Facebook Twitter RSS

குடிமக்களின் பெயரில் ஒரு சர்வாதிகார நியாயம்:-ஜனநாயகம்


குடிமக்களின் பெயரில் ஒரு சர்வாதிகார நியாயம் அதுதான் ஜனநாயகம் . ஆண்டிக்கு ஆண்டியே அரசனாம் !! இப்படித்தான் சொன்னார்கள் . சுதந்திரத்தை அடுத்தவனின் மூக்கு நுனிவரை நீட்டமுடியும் என்று துள்ளிக் குதித்தார்கள் . அதன் வடிவம் பற்றிய ஆசை எப்போதும் நிராசையானது தவிர இன்றுவரை நியாயமாகவில்லை . பகல் கொள்ளைக்கும் ,பக்கச் சார்புக்கும் , படு பாதகங்களுக்கும் அது துணை போனதே தவிர உருப்படியாக அது என்றும் தீர்வு சொன்னதில்லை .


                                                     மக்களின் விருப்பே ஜனநாயகத்தின்  முடிவு இப்படி சொல்லி பகட்டான ஒரு தேர்தலும் வைக்கப்படும் . பல கட்சிகள் ,பல வாக்காளர்கள் இறுதியில் சிதறிய வாக்குகளில் மக்களின் எதிர்பார்ப்புகள்  சிதைக்கப்பட்டு புதைக்கப்படும் .அதாவது  கூட்டாட்சி என்ற குப்பை சாம்பாரில் அவிந்த வெங்காயங்கள் சில ஆட்சி ஏறி அதிகார தம்பட்டமடிக்கும் .
                                             35% வாக்குகளை பெற்ற சில சாக்கடைகள் சந்தனமாக நெஞ்சு நிமிர்த்தி அதிகார பெருமை பேசும் ! அப்படியானால் மறுபக்கத்தால் 65% மக்களின்  எதிர் வாக்குகளின் நிலை என்ன !? இதுதான் ஜனநாயகம் என்றால் மக்களால் தீர்மானிக்கப் படுவது என்பது எங்கே !? புல்லுப் போட்டால் பால் கொடுக்கும் பரிதாப ஜாதியா மக்கள் !வாக்குறுதியை வீசி வாக்குகளை கறக்கும்  வழிமுறையின் கீழ் ஒரு தேசியப்  பண்ணை எனும் அயோக்கியத்தனம் தவிர  உலகம் இதுவரை சாதித்தது என்ன !?
                          சாமர்த்தியமான பேச்சுத் திறமையும் , ஒரு வெள்ளையும் சொல்லையுமான வெளித்தோற்றம் போதும் ; ஒருவனது 'ரியல் பயோ டேட்டா ' அவுட் ஒப் ஆர்டர்' ஆகி 'நியூ வெர்சன் அவுட் புட் ஆகிவிடும் !' சண்டியன் ,சண்டாளன் சரித்திர நாயகன் ஆகிவிடுவான் ! மக்கள் தொகை பற்றியே தெரியாதவன் மக்கள் தலைவன் ஆகிவிடுவான் !சினிமாவில் விடும் சில வார்த்தை ரீலையே  சிலர் தங்கள்' ப்ரோபோசனால்' வாழ்க்கை ரீலாக்கி 'பொலிடிக்ஸ்' செய்யவும் புறப்பட்டு விடுவார்கள் . 
                                               ஜனநாயகத்தில் மேலோங்கிய நாடுகளாம் பிரான்ஸ் ,ஜேர்மன் , என்பன .அதில் மூக்கு நுனிவரை சுதந்திரம் பேணப்படும் என்ற வாக்குறுதி முஸ்லீம் பெண்களின் 'ஹிஜாப் ' விடயத்தில் யாரின் மூக்கை குடைந்தது ? அவிழ்த்துப் போட்டால் கண்களால் சில்மிஷம் செய்து உள்ளத்தால் பாலியல் சுகம் பெறும் அருவருப்பான, அத்தோடு ஆபத்தான காமக் கலாச்சாரத்துக்கு வழிவிடவில்லையே !? என்ற ஒரே கரணம் தான் இந்த அவிழ்ப்பு சு(க )தந்திரத்தை ஜனநாயகத்தில் வேண்டி நிற்கின்றதா !?
                                                     நீதி ,நியாயம் ,நேர்மை போன்ற எல்லாம் இன்று சந்தர்ப்ப வாதமான ஒரு பேசு பொருள் தான் . 'துப்பாக்கியோடு வந்து விஸ்வரூபம் 'காட்டிச் செல்வதெல்லாம் சர்வ சாதாரணம் இந்த எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கவும் ,எண்ணை ஊற்றவும் வழக்குப் போட்டு பிழைப்பு நடத்தவும் , சமரசம் பேசி சமபந்தியில் அமரவும் , 'கிரிமினல் ரூட்டில் டிப்லோமடிக் பொலிடிக்ஸ் ' செய்யவும் என  ஒட்டுமொத்த அநியாயக் காரர்களுக்கும் ஒரே புகழிடம் இந்த ஜனநாயக அரசியலே .
ஓ முஸ்லிமே ! நீ இஸ்லாத்தை தீர்வாக கொண்ட இலட்சியவாதி மறந்து விடாதே !
      தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும்  . இங்கு இழப்புகள் இறப்புகள் , ஒரு விடயமே அல்ல . கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது . இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது . ஆனால்   இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் .
           இந்த உம்மத்தின் சிந்தனை தெளிவின்மையும் , தலைமைகளின் தவறான வழி நடாத்தலும் இஸ்லாத்தின் நடைமுறை சாத்தியம் பற்றி' குப்பார்களின் ' தடைகளுக்கு முன் ,' குப்பார்களின் ' சதிகளுக்கு முன் அதில் ஒரு அங்கமாக நின்று பிரதிபளிப்பது தான் இஸ்லாத்தின் போராட்டம் என தவறான சாயம் பூசப்பட்டது . விளைவு முஸ்லிமிற்கே 'வஹி' வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது .
           வாழ்க்கையே' வஹியாக்க ' வேண்டிய சமூகம் காலத்தையும் ,சூழ்நிலையையும் கூட்டுச் சேர்த்து ஒரு இணைவைப்பை இபாதத் ஆக்கியது . அதாவது வஹி மாற்ற வேண்டிய காலமும் சூழ்நிலையும் வஹியையே காலாவதி ஆக்கியது.   இந்த தவறை சுட்டிக் காட்டுபவர்களிடம் " நீங்கள் சித்தாந்த வாதிகள் உங்களது போதனைகள் சாத்தியமற்றது " என கூறவும் பட்டது . (ஆகக் கொடுமையானது 'வஹியின்' முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்களின் வாக்குப் பலத்தை கேட்கத் தொடங்கியதே . )
               
             ஆனால் 'அல்ஹம்துலில்லாஹ் ' இந்த கசப்பான நிலை மாறிக்கொண்டே வருகின்றது .இஸ்லாத்தின் முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்கள் தெளிவோடு இருக்கிறார்கள் என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவு படுத்துகின்றன . கொடுமையான கொலைக்கருவி அச்சுறுத்தல் மூலம் முஸ்லீம்களை வாய்ப்பூட்டு போட்டு அடக்கி ஆளலாம் என்ற வழமையான பாணியும் மக்கள் போராட்டத்தின் முன் மண்டியிடத் தொடங்கி விட்டது ! இன்ஷா அல்லாஹ் சத்தியத்தின் ஆதிக்க காலம் நெருங்குகிறது .

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: