Facebook Twitter RSS


அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது! – தொடரும் அநீதி!


அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை கர்நாடகா நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடிச் செய்துள்ளது. சிகிட்சைக்காக ஜாமீன் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஜாமீன் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் மஃதனிக்கு சொந்த செலவில் சிகிட்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய நீதிமன்றம் சிகிட்சை வேளையில் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது. கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மஃதனி. பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே அவர் பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா சிறையில் அடைக்கப்பட்டார். நீரழிவு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படும் மஃதனிக்கு ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. ஒரு காலை இழந்துள்ள மஃதனி நோய்களால் அவதிப்படும் வேளையில் அவரது சிகிட்சைக் குறித்து கர்நாடகா போலீஸ் அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில் மஃதனிக்கு சிகிட்சை அளிக்க ஜாமீன் அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு இரக்கம் காண்பிக்காத நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


திரிகள் - பேரறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி


சிரிய முஸ்லிம்கள் மீதான பஷர் அல் அஸதின் படுகொலைகளுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக ரஷ்யாவும் ஈரானும் இஸ்லாமிய உம்மத்தின் எதிரியாகி விட்டாக பேரறிஞர் கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களை புறக்கணிக்குமாறு முஸ்லிம்களுக்கு அழைப்புவிடுத்ததுடன் ஹஜ் காலத்தில் அவர்களுக் கெதிராக பிராரத்திக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உமர் இப்னு கத்தாப் மஸ்ஜிதில் ஆற்றிய குத்பா பிரசங்கத்திலேயே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்‌. அரபு இஸ்லாமிய சமூகம் ரஷ்யாவுக்கு எதிராக நிற்க வேண்டும். அதனை புறக்கணிப்பதுடன் அதனை எதிரியாக பார்க்கவேண்டும் என்று தெரிவித்தார். ரஷ்யாவிருந்து இராணுவ தளபாடங்களை ஏற்றிவந்த சிரிய விமானத்தை பலவந்தமாக தரையிறக்கிமைக்காக துருக்கியை பாராட்டினார். சிரிய இராணுவத்திற்கு உதவியளிக்கும் சீனாவை கண்டித்த சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் ஷெய்க் கர்ளாவி அவர்கள் ஈரானை எதிரி நாடாக பார்க்குமாறும்‌ கேட்டுக் கொண்டார். சிரியாவில் கொல்லப்பட்டுள்ள முப்பதினாயிரத்திற்கும் அதிகமானோர் ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் பஷர் அல் அஸதின் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானை விழித்து பேசிய கலாநிதி கர்ளாவி, குமைனி இதனை நோக்கி அழைக்கவில்லை. "லாயிலாக இல்லல்லாஹ்" சொன்ன ஒரு முஸ்லிம் இதனை அங்கீகரிக்கமாட்டான் எனக் குறிப்பிட்டார். அல்லாஹ் உங்களை கண்கானித்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் செய்பவைகளை கணிப்பிட்டுக் கொண்டிருக்கிறான். உங்களை அவன் மிகக் கடுமையாக விசாரிப்பான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் மீது இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள் என ஈரானியர்களை அவர் எச்சரித்தார். ஈரானியர்கள், ரஷ்யா, அஸதின் அநியாயக்கார இராணுவத்திற்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறும் குறிப்பாக ஹஜ் யாத்திரிகள் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். "இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் நினைத்துவிட வேண்டாம்”. (இப்றாஹீம் - 42) எனவும் அவர் ஈரானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


கஷ்மீரில் நீண்ட காலம் ராணுவத்தை நிறுத்த விரும்பவில்லை – சுசில் குமார் ஷிண்டே!


ஜம்மு-கஷ்மீரில் நீண்டகாலத்திற்கு ராணுவத்தை நிறுத்த மத்திய அரசு விரும்பவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சுசில் குமார் ஷிண்டே கூறியது: “கஷ்மீரில் நீண்டகாலத்திற்கு ராணுவத்தை நிறுத்த மத்திய அரசு விரும்பவில்லை. அதேவேளையில் குறிப்பிட்ட சூழலை கவனத்தில் கொண்டு மேலும் சில காலம் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அங்கு அமலில் இருக்கும். ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், தற்பொழுது ராணுவத்தை வாபஸ் பெற இயலாது. மேலும் சில காலம் சூழல்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. மாநிலத்தில் பாதுகாப்பு கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. ஆனால், தற்பொழுது ராணுவத்தை வாபஸ் பெறுவது ஆபத்தானது. இதனை ஸ்ரீநகரிலும், ஜம்முவின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் வன்முறைகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார் ஷிண்டே.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



2012-ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட 

பத்திரிகையாளர்கள் 119 பேர்!...


கடந்த 15 ஆண்டுகளில் இவ்வாண்டு அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது. வியன்னாவில் உள்ள இண்டர்நேசனல் ப்ரஸ் ரிப்போர்டின் (ஐ.பி.ஐ) புள்ளிவிபரப்படி இவ்வாண்டு இதுவரை 119 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1997-ஆம் ஆண்டு முதல் கொலை செய்யப்படும் பத்திரிகையாளர்களின் விபரங்களை ஐ.பி.ஐ சேகரிக்க துவங்கியது. இதற்கு முன்பு 2009-ஆம் ஆண்டு 110 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 102 பேர் இறந்தனர். அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிரான புரட்சி போராட்டம் நடைபெறும் சிரியாவில் அதிகமான பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இங்கு 36 பேர் பலியாகியுள்ளனர். செய்திகள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க வன்முறையாளர்கள் பத்திரிகையாளர்களை குறிவைக்கின்றார்கள் என்று ஐ.பி.ஐ கூறுகிறது. சோமாலியாவில் இவ்வாண்டு 16 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் பத்திரிகையாளர்களை பொறுத்தவரை ஆபத்தானவை. அதே வேளையில் ஆர்.பி.எஃப் போன்ற நிறுவனங்களின் அறிக்கை, ஐ.பி.ஐ இல் இருந்து மாறுபடுகிறது. ஆர்.பி.எஃபின் கூற்றுப்படி, வன்முறையாளர்கள் பத்திரிகையாளர்களை குறிவைக்கவில்லை, மாறாக அவர்கள் மோதலின் போது கொல்லப்படுகின்றனர் என்பதாகும். ஐ.பி.ஐயின் அறிக்கையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு குற்றவியல் புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே கொல்லப்பட்டார். இவர் மிட் டே பத்திரிகையில் பணியாற்றியவர். இவ்வழக்கின் விசாரணை இதுவரை பூர்த்தியாகவில்லை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


போர் நிறுத்தத்தை மீறியது இஸ்ரேல்!-காஸ்ஸாவில் ஒருவர் பலி!...


போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 21 வயதான அப்துல் ஹாதி எல்லையை ஒட்டியிருக்கும் தனது விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்ற வேளையில் இஸ்ரேல் ராணுவம் சுட்டு கொன்றுள்ளது. எல்லையை ஒட்டிய விவசாய நிலத்தில் ஃபலஸ்தீனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. காயமடைந்த அனைவரும் விவசாய வேலைகளுக்காக சென்றவர்கள் என்று காஸ்ஸா எமர்ஜென்ஸி சர்வீஸ் செய்தி தொடர்பாளர் அத்ஹம் அபூ ஸல்மியா கூறுகிறார். தலையில் குண்டு பாய்ந்து அப்துல் ஹாதி மரணமடைந்துள்ளார். இஸ்ஸத்தின் அல் கஸ்ஸாமின் கமாண்டர் அஹ்மத் ஜஃபரியை கொலை செய்ததைத் தொடர்ந்து உருவான மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் 160 ஃபலஸ்தீன் மக்களும், ஃபலஸ்தீன் போராளிகளின் தாக்குதலில் 5 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். 1200 பேருக்கு காயம் ஏற்பட்டது. எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன் பாடு ஏற்பட்டது. ஆனால், அதனை மீறும் வகையில் இஸ்ரேல் அடாவடி தாக்குதலை நடத்தியுள்ளது. இது தெளிவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். ஃபலஸ்தீன் விவசாயி ஒருவரை கொலை செய்த சம்பவத்தை இஸ்ரேல் இதுவரை உறுதி செய்யவில்லை. இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது. அதே வேளையில், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்ய தலைமை வகித்த எகிப்து அதிகாரிகளுடன் இதுக்குறித்து பேசப் போவதாக ஹமாஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இரண்டு ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்த இரவில் 15 வயதான நாதிர் அபுமகாஸிபை இஸ்ரேல் ராணுவம் அநியாயமாக சுட்டுக்கொன்றது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


இந்திய வரலாற்றில் முதன் முறையாக உளவுத்துறைக்கு முஸ்லிம் ஒருவர் தலைவர் ஆகிறார்!...


புலனாய்வுத் துறையின் இயக்குநராக எஸ். ஆசிப் இப்ராஹிம் நியமிக்கப்பட உள்ளார். இத்தகைய உயரிய பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். 1977ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இப்போது புலனாய்வுத்துறை இயக்குநராக உள்ள நேச்சல் சாந்துவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிகிறது. ஆசிப் நியமனம் தொடர்பான உத்தரவு திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியாகும். இவரது நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


கஷ்மீரியாக இருப்பதால் குற்றவாளி என்பது அரசின் வரைவிலக்கணம்!-சி.ஆர்.பி.பி குற்றச்சாட்டு!...


கஷ்மீரை சார்ந்தவர் என்றால் குற்றவாளி தான் என்று அரசு வரைவிலக்கணம் வகுத்துள்ளது என்பதற்கு ஆதாரம் தான் லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கு என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபடும் சி.ஆர்.பி.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று சி.ஆர்.பி.பியின் செயல் தலைவர் எஸ்.ஏ.ஆர் கிலானி, பொது செயலாளர் அமீத் பட்டாச்சார்யா, மக்கள் தொடர்பு செயலர் ரோணா வில்ஸன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 10 கஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஊடகங்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் நடந்து கொண்டன. ஆனால், இவ்வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரின் மரண தண்டனையை 16 வருடங்களுக்குப் பிறகு டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள செய்திக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று சி.ஆர்.பி.பி குற்றம் சாட்டியுள்ளது. ஊடகங்களின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டோருக்கு தண்டனை வழங்கியது. மூன்று பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இதர இரண்டு நபர்கள் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அதே வேளையில் இவ்வழக்கில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நான்கு பேரை 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலை செய்துள்ளது. 14 ஆண்டுகள் இவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இது நீதிபீடம் மற்றும் அரசின் கிரிமினல் குற்றமாகும். தற்பொழுது 16 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் 2 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஒருவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. குண்டு வெடிப்பு வழக்கை போலீஸ் சரியான முறையில் விசாரிக்கவில்லை என்றும், போதிய ஆதாரங்களை சேகரிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது புலனாய்வு ஏஜன்சிகள் சட்டத்தை மீறுகின்றார்கள் என்பதற்கான ஆதாரமாகும். கஷ்மீரியாக இருப்பதே குற்றம் என்ற அரசின் வரைவிலக்கணத்திற்கு இதனை ஆதாரமாக கருதலாம். இவ்வாறு கஷ்மீர் இளைஞர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. கஷ்மீரிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களும், அரசும் பிரச்சாரம் செய்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக சீர்திருத்தவாதிகளும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரும் குரல் எழுப்ப வேண்டும். வகுப்புவாதமயமாக்கப்பட்ட புலனாய்வு ஏஜன்சிகளும், ஊழலில் மூழ்கிய நீதிக் கட்டமைப்பும், அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் ஊடகங்களும் கஷ்மீரிகளுக்கு கொடுமை இழைக்கின்றன. மரண பீதியில் 2 ஆண்டுகள் சிறையில் இருப்பது ஒரு சித்திரவதையாகும். முன்னர் அமல்படுத்திய மரண தண்டனைகள் தவறானது என்று உச்ச நீதிமன்றமே ஒத்துக்கொண்டது. முன்னேற்றமடைந்த நாடுகள் தடை செய்த மரண தண்டனை காரியத்தில் இந்தியா, எதிரான முடிவை எடுத்துள்ளது. மரண தண்டனை ரத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை அங்கீகரிக்க இந்தியா தயாரில்லை. இந்த தீர்மானத்தில் கையெழுத்திட இந்திய அரசை நிர்பந்திக்கும் பொறுப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு உண்டு என்று சி.ஆர்.பி.பி கூறியுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:



நம்பிக்கையாளர் முர்ஸிக்கும் ஆயுதம் அளித்த 


ஈரானுக்கும் நன்றி : ஹமாஸ்


பலஸ்தீன சுயாட்சி பகுதியான காஸாவில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள சூழலில் காஸாவை ஆளும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இஸ்மாயில் ஹனியா “ காஸாவின் வெற்றி தெளிவானது. எகிப்தின் குரல் ஓங்கியுள்ளது. அமெரிக்கா புதிய மொழியை கேட்க தொடங்கியுள்ளது. இவ்வெற்றிக்காக எம் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் எகிப்துக்கும் அதன் நம்பிக்கையாளர் பிரதமர் முர்ஸிக்கும் எமது சிறப்பு நன்றிகள் உரித்தாகட்டும். எமக்கு ஆயுத உதவி செய்த அனைவர்க்கும் குறிப்பாக ஈரானுக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்” என்றார். மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு தற்போதைய மாறிய அரசியல் சூழலை கணக்கில் எடுக்காதது மிகப் பெரும் பின்னடைவாக இஸ்ரேலுக்கு மாறியது என்ற ஹனியா அதற்கு காரணமாக இஸ்ரேலுக்கு உதவி புரியும் தலைமைகள் மாறி போனதே என்றார். எமது எதிரி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கும் வரை தாமும் மதிப்போம் என்று கூறிய இஸ்மாயில் ஹனியா எதிரி எந்தளவு ஒப்பந்தத்தை மதிக்கிறது என்பதை எகிப்தின் மூலம் தெரிந்து கொள்வோம் என்றும் கூறினார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிரிய எதிர்க்கட்சிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இஸ்லாமிய போராளி குழு  அறிவிப்பு
  

 
சிரிய எதிர்க்கட்சி கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இஸ்லாமிய போராளி குழு அறிவித்துள்ளனர்.

மேற்குலக நாடுகளின் பின்புலத்துடன் இயங்கும் எதிர்க்கட்சியினரை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அலப்பு நகரிலிருந்து இயங்கும் இஸ்லாமிய ஆயுதக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சிரியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதே தமது நோக்கம் என இஸ்லாமிய போராளி  குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இணையம் ஊடாக வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிய எதிர்க்கட்சிக் கூட்டமைப்பிற்கு உலகின் பல நாடுகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.

திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் சிரியாவில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்க இஸ்ரேல் திட்டமா?

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரேரணை எதிர்வரும் 29ம் திகதி ஐ.நா சபையில் வாக்கெடுப்புக்கு வருகின்றது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் 156 போராளிகளின் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை மேற்கொண்டதில் சிறுவர்கள் உட்பட பாலஸ்தீனியர்கள் பலியானதாகக் கூறப்படுகின்றது.
மேலும் ஹமாஸ் இயக்க இராணுவத் தலைவர் அகமட் அல் ஜபரி உம் இன்னும் இரு வீரர்களும் பலியாகியுள்ளனர்.
இதேவேளை 'ஆப்பரேஷன் பில்லார் ஆஃப் டிஃபென்ஸ்' எனப்படும் ஹமாஸ் இயக்கத்தினரின் தாக்குதலில் இதுவரை மொத்தம் 245 ராக்கெட்டுக்கள் இஸ்ரேலின் மீது பாய்ந்துள்ளன.
இதற்கிடையில் எதிர்வரும் 29ம் திகதி பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரேரணை ஐ.நா சபையில் வாக்கெடுப்புக்கு வருகின்றது.
எனவே பாலஸ்தீனம் மீது தாக்குதலை இஸ்ரேல் அதிகப்படுத்துவது மத்திய கிழக்கில் மறுபடியும் அமைதியின்மையைக் கொண்டு வருவதற்கே என உலக நாடுகள் கருதுகின்றன.
இன்னொரு புறம் பாலஸ்தீனத்தின் தன்னிகரற்ற தலைவர் யாசீர் அரஃபாதை பொலோனியம் எனும் நஞ்சை ஊட்டி இஸ்ரேலே கொலை செய்தது எனும் சந்தேகமும் வலுத்து வருவது பாலஸ்தீனியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாரக் ஒபாமா மீண்டும் அதிபரானதால் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவும் குறைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். 

                                                                                                                            4:75

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பாலஸ்தீனம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலியர்களே எதிர்ப்பு போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 06:01.18 மு.ப GMT ]
பாலஸ்தீனம் மீதான இராணுவ தாக்குதலுக்கு இஸ்ரேலிய மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டு மக்கள் தலைநகர் டெல் அவிவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் 8 குழந்தைகள் ஒரு கர்ப்பினி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இஸ்ரேலில் தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து எதிர்ப்பு வலுபெற்றுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

பாகிஸ்தான் ரெயில்வேயை லாலுவிடம் ஒப்படைக்கலாம் !


பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் தேசிய சபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, ரெயில்வே செயல்பாடுகள் தொடர்பாக தொடர்பான கேள்விகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நோமன் இஸ்லாம் ஷேக் பதில் அளித்தார். அப்போது, 'ரெயில்வேயை மேம்படுத்தி லாபகரமாக நிர்வகிக்க புதிய என்ஜின்கள் வாங்க வேண்டும். 69 ரயில் என்ஜின்கள் வாங்குவதற்கு ரெயில்வே துறை டெண்டர் விட்டுள்ளது. உற்பத்தி அல்லாத செலவுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வரவுக்கேற்ப செலவு செய்யப்படும். 2010-2011 நிதியாண்டிற்கு ரெயில்வேயின் நிதி தேவை ரூ.1100 கோடி. ஆனால் ரூ.600 கோடி தான் கிடைத்தது. தேசிய வங்கியிடம் கடன் பெற்று, 96 என்ஜின்கள் பழுது பார்க்கப்படும். இருப்பினும் ரெயில்வேயை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை’ என்று ஷேக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முட்டாஹிதா குவாமி இயக்க உறுப்பினர், ‘ரெயில்வே நிர்வாகத்தில் உள்ள எண்ணற்ற பிரச்சினைகளை அரசால் சமாளிக்க முடியாவிட்டால், ரெயில்வே பொறுப்பை முன்னாள் இந்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவிடம் ஒப்படையுங்கள்’ என்று ஆவேசமாக கூறினார்.

நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் ரெயில்வே துறை பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ரெயில்கள் பற்றாக்குறை, எரிபொருள் மற்றும் உதிரி பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

காங்கோ: போராளிகள் மீது ஐ.நா. விமானப்படை தாக்குதல்


 காங்கோ நாட்டில் கடந்த ஒரு மாதமாக எம்.23 போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த 15-ம் தேதி வடக்கு கிவு மாகாணத்தில் நடந்த மோதலில் 113 போராளிகள் கொல்லப்பட்டனர். காங்கோ தலைநகர் கோமாவில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ருகாரி என்ற இடத்தில் நேற்ற போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே வெடித்த நேரடி மோதலில் 151 போராளிகள் கொல்லப்பட்டனர்.

2 ராணுவ உயர்அதிகாரிகள் பலியாகினர். எம்.23 போராளிக் குழுவை உகாண்டாவும், ருவாண்டாவும் ஆதரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டி வருகின்றது. இதனை அந்நாடுகள் மறுத்து வருகின்றன. நேற்று நடைபெற்ற மோதல்களை தொடர்ந்து ஐ.நா. படையின் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

'மோனுஸ்கோ' என பெயரிடப்பட்டுள்ள ஐ.நா. படையின் தாக்குதல் ஹெலிகாப்டர்கள், இன்று காலை கிகும்பா என்ற இடத்தில் உள்ள போராளிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் குறித்து வடக்கு கிவு மாகாண கவர்னர் கூறுகையில், 'ருவாண்டா ராணுவத்தில் ஆதரவு பெற்ற 3 ஆயிரத்து 500 எம்.23 போராளிகள் இன்று அதிகாலை ராணுவத்தளம் மீது ஆவேச தாக்குதல் நடத்தினர்.

அதற்கு பதிலடியாக, மோனுஸ்கோ ஹெலிகாப்டர்கள் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளன' என்றார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

தொடரும் இஸ்ரேலின் அராஜகம்  கொல்லப்படும் அப்பாவி முஸ்லிம்கள் .........


காஸாவின் மீது இஸ்ரேல் ராக்கெட் மழை!!: 24 மணித்தியாலத்தில் 300 ராக்கெட் தாக்குதல்
  



இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் சுயாட்சி  பகுதியான  காஸாவின்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹமாஸ் இராணுவத் தலைவரான அகமத் அல் ஜபாரியை கொலை செய்திருக்கிறது.

‘அடுத்தக் கட்ட தாக்குதல்களுக்காக தரைப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஏவுகணை தாக்குதல் விரிவான தாக்குதல்களுக்கான முன் தயாரிப்புதான்’ என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேலிய கடற்படையின்  போர்க்கப்பல்கள் காஸா பகுதி மீது குண்டு வீச்சு நடத்தியிருக்கின்றன.

இந்தத் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வரும் ஜனவரி  மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேலின் முன்னணி நாளிதழ் ஹாரெட்ஸ் கூறுகிறது. ‘தேர்தலுக்கு முன்பு தன்னை உறுதியானவராகக் காட்டிக் கொள்ள நெதன்யாகு தாக்குதல்களுக்கு உத்தரவிடுவார்’ என்று அந்த நாளிதழ் திங்கள் கிழமை கணித்திருந்தது.

ஹமாஸ் கட்டளை தளபதிலைய கொலை செய்த வான் தாக்குதல் காட்சி (ஏரியல் விஷன்)Israeli Airforce Kills Top Hamas Commander Ahmed Al-Jabari


அமைதி பேச்சு   வார்த்தைகளை வேண்டுமென்றே இழுத்தடிக்கும்   இஸ்ரேலின் போக்கினால்   வெறுப்படைந்த பாலஸ்தீனிய ஆணையம், நவம்பர் 29-ம் தேதி ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கிறது. 1967 போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக்கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதற்கான முதல் நடவடிக்கையாக அது இருக்கும். அதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

‘அமைதி’க்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். பிரதமர் நெதன்யாகுவிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி ‘இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்’ என்று உறுதியளித்திருக்கிறார்.

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து எகிப்து இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்ப அழைத்திருக்கிறது. ‘இந்த பயங்கரவாத தாக்குதலை ஐநா சபையில் விவாதிக்க வேண்டும்’ என்று கோரியிருக்கிறது. எகிப்து நாட்டில் இஸ்ரேலுடன் நட்பாக இருந்த அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் ஹோஸ்னி முபாரக் அரசு சென்ற ஆண்டு பிப்ரவரியில் வீழ்த்தப்பட்டது. இப்போது ஹமாஸ் அமைப்புடன் நெருக்கம் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சியில் உள்ளன.

ஈரானிய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதல்களை கண்டித்திருக்கிறார்.

பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமித்து தனது நாட்டை உருவாக்கிக் கொண்ட இஸ்ரேல், மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களின் உரிமைகளை மறுப்பதோடு, அவர்களின் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்கி வருகிறது. லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை சொந்த நாட்டிலேயே கைதிகளாக சிறை வைத்து பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கொடுமைப் படுத்தி வருகிறது.

பேச்சு வார்த்தை மூலம் சமாதானத்துக்கு முயற்சித்தவர்களையும் இசுரேலின் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக தோன்றிய போராளி  அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களையும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்களையும் கொலை செய்து வருகிறது இஸ்ரேல்.

2008-ம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீன பகுதிகள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் மூலம் 1,400 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தது.பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பாலஸ்தீனம் மீது 5வது நாளாக தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்


 Israel Strikes Media House Gaza On Fifth Day

Israel launches air raids on Gaza, ...
காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் இன்று 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8 குழந்தைகள் உட்பட 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்தார். ஹமாஸ் இயக்கத் தலைமையகம் மற்றும் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை நிர்மூலமாகின. இதில் 6 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர்.
காசா பகுதியிலிருந்தும் பல நூறு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று 5-வது நாளாக அதிகாலை முதலே வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்த கொடுந்தாக்குதலுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்லும் போராட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலுக்கு எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


செக்ஸ் லீலையில் சிக்கிய சி.ஐ.ஏ. முன்னாள் தலைவரை கல்லால் அடிச்சு கொல்லனும்...: தலிபான்கள் கருத்து


 Amused Taliban Calls Stoning Cia Chief To Death வாஷிங்டன்: செக்ஸ் புகாரில் சிக்கி அதிகாரமிக்க பதவியை பறிகொடுத்திருக்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் தலைவர் பெட்ராய்ஸை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்று தலிபான்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
பெட்ராய்ஸ்தான் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் நேட்டோ படைகளின் கமாண்டராகவும் இருந்தவர். அவர் பதவியை பறிகொடுத்திருக்கும் நிலையில் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தலிபான்கள் தரப்பில் கருத்து கேட்டிருக்கின்றன. பெயர் வெளியிட விரும்பாத தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'எல்லா அமெரிக்கர்களும் இப்படித்தான் இது ஒன்றும் புதிதல்ல' என்று கூறியிருக்கிறார்.
இதேபோல் ' பஸ்துன் இனக் குழுவின் பார்வையில் இந்த மாதிரி தப்பு செய்கிறவர்களை அவரது உறவினர்களே சுட்டுக் கொல்லனும் என்றும் ஷரியா சட்டத்தின் பார்வையில் இத்தகைய செயலுக்கு கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் அமெரிக்கர்களும் மேற்கத்திய நாடுகளும் கட்டுபாடுகளற்ற பாலுறவு சமூகத்தினராக வாழ்கின்றனர். அவர்களிடம் இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் தலிபான் தளபதி ஒருவர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

முதலில் தன்  நாட்டை சுத்தம் செய்யட்டும் பிறகு  மற்ற நாட்டை சுத்தம் செய்யவும்.....



இது  தான்  அமெரிக்காவின் லச்சணம் 



அமெரிக்க விமான படையில் 50 பெண்களை கற்பழித்த அதிகாரிக்கு 20 ஆண்டு சிறை!


லேக்லாண்ட்: அமெரிக்க விமான படையில் பயிற்சிக்கு வந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிகரிக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லேக்லாண்ட் என்ற இடத்தில் விமான படை பயிற்சி தளம் உள்ளது. விமான படைகளுக்கு தேர்வான நபர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. பயிற்சிக்கு வந்த பெண்களிடம், பயிற்சி கொடுக்கும் அதிகாரிகள் தவறாக நடந்து கொள்வதாக ஏராளமான புகார்கள் வந்தன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிகாரி ஒருவர் 35 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பயிற்சி பிரிவின் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பல கட்ட விசாரணையில் இதுவரை 50 பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேசிய பயிற்சி துறை தளபதி எட்வர்ட் ரைஸ், விமான படையில் பாலியல் வன்முறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். பயிற்சிக்கு வந்த பெண்களை சீரழித்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல பெண்களை கற்பழித்த லூயிஸ் வாக்கர் என்ற அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பெண்ணுடன் தொடர்பு: சி ஐ ஏ தலைவர் பதவி விலகல்


ஜெனரல் பெட்ரேயஸ்
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவில் மிகவும் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரி பெட்ரேயஸ் ஆவார்.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ வின் தலைவர் டேவிட் பெட்ரேயஸ், திருமணத்துக்கு வெளியில் உறவு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டு தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பெரிதும் கௌரவிக்கப்பட்ட இராணுவத் தளபதியாகிய பெட்ரேயஸ், இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு தலைமையேற்றிருந்தவர் ஆவார்.
பெட்ரேயஸின் வாழ்க்கைச் சரிதை புத்தகம் ஒன்றை எழுதிய போலா பிராட்வெல் என்ற பெண்ணுடன் பெட்ரேயஸ் தொடர்பு வைத்திருந்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறினர்.
2011ஆம் ஆண்டு வெளியான பெட்ரேயஸின் வாழ்க்கைச் சரிதையை எழுதுவதற்காக ஆப்கானிஸ்தானில் அவருடன் மாதக்கணக்கில் பேசிப் பழகி வந்தவர் போலா பிராட்வெல் ஆவார்.
மேலும் பெட்ரேயஸ் பயின்ற அதே இராணுவப் பயிற்சிப் பள்ளியில் இந்தப் பெண்ணும் பட்டம் பெற்றுள்ளார்.
போலா பிராட்வெல் பற்றி நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப் பி ஐ அதிகாரிகள் நடத்திய ஒரு விசாரணையின்போது பெட்ரேயஸுடன் அவருக்கிருந்த உறவு பற்றி தெரியவந்தது.
பெட்ரேயஸ் பற்றி தான் எழுதிய புத்தகத்துடன் போலா பிராட்வெல்
பெட்ரேயஸ் பற்றி தான் எழுதிய புத்தகத்துடன் போலா பிராட்வெல்
தொடர்பு இருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ள ஜெனரல் பெட்ரேயஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
37 ஆண்டுகள் திருமண வாழ்க்கை வாழ்ந்த பின்னர், திருமணத்துக்கு வெளியில் தொடர்பு வைத்துக்கொள்ள முடிவெடுத்தது ஒரு மோசமான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கணவனாகவும், நாட்டுடைய முக்கிய உளவு அமைப்பின் தலைவர் என்ற நிலையிலும், தான் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தவறு என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு வெளியில் உறவு வைத்துக்கொள்வது என்பது சாதாரணமாக ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விவகாரமானாலும் நாட்டின் மிக முக்கிய ரகசியங்களுக்கு பொறுப்பானவர் என்ற ஒரு பதவியில் இருக்கும்போது அந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படாது.
பெட்ரேயஸின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட அதிபர் ஒபாமா, தேசப் பற்றுடனும் அர்ப்பணிப்புடனும் அமெரிக்காவுக்காக தசாப்த காலங்களாக பணிபுரிந்தவர் ஜெனரல் பெட்ரேயஸ் என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கான தலைமைத் தளபதியாக இருந்த பெட்ரேயஸ், சென்ற வருட மத்தியில் அப்பொறுப்பிலிருந்து சி ஐ ஏ உளவு அமைப்பின் தலைவராக அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் செல்வதற்கு முன்பாக இராக்கில் சர்வதேச படைகளின் தலைமைத் தளபதியாகவும் இவர் பங்காற்றியுள்ளார்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


அரஃபாத்துக்கு விஷம் வைத்தார்களா? பரிசோதனைக்காக உடலைத் தோண்டியெடுக்க ஆயத்தம்


யாசர் அரஃபாத் கல்லறை
யாசர் அரஃபாத் கல்லறை
பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யாசர் அரஃபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் ஊகங்கள் சரியா தவறா என்று தீர்மானிக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஆயத்தமாக அவருடைய கல்லறைக்கு பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு காரணம் இன்னதென்று தெரியவராமல் பிரான்சின் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த யாசர் அரஃபாத் மேற்குக் கரையின் ரமல்லா நகரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.
யாசர் அரஃபாத் பயன்படுத்திய உடைகளிலும் பொருட்களிலும் கதிரியக்க வீரியம் கொண்ட பொலோனியம் என்ற இரசாயனம் அதிகமாக காணப்பட்டது என்று கண்டறியப்பட்டதை அடுத்து அரஃபாத் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற நோக்கில் கடந்த ஆகஸ்டில் பிரான்ஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அரஃபாத்தின் கல்லறையைத் தோண்டி உடல் எச்சங்களில் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


பெண்ணுக்கு "முறையற்ற" மின் அஞ்சல்: அமெரிக்க தளபதி மீது விசாரணை



பெட்ரேயஸுடன் ஜெனரல் ஜான் அல்லென்
ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் சி ஐ ஏ தலைவராக ஆன பின்னர் ஆப்கானிலுள்ள அமெரிக்க படைகளின் தலைமைத் தளபதியாக வந்தவர் ஜெனரல் ஜான் அல்லென்
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் ஜான் அல்லென் மீது அமெரிக்க பாதுகாப்புத் துறை விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் தலைவர் பதவியில் இருந்து டேவிட் பெட்ரேயஸ் அண்மையில் விலக காரணமான விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஜில் கெல்லி பெண்ணுடன் முறையற்ற தொடர்பாடல்களை ஜெனரல் ஜான் அல்லென் செய்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்போது விசாரிக்கப்படுகிறார்.
தான் தவறேதும் செய்யவில்லை என்று ஜெனரல் அல்லென் கூறுகிறார்.
தன்னை நோகடிக்கும் விதமான மொட்டைக் கடிதங்கள் மின் அஞ்சலில் வருவதாக புளோரிடாவில் அமெரிக்க இராணுவ தளம் ஒன்றில் தன்னார்வலராக வேலைபார்த்துவரும் ஜில் கெல்லி எஃப் பி ஐ யிடம் முறைப்பாடு செய்தார்.
இந்த மின் அஞ்சல்கள் யாரிடம் இருந்து வருகின்றன என்று எஃப் பி ஐ ஆராய்ந்தபோது அவை பெட்ரேயஸின் வாழ்க்கைச் சரிதைப் புத்தகத்தை எழுதிய போலா பிராட்வெல் என்பவரிடம் இருந்துவருவதாக கண்டுபிடிக்கப்பட்டது.
போலா பிராட்வெல்லின் மற்ற மின் அஞ்சல்களை ஆராய்ந்தபோதுதான் அவருக்கும் ஜெனரல் டேவிட் பெட்ரேயஸுக்கும் இடையில் தொடர்பு இருந்தது வெளியே வந்தது.
உறவு இருந்ததை ஒப்புக்கொண்டு சி ஐ ஏ தலைவர் பதவியிலிருந்து ஜெனரல் பெட்ரேயஸ் விலகியிருந்தார்.
ஜெனரல் அல்லென் ஜில் கெல்லிக்கு அனுப்பிய மின் அஞ்சல்கள் பாலியல் விவகாரம் சம்பந்தப்பட்டவையா அல்லது வெளியே தெரிவிக்கக்கூடாத விவகாரங்களா என்று இன்னும் தெரியவரவில்லை.
இதனிடையே போலா பிராட்வெல்லின் வீட்டை எஃப் பி ஐ அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
விசாரணைகள் நடந்தாலும் ஜெனரல் அல்லென் ஆப்கானில் தளபதியாக நீடிப்பார் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா அறிவித்துள்ளார்.
ஆனால் ஐரோப்பாவில் நேட்டோ கூட்டு படைகளின் அதியுயர் கட்டளைத் தளபதியாக ஜான் அல்லென் தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்த முடிவுதான் தற்போது ஒத்திப்போடப்பட்டுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்த நைஜீரிய மாணவிகள்! (பட இணைப்பு)
  

 
சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்த நைஜீரிய மாணவிகள்! (பட இணைப்பு)

சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவைச் சேர்ந்த 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

உலகத்தின் சில இடங்களில் மின்தடை பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதற்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் இவர்களின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது.

நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடு. ஆனால் இங்கு மின்சாரம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

பல பகுதிகள் இன்னும் மின்சாரத்தைக் காணாமலேயே இருக்கின்றன. பலருக்கு மின்சாரத்தைப் பார்த்தே பல காலமாகி விட்டதாம்.

இந்த நிலையில்தான் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மக்கள் மனதில் பால் வார்த்துள்ளனர்.

லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர்.

சிறுநீரை முதலில் இவர்கள் நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கின்றனர்.

பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகிறது.

அங்கு ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுகிறது. பின்னர் அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது.

அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.

நைஜீரிய இளம் மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு நைஜீரியாவில் இப்போது பெரும் பேச்சாக மாறியுள்ளதாம்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


 விமான பணிப்பெண்கள் முக்காடிட்டு கொள்ள எகிப்து அரசு உத்தரவு

  
விமான பணிப்பெண்கள் முக்காடிட்டு கொள்ள எகிப்து அரசு உத்தரவு
விமான பணிப்பெண்கள், தலைமுடியை மறைக்கும் விதத்தில், முக்காடிட்டு பணிக்கு வர வேண்டும்,'' என எகிப்து அரசு, வலியுறுத்தியுள்ளது.எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் ஆட்சியில் இருந்தவரை, முஸ்லிம்களுக்கான கட்டுப்பாடுகள் ஏதும் பெரிய அளவில் விதிக்கப்படவில்லை. மக்கள் புரட்சி மூலம், கடந்த ஆண்டு, முபாரக், ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றது. முகமது முர்சி அதிபராகியுள்ளார்.
இந்த ஆட்சியில், முஸ்லிம் ஷரியத்  கொள்கைகள் அதிகம் பின்பற்றப்படுகின்றன. "டிவி' நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பர்தா அணிய வேண்டும் என, வற்புறுத்தப்பட்டுள்ளது."தற்போது, விமானப்பணி பெண்களும், தலைமுடியை மறைக்கும் விதத்தில் முக்காடிட்டு பணிக்கு வர வேண்டும்' என,உத்தரவிடப்பட்டுள்ளது .எகிப்து விமானத் துறையில், 900 பணி பெண்கள் உள்ளனர். இவர்கள், பணியில் இருக்கும் போது, முக்காடிட்டு கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

இராணுவத்தை பலப்படுத்த ஈரான் போர் ஒத்திகை: 8 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
  

 
இராணுவத்தை பலப்படுத்த ஈரான் போர் ஒத்திகை: 8 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக சந்தேகம் கொண்ட இஸ்ரேல் அடிக்கடி மிரட்டல் விடுத்து வருகிறது.
இதனால் நவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை தயாரித்து இராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈரான் இறங்கி உள்ளது.
கடந்த 1ஆம் திகதி சர்வதேச கடல்பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் போர் விமானம் சுட்டதாக பென்டகன் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில் ஈரான் மிகப்பெரிய அளவில் விமானப்படை போர் ஒத்திகையை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பாதி நிலப்பரப்புக்கு ஒப்பான கிழக்கு பகுதியில் இந்த ஒத்திகை நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஒத்திகையில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுகிறார்கள் என்றும், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள், குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:

 சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
  

 
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலின் அண்டை நாடான சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. போராளிகளும், ராணுவத்தினரும் ஒருவர் மீது மற்றொருவர் ஏவுகணை வீசி தாக்கிக் கொள்வது அன்றாட வாடிக்கையாகி விட்டது.
சில ஏவுகணைகள் இலக்கு தவறி அண்டை நாடான இஸ்ரேல் பகுதிக்குள் விழுவது உண்டு. இது, தற்செயலாக நடந்த விபத்து என கருதி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று சிரியா மீது இஸ்ரேல், முதன்முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
1967-ம் ஆண்டு சிரியாவுடன் போரிட்ட இஸ்ரேல், சிரியாவிடமிருந்து கோலன் என்ற பகுதியை கைப்பற்றி, தனது நாட்டு எல்லையுடன் இணைத்துக் கொண்டது. இந்த பகுதிக்குள் சிரியாவிலிருந்து ஒரு மர்மப்பொருள் வந்து விழுந்தது.
இதற்கு  இஸ்ரேல் சிரியா மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments:


ஆப்கானிஸ்தானிலி்ருந்து படைகளை வாபஸ் பெற ஒபாமாவுக்கு தலிபான் போராளி இயக்கம்  எச்சரிக்கை....




காபூல்: அமெரிக்கா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு தலிபான் போராளி இயக்கம்  இணையத்தளம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் மூலம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில்,

மீண்டும் அதிபாராகி இருக்கும் ஒபாமாவுக்கு ஒன்றை நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணில் உங்கள் படைகள் தோல்வி அடைந்து உள்ளன. அதை நீங்கள் உடனே ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே அமெரிக்க படைகளை உடனடியாக இங்கிருந்து வாபஸ் பெற வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் என்ன நிலைமை நிலவுகிறது என்பதை ஒபாமா புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பொய் சொல்லி உலகத்தை ஏமாற்ற நினைக்கக் கூடாது.
எங்கள் புனித பூமியில் இனிமேலும் உங்கள் படைகள் இருக்கக் கூடாது. இனியாவது உலக போலீஸ்காரர் போல அமெரிக்கா செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: