Facebook Twitter RSS

அரசியல் சூனிய அரபிய ஆஸ்தான வாத்தின் ஆபத்தான'பத்துவா' முட்டை ஏன்!?


   சவூதி மன்னரின் உளவுப்பிரிவுத் தலைவர் பந்தர் பின் சுல்தான் , ரஷ்யாவின் விளாடிமிர் புடினின் இரகசிய  இணைவின் அர்த்தம் சவூதி அரண்மனை முப்தியின் சிரிய விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய 'பத்துவா ' மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

       "ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும்" என்ற லெனினிச பயிற்றுவிப்பில் KGB  தனத்தோடு வளர்ந்த விளாடிமிர் புடின் அமெரிக்க C .I .A ஆலோசனையில்  மத்திய கிழக்கு விடயங்களை கையாளத் தொடங்கியுள்ளார் . அந்த வகையில்  இந்த கூட்டுச் சதியின் தெளிவான வெளிப்பாடே  Abdul-Aziz ibn Abdullah Aalash-Shaikh இன் 'பத்துவா' ஆகும் .


          "ஆயிரம் மிசைல்களும் நூறு 'ட்ரோன் ' அட்டாக்குகளும் சாதிக்காததை முஸ்லீம் உலகில் ஒரு 'பத்துவா' சாதித்து விடும் ! எனும் பழைய தத்துவத்தை நம்பி அமெரிக்கா நேற்றைய ஆப்கானின் அனுபவத்துடன் அதன் மூலம் அடிவாங்கிய 'ரஷ்யனை' வைத்து  இம்முறை சாதிக்கப் பார்க்கிறது ! இதன்மூலம் ரஷ்யா ,அமெரிக்கா , இஸ்ரேல் ,அரேபிய மன்னராட்சிகள்  , மற்றும் பசர் அல் அசாத் , ஈரான் என்பவற்றை காக்கும் இந்த 'அசைன்மென்ட் ' முஸ்லீம் உம்மத்தை பொறுத்தவரை ஒரு கொடிய பொறியே ஆகும் .( ஆப்கானுக்கு MAN POWER அனுப்ப 1980இல்  பத்துவா ! அதில் ஒரு வகையில் நியாயம் இருந்தது? ,சிரியாவில் இருந்து MAN POWER இனை குறைக்க 2013இல் பத்துவா !இதில் என்ன நியாயம் இருக்கிறது ?)

               சிரிய இஸ்லாமிய போராட்டத்தின் செலவு குறைந்த அழிப்புப் படலத்தின் தேவையை  மிகத் தெளிவாகவே  குப்ரிய மேற்குலகு உணர்ந்துள்ளது .எனவே தமது 'கோர்லிங் சார்ஜெண்டாக ' சவூதியின் ஆஸ்தான முப்தியை பயன்படுத்தி இப்போது புதிய யுத்த முனையை திறந்துள்ளது . இது இஸ்லாமிய கிலாபா அரசின் மீள் வருகையை தடுக்க ,தவிர்க்க எடுக்கும் இஸ்லாமிய சாயம் பூசிய சாத்தானிய வேதம் என்பதில் சந்தேகம் இல்லை . அவர்களது பாசையிலேயே நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும் !

1. ஆட்சிக்கெதிராக அதிகாரத்துக்காக  கிளர்ச்சி செய்வது , சண்டை  போடுவது ,கூடாது அது 'ஹராம்' எனக்கூறும்  இந்த ஆஸ்தான முப்தி சவூதி அரேபியா உஸ்மானிய கிலாபாவில் இருந்து மன்னராட்சியாக பிரிந்ததே 'அரபி ,அஜமி 'என்ற ஜாஹிலீய  சிந்தனையை காட்டியே ஆகும் என்பதோடு , புரட்சியும் ,கிளர்ச்சியும், (பிரித்தானிய உதவியோடு  ) செய்தே பிரிந்தனர் அதை இவர் சரி என்கிறாரா !?

2. சிரியாவில் நடப்பது சிரியாவின் உள்நாட்டுப்போர் , பலஸ்தீனில் நடப்பது பாலஸ்தீனின் உள்நாட்டுப்போர் எனவே இத்தகு பிரதேச வாத ரீதியில் முஸ்லீம் உம்மத்தை பிரிக்கின்ற நிலையில் யூத இஸ்ரேலிய அரசுக்கு எதிராக முஸ்லீம்கள்  சண்டை போடுவதும் ,கிளர்ச்சி செய்வதும் ,போராடுவதும் 'ஹராமா ' (இதுவரை பாலஸ்தீன் விவகாரத்தை சவூதி அவ்வாறே அணுகி வருகிறது ) அப்படியானால் இஸ்ரேல் எனும் அரசையும் முஸ்லீம்கள் அங்கீகரிக்க வேண்டுமா !?

3.  யூத கிறிஸ்தவரை உங்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ! என 'வஹி' தெளிவாகவே சொல்லி நிற்க சவூதி அரசு  கிறிஸ்தவ இராணுவங்களுக்கு தளம் கொடுத்து முஸ்லீம் அழிப்புக்கு தெளிவாகவே உதவும் வகையில் நட்பும் பாராட்டுகிறது ! இதை இந்த முப்தி சரி காண்கிறாரா !?

          இது தெளிவாகவே சிரியாவினை மைய்யமாக கொண்டு எழுந்து வரும் இஸ்லாமிய கிலாஃபாவின் மீள் வருகையை தடுப்பதட்கான வெடி குண்டே ஆகும். அரேபிய ஆஸ்தான அரசியல் சூனிய 'வாத்தின்' மூலம் விடப்பட்ட  இந்த  பத்துவா முட்டையை கொக்கரித்து அடை காக்கும் முரீத் கூட்டம்  இதையும் கொக்கரித்து அடை காப்பார்களா!? 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: