Facebook Twitter RSS

லெபனானில் இரட்டை கார் குண்டு தாக்குதல்கள் - பழிவாங்கினார்களா ஹிஸ்புஷைத்தான் கள்?



லெபனானின் திரிப்போலி நகரில் நடாத்தப்பட்ட இரட்டை கார் குண்டு தாக்குதலில் சற்று முன் கிடைத்த தகவல்களின் படி 45 பேர் மரணமாகியுள்ளனர். சுமார் 400 இற்கும் மேற்பட்டவர்கள் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 165 பேர் பலத்த உடல் சிதைவுகளிற்கு உள்ளாகியுள்ளனர் என லெபனானின் செஞ்சிலுவை அமைப்பு தெரிவித்துள்ளது. சுன்னத் வல் ஜமாஃ முஸ்லிம்களின் இரண்டு மசூதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடிந்தவுடனேயே இந்த கார் குண்டுகள் வெடித்ததாக ரொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

உலகில் கார் குண்டு தாக்குதல் நடாத்துவதில் முதல் தர கில்லாடிகள் லெபனானியர்கள். இவர்களிற்கு அடுத்து நிற்பவர்கள் ஈராக்கியர்கள். தங்கள் இலக்கை எந்தவித இழப்புக்களும் இன்று, எந்த வித லைட்னிங் போஸையும் உபயோகிக்காமல் தன்டரிங் டெக்னிக்கை மட்டும் வைத்து கொண்டு இலக்கை அழிப்பது அல்லது முடிந்த அளவு சேதங்களை ஏற்படுத்துவது இவர்களிற்கு கைவந்த கலை. 1990 வரை நிகழ்ந்த 15 வருட லெபனானின் உள்நாட்டு போரின் பின்னர் நிகழ்ந்த மிக மோசமான வன்முறையாக இதனை பார்க்கலாம்.

முதலாவது குண்டு வெடிப்பு நகரின் மையத்தில் உள்ள அல்-தக்வா மஸ்ஜித்திற்கு அருகில் நடாத்தப்பட்டுள்ளது. இதற்கு மிக சமீபமாகவே லெபனானிய பிரதமர் நகீப் மிகாதியின் வாசஸ்தலம் உள்ளது. 

இரண்டாவது குண்டு திரிப்போலியின் துறைமுகத்திற்கு அருகில் உள்ள அல்-ஸலாம் மஸ்ஜித்தை இலக்காக வைத்து நடாத்தப்பட்டுள்ளது. பெரும் கரும்புகை மண்டலம் அடங்கும் வரை மீட்பு பணியாளர்கிற்கு எந்த வித நடவடிக்கையும் செய்ய முடியாமல் போகும் அளவிற்கு இத்தாக்குதலில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு உயிர் பலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. 

இரண்டு குண்டு தாக்குதல்களிலும் சீ4 ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளை பிரதேசத்தை அழிவிற்கு உள்ளாக்கும் நோக்கிற்கு மாறாக மனிதர்களை கொல்லும் நோக்கத்தின் அடிப்படையில் இரும்பு போல்ஸ்கள், ஆணிகள், இரும்பு சிதறல்கள் போன்றனவும் குண்டு வெடிப்பின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பலர் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். 

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாக்களின் கோட்டையில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட குண்டு தாக்குதலில் அதன் செயற்பாட்டு மையம் தகர்ந்தது. 30 ஷியாக்கள் அதில் மரணமாகினர். அங்கேயும் தன்டரில் டெக்னிக்கே உபயோகிக்ப்பட்டது. அதற்கு பகரமாக இப்போது பலி வாங்கியுள்ளது ஷியாக்களின் தரப்பு. 

சிரிய சமர்களில் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் பலத்த இழப்புக்களையும், தோல்விகளையும் தொடராக கண்டு வந்துள்ளனர். இது அவர்களிற்கு பெரும் தன்மான பிரச்சனையாக மாறியிருந்தது. அவர்களால் கட்டி வளர்க்கப்பட்ட பிரமாண்ட அவர்கள் பற்றிய மிலிட்டரி இமேஜ் சரிந்து போனதை நினைத்து அவர்கள் வெஞ்சினப்பட்டிருந்தனர். தங்கள் ஆத்திரங்களை தீர்ப்பதற்கு பஸர் அல் அஸாதின் படைகளுடன் சேர்ந்து சிரியாவில் படுகொலைகள் செய்வதில் ஈடுபட்டனர். தங்கள் அடி மடியிலேயே குண்டு வெடித்த போது அவர்கள் அதற்கு பழிக்கு பழி வாங்க துடித்து கொண்டிருந்தனர். 

இங்கே இன்னொரு கோணமும் உள்ளது. ஷியா சுன்னி பிரச்சனையை ஒரு மத்திய கிழக்கின் யுத்தமாக மாற்றுவதில் இஸ்ரேல் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் மொஸாட்டிற்காக தொழிற்படும் லெபனானிய உளவாளிகள் கூட இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்க நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: