Facebook Twitter RSS

மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்க இஸ்ரேல் திட்டமா?

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரேரணை எதிர்வரும் 29ம் திகதி ஐ.நா சபையில் வாக்கெடுப்புக்கு வருகின்றது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் 156 போராளிகளின் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை மேற்கொண்டதில் சிறுவர்கள் உட்பட பாலஸ்தீனியர்கள் பலியானதாகக் கூறப்படுகின்றது.
மேலும் ஹமாஸ் இயக்க இராணுவத் தலைவர் அகமட் அல் ஜபரி உம் இன்னும் இரு வீரர்களும் பலியாகியுள்ளனர்.
இதேவேளை 'ஆப்பரேஷன் பில்லார் ஆஃப் டிஃபென்ஸ்' எனப்படும் ஹமாஸ் இயக்கத்தினரின் தாக்குதலில் இதுவரை மொத்தம் 245 ராக்கெட்டுக்கள் இஸ்ரேலின் மீது பாய்ந்துள்ளன.
இதற்கிடையில் எதிர்வரும் 29ம் திகதி பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரேரணை ஐ.நா சபையில் வாக்கெடுப்புக்கு வருகின்றது.
எனவே பாலஸ்தீனம் மீது தாக்குதலை இஸ்ரேல் அதிகப்படுத்துவது மத்திய கிழக்கில் மறுபடியும் அமைதியின்மையைக் கொண்டு வருவதற்கே என உலக நாடுகள் கருதுகின்றன.
இன்னொரு புறம் பாலஸ்தீனத்தின் தன்னிகரற்ற தலைவர் யாசீர் அரஃபாதை பொலோனியம் எனும் நஞ்சை ஊட்டி இஸ்ரேலே கொலை செய்தது எனும் சந்தேகமும் வலுத்து வருவது பாலஸ்தீனியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாரக் ஒபாமா மீண்டும் அதிபரானதால் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவும் குறைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். 

                                                                                                                            4:75

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: