Facebook Twitter RSS

அல்-காயிதா தலைவர் அய்மன் அல்-ஸவாஹிரியின் சகோதரர் ஷேய்ஹ் முஹம்மட் அஷ்-ஸவாஹிரியை கைது செய்தது எகிப்திய இராணுவம்!!

Military Coup
manjainanban.tk

Giza மாவட்டத்தில் இன்று ஒரு கைது இடம்பெற்றுள்ளது. அல்-காயிதா அமைப்பின் நடப்பு தலைவர் டாக்டர் அய்மன் அல்-ஸவாஹிரியின் சகோதரர் ஷேய்ஹ் முஹம்மட் அஷ் ஸவாகிரியை எகிப்திய இராணுவ ஜெனரல் சிசியின் இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசை வீழ்த்துங்கள் என்ற அவரது உரையே அவரின் கைதிற்கு காரணம் என எகிப்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


1990-களின் இறுதிகளில் ஹுஸ்னி முபாரக்கின் நீதிமன்றம் (?) Shaykh Muhammad Zhawahiri அவர்களிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 14 வருடங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பயங்கரவாத செயற்பாட்டிற்கு ஊக்கியாக செயற்பட்டமை, தேசத்துரோகங்களில் ஈடுபட்டமை, 1981-ல் அன்வர் சதாதை கொலை செய்வதற்கு இஸ்லாம் பூலி போன்றவர்களிற்கு ஆன்மீக தலைமைத்துவம் வழங்கியமை, அதிபர் ஹுஸ்னி முபாரக்கை கொலை செய்யுமாறு அறிவுறுத்தியமை, ஊழல் என அவர் மேல் பல குற்றச்சாட்டுக்களை விசாரித்தே எகிப்திய நீதி மன்றம் அவரை தூக்கிலிட உத்தரவிட்டது. 


2011-ல் மரண தண்டனை நிறைவேற்ற தயாரான போது ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளினால் அவரது தண்டனை நிறை வேற்றப்படவில்லை. 2011-ல் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் 2012-ல் சிறையில் தள்ளப்பட்டார். இம்முறை அவரை விசாரணை செய்ததோ மிலிட்டரி கோர்ட்.


அமெரிக்கா எகிப்தின் மதச்சார்பற்றவர்களுடனும் கொப்டிஸ்ட் கிறிஸ்தவர்களுடனும் சேர்ந்து எகிப்திய இராவத்தின் மூலம் முர்ஸியின் அரசை கவிழ்க்க பார்க்கிறது என அல்-காயிதாவின் தலைவர் ஏலவே அறிவித்திருந்தார். அது போலவே Shaykh Muhammad Zhawahiri அவர்களும் “சிலுவை படைகளும் அமெரிக்க பயங்கரவாத படைகளும் சேர்ந்து எகிப்தை துண்டாட பார்க்கின்றன. இதற்கு கொப்டிஸ்ட் கிறிஸ்தவர்கள் துணைபோகின்றனர். தெற்கு எகிப்தை கிறிஸ்தவ தேசமாக்கும் சதி திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” என முழங்கியிருந்தார். 


15 நிமிட ஒலி நாடாவில் இவரது பேச்சு அனைத்து இலட்சியவாத எகிப்தியர்களையும் சிந்திக்க வைத்தது. அந்த பேச்சிற்கு பழி வாங்கும் முகமாக இப்போது ஜெனரல் சிசியும் கொப்டிஸ்ட் மத குருக்களும் இணைந்து இவரை சிறையில் தள்ளியுள்ளனர். 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: