ) எல்லா விடயங்களிலும் இஸ்லாத்தின் வழிகாட்டளின் கீழ் வாழ விரும்பும்  போதுதான் எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கடுமையான எதிர்ப்பை காட்டத் தொடங்கும் .

                                                                அந்த வகையில் இஸ்லாத்தின் ஆன்மீக அகீதா தவிர்ந்த வாழ்வியல் அகீதாவை விட்டும் முஸ்லீம் சமூகத்தை தூரப்படுத்துவதும் ,அந்த விடயங்களை பிரதான விடயமாக்காது சாதாரண கிளை விடயமாக எடுத்துக் காட்டப்படுவதும் , இஸ்லாம் கூறும் (அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல்  போன்ற ) எல்லா அம்சங்களும் நடைமுறை சாத்தியமற்றதாக எடுத்துக் காட்டுவதும் ஜாஹிலீய அதிகாரங்களுக்கு ஒரு 
கடமையாகவே ஆகிவிடுகின்றது .

                                               மேற்குலகு கிறிஸ்தவ அதிகார மேலாதிக்கத்தில் இருந்தபோது வாழ்வியல் விவகாரங்களிலும் ,அறிவியலிலும் தவறான சிந்தனைத்தரத்தைக் கொண்டு தீர்ப்புக் கூறத் தொடங்கியதே மதம்  வேறு ,உலகியல் விவகாரம் வேறு என்ற தீர்மானத்தோடு மதச் சார்பின்மை எனும்  கோட்பாடு நடைமுறைப் படுத்துவதற்கு ஏதுவாக  அமைந்தது தெரிந்தோ தெரியாமலோ முஸ்லீம்களும் பின்பற்றி வருகின்றனர்  . ஆனால் இன்று கிறிஸ்தவம் கூறும் அதே  சிந்தனைத்தரமே இஸ்லாத்தின் மீதும் பதியப்பட்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் உலாவிடப் பட்டுள்ளது . ஆனால் இந்த (மகத்தான )பணியை செய்வது கிறிஸ்தவ பாதிரிகளோ ,சந்நியாசிகளோ ,யூத ரப்பிகளோ அல்ல மாறாக  முஸ்லீம் உம்மத்தில் இருந்து உதித்த புத்திஜீவிகளே !!!  

                                                              அதிர்ச்சியும் ஆச்சரியமுமான சில பிரச்சாரங்களை, பதிவுகளை நான் சந்தித்தேன். அதில் குப்ரிய அதிகாரங்களின் கீழான , அவர்கள் தரும் ஜாஹிலீய சட்டங்களை பின்பற்றியவர்களாக முஸ்லீம்கள் வாழ்வது நியாயப்படுத்தப் பட்டிருந்தது . அந்த நியாயத்துக்கு அச்சமோ ,நிர்ப்பந்தமோ காரணமாக்கப் படவில்லை . இஸ்லாம் அதை அங்கீகரித்த ஒன்றாக குர் ஆனிய  ஆதாரமாக யூசுப் (அலை ) அவர்கள் சம்பந்தப் பட்ட வசனங்களும் எடுத்தாளப் பட்டிருந்தது .

                                                                          அதாவது யூசுப் (அலை ) நிராகரிப்பாளனான ஒரு மன்னனிடம் அமைச்சராக இருந்தது ஆதாரமாக்கப் பட்டிருந்தது .  முதலாவது இந்த கருத்தியல் கண்ணோட்டமே பிழையானது. ஏனென்றால் 1. நபி யூசுப் (அலை )அவர்களின் 'சரீஆ'  எமக்கு 'சரீஆ' அல்ல என்ற சாதாரண வாதத்தை இங்கு முன்வைக்கலாம் . 2. குறித்த மன்னன் நீதி தவறியதாக குர் ஆன் குறிப்பிடுகிறதே தவிர 'குப்ரில்' இருந்ததாக சொல்லவில்லை . இந்த இரண்டு காரணங்களும் அவர்களின் தவறான கருத்தியலை உடைக்கப் போதுமானதாகும் .

                                                      அபத்தமான குர் ஆன் விளக்க அறிவின் மூலம் இஸ்லாமிய 'சரீஆ' வின் கீழ் தான் முஸ்லீமின் வாழ்வு கட்டாயமானது எனும் கருத்தியலை விழுங்கி ஏப்பம் விட்டு 'குப்ரை 'அங்கீகரித்த   வாழ்வு இஸ்லாம் அங்கீகரித்தது எனும்  ஒரு நூதன விளக்கத்தை நாக்கூசாமல் எடுத்து வைத்துள்ளார்கள் .அதாவது ஆன்மீகத்துக்கு இஸ்லாம், வாழ்வியலுக்கு குப்ர் !! இது தான் (கிறிஸ்தவம் வரையறுத்த) அதே மதச்சார்பின்மை; இனி இது  முஸ்லிமுக்கும் வழிமுறையாகும் . என்ன சற்று வித்தியாசமாக திரிக்கப் பட்ட  இஸ்லாத்தின் ஆதாரத்தோடு !

                                   ' பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது வாய் மூடி மௌனமாக இருங்கள் '( நபிமொழி ) என்று  இவர்களிடம் சொல்வதைத் தவிர வேறெதுவுமில்லை .

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல்!(ஒரு முகநூல் பதிவில் இருந்து .)

 இலங்கையில் முஸ்லிம்களது நலன் காக்கப்படுவதற்கு இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் “முதலாளித்துவ, மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜனநாயக பாராளுமன்றத்திற்கு” அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் மூலம் தமது உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும் என்றும் , முஸ்லிம்களது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தமக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் நாடுகிறார்கள்.

  ஆனால், இஸ்லாம் இவற்றிற்கு எல்லாம் மேலாக உண்ணதமான ஆத்மீகப்பணியாக அரசியலை நோக்குகிறது. இஸ்லாமிய அரசியல் என்பது இஸ்லாமிய அகீதாவில் இருந்து கட்டியெழுப்படவேண்டிய ஒன்று. மனித வாழ்வில் எழும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை “ஒரு முஸ்லிம் அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்விடம் இருந்து பெற்று தமது அரசியல், பொருளியல் மற்றும் சமூகப்பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டும்”. அதுவே இஸ்லாமிய அரசியல் பணியுமாகும். 

  இந்த அடிப்படையில், சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் முஸ்லிம்களது அரசியல் பணியென்பது நபி (ஸல்) மக்காவில் நிறைவேற்றிய அரசியல்பணி என்பதனை உணரவேண்டும்.
மக்காவில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் சிறுபான்மையாக இருந்தபோது அவர்கள் மக்காவில் இருந்த ஜாஹிலிய சமூக அமைப்பையும் அரசில் தலைவர்களையும் எதிர்கொண்டு இஸ்லாத்தை மக்கள் மயப்படுத்தி மக்கள் மனங்களில் மேலோங்கச் செய்தார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை மக்காவினுள் பெற முற்படவில்லை. 

   அதேபோன்றுதான் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள “நவீன ஜாஹிலிய சிந்தனைகளையும், வாழ்க்கை முறையையும், சமூக அமைப்பையும் கேள்விக்குட்படுத்தி மாற்றீடாக இஸ்லாத்தை முன்வைக்கும் அரசியல் பணியை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதனை உணரவேண்டும். அத்தகைய அரசியல் பணியை செய்வதன் மூலமாக இலங்கை மக்கள் மனங்களில் இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்தப்படமுடியும். 

   இதற்கு பாராளுமன்றத்தினுள் சென்றுதான் தஃவா செய்ய வேண்டும் என்ற தேவை கிடையாது. இவ்வரசியல் பணியை மேற்கொள்ளும் குழு நிச்சயம் நபி (ஸல்) அவர்களது முன்மாதிரியினை பின்பற்றி பண்படுத்தப்பட்டு இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையிலான அரசியல் தஃவா முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் அரசியல் தலைமைகளாக இருக்கவேண்டும். 

 நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் அதிகாரம் கிடைத்த பின்பு இஸ்லாமிய அரசை அங்கு நிறுவியதுடன் இஸ்லாத்தை முழுமையான உள்நாட்டினுள் அமுல்படுத்தி வெளிநாட்டுகளுக்கும் தாவா மற்றும் ஜிஹாத் மூலம் எடுத்துச் சென்றார்கள். அது முஸ்லிம்களதும் இஸ்லாத்தினதும் நலன்களை காப்பாற்றியது. 

  இவ்வாறே, “நாளைய இஸ்லாமிய உலக ஒழுங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தேசங்களை இணைத்து நபி வழியில் உருவாகும் போது” சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களது நலன்கள் நிச்சயம் காக்கப்படும் அவர்களது கண்ணியம் பேணப்பட்டும், குர்ஆன் சுன்னாவின்படி சகல துறைகளிலும் வாழுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாளைய இஸ்லாமிய தலைமை சிறுபான்மையாக முஸ்லிமகள் வாழும் பிரதேசங்களில் ஏற்படுத்தித்தரும். அத்தகைய அரசியல் முன்னெடுப்புக்களை அதன் வெளிநாட்டு கொள்கையூடாக ஏற்படுத்தித்தரும். மேலும் சிறுபான்மை முஸ்லிம்களது நலன்களை பாதுகாக்கும். அவர்கள் முழுமையான குர்ஆன் சுன்னாவின்படி தமது வாழ்வொழுங்கை ஒழுங்குபடுத்தி வாழ்வதற்கு வழிசமைக்கும் என்பதனை உணர்ந்து இஸ்லாமிய அரசியல் பற்றிய தெளிவைப் பெற ஒவ்வொரு முஸ்லிமும் கடமைப்பட்டுள்ளான் என்பதனை உணரவேண்டும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை (ஒரு முகநூல் பதிவில் இருந்து .)

இந்தியா விடுதலைப் பெற்ற நேரத்தில் அரபு நாடுகளின் மையப் பகுதியில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாக திணிக்கப்பட்ட  நாடு தான் இஸ்ரேல். சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வல்லரசுகளின் இந்த அடாவடித்தனத்தை அந்த நேரத்தில் புதிதாக சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அரபு நாடுகளோடு பாரம்பரிய தொடர்பு வைத்துள்ள இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து யூதர்களுக்கென்று மத ரீதியாக உருவாக்கப்படுவதை கொள்கை ரீதியாக எதிர்த்தது.

        தேசத் தந்தை காந்தியடிகள் யூதர்களோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தாலும் மத அடிப்படையில் ஒரு நாடு உருவாவதை கடுமையாக எதிர்த்தார். காரணம் அந்த நேரத்தில் மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. அது மட்டுமல்லாமல் வேறொரு வேறொரு வலுவான காரணமும் இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்ப்பதற்கு இந்தியாவிற்கு இருந்தது. இந்திய நாடு பிரிவினையின் போது முறையாக தீர்க்கப்படாமல் விடப்பட்ட கஷ்மீர் பிரச்சினை மிகப் பெரிய அளவில் வெடித்து சுதந்திரம் பெற்ற உடனேயே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. இதனால் கஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்கு இந்தியா எடுத்துச் சென்றது.

      கஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் என்பதால், இதில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அரபு நாடுகள் அனைத்தும் கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று இந்திய அரசியல் வல்லுனர்கள் கருதியதால் இஸ்ரேல் உருவாக்கத்தை தொடக்கத்தில் இந்தியா எதிர்த்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் உருவாவதை இந்திய அரசியல் தலைவர்கள் பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள், அந்த அமைப்போடு சிந்தாந்த ரீதியாக தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் என்று பலரும் ஆதரித்தனர் வரவேற்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் 1950ல் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்து பம்பாயில் இஸ்ரேல் நாட்டின் துணை துதரகம் அமைத்திட ஒப்புதல் அளித்தது.

    ஜவஹர்லால் நேரு அவர்கள் 1954ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில்; “இஸ்ரேலின் உருவாக்கம் என்பது ஒரு சர்வதேச விதிமீறல் என்ற சட்ட முன்வடிவை ஒரு கட்சி என்ற முறையில் ஆதரிக்கமாட்டோம்” என்று பகிரங்கமாக கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் இந்திய வெளியுறவுக்குறித்த தெளிவான கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்ற வாதம் எழுந்தது. அதன் பிறகு உருவானது தான் முதலாளித்தும் வல்லரசு சாராத சுதந்திரமான அணி சேராக் கொள்கை.

   கட்சியிலும் நாட்டிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டதிற்கு இந்தியா பகிரங்க ஆதரவு தெரிவித்து வந்தாலும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுடன் மறைமுகமான தொடர்புகளை வைத்திருந்தனர். இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் பகிரங்கமாகவே தொடர்பு வைத்து வந்தனர் என்பதும் வெளிப்படையாக தெரிந்த செய்தி தான்.

    வல்லரசுகளுக்கு மத்தியில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில் சோவியத் ஆதரவு நிலையை எடுத்திருந்த இந்தியா தனது அண்டை நாடுளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள சோவியத் ரஷ்யாவிட மிருந்து தனது இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை பெற்று வந்தது. இன்றைக்கும் இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் ஏற்றக்குறைய 70 விழுக்காடு ஆயுதங்கள் சோவியத் ரஷ்யா தயாரிப்பு தான். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு அந்நாட்டில் நவீன ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் சீர் கெட்டு போர் அபாயம் அதிகரித்தது. சோவியத் ரஷ்யா எந்த அளவிற்கு இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ததோ அதற்கு சற்றும் குறையாமல் பாகிஸ்தானுக்கும் சற்று கூடுதலாக சீனாவிற்கும் வழங்கியது. இது இந்தியாவிற்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது.

       சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் அதன் ஆயுதங்களுக்கு மாற்றாகவும் அதைவிட நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாட்டின் உறவு இந்தியாவிற்கு தேவைப்பட்டது. சோவியத் யூனியனோடு இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவிற்கு நவீன ஆயுதங்கள் கொடுப்பதற்குத் தயங்கிய நிலையில் அமெரிக்காவின் தயவால் பல நவீன ஆயுதங்களை வைத்துள்ள இஸ்ரேலின் பக்கம் இந்தியாவின் கவனம் திரும்பியது.

  ஏற்கனவே இஸ்ரேல் அரசுடன் இரகசிய உறவு வைத்திருந்த இந்தியாவிற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது. இஸ்ரேலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தயவு கிடைப்பதின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதோடு அரபு நாடுகளுடனான இந்திய உறவில் விரிசல் ஏற்படுத்த முடியும் என்று திட்டமிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இந்தியாவிற்கு பெருகி வரும் ஆபத்துகள் என அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது இஸ்ரேல். அதன்பிறகு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் காரணமாக இன்றைய நிலையில் இந்தியாவிற்கு இராணுவ தளவாடங்கள் விற்பதில் உலகின் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. இதை துறை வாரியகப் பார்ப்போம்.

இரகசிய தொடர்பு :

      1969-ல் “ரா” என்ற உளவு அமைப்பை தொடங்கிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ராமேஷ் வர் நாத் காவோ என்ற அதிகாரியை அதற்கு தலைவராக நியமித்தார். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் உடன் இரகசிய உறவுகளை உருவாக்கிட காவோ விற்கு பிரதமர் இந்திரா உத்திரவிட்டார். “ரா”-மொஸாத் கூட்டணி சீனா, பாகிஸ்தான் வட கொரியா ஆகிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இரகசியமாக தொடர்ந்த இந்த “ரா” – மொஸாத் உறவு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த நேரத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டது.பாகிஸ்தான் அரசு கட்டா என்ற இடத்தில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை இரகசியமாக நிறைவேற்றி வந்தது. இதை அறிந்த அன்றைய அமெரிக்க ஜிம்மி கார்டர் அரசு பிரான்ஸ் உதவியை தடுத்துவிட்டது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு இதை இரகசியமாக வைத்திருந்தது. இந்தச் செய்தியை மோப்பம் பிடித்த மொஸாத் “ரா” காதில் போட அது நேராக மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வர அவர் நேரிடையாக பாகிஸ்தான் அதிபர் ஜியா-வுல் ஹக்கிடம் “நீங்கள் கட்டா நகரில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று எனக்கு தெரியும். எங்களது “ரா” அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று வெளிப்படையாக தெரிவித்ததற்கு பிறகு தான் “ரா” மொஸாத் உளவு அமைப்புகளின் கள்ளக் கூட்டு வெளி உலகிற்கு தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு மொஸாத்தோடு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் உறவு ஏற்படுத்திக் கொண்டது வேறுகதை.

திருப்பு முனை :

     Organaisation of Islamic Conference (OIC)என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு 1986ல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்திய – இஸ்ரேல் உறவுகளில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஐ.நா. சபையின் அறிக்கையின் அடிப்படையில் கஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து ளிமிசி அறிக்கை வெளியிட்டது. இந்தியா இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ளிமிசி குற்றம் சுமத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்தச் செய்தி இந்திய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட இந்தியா, இது பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின் காரணமாக எழுதப்பட்டது என்று கருத்துக் கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு தொடர்பான தனது அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்திய அரசு.

துதரக தொடர்பு :

         சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக 1992 ஜனவரியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இஸ்ரேலோடு முழுமையான துதரக உறவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்து வந்த அரசுகள் இஸ்ரேலோடு பல்வேறு துறைகளில் பல உடன்படிக்கைகளை செய்துள்ளன.

இஸ்ரேல் பிரதமர் வருகை :

         1997 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதர் ஐஸர் வைஸ்மென் இந்தியா வந்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் இவர் தான். முதன் முறையாக ஆயுத ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பராக் – 1 என்ற நவீன ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் கப்பலில் இருந்து பாயும் ஹார்ப்பூன் என்ற ஏவுகணையை இடை மறித்து தாக்கும் வல்லமை பெற்றது இந்த பராக் – 1 ஏவுகணை. இந்திய – இஸ்ரேலின் இந்த ஒப்பந்தத்தை கண்டு கதி கலங்கிய பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து றி3-சிமிமி ளிக்ஷீவீஷீஸீ என்ற போர் விமானத்தையும், மேம்படுத்தப்பட்ட ஹார்ப்பூன் ஏவுகணைகள் 27 ஐயும் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பலமுறை இஸ்ரேலிற்கு பயணம் செய்து புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்து வந்து உருவாக்கப்பட்ட பிருத்வி மற்றும் அக்னி ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டது.

கடற்படை :

        தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்திய கடற்படைக்கு மேலும் வலுவூட்டி தங்களது நாட்டின் சரக்கு போக்குவரத்து மற்றும் கடல் வழி போக்கு வரத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்திட இந்திய கடற்படையோடு சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் இஸ்ரேலிய கடற்படை சுதந்திரமாக ஈடுபட்டு வருகிறது. காரணம், மத்திய தரைக் கடல் பகுதியில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அங்கே, இஸ்ரேலால் சுதந்திரமாக செயல்பட முடியலவில்லை. சமீப காலமாக இந்திய பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணைச் சோதனைகளை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

விமானப் படை :
         1997 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 32 ஆளில்லா உளவு விமானங்கள் வாங்கப்பட்டன. றிலீணீறீநீஷீஸீ கிணிகீமிசி என்ற அதி நவீன ராடார்கள் வாங்கப்பட்டன. இவை பாகிஸ்தான் உடனான கார்கில் போரின் போது இந்திய இராணுவத்திற்கு பெரிதும் உதவியாய் இருந்தது. ரஷ்யாவின் மிக் 32 ரக விமானங்களை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில் நுட்பமும் பெறப்பட்டன. இந்திய வான் எல்லையிலிருந்தே பாகிஸ்தான், மற்றும் சீனாவின் 400 கிலோ மீட்டர் து£ரத்தில் இருக்கும் இடங்களை மிக துல்லியமாக கண்காணிக்கும் அதி நவீன கிகீகிசிஷி என்ற 6போர் விமானங்களை இந்தியா இஸ்ரேலிடமிருந்து பெற்றுள்ளது.

உளவு சாட்டிலைட் :

         இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் சந்திராயன் விண்கலம் ஏவுவதில் உதவி செய்வது மேலும் இஸ்ரேலின் Tec SAR என்ற உளவு சாட்டிலைட்டை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO கடந்த 2008 ஜனவரி 22 அன்று விண்ணில் ஏவியது. இஸ்ரேலில் ராக்கெட் ஏவுதளம் இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஏவுவது பாதுகாப்பானதும் செலவு குறைவானதுமாக கருதப்படுகிறது. 2008ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவியோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட RISAT – 2 அதி நவீன சாட்டிலைட்டை இந்தியா ஏவியது. இந்த சாட்டிலைட்டிலிருந்து இரவு நேரத்தில் கூட அடர்ந்த மேக மூட்டம் காணப்பட்டாலும் அவற்றையும் தாண்டி மிக துல்லியமாக படமெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

இந்துத்துவ தொடர்பு :

     2007ல் உலக யூத – இந்து மத தலைவர்கள் சிந்திப்பு என்ற பெயரில் யூத – பிராமணர்கள் சந்திப்பு நடைபெற்றது. 2007 பிப் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற இச்சந்திப்பில் இஸ்ரேலின் தலைமை ராபி யோனா எட்ஸ்கர் மற்றும் பிராமண சாமியார் தயானந்த சரஸ்வதி ஆகியோர் தலைமையில் யூதர்களும் பிராமணர்களும் சந்தித்து. யூத மதம் மற்றும் பிராமணர்களின் ஆரிய மதம் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

விடுதலை பெற்ற இந்தியாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடக்க காலத்தில் ஜவஹர்லால் நேரு வகுத்து தந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் முதலாளித்துமும் சோசலிசமும் கலந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றி வந்தது. பின்னர் அந்த வழிமுறைகளிலிருந்து மாறி சோசலிஸ ரஷ்யா சார்பு வெளியுறவுக் கொள்கைகையும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றி வந்தது. பின்னர் 1992ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையையும் உலக மயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கையையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே இந்திய அரசின் கொள்கையாகவும் மாறிப்போய் விட்டது. இந்தியாவின் துவக்ககால கொள்கை நிலைப்பாடுகளால் உலகின் பல நாடுகளிடம் பாரம்பர்யமாகக் கொண்டிருந்த தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டது இந்தியா. ஆனால் பிற்காலத்தில் அந்தக் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதால் உலக நாடுகளிடம் கொண்டிருந்த பாரம்பர்யத் தொடர்புகளை இழந்தது மட்டுமல்லாமல் சில எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டுவிட்டது. அந்த எதிர்ப்புகளில் தீவிரவாதமும் அடங்கும். மேலும் துவக்க காலத்தில் அமெரிக்க, ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் இஸ்ரேலின் உருவாக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்த இந்தியா, பிற்காலத்தில் அவற்றோடு சமரசம் செய்து கொண்டது. குறிப்பாக உலக சமுதாயத்தாலும் 180 கோடி முஸ்லிம்களாலும் கடுமையாக வெறுக்கப்படுகிற பயங்கரவாத இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும்.

நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் சமூக வாழ்க்கையை மேம்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டுமே தவிர வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக வல்லரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதால் உண்மையான வளர்ச்சி ஏற்படாது. நம் நாட்டின் பாரம்பரியத்தன்மைக்கும் மரபு சார்ந்த உறவுகளுக்கும் ஒவ்வாத சிந்தனை உள்ளவர்களோடு கூட்டு சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல… இன்றைக்கும் இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தந்து அதன் மூலமாக அதிக அளவிற்கான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரபு நாடுகள்தான் இந்தியாவின் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாகவும் திகழ்கின்றன. அத்தகைய அரபுநாடுகளின் அதிருப்தியையும் இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களின் வெறுப்பையும்தான் இந்தியஇஸ்ரேல் உறவு வெளிப்படுத்தி உள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

'தற்காற்பு” பற்றிய இஸ்லாத்தின் தெளிவுகளும் முஸ்லிம் உம்மாவின் ஐயங்களும்!

  ற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு  அரசியலில் தான் முடியும் .