Facebook Twitter RSS


குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள்! – நீதிபதி கட்ஜு எச்சரிக்கை


நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்குப் பதில் அளித்து கட்ஜூ வெளியிட்டுள்ள கடிதத்தில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றின் போது மீடியா நிறுவனங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன், நிதானத்துடன் செயல்பட வேண்டும். யார் மீதும் எந்த துவேஷ உணர்வும் ஏற்படாத வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.
யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணை முடியவில்லை. ஆனால் அதற்குள் பல மீடியாக்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வெளியி்ட்டு வருகின்றன. அது தவறானதாகும்.
முஸ்லீம்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற ஒரு இமேஜை சிலர் உருவாக்கி வைத்து விட்டனர். இதனால் எந்தத் தாக்குதல் நடந்தாலும் உடனே இஸ்லாமியர்களை சந்தேகப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மேலும் எந்த ஒரு வழக்கிலும் முஸ்லீம் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஜாமீன் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. அவர் அப்பாவியாகவே இருந்தாலும் தன்னை நிரூபிக்க அவர் கடுமையாக போராடும் நிலை ஏற்படுகிறது. இது மிகவும் வருத்ததிற்குரியதாகும். ஒருவரை காரணமே இல்லாமல் சிறையில் நீண்ட காலம் அடைத்து வைக்க யாருக்கும் உரிமை கிடையாது. நமது நாட்டில் தவறான, பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே டிவி சேனல்கள் ஒரு முஸ்லீம் அமைப்பின் பெயரைச் சொல்லி இதுதான் நடத்தியது என்று செய்தி வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது பொறுப்பற்ற போக்காகும். இப்படிச் செய்வதன் மூலம் எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால் அது முஸ்லீம்களின் செயல்தான் என்று மக்கள் தவறாக கருத ஆரம்பிக்கும் நிலை ஏற்படும். மேலும் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், குண்டு போடுபவர்கள் என்ற தவறான கருத்தும் மக்கள் மனதில் பதிவாகி விடும்.
எனவே மீடியாக்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: