Facebook Twitter RSS

எகிப்திய படுகொலையில் கொப்ஸ்டிக் கிறஸ்தவர்களின் பங்கு!!

   


    கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் எகிப்திய முர்ஸி அரசிற்கு எதிரான புரட்சியிலும், ரபா படுகொலையிலும் மிக நெருக்கமாக செயற்பட்டுள்ளதற்கான தடங்கள் மெல்ல புலனாக ஆரம்பித்துள்ளன. ரபா படுகொலை களத்தில் எகிப்திய பொலிஸாருடன் இவர்களில் சிலர் காணப்பட்டதும் அவர்களது கவச வாகனங்களிற்கு நடுவே கொப்ஸ்டிக் தேவாலய வேன் நடமாடியதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு ஆரம்பித்த போது சில கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்களும் துப்பாக்கிளால் சூடு நடாத்தியுள்ளனர். ஜெனரல் சிசியிற்கு இவர்களுடன் உள்ள மிக நெருக்கமான உறவுகள் இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகின்றன. இதன் காரணமாக முழு கொப்ஸ்டிக் கிறிஸ்தவ சமூகம் மீதும் எகிப்திய முஸ்லிம்களின் கோபம் திரும்பியுள்ளது. கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் எதற்காக இதை செய்ய வேண்டும்?


எகிப்தின் Rab'ah Al Adawiyah-ல் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைக்கு பின்னால் மேற்கத்தைய சக்திகள் உள்ளனவா எனும் கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இன்றை நிலையில் முஸ்லிம் உலகில் பலமிக்க இராணுவத்தை கொண்ட தேசங்களாக மிச்சமிருப்பது துருக்கி, எகிப்து, பாகிஸ்தான். (ஈரானிய இராணுவத்தை முஸ்லிம் இராணுவமாக இஸ்லாத்தின் எதிரிகளும் கணிப்பதில்லை). பலமிக்க ஈராக்கிய, லிபிய மற்றும் சிரிய இராணுவ கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டடு விட்டன. அகண்ட யூத சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு தடையாக உள்ள பிரதான தேசம் எகிப்து. ஜெஸ்மின் புரட்சியின் போது எதிர்பார்த்த அளவு ஹுஸ்னி முபாரக்கின் இராணுவம் சேதங்களை எதிர்கொள்ளவில்லை. முர்ஸியின் அரசை வீழ்த்தி அதற்கு எதிராக மக்கள் புரட்சியை வலுவூட்ட எகிப்திய இராணுவத்திற்கு எதிரான உள்நாட்டு சண்டைகளங்களை உருவாக்க மேற்கு நாடுகள் திட்டமிடுவதற்கான அத்தாட்சிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

எகிப்தில் குறிப்பாக அலெக்ஸான்டிரியா மற்றும் கெய்ரோவில் கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். எகிப்து, சூடான், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளில் இவர்கள் வசிக்கிறார்கள். உலகில் எகிப்திலேயே இவர்களது சனத்தொகை அதிகம். எகிப்திய மொத்த சனத்தொகையில் இவர்கள் 10% உள்ளனர். எகிப்திய அரசியலில் தவிர்க்க முடியாத தீர்மான சக்தியாகவும் இவர்கள் விளங்கி வருகின்றனர். 

கொப்ஸ்டிக் ஒத்தடொக்ஸ் அலெக்ஸ்ஸான்டிரியா சேர்ச் எனும் பிரிவினரே அதிகம் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கத்தோலிக்கர்களும் உள்ளனர். School of Alexandria என்பதே உலகின் பழமை வாய்ந்த மத பாடசாலையாகும். 

அப்துல் நாஸர் மேற்கொண்ட இராணுவ புரட்சியில் சில கொப்ஸ்டிக் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். “பான் அரப் நெஷனலிசம் மற்றும் சோசலிஸ” கொள்கையை அவர் முன்னிறுத்திய போது பல கொப்ஸ்டிக் இராணுவ அதிகாரிகளை பதவியுயர்த்தி எகிப்தின் கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்களில் அவர்களை பங்களிக்க வைத்தார். அவர் பின் வந்த அன்வர் சதாத்தும் கொப்டிஸ்ட் இராணுவத்தில் மேஜர் ஜெனரல்களாக கொப்டிஸ்ட் கிறிஸ்தவர்களை வைத்திருந்தார். 



இஹ்வான்களிற்கு எதிரான மதச்சார்பற்ற தனது பரப்புரைக்கும் செயற்திட்டத்திற்கும் ஏதுவாக முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கும் இந்த கொப்டிஸ்ட் கிறிஸ்தவர்களை தனது ஆட்சியின் முக்கிய பங்காளர்களாக்கி இஹ்வான்களை எகிப்திய அரசியலில் புறந்தள்ள முற்பட்டார். அலெக்ஸான்டிரியாவில் அல் கமா அல் இஸ்லாமியின் தாக்குதல்களை முறியடிக்கவும், அவர்கள் பற்றிய தகவல்களை தரவும் அவர் இந்த கொப்டிஸ்ட் கிறிஸ்தவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டார். 

குர்ஆன் சுன்னாவிற்கு முன்னுரிமை அளிக்காமல் மனித மூளைகளின் சிந்தனைகளிற்கு முக்கியத்துவம் அளிக்கும் இஹ்வானிய வாரிசான மொஹம்மட் முர்ஸி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்த கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்களை தனது கூட்டாளிகள் பட்டாளத்தில் சேர்திருந்தார். 
இந்த எல்லைகளையும் தாண்டி மேற்கின் கிறிஸ்தவ தேசங்களும் இந்த கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்களுடன் நல்ல உறவை மேற்கொண்டு வந்தன. அவற்றின் உளவமைப்புக்கள் இவர்களுடன் நெருங்கி செயற்பட்டும் வந்துள்ளன. இப்போது அவர்களது எகிப்திய இராணுவத்தையும் அதன் கட்டமைப்பையும் தகர்க்கும் இறுதி கட்ட நடவடிக்கைகளில் மீண்டும் அவர்களது கொப்ஸ்டிக் தளம் இயக்கப்படுகிறது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: