Facebook Twitter RSS

சவுதி அரேபியா மீதான மோட்டார் குண்டு தாக்குதல்களிற்கு பின்னால் எழுந்து நிற்கும் ஷியா பயங்கரவாதம்!!

Wathiq Al-Battat in Inset pic 

 

06 மோட்டார் குண்டுகள் சவுதி அரேபியாவின்  Al-Awja பகுதிக்கு அருகில் உள்ள Hafr al-Batin பகுதியில் வந்து வீழ்ந்து வெடித்துள்ளன என சவுதி அரேபிய அரச ஊடகமான  SPA தகவல் வெளியிட்டிருந்தது. 

இந்த தகவலை சவுதி அரேபியாவின் எல்லக்காவல் படையின் தளபதி General Mohammed al-Ghamidi -ம்ஒப்புக்கொண்டிருந்தார். இந்த தாக்குதல் கடந்த புதன்கிழமை நடாத்தப்பட்டுள்ளது. 

Hafr al-Batin பகுதியே ஈராக், சவுதி, குவைத்தினை இணைக்கும் மையமாகும். இதனையே சதாம் ஹுஸைனின் படைகள் முதல் இலக்காக கொண்டு கைப்பற்றின. பின்னாட்களில் (1991-ல்) அமெரிக்க படைகளின் தாக்குதல் கட்டளை மையம் இங்கேயே செயற்பட்டது.


வுதி அரேபியாவின் தென்கிழக்கு எல்லை கிராமம் மீது நாங்களே மோட்டார் குண்டு தாக்குதலை நடாத்தினோம். எமது போராளிகள் 06 ரவுண்டுகள் சவுதியை நோக்கி மோட்டார்களை ஏவினர். இது சவுதி அரேபியாவிற்கு எம்மால் விடுக்கப்படும் எச்சரிக்கை. ஷியாக்களிற்கு எதிரான சவுதி அரேபியாவின் நிலைப்பாடுகள் மாறவிடின் எமது தாக்குதல்கள் மேலும் தொடரும்”. இந்த அறிவிப்பை மேற்கொண்டவர்கள் Jaish al-Mukhtar  அமைப்பினராவர். ஈரானிய அரசு ஆதரவு பெற்ற ஈராக்கில் இயங்கும் ஷியாக்களின் இராணுவ மிலிஷியாவேயிது. இதன் தலைவர் “Wathiq al-Battat” ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு பக்தாதில் இருந்து தொலைபேசி மூலம் இந்த செய்தியை தெரிவித்துள்ளானர். இந்த தாக்குதல் இரு தினங்கள் முன் நிகழ்ந்தது. 


சவுதி அரேபியாவின் சமகால மத்தியகிழக்கு அரசியல் நகர்வுகளும், ஸலபி கருத்தியல் சார் ஜிஹாதிய அமைப்புக்களின் எழுச்சிகளும் ஷியாக்களை அச்சமடைய வைத்துள்ளன. ஈரானிற்கும், சவுதி அரேபியாவிற்கும் நீண்ட காலமாக நிலவி வரும் பனிப்போரின் ஒரு நிகழ்வே இந்த தாக்குதல்களாகும். 


“நாம் எமது ஏவுகணைகளை சவுதி அரேபியா மீது வீசவில்லை. மாறாக மோட்டார் குண்டுகளையே ஏவியுள்ளோம். ஷியாக்களிற்கு எதிராக சவுதி அரேபியா இராஜ தந்திரரீதியிலோ அல்லது இராணுவரீதியிலோ தனது செயற்பாடுகளை தொடருமானால் நாங்கள் மெல்ல மெல்ல எங்கள் தாக்குதல்களை அதிகரிப்போம்” என்றும் Wathiq al-Battat கூறியுள்ளார். 

அவரது செய்தியில் மேலும் கூறியதாவது “நாங்கள் சவுதியின் தென்கிழக்கில் உள்ள ஜனசஞ்சாரம் குறைந்த பகுதியிலேயே எமது மோட்டார்களை விழுமாறு பார்த்துக்கொண்டோம். சவுதி மன்னராட்சி தனது முடிவுகளை மாற்றா விட்டால் எமது ரொக்கெட்கள் சவுதி அரேபியாவின் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வந்து விழ அதிக நாட்கள் செல்லாது. மனித இரத்தத்தின் பெறுமதி சிரியாவில் என்ன என்று சவுதி அரேபியாவிற்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களிற்கு தெரியும். அதனாலேயே மோட்டார் ஷெல்களுடன் நிறுத்திக்கொண்டுள்ளோம்” என அவரது பேச்சுக்கள் தொடர்ந்துள்ளன. 

“சவுதி அரேபியாவின் எண்ணெய் வளமிக்க Hafr al-Batin பகுதியே எமது இலக்காகும். மீண்டும் எமது மோட்டார்கள் வீழுமானால் சவுதியின் எண்ணைய் பற்றி எரியும்” என ஜய்ஷ் அல்-முக்தார் அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஈராக்கிய அரசு இது பற்றி வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஜெய்ஷ் அல்-முக்தார் எனுமமைப்பு அப்படியொன்றும் இராணுவ வலுவுள்ள  அமைப்பல்லவென்றும், அவர்களின் தலைவர் ஒன்றும் பிரபல்யமானவர் அல்லவென்றும், இந்த தாக்குதல்கள் பற்றி தங்களிற்கு ஒன்றும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர். 

சவுதி அரேபியாவிற்கு எதிராக செயற்படும் தேசமான ஈரானின் ஷியா மதத்தலைமை பீடம் மதீனாவை கைப்பற்றும் கனவுகளுடன் இருக்கிறது. அகன்ற பேர்ஸியன் பேரரசை உருவாக்கும் ஷியாக்களின் நீண்ட நாள் கனவின் ஒரு வெளிப்பாடே இந்த தாக்குதல்கள் ஆகும். ஹிஜாஸில் வாழும் சவுதி குடியுரிமையுள்ள ஷியாக்கள் அண்மையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். இது பற்றி கைபர் தளத்தில் நாம் பேசியிருந்தோம். அவர்களிற்கும் ஈரானிய அரசிற்கும் மிக நெருங்கிய தொடர்புகளும், இரகசிய செயற்பாட்டு அஜண்டாக்களும் உள்ளன. வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் ரோயல் எயார் போஸ் விமானங்கள் பல இந்த எல்லைப்பகுதியில் வான் பறப்பில் தொடராக ஈடுபட்டன. வரும் நாட்களில் பல நிழல் செயற்பாடுகள் தொடரும் என்பதே இந்த செய்திகள் உணர்த்தும் உண்மையாகும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: