Facebook Twitter RSS

“Liwa al-Tawhid“-ன் தலைவரும் பிரதம கொமாண்டருமான Abdul Qader Saleh அவர்கள் மரணம் !!


Liwa al-Tawhid சிரிய போராட்டக்களத்தில் உள்ள இன்னொரு முன்னணி அமைப்பு. இதனை “தவ்ஹீத் பிரிகேட்” என்றும் அழைப்பர். சிரிய இஸ்லாமிய விடுதலை முன்னணி எனும் பொது அமைப்பில் அங்கம் வகிக்கிறது. கட்டார் தேசத்தின் ஆதரவு இந்த அமைப்பிற்கு நிறையவேயுண்டு. இதன் சீப் கொமாண்டரும் தலைவருமான அப்துல் காதர் அல் சாலேஹ் அவர்கள் அலிபோவில் சிரிய வான்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மரணத்தை தழுவியுள்ளார். தனது ஏனைய சகாக்களுடன் ஒரு முக்கியான மசூராவில் (ஆலோசணைியில்) ஒரு பாடசாலையில் இருந்த போது அந்த பாடசாலை மீது வான் தாக்குதல் மிக மிக துல்லியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



ஜெனீவா பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய போராளி அமைப்புக்களை கொண்டு வரும் அமெரிக்க நரித்தனமான இராஜதந்திரத்தை முற்றாக இவர் நிராகரித்திருந்தார். “சிரியாவின் இஸ்லாமிய ஆட்சியின் உதயத்தின் பின்னர் நான் எதைப்பற்றியும் யாருடனும் பேசத்தயார்” என ஆணித்தரமாக கூறியிருந்தார் சகோதரர் அப்துல் காதர் சாலேஹ் அவர்கள். 

சிரிய ஜிஹாத்தின் “வோர் லோர்ட்ஸ்” என நோக்கப்படும் சவுதி அரேபியாவும், லிவா அல்-தவ்ஹீத் அமைப்பிற்கு பல வழிகளிலும் நிதி மற்றும் ஆயுத உதவி புரிந்த கட்டாரும் கூட இந்த அமெரிக்க அஜண்டாவிற்கமைவாக பேச்சுவார்த்தை மேசைக்கு “லிவா அல்-தவ்ஹீத் பிரிக்கேட்டை” கொண்டு வர பாரிய அழுத்தங்களை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் கட்டளை கலந்த வேண்டுகோளினை உறுதியாக மறுதலித்திருந்த நிலையில் இவர் கொல்லப்பட்டுள்ளார். 

இவர்களின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்கியவர்கள் யார்?. சிரிய விமானப்படை நேராக வந்து பாடசாலையையும் அதனை அண்டிய பகுயையும் மட்டும் தாக்கி விட்டு சில நிமிடங்களில் எப்படி சென்றன போன்ற கேள்விகள் சிரிய ஜிஹாத் எனும் பின்புல அரசியலில் விடைகாணக்கூடியவையே.

மேற்படி தாக்குதலில் லிவா அல்-தவ்ஹீத் பிரிக்கேட்டின் புலனாய்வு துறைப்பொருப்பாளரும், அலிபோவிற்கான கட்டளை தளபதியுமான யூசுப் அல் அப்பாஸ் அவர்களும் பலத்த காயமடைந்துள்ளார்கள். ஒரே நேரத்தில் அதியுயர் கட்டளைத்தளபதிகள் இருவரை இழந்த நிலையில் பலத்த தலைமைத்துவ பின்னடைவுகளை சந்தித்துள்ள ஒரு கடுமையான காலகட்டத்தினுள் பிரவேசித்துள்ளது Liwa al-Tawhid அமைப்பு.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: