Facebook Twitter RSS

ஈரானிய எம்பஸி மீது பெய்டூட்டில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல் - விரியும் சிரியக்களங்கள்!!


பெய்ரூட்டில் உள்ள ஈரானிய தூதரகம் மீது நடாத்தப்பட்ட ஷஹாதா தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டும் 145 இற்கும் அதிகமானவர்கள் காயப்பட்டுமுள்ளனர். ஈரானிய எம்பஸியின் வாயிலில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முதல் வெடிப்பை மேற்கொண்டார். இதனையடுத்து சில நிமிடங்களில் இன்னொரு நாட்சக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டாவது வெடிப்பினை மேற்கொண்டார். வாயில் கதவில் நடந்த தாக்குதலின் பின்னர் அங்கு கூடிய எம்பஸியில் உள்ளவர்கள் மீது இலகுவாக இரண்டாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானிய எம்பஸியுட்பட ஐந்து கட்டிடங்கள் பலத்த சேதமடையும் அளவிற்கு இந்த வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் வீரியம் இருந்தமையானது தாக்குதலின் நோக்கத்தின் வலிமையை உணர்த்தி நிற்கிறது.



பெய்டூட் என்றாலே ஞாபகம் வருவது அபூ அப்பாஸின் அமெரிக்க மரைன்கள் மீதான தற்கொலை தாக்குதலாகும். அமெரிக்க மற்றும் பிரான்ஸிய படைகள் மீது இரண்டு ட்றக்களில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு அமெரிக்க பிரான்ஸிய படைகளின் (மல்டி நேஷனல் போர்சஸ்) மீது நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 299 வீரர்கள் பலியானார்கள். இது முப்பது வருடங்களிற்கு முந்திய உலகின் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களில் ஒன்று. இதுவரை லெபனான் அப்படியொரு தாக்குதலை தன் வரலாற்றில் கண்டதில்லை. 

சிரியாவில் நடக்கும் சண்டைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. சிரிய அரசையும் அதன் இராணுவத்தையும் காப்பதற்காக நேரடியாகவும் கடைசிவரையும் களமிறங்கப் போவதில்லை என ஹிஸ்புல்லாஹ்வின் தலைவரும் கட்டளை தளபதியுமான ஹஸன் நஸ்ருல்லாஹ் அறிவித்த சில நாட்களிற்குள்ளேயே இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இதற்கு முன்னதாக சில நாட்களிற்கு முன் ஹிஸ்புல்லாஹ் ஆதரவு சுன்னி முஸ்லிம் மார்க்க அறிஞர் Saadeddine Ghiyyeh துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்க விடயமாகும். 

இந்த தாக்குதலினை அப்துல்லாஹ் ஆஸம் படையணியே மேற்கொண்டிருக்கலாம் என பரவலாக பேசப்பட்டாலும் அது தனித்து இதனை செய்ததா அல்லது இன்னொரு சிரிய அமைப்பிற்கு குறிப்பாக ஜபாஹ் அல் நுஸ்ராவிற்காக இதனை செய்து முடித்ததா என்பது ஊர்ஜிதமாகவில்லை. இந்த தாக்குதலிற்கு பின்னர் முஜாஹிதீன்கள் சார்பாக டிவிட்டரில் தகவல் வெளியிட்ட Sirajeddin Zreikat என்பவர் “நாம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். முதலாவது ஹிஸ்புல்லாக்கள் சிரியாவை விட்டு விலகிச்செல்ல வேண்டும். இரண்டாவது லெபனானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுன்னி முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார். 

சிரியாவில் நடக்கும் சண்டைகளின் அரசியல் இராணுவ தாக்கங்களின் வெளிப்பாட்டு தளமாக இன்று லெபனான் மாறியுள்ளது என்பது வெளிச்சகரமான உண்மையாகவுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: