Facebook Twitter RSS

NSA இன் இரகசிய திட்டம் கூகுள், யாகூ தகவல் மையங்களை “மொத்தமாக அணுகும்” திறனைக் கொண்டுள்ளது !!


       தேசியப் பாதுகாப்பு நிறுவனம் (NSA) கூகுள் மற்றும் யாகூ சேவைகளைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான மில்லியன் பேர்களை உளவு பார்த்தது என்று முன்னாள் NSA ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டென் வழங்கிய உள்ஆவணங்களை சுட்டிக்காட்டி நேற்று வாஷிங்டன் போஸ்ட்டில் வந்துள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


உலகெங்கிலும் உள்ள யாகூ மற்றும் கூகுளின் தகவல் சேகரிப்பு வழங்கிகளை இணைக்கும் தொடர்பினை NSA உடைத்து புகுந்துவிட்டது.MUSCULAR, என்று மறைபெயரிடப்பட்டுள்ள (codenamed) திட்டத்தின்கீழ்,பிரித்தானிய அரசாங்க தொடர்புகள் தலைமையகத்துடன் (GCHQ) கூட்டாக இணைந்து இந்த தகவல் சேமிப்பு கணணிகளுக்கு இடையிலான அமெரிக்க மற்றும் அமெரிக்கர் அல்லாத குடிமக்கள் அனைவரினதும் தொடர்புகளை உளவு நிறுவனம் சேகரித்துக் கண்காணித்துள்ளது.

தகவல்களை எடுத்தல் தடையற்று இருப்பதால் NSA இதை முழுமையாக எடுத்தல்மொத்தமாக அணுகுதல் உயர்ந்தளவு என்று குறிப்பிடுகிறது.அனைத்துத் தொடர்புகளும் சேகரிக்கப்பட்டுகுறிப்பிடப்படாத காரணத்தின் அடிப்படையில் தேடப்பட்டுஅவற்றுள் பலவும் NSA நடத்தும் நிரந்தர இருப்பிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

ஒபாமா நிர்வாகமும் மற்றும் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களும் கூறும் அமெரிக்க உளவுநிறுவனங்கள் தனிநபர் உரிமைகளை மதிக்கின்றன,கடுமையான சட்டக் கண்காணிப்பின்கீழ் செயல்படுகின்றன என்னும் கூற்றுக்களை இத்தகவல் இல்லாதொழிக்கின்றதுபிரதிநிதிகள் மற்றத்தின் உளவுத்துறைக்குழுவின் முன்உளவுநிறுவனத்தின் தலைவர் புதன் அன்று வழங்கிய சாட்சியம்ஜேர்மனிய சான்ஸ்ர் அங்கேலா  மேர்க்கெல் மற்றும் ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடைய தொலைபேசிகள்,குறுஞ்செய்திகள் பற்றிய உளவுபார்ப்பு அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து எழுந்த இராஜதந்திர நெருக்கடியை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.இது தவறான தகவல்களையும் பொய்களையும் உள்ளடக்கியுள்ளது.

ஓர் உயர்மட்ட இரகசிய NSA ஆவணம் ஜனவரி 9, 2013 முடிந்த ஒரு மாத காலத்தில் MUSCULAR திட்டம் 181 மில்லியன் புதிய பதிவு ஆவணங்களை மேரிலாந்தில் உள்ள போர்ட் மீட் (Fort Meade) NSA தலைமையகத்திற்கு சேமித்து வைக்க அனுப்பியுள்ளதைக் காட்டுகிறதுஇப்பதிவுகளில் மொத்த தகவல் தரவுகள் அடங்கியுள்ளனஅதாவது அதில்அனுப்புபவர் மற்றும் தகவல்களைப் பெறுபவரின் அடையாளங்கள் அல்லது இருப்பிடம்ஒலிஒளி தொடர்புகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.

கூகுளும் யாகூவும் உலகெங்கிலும் பாரிய தகவல்கள் மையங்களை நடத்துகின்றனதற்செயலாக தகவல் இழப்பு ஏற்படுதல்முழு அமைப்பும் மூடுதலை தவிர்ப்பதற்காக பயன்படுத்துவோர் தகவலைப் பல கண்டங்களிலும் சேகரித்து வைக்கின்றனஇவை பல ஆண்டுகளாக அனுப்பப்படும் மின்னஞ்சல் மற்றும் இணைப்புக்கள் உள்ளடங்கிய முழு  காப்பங்களையும் வேறுபட்ட சேவை வழங்கி கண்ணிகளுக்கு பின் பதிவிற்கு அனுப்புகின்றனஇவற்றை NSA மொத்தமாக சேகரிக்கிறது.

இது உடனடியாக தொடர்புகளில் தலையிடுவதற்கு மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை பின்நோக்கி கண்காணிப்பதற்கும் உதவுகிறது.
பெயர்குறிப்பிட விரும்பாத கூகுள் பொறியியலாளர்கள்கூகுளின் குறியீட்டுச் சொற்களால் மறைத்ததை, NSA எவ்வாறு உடைத்தது என்பது பற்றிய கூகுள் தகவல் சேகரிப்பு முறையான Google Cloud பற்றிய படங்களை செய்தியாளர்கள் காட்டியபோது போஸ்ட்டிடம் இழி சொற்களைக் கொட்டினர்.

NSA உடைய தெளிவான நோக்கம் இவற்றைச் சேகரிப்பது மட்டும் அல்ல,இயன்றளவு அவற்றை நீண்டகாலம் பாதுகாப்பதும் ஆகும் என்று செய்தியாளர் கிளென் கிரீன்வால்ட் ஸ்பெயின் நாட்டு நாளேடான El Mundo விடம் கூறினார்எனவே அவர்கள் எந்த நேரத்திலும் ஸ்பெயினிலோ மற்ற இடத்திலோ இருக்கும் குறிப்பிட்ட குடிமக்களை இலக்கு கொண்டுஅவர்கள் என்ன செய்கிறார்கள்எவருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

போஸ்ட்டினாலும் Politico வினாலும் தொடர்பு கொள்ளப்பட்டபோது NSA  அதிகாரிகள் போஸ்ட் தகவலை மறுக்கவில்லை அல்லது MUSCULAR திட்டத்தின் கூறுபாடுகளை விளக்கவும் இல்லை. NSA செய்தித்தொடர்பாளர்Politico விடம்NSA ஓர் வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனம்நாம் முறையான வெளிநாட்டு உளவுத்துறை இலக்குகள் பற்றி மட்டுமே தகவல்களைக் கண்டுபிடித்துஅதிகரிப்பதில் கவனம் காட்டுகிறோம். என்றார்.

ஆனால் NSA உடைய கூற்றுக்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் கிடையாது.வெளிநாட்டு உளவுத்துறைக் கண்காணிப்பு நீதிமன்றத்தின் (FISA) ஆவணங்கள்,அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஏற்கனவே எப்படி அமெரிக்க குடிமக்கள் பற்றி ஏராளமான தகவல்களை சேகரித்து நீதிமன்றத்தில் அது குறித்து பொய்கூறியுள்ளன என்று காட்டுகின்றன. (பார்க்கவும்: “FISA records documentdaily violations by government spy agencies ”).

NSA உடைய PRISM திட்டத்தின்கீழ் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்திற்கு பயன்படுத்துவோர் தகவலை கொடுத்த கூகுள் மற்றும் யாகூ அதிகாரிகள், NSA இன் இந்த மேலதிக ஊடுருவல் தங்கள் தகவல் மையங்களில் இருப்பது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்றனர்அரசாங்கம் எங்கள் தகவல் மையங்களுக்கு இடையே உள்ள தவகல்களில் தலையீடு செய்கிறது என்னும் குற்றச்சாட்டுக்கள் பற்றி வேதனை அடைகிறோம்இச்செயல் பற்றி எங்களுக்குத் தெரியாது. என்றனர்.

இந்த அறிக்கைஎப்படி அமெரிக்க இராணுவ-உளவுத்துறைப் பிரிவுகள் ஒரு உலகப் பொலிஸ் அரச கண்காணிப்பிற்கான உள்கட்டுமானத்திற்காக குற்றம் சார்ந்த வழிவகைகளை வளர்த்துள்ளது என்பதைக் காட்டும் இன்னொரு அடையாளமாகும்.

செயற்பாடுகளின் பரந்த தன்மை மற்றும் ஐரோப்பிய அரசுகளின் தலைவர்களை அவை இலக்கு கொள்வது ஆகியவை இத்திட்டங்கள் அல்குவேடாவுடன் போரிடவும் மற்றும் பயங்கரவாதத்தின் மீதான போரின்ஒரு பகுதியாகும் என்னும் கூற்றுக்களை பொய்கள் என அம்பலப்படுத்தியுள்ளதுஇவை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மூலோபாய நலன்களுக்கு அச்சுறுத்தல் திறனைக் கொண்டவர்கள் எனக் கருதப்படும் எவரையும் இலக்கு கொள்கின்றனஇதில் ஐரோப்பிய அரசாங்கங்கள் மட்டும் இன்றிஎல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காஐரோப்பாஉலக மக்களும் உள்ளடங்குகின்றனர்.

இச்செயற்பாடுபல ஆண்டுகளாக திமிர்த்தனமாக அமெரிக்கச் சட்டத்தை மீறி நடத்தப்படுகிறது; FISA இரகசிய நீதிமன்றம் பகிரங்கப் பொறுப்போ,கண்காணிப்போ இன்றிச் செயல்படுவது இவ்வாறு கூறியுள்ளது. 2011ல் இதே போன்ற வழிவகைகள் சிறு அளவில் அமெரிக்காவிற்குள் இருக்கும் தகவல் மையங்கள் மீது ஒற்றுக்குக் கையாளப்பட்டபோது, FISA நீதிமன்ற நீதிபதி ஜோன் டி.பேட்ஸ் இத்திட்டம் அமெரிக்க அரசியலமைப்பின் நான்காம் திருத்தத்துடன் பொருந்தியிருக்கவில்லை என்று தீர்ப்பளித்தார்.

பொதுமக்களுக்கு திட்டங்கள் பற்றி உத்தரவாதம் அளிக்க முற்படும் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகள் படிப்படியான தவறான தகவல்கள் அளிக்கும் வகையில் உள்ளதுபுதன் அன்று கொடுக்கப்பட்ட சாட்சியம் கவனத்துடன் கையாளப்படும் சொற்கள் நிறைந்த கூட்டறிக்கைபதிவிற்காக தேசிய உளவுத்துறையின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், NSA  உடைய தலைவர் தளபதி கீத் அலெக்சாந்தர் மற்றும் துணை அரசாங்கத் தலைமை வக்கீல் ஜேம்ஸ் கோல் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கைசெய்தி ஊடகத் தகவல்கள் உளவுத்துறை 215 அமெரிக்க நாட்டுப்பற்று சட்டம் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறைக் கண்காணிப்புச் சட்டத்தின்கீழ் சேகரிப்பது குறித்துபிழையானதை கூறுகின்றன என வலியுறுத்துகிறதுபிரிவு 215ன் கீழ் நடத்தப்படும் உளவில்உளவு நிறுவனங்கள் எந்த தொலைபேசி அழைப்புக்கள் அல்லது பேசுபவர்களை அடையாளம் காணும் தகவலை சேகரிப்பதில்லைதொலைபேசி இருக்கும் இடம் பற்றிய தகவல்களையும் சேகரிக்கவில்லை. 702 பிரிவின்கீழ் நடக்கும் உளவு வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கர் அல்லாதவர்களைத்தான் இலக்கு கொண்டிருக்கிறது.

இக்கூற்றுக்கள் எதுவும் வாஷிங்டன் பாரிய உளவுவேலையில் அமெரிக்க,வெளிநாட்டு இலக்குகளைக் கொண்டுள்ளது என்பதை மறுக்கவில்லைஇந்த அறிக்கைகள் வெற்றுத்தனப் பொய்கள் என்று வைத்துக் கொண்டாலும்,அவற்றின் பொருள் ஒற்றர்கள் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் அமெரிக்க குடிமக்கள்மீது ஒற்று நடத்த பிற போலிச் சட்டபூர்வ நியாயங்களை பயனபடுத்துகின்றனர் என்றுதான் அர்த்தப்படுகின்றது.

கூகுள்யாகூ தகவல்கள் மொத்தமாக எடுக்கப்படுவது குறித்து, NSAஅமெரிக்காவிற்கு வெளியே இந்த கணினி மையங்கள் இருக்கின்றன என்னும் உண்மையை பயன்படுத்தியுள்ளதுஇது பற்றிய விதிமுறைகள் FISA கீழ் வராமல் உயர் ஆணைப்படி நடக்கின்றனஆனால் பிரச்சினைக்குரிய தகவல்கள்நிறுவனத்தின் அமெரிக்க மையங்களில்தான் உள்ளன.

இவ்வளவு அதிகமான அளவிற்கு இணைய தள உள்ளடக்கத்தை சேகரித்தல் அமெரிக்காவில் சட்டவிரோதமாகும் என்று போஸ்ட் எழுதுகிறதுஆனால் செயற்பாடுகள் வெளிநாடுகளில் நடக்கின்றனஅங்கு வெளிநாட்டுத் தகவல் பிணைப்பை உபயோகிப்போர் எவரும் வெளிநாட்டவர் என்று கருதப்படுவதால், NSA அனுமதிக்கப்படுகிறது.

வெளிப்படையான தவிர்ப்புக்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் பொய்கள் இருந்தபோதிலும்காங்கிரஸ் உறுப்பினர்கள் புதன் அன்று உளவுத்துறை தலைவர்களை பாராட்டினர்ஜனநாயகக் கட்சி பிரதிநிதி டஷ் ருப்பெர்ஸ்பேர்கர் உளவுத்துறையை சேர்ந்தவர்களுக்கு நன்றி செலுத்த தான் விரும்புவதாகக்கூறிNSA அமெரிக்காவில் இருக்கும் அமெரிக்கர்களை இலக்கு கொள்ளவில்லைநீதிமன்ற உத்தரவு இல்லாமல் அமெரிக்கர்களை வேறு எங்கும் இலக்கும் கொள்ளவில்லை. என்றார்.
போஸ்ட் வெளிப்பாடுகள் தெளிவாக்குவது போல்ருப்பெர்ஸ்பேர்கரின் கூற்றுக்கள் தவறானவைஇந்த முழு சாட்சியம் கூறலும் பொதுமக்களைத் தவறான திசைக்கு இட்டுச் செல்ல வடிவமைக்கப்பட்ட ஒரு ஏமாற்றுத்தனமாகும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: