Facebook Twitter RSS

சிரியா மீதான அமெரிக்க தாக்குதல் வியூகம் - தாக்குதல் ஒன்று இலக்கு இரண்டு



மெரிக்க அரசின் நடவடிக்கைகள்,  சிரியா மீதான அதன் தலையீட்டை கட்டியம் கூறுவதாக உள்ளது. வோர் அஸஸ்மன்ட் அறிக்கை அமெரிக்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் பென்டகனின்  கிரைசஸ் ரூமில் இது தொடர்பான இறுதி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா வில்லங்கம் பண்ணும் வில்லனாக மாறி நிற்பதால் நேட்டோவின் உதவியுடன் தனது படை நகர்வை மேற்கொள்ள தயாராகி வருகிறது. பஸர் அல் அஸாதின் இராணுவத்தை மட்டும் இலக்காக அன்றி அல்-காயிதா ஆதரவு இஸ்லாமிய போராளிகளையும் இலக்காக கொண்டு தனது மிஷனை செயற்படுத்த தயாராகிறது அமெரிக்கா. வன் புல்லட் டபுள் டார்கெட் என்பது இதை தானோ!!

பென்டகன் சிரியா மீதான தாக்குதலினை நடாத்துவது தொடர்பான தனது பச்சை அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி விட்டது. அதில் சிரியா  மீதான அவசரமான குறுங்கால விமானத்தாக்குதல்கள் பற்றியும், ஜோர்தான் மற்றும் துருக்கி வழியாக சிரியாவினுள் அமெரிக்க படைகள் உள் நுழைதல் பற்றிய திட்டங்களும் அடங்கியுள்ளன. 

இப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கரங்களில் முடிவு தங்கியுள்ளது. சமகால, எதிர்கால அரசியல் ஒழுங்கிற்கும் அமெரிக்க பொருளாதார நிலைகளிற்கும் ஏற்ப அவர் தாக்குதலிற்கான அட்டாக் கொமாண்டிங் ஓடரில் கையோப்பமிடுவது மாத்திரமே மீதமிருக்கிறது.

முஸ்லிம் தேசங்களின் பலமிக்க இராணுவங்களை பொம்மை இராணுவங்களாக மாற்றும் அகண்ட யூத சாம்ராஜ்யத்திற்கான திட்டத்தின் வரிசையில் இப்போது சிரியா. முர்ஸியின் இஹ்வானிய அரசுடன் சுமூகமாக கூல் டிப்ளோமெடிக் செய்த அமெரிக்கா சிரியாவின் கட்டுப்படுத்த முடியாத இஸ்லாமிய எழுச்சி நாளை எகிப்தில் பரவினால் 06 நாள் இஸ்ரேல் அரபு யுத்தம் 06 மணித்தியாளங்களில் முடிக்கப்பட்டு விடும் என்பது தெரிந்தே இஹ்வானிய அரசை கவிழ்த்து மீண்டும் தன் ஸியோனிஸ கூட்டாளிக்கு அவகாசம் வழங்கியுள்ளது அமெரிக்கா. 

சிரியாவின் ஸ்கட் மற்றும் ஸ்கை ஏவுகனை தொகுதிகள், கெமிகல் ரிசேர்ச் சென்டர்கள், ராடர் கட்டமைப்புக்கள், இராணுவ ஆராய்ச்சி மையங்கள், கெமிகல் பசலிடேசன் சென்டர் போன்ற இஸ்ரேலிற்கு அச்சுறுத்தலாக அமையும் அனைத்து இலக்குகளும் அமெரிகாவின் குண்டு வீச்சிற்கு இலக்காகும். மத்திய கிழக்கில் ரஷ்யாவிற்கு இருக்கும் ஒரே ஒரு இராணுவ நிலையும் இதன் மூலம் தகர்த்தழிக்கப்படும். அதே வேளை....,

சிரியாவின் அல்-காயிதா சார்பு போராளி அமைப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை ஒருங்கமைக்கும் திட்டமும் தயாரிக்கப்பட்டு அமெரிக்க அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பிரதி இஸ்ரேலின் மொஸாட் அமைப்பினரது பரிசீலனையில் இருக்கிறது. ஜாஃ அல் நுஸ்ராவின் தலைவர்கள், தளபதிகள் போன்றோரை பெனிட்ரேட் பண்ணும் அசைன்மென்ட் இவர்கள் வசம் அநேகமாக வரலாம். 

அமெரிக்கா எப்.எஸ்.ஏ. போராளிகளிற்கு வழங்கிய ஆயுதங்களுடன் கொம்யூனிகேஷன் செட்களும் வழங்கப்பட்டிருந்தன. மோட்டோரல்லா வயர்லெஸ் செட்கள் ஆயிரத்திற்கும் அதிகமாக இவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளன. இவை இப்போது எல்லா இஸ்லாமிய போராளி அமைப்புக்களின் கட்டளை மற்றும் களமுனை தளபதிகளிடமும் கரங்களில் தவழ்கின்றன. 

ஜீ.பி.எஸ். மெப்பிங் சிஸ்டம் அனைத்துமே இன்று A-GPS எனும் அமெரிக்க ஸட்டர்லைட் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டவை. இதனை போராளிகள் உபயோகப்படுத்தும் போது அது அவர்கள் இருக்கும் நிலைகளை தெளிவாக அமெரிக்க விமானங்களில் உள்ள மிசைல் கைடிங் சிஸ்டத்திற்கு கிடைக்கும். ரஷ்ய டிரக்ட் ஸட்டலைட் தொழில் நுட்பத்தை உடைய GPS -இனை ரஷ்யா தம்மை இதே பாணியில் இலக்கு வைக்கும் என போராளிகள் தவிர்த்திருந்தனர். 

கடந்த வாரம் ஜாஃ அல் நுஸ்ராவின் அமீர் “நாம் அமெரிக்காவையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். தயாராக” என விடுத்த அறிக்கை கவனத்தில் கொள்ளத்தக்கது. அமெரிக்காவின் ட்ரக்கிங் மெதேட்டும், மொஸாட்டின் இன்போர்மேஷன் பேஸ் அம்புஸ் அன்ட் அசாசின் டெக்னிக்கும் முஜாஹிதீன்கள் அறியாமல் இல்லை. அதை அவர்கள் காஸாவில், கவ்கஸ்ஸில், ஆப்கானில், ஈராக்கில், யெமனில் ஏன் பாகிஸ்தானில் என பல இடங்களில் பார்த்துள்ளனர். அதனாலேயே நாம் தயாராக உள்ளோம் என ஜபாஃ அல் நுஸ்ராவின் அமீர் தெளிவாக கூறியுள்ளார். 

இஸ்லாத்திற்கும் குப்ரிற்கும் இடையிலான தெளிவான போர்க்களத்தின் ஆரம்பம் சிரியாவில் இருந்து ........  என்ற உண்மை சிந்திப்பர்களிற்கு புரியாமல் போகாது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: