Facebook Twitter RSS

லிபியாவில் வாஷிங்டனின் கைப்பொம்மை ஆட்சி இயலாமையின் விளிம்பில் தள்ளாடுகிறது


லிபியாவின் தலைநகரான திரிப்போலி கிட்டத்தட்ட உறைந்துவிட்டநிலைக்கு வந்திருந்த்து. போராளிகள் நகரத்தை விட்டு நீங்க வேண்டும் எனக்கோரி, திரிப்போலியின் பெரும்பாலான வணிகங்கள்பள்ளிகள்,பொதுத்துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


சனிக்கிழமை அன்று ஒரு 48 மணி நேர அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது. 2011ல் கேர்னல் முயம்மர் கடாபி அகற்றப்பட்டதற்குப்பின் சில பெரும் மோதல்களை திரிப்போலி சந்தித்ததுவெள்ளிசனிக்கிழமைகளில் குறைந்தப்பட்சம் 45 பேர் கொல்லப்பட்டனர்வசிக்கும் மக்கள் உலோகம்மரம் மற்றும் டயர்களாலான தடுப்புக்களையும் சோதனைச் சாவடிகளையும் தங்கள் பகுதிகளைக் காக்க நிறுவினர்.

கடாபி ஆட்சியைக் கவிழ்க்க பயன்படுத்திய இரு இஸ்லாமிய பினாமிகள்மீதும் பெருகிய சீற்றம் உள்ளதுஇவை பணம் பறித்தல்படுகொலை செய்தல்,கடத்தல்சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதை செய்தல்    ஆகியவற்றை தங்களை செழிப்பாக்கிக் கொள்ளக் கையாண்டனஅதே போல் நவ-காலனித்துவ அரசாங்க பிரதம மந்திரி அலி ஜெய்டன் மீதும் சீற்றம் பெருகியுள்ளது.

வெள்ளியன்று மிஸ்ரடாவின் போராளிக்குழு ஆயிரக்கணக்கானஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட்டு மகளிர்குழந்தைகள் உட்பட 43பேரைக் கொன்றதோடு, 500 பேருக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியதுகார்க்கூர் இல்உள்ள மிஸ்ரடாவின் படைப்பிரிவுகளின் தலைமையகம் நோக்கிஅணிவகுத்துச் செல்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கம் போராளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர்மத்திய அரசாங்கத்தின் பலவீனமான படைகள் வன்முறை வெடித்து நீண்ட நேரத்திற்குப் பின்தான் வந்தன.

வெள்ளைக் கொடிகள்பதாகைகள் ஏந்திய அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது விமான எதிர்ப்பு ஆயுதங்களால் சுடப்பட்டன என்று சாட்சிகள் கூறுகின்றனஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த திரிப்போலி நகரவைக்குழுவின் தலைவர் சதல் அல் பட்ரி ஆர்ப்பாட்டக்கார்கள் ஆயுதமற்று இருந்தனர் என்றும் போராளிகளின் தலைமையகங்களில் இருந்துதான் சுடப்பட்டனர் என்றும் கூறினார்.
நடவடிக்கைகள் ஆத்திரமூட்டலின் பேரில்தான் நடைபெற்றது என்பதைக் குறிக்கும் வகையில், கார்க்கூரில் மிஸ்ரடாவின் போராளிகள் தலைவர் டஹெர் பாஷா ஆகாஎதிர்ப்பாளர்கள் ஆயுதமேந்தியிருந்தனர் என்றும் கூரைகள் மேல் இருந்த ஸ்னைப்பர்கள் முதலில் சுட்டனர் என்றும் பதிலளித்தார். பொதுத் தேசிய குழு (GNC) ஒரு புதிய அரசியலமைப்பிற்கு உட்பட்டு ஒரு புதிய அரசாங்கம் நிறுவப்படும் வரைதலைநகரை விட்டு நீங்க வேண்டும் என்ற குரல்களை அவர் நிராகரித்தார்.

முதலில் ஜெய்டன், ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர் என்றும் பாதுகாப்புப் படைகள் “நிலைமையை சிக்கலாக்கக் கூடாது” என்று தலையிடவில்லை என்றார்இதுவும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதுபின்னர் இதை அவர் பின்வாங்கிக் கொண்டுஎதிர்ப்பு அணி “அமைதியாக இருத்தது” என்றார்.

பின்னர் லிபியக் கேடயம் என அழைக்கப்படும் போராளிப்பிரிவு உட்படஆயுதமேந்திய நபர்கள் நுழைந்து, மிஸ்ரடாவின் படைப் பிரிவுத் தலைமையகம் மற்றும் வளாகங்களுக்கு தீ வைத்து அவர்களை அகற்றியது.

சனிக்கிழமை அன்று மிஸ்ரடாவின் ஆயுதமேந்திய கூடுதல் போராளிகள் திரிப்போலியில் ஒரு புறநகரான டாயூவில், நகரத்திற்குள் கிழக்கில் இருந்து நுழைய முற்படுகையில் உள்ளூர் போராளிகளுக்கும் மிஸ்ரடா படைப்பிரிவுகளுக்கும் இடையே மோதல் வெடித்ததுமிஸ்ரடா போராளிகள் இராணுவ முகாம்களைத் தாக்கினர்மோதல்களில் ஒரு நபர் கொல்லப்பட்டார்,எட்டு பேர் காயமுற்றனர்.

கடந்த வாரம் போட்டிப் போராளிகளுக்கு இடையே திரிப்போலியில் மூன்று பேரைக் கொன்று, 20 பேரைக் காயப்படுத்திய ஆயுத மோதல்களுக்குப் பின் இந்நிகழ்வுகள் வந்துள்ளன.

இந்நிகழ்வுகள் வாஷிங்டன் நிறுவியுள்ள அரசாங்கத்தின் அரசியல் ரீதியாகதனிமைப்பட்ட தன்மையை உயர்த்திக் காட்டுகின்றனஅதேபோல் அதன் நூற்றுக்கணக்கான ஆயுதப் போராளிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையையும் காட்டுகின்றனஅனைத்துப் புறங்களிலும் பெருகிய அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளன.

கடாபி ஆட்சியை அகற்றுவதற்காக, சௌதி அரேபியாவளைகுடா நாடுகள் மற்றும் நேட்டோவால் இஸ்லாமிய வாதிகளுக்கு பெரும் நிதியங்கள் கொடுக்கப்பட்டன, இது லிபியா முழுவதும் ஆயுதங்கள் கனரக ஆயுதப் போராளிக்குழுக்களை விட்டுள்ளதுஇது நாட்டை பிராந்திய பயங்கரவாதக்குழுக்களுக்கு தளமாக்கியுள்ளதுசிரியாவில் உள்ள “ஜிஹாதிஸ்ட்டுக்களுக்கு” ஆயுதம் ஏற்றுமதி செய்யும் இடமாகவும் ஆகியுள்ளது.

இது போட்டியிடும் இனவழி மற்றும் பழங்குடித் தளம் உடைய போராளிகளுக்கு இடையே இடைவிட மோதல்களுக்கு வழிவகை செய்துள்ளதுஅவை நிலம்மூலவளங்களுக்காக போரிடுகின்றனபழங்குடி மக்களில் சிலர் தெற்கு எல்லையான நைஜர் மற்றும் சாட்டில் இருந்து போராடுகையில் வன்முறை லிபியாவின் அண்டை நாடுகளுக்கும் பரவிவிட்டது.

ஓர் உண்மையான தேசிய இராணுவம் இல்லாத நிலயில்அரசாங்கம் தன் எல்லைகளைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதுஇந்நிலையில் போதைப்பொருள்வர்த்தகத்தில் ஈடுபடும்ஆயுத விற்பனையில் ஈடுபடும் வெறிபிடித்தஆபிரிக்கக் குற்றக்குழுக்கள் ஐரோப்பாவிற்குத் தடுப்பின்றி செல்ல முற்படுகின்றனலிபியாவின் பரந்த பாலைவனங்கள், மாலியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் பிரெஞ்சுத் துருப்புக்களிடமிருந்து தப்பிய அல்குவேடா பிணைப்புடைய குழுக்களுக்கு புகலிடம் ஆகும்.

எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றிற்கு 1.6 மில்லியன் பீப்பாய்கள் என்பதில் இருந்து 150,000 பீப்பாய்களாக சரிந்துவிட்டதுவன்முறைவேலைநிறுத்தங்கள்,வேலை கோருதல்உயர் ஊதியம்போராளிகள் எண்ணெய்த் துறைமுகங்களைத் தடுப்பது ஆகியவற்றை ஒட்டி 6.43 பில்லியன் டாலர்கள்வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதுஇது ஐரோப்பாவின் எண்ணெய்ப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகும்ஏனெனில் லிபியாதான் ஐரோப்பாவிற்கு ஒற்றை மிக அதிக எண்ணெய் கொடுக்கும் நாடாகும்.

எண்ணெய்த் தொழில்துறையின் மையமான கிழக்கு நகரம் பெங்காசி,செப்டம்பர் 2012ல் அமெரிக்க தூதர் கிறைஸ் ஸ்டீவன்ஸ் கொலைக்குப் பின் அமெரிக்காபிரித்தானியா மற்றும் பிரெஞ்சு நாட்டினர் செல்ல முடியாத இடமாகிவிட்டதுலிபியாவின் இராணுவத் தலைமை வக்கீல் கேர்னல் யூசெப் அலி அல்-அசெய்பார் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கார்க்குண்டுத் தாக்குதலில் சிதறிப்போனார்இப்பொழுது பெங்காசி அரசாங்கம் தன்னாட்சி பிராந்தியஅரசாங்கத்தை நிறுவி தங்கள் சொந்த பெட்ரோலிய விற்பனை நிறுவனமான லிபிய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தை திரிப்போலியைக் கடந்து நிறுவியுள்ளது.

எதிர்ப்பாளர்கள், லிபியாவின் எரிவாயு ஏற்றுமதிக் குழாயை அதன் ஒரே வாடிக்கை நாடான இத்தாலிக்குச் செல்வதை இரு வாரங்களுக்கு மூடிவைத்தனர்இது திரிப்போலிக்கு மேற்கே 100கி.மிதொலைவில் உள்ள மெல்லிடா வளாகத்தில் நடைபெற்றதுஎண்ணெய் ஏற்றுமதிகள் அங்கிருந்து தடைக்கு உட்பட்டனஅவர்கள் எரிவாயு விற்னையையும் நிறுத்திமின்சார இணையத்தையும் பாதித்தனர்.

அதன் காலம் பெப்ருவரி முடிவதற்குள் ஒரு புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியும் அரசாங்கத்திற்கு உள்ளதுஅதுவோ ஒரு விரோதப் போக்கு உடைய தேசியக் குழுவை முகங்கொடுக்கிறதுமுஸ்லிம் பிரதர்ஹுட் ஆதிக்கத்தில் இருக்கும் எதிர்த்தரப்பும் GNC ஐ புறக்கணித்துள்ளதுபெர்பெர்ஸ்,தூரெக் மற்றும் தூபு சிறுபான்மை பழங்குடி மக்களின் சட்டமன்றப் பிரதிநிதிகளும் புறக்கணித்துள்ளனர்இது அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தைக் கொண்டது.

இது வரவு-செலவுத் திட்டம் பற்றி உடன்பாடு காண அரசாங்கத்திற்கு இயலாமற் செய்துள்ளதுநூற்றுக் கணக்கான கட்டுப்படுத்த முடியாத கால் மில்லியன் போராளிகளுக்கு நிதி கொடுக்கையில்அரசாங்கம் ஆண்டு இறுதிக்குள் ஊதியங்களையும் சம்பளங்களையும் கொடுக்க முடியாத நிலைக்கு வந்துவிடும்.

மிக அடிப்படைத் தேவைகளைக் கூட அரசாங்கம் அளிக்க முடியவில்லை.குறைந்தப்பட்சம் தொழிலாளர் தொகுப்பில் மூன்றில் ஒரு பங்கினர்வேலையில் இல்லைஒரு மில்லியன் கடாபி ஆதரவாளர்கள் இடம் பெயர்ந்த நிலையில் உள்ளனர்அதேநேரத்தில் நூறாயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளில் புகலிடம் நாடியுள்ளனர்.
நவம்பர் இயக்கம் என்னும் பதாகையின்கீழ்கடந்த வாரம் திரிப்போலியில் மற்றும் பிற நகரங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்—தேசிய பொதுக் குழுவின் காலம் பெப்ருவரி 7க்கு மேல் விரிவாக்க கூடாது என்று கோரிஅவர்கள் முன்கூட்டிய தேர்தல்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

.நா.வின் பட்டயம்அத்தியாயம் 7ன் கீழ் குடிமக்களைக் காத்தல் என்னும் பெயரில் “வெளியார் தலையீட்டிற்கு வகை செய்யும்” என்று ஜெய்டனை எச்சரிக்க வைத்துள்ளது; “ஏனெனில் சர்வதேச சமூகம் மத்தியதரைக்கடல் நடுவே வன்முறைபயங்கரவாதம்கொலை இவற்றிற்கு ஆதாரமான நாட்டை பொறுத்துக் கொள்ளாது”இதே போலிக்காரணம்தான் நெருக்கடியை முதலில் கொண்டு வருகையில் நேட்டோ தலையீட்டிற்கு வழிவகுத்தது.

லிபியாவிற்கு நேட்டோ படைகள் மீண்டும் வரலாம் என்ற கருத்தை ஜேய்டனின் எச்சரிக்கை காட்டுகிறதுஜேய்டனின் கைப்பொம்மை அரசாங்கம் விரைவில் சரிவதுஒபாமா நிர்வாகம் லிபிய ஆட்சி மாற்றத்திற்கான 2011போரைமுற்போக்கானது என்று கூறியதை நிராகரிக்கிறதுஇப்போர் ஒரு புரட்சியும் அல்லஜனநாயகத்திற்கான போராட்டமும் அல்லஒரு குருதி கொட்டிய ஏகாதிபத்திய சாகசமாகும்இதில் அமெரிக்காபிர்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிவை கடாபி ஆட்சியை கவிழ்க்க, வலதுசாரி பழங்குடித் தலைவர்கள்குற்றவாளிகள்இஸ்லாமியக் குண்டர்கள் ஆகியோருடன் கூட்டுச்சேர்ந்தனர்.

போலி இடது அமைப்புக்களான சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு,பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளர் கட்சிபிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவற்றால், இப்படைகள் “புரட்சியாளர்கள்” என்று பாராட்டப்பட்டாலும்இவை லிபியாவைக் கொள்ளை அடித்து அதன் ஆதாரங்களை அமெரிக்காஐரோப்பிய ஏகாதிபத்தியம் ஆகியவற்றுடன் பிரித்துக்கொள்ளும் முயற்சியில்தான் ஈடுபட்டனலிபியாவிலும் இந்தப்பிராந்தியத்திலும் புரட்சி என்பது வட ஆபிரிக்க தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்திலிருந்துதான் வளர முடியும்இது ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு எதிரானதாகவும் அதன் போலி இடது பாதுகாப்பு அமைப்புக்களுக்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும்.
2011 கோடைகாலத்தில் இருந்து ஜேர்மனி மட்டுமே 25 மில்லியன் ($34 மில்லியன்)யூரோக்களை லிபியாவில் செலவழித்துள்ளதுஇதில் பெரும்பகுதி ஆயுதங்கள்மற்றும் சுரங்கங்களை அழிப்பதற்காகும்; 3.2 மில்லியன் யூரோக்கள் அரசாங்கம்சாரா அமைப்புக்களுக்கு “ஜனநாயகம்சிவில் சமூகத்திற்கு ஏற்றம் கொடுக்க” பயன்படுத்தப்பட்டது.

பிரான்ஸ் அநேகமாகத் தலையிடும்கடந்த வாரம் அதன் வெளியுறவு மந்திரி லோரென்ட் ஃபாபியுஸ், மொரோக்கோ தலைநகர் ரபத்தில் ஒரு பிராந்திய எல்லைப் பாதுகாப்பு மாநாடு நடக்கையில் பிரான்ஸ் லிபியாவிற்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அதிக நிதியளிப்பது குறித்து ஆலோசிக்கிறது என்றும்இதில் பொலிசுக்கு கூடுதல் பயிற்சியும் அங்கும் என்றும் கூறினார்பிரான்ஸ் ஏற்கவே 1,000 லிபிய பொலிசாருக்குப் பயங்கரவாத எதிர்ப்பிற்கு பயிற்சி கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளதுமற்றும் ஒரு 1500பேருக்கும் பயிற்சி அளிக்கும்.

மாலியில் நம் நடவடிக்கை மிகவும் நேர்த்தியாக இருந்ததுஆனால் அங்கு மாலி மக்களுக்காகவும் லிபியர்களுக்காகவும் மற்றும் முழுப்பிராந்தியத்திற்காகவும் நாம் தொடர்ந்தும் இருக்க வேண்டும்” என்றால் ஃபாபியுஸ். 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: