Facebook Twitter RSS

“டாக்டர் நஸ்ருத்தீன் ஹக்கானி” சுட்டுக்கொலை - “ஹக்கீமுல்லாஹ் மசூத்தின்” கொலைக்கு பின்னர் நடக்கும் இரண்டாவது இழப்பு !

 
மௌலவி ஜலாலுத்தீன் ஹக்கானி. ஆப்கானிஸ்தானின் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்ககு எதிரான விடுதலை போரின் முதன்மையான தலைவர்களில் முக்கியமானவர். நஜீபுல்லாஹ் அரசு கவிழ்க்கப்பட்டு சோவியத் யூனியன் தன் படைகளை வாபஸ்பெற்ற பின்னர் பல போராட்ட குழுத்தலைவர்கள் தங்கள் ஆயுத போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர். மௌலவி யூனிஸ் காலிஸ் அணியினரை உதாரணமாக குறிப்பிடலாம். தலிபான்களின் எழுச்சிக்குப்பின் மேலும் சில தலைவர்கள் களத்தில் இருந்து காணமலே போய் விட்டனர். அவர்களில் ஒருவர் ஹிஸ்பி இஸ்லாமியின் தலைவர் ஹிக்மதியார். ஈரானில் தஞ்சமடைந்ததுடன் அவர் கதை முடிந்தது. ஆனால் இன்று வரை அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடும் ஒரு தலைவரே ஹக்கானியாவார். அமெரிக்கா “ஹக்கானி நெட்வோர்க்” என இவரது அணியை அழைக்கிறது. ஹக்கானி அவர்களின் மூத்த புதல்வர் டாக்டர் நஸ்ருதீன் ஹக்கானியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 



கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள ராவல்பிண்டி நகரில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாண் விற்பனை செய்யும் ஒரு பேக்கரியின் வாயலில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் இவரது உடல் சல்லடையாக துளைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோக முறையானது இவரது மரணத்தின் அத்தியாவசியத்தை வெகுவாக உணர்த்தி நிற்கின்றது. 

இவரின் சகோதரர் பதுருதீன் ஹக்கானி கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க ட்ரொன் தாக்குதில் கொல்லப்பட்டிருந்தார். ஹக்கானி அணியின் கட்டளைத்தளபதியாக செயற்பட்டவர் அவர். இப்போது இன்னொரு சகோதரரான “சிராஜுதீன் ஹக்கானி” தற்போது தலைமைத்துவ செயற்பாட்டில் இயங்கி வருகிறார் தனது தந்தையின் வழிநடாத்தலுடன். 

அமெரிக்கா குறிப்பிடும் ஹக்கானி நெட்வோர்க்கின் நிதி கையாள்கையும் கட்டுப்பாடும் டாக்டர் நஸ்ருதீன் ஹக்கானியினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. டோகா கட்டாரில் அமையவிருநத்த தலிபான் அலுவலகம் தொடர்பான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவுடன் நடாத்தப்படவிருந்த பேச்சுவார்த்தைகளிலும் முன்னணி செயற்பாட்டாளராக இவரே விளங்கினார். 

அவரது உடல் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மீரான் ஷா எனும் அவர்களின் ஆதரவு பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தை போல வசிரிஸ்தானில் தனது செயற்பாடுகளையோ அல்லது வதிவிடத்தையோ அமைக்காமல் இஸ்லாமாபாத்தில் தனது அமைவிடத்தை தேர்ந்திருந்தார் டாக்டர் நஸ்ருதீன் ஹக்கானி. இது அவரிற்கு பல நாடுகளிற்கும் விஜயம் செய்து நிதிகளை வசூலிக்கவும் பல நாட்டு தலைவர்களையும் ஆதரவாளர்களையும் சந்திக்கவும் வாய்ப்பான தளமாக அவரிற்கு இருந்தது. 

இவர் எந்தவொரு புகைப்படத்திலும் தான் தோன்றாதவாறு பார்த்துக்கொண்டவர். மிக வசதிபடைத்த மனிதர்கள் அணியும் ஆடைகளையும் பெறுமதிக்க வாகனங்களையும் பயன்படுத்தி வந்தார். ஆப்கானின் ஒரு முரட்டு தலிபானிய கோலத்திற்கு 100 சதவிகிதம் மாற்றமான தோற்றப்பாட்டை இவர் மேற்கொண்டிருந்தார். யாருக்கும் இவர் ஹக்கானியின் புதல்வர் என்பது தெரியாது. அவரது உயர்கல்விக்கே உரித்தான நாகரீக நடத்தையுடன் அவர் செயற்பட்டு வந்தார். 

இவரது மரணம் ஹக்கானி நெட்வோர்க்கில் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தரீக் ஏ தலிபான் தலைவர் “ஹகீமுல்லா மசூதின்” மரணத்தின் பின்னர் ஆப்கானிய போராட்டத்திற்கு ஏற்பட்ட இன்னொரு பேரிழப்பு இவரது மரணமாகும். பாகிஸ்தானிய மண்ணில் இவர் இருப்பது பாகிஸ்தானிய உளவமைப்பான ஐ.எஸ்.ஐ.யினரிற்கு நன்றாகவே தெரியும். இவரது அனைத்து நகர்வுகளும் அவர்களால் கண்காணிக்கப்பட்டே வந்துள்ளது. பாகிஸ்தானிய மண்ணில் இவர்  கொல்லப்பட்டமையானது இவரது கொலையின் பின்னணி பற்றிய கேள்விகளை வெகுவாக எழுப்பியுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: