Facebook Twitter RSS

யார் இந்த சிசி? - “இரத்தம் குடிக்கும் ஓநாயும் சித்தாந்தம் பேசும் வெள்ளாடுகளும்”



    Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi. எகிப்தின் இராணுவ 
ஏதேச்சாதிகாரி. ரபா படுகொலைகளை புரிந்து வரலாற்றில் தனது 
பெயரையும் ஏரியல் ஷரோன், பொல்பொட்டின் வரிசையில் பதிந்தவன். 
12 ஓகஸ்ட் 2012 முதல் எகிப்தின் இராணுவ தளபதியாகவும், ஆயுதப்
 படைகளின் தலைமை அதிகாரியாகவும், எகிப்தின் பாதுகாப்பு 
அமைச்சராகவும் ஒரே நேரத்தில் மூன்று அதிகாரமிக்க பதவியை
 வகித்தவன். உலகின் ஏனைய போராட்டங்களை கேலி செய்து தங்கள்
 சித்தாந்த அறிவுகளாள் கிண்டல் பண்ணும் இஹ்வானிய சாணாக்கியமிக்க
 (?) தலைமைக்கு இதை கூட பிரித்து மூன்று மனிதர்களிடம் வழங்க
 புத்தியில்லாமல் போனது வேறு கதை..


General Command and Staff Course-னை ஐக்கிய இராச்சியத்திலும்,
 War Course மற்றும் Basic Infantry Course-னை அமெரிக்க குடியரசிலும் 
கற்று தேறியவன். சவுதி அரேபிய இராணுவ அகடமியிலும் கூட்டு 
கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவன். Master's Degree in Military Sciences
 இலும் Fellowship of the High War College இலும் தனது உயர் கற்கை 
நெறிகளை எகிப்தில் முடித்தவன். மொத்தத்தில் ஒரு மேற்கின்
 இராணுவ ஜெனரலிற்கு இருக்கும் அனைத்து அறிவுகளும்,
 நுட்பங்களும், பண்புகளும் இவனிற்கு உண்டு. Defense diplomat 
ஆக சவுதி அரேபிய குடியரசில் பணியாற்றிய காலமுதல் சவுதயினின்
 ரோயல் இராணுவ தளபதிகளிற்கும் இவனிற்கும் நல்ல நெருக்கம்
. அது போலவே அமெரிக்க கற்கை நெறிகளின் போது அதே கற்கை
 நெறியை பூர்த்தி செய்ய வந்திருந்த யூத இஸ்ரேலிய ஜெனரல்களுடனும்
 மிக நெருக்கமான தோழமை இவனிற்கு. 

இவனது தாய் பிறப்பில் யூத பெண்மனி. இவனது தாய் மாமன் 
இஸ்ரேலிய பாராளுமன்ற அங்கத்தவர். முஹம்மத் ஹுஸைன்
 தன்தாவியை பதவி விலகும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ள இஹ்வானிய
 சாணாக்கியம் எல்-சிசியை கைகளை விரித்து செயற்பட அனுமதித்தது.
 இப்போது இரண்டாம் நாஸராக அவர்கள் சிசியை பற்றி கட்டுரை
 எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பொதுவாக ஒரு தேசத்தில் ஒன்று பலத்த மக்கள் அதரவை கொண்ட
 தலைவன் இருப்பான். இல்லையென்றால் பலத்த இராணுவ மற்றும் 
முப்படை ஆதரவை கொண்ட தலைவன் இருப்பான். இதில் எது ஒன்றை
 கொண்டும் நிலையான அதிகாரத்தை செலுத்த முடியாது. இந்த
 இரண்டு சக்திகளும் இரண்டு கரங்களாக தொழிற்பட முனையுமானால்
 அவன் சர்வஅதிகாரம் மிக்க தலைவனாக உருவாவான். அடோல் ஹிட்லர்
 இவ்வாறே உருவானவன். பிடல் கஸ்ரோவும் இராணுவத்தையும்
 மக்களையும் தம் இரு கரங்களாக கொண்டவர். சாதம் ஹுஸைனும்
 மக்கள் இராணுவம் இரண்டையும் லாவகமான கையாளும் வித்தை 
தெரிந்தவர். இப்படி சில தேசங்களில் இரண்டு பலமிக்க சக்திகளையும்
 தம் வசம் கொண்டுள்ளவர்கள் தனித்துவமிக்க தலைவர்களாக 
உருவாகியுள்ளனர். 

பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்பிற்கு இராணுவ பலம் இருந்த போதும்
 மக்கள் பலம் இருக்கவில்லை. அதனால் அவர் மண் கவ்வினார். மொஹமட்
 முர்ஸியிடம் மக்கள் பலம் இருந்த அளவிற்கு இராணுவ பலம் இருக்கவில்லை.
 அதனை கையாளும் வியூகங்களும் தெரியவில்லை. இதனை ஜெனரல் சிசி நன்குணர்ந்துள்ளான். அதனாலேயே அவன் இராணுவத்தில் தன் நிலையை
 வலுப்படுத்திய பின் மிலிட்டரி கூவை ஆரம்பித்தான். அப்போதும் கூட
 அவனிற்கு மக்கள் பலம் பற்றிய சந்தேகம் இருந்தது. 

மதச்சார்பற்றவர்கள், மேற்கத்தைய மோகமிக்க சடவாதிகள், இஸ்லாமியவாத
 எதிர்ப்பாளர்கள், கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் என பல தரத்தவரையும் 
ஒன்று திரட்டி சவுதி அரேபியா வழங்கிய பணத்தை தண்ணீரை இறைந்து,
 ஒரு பெரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணையத்தான். இந்த இஹ்வானிய
 அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களால் மிகவும்
 கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டும் 
தன் வசம் வந்த நிலையிலேயே அவன் ரபாவின் படுகொலைகளை
 மேற்கொண்டான். அவனது கொலை வெறிச்செயலை இரு புனித 
நகரங்களின் காவலர் என தன்னை புகழ்ந்து கொள்ளும் சவுதி அரேபிய
 தேசத்து அரசரே ஆதரிக்கும் அளவிற்கு அவனது அரசியல் செயற்பாடுகள்
 அகன்றுள்ளன. 

தன்னை ஒரு சிறந்த மனிதாபிமானமிக்க, தராள பொருளாதார
 கொள்கைவாதியாகவும் இவன் காட்டிக்கொள்ள தவறிவில்லை.
 தன்னை ஒரு லிபரல் தலைவனாக இவன் எப்போதும் வெளிக்காட்டி 
வந்துள்ளான். இவன் பேஸ்-புக்கில் (   https://www.facebook.com/Egyptian.Defense.Minister ) 
இதற்காக மிக சிரத்தையுடன் பல பதிவுகளை வெளியிட்டு வெற்றிகரமாக
 மக்களை தன் கருத்துக்கள் சென்றடையும் வண்ணம் செயற்பட்டுள்ளான். 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும், நேட்டோவும் வெளியாட்டம் 
நிகழ்த்திய போது அங்கு சிந்திய தலிபான்களின் இரத்தத்தை “தக்காளி 
சட்னி” என கிண்டலடித்தனர் இஹ்வான்கள். காஸாவை ஸியோனிஸ்ட்கள்
 கபளீகரம் செய்த போது ஹமாஸின் போராளிகளை நரகத்து நாய்கள் 
என்று பட்டம்  கொடுத்த ஸலபிகளை போல. 

இன்று இன்னொரு நாஸர்பாதி, கமால் பாஷா பாதி கலந்து செய்த கலவையாக 
ஆளவந்தான் சிசி உருவாகியுள்ளான். என்ன செய்யப்போகிறது ஹஸன் அல் 
பன்னாவின் வாரிசுகள்?

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: