Facebook Twitter RSS

மத்திய ஆபிரிக்க குடியரசில் பிரான்ஸின் இராணுவ தலையீடுகள் எதனை சுட்டி நிற்கின்றன?


னிதாபிமான நெருக்கடி அதிகரித்துள்ளதையும் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR) மார்ச் மாதம் பிரெஞ்சு ஆதரவு பெற்ற இராணுவ சதிஆட்சியை தொடர்ந்து, நடந்துவரும் குறுங்குழுவாத வன்முறை அதிகரித்துள்ளதை அடுத்தும்பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அதன் முன்னாள் காலனியில் மற்றொரு இராணுவத் தலையீட்டை தொடக்க தயாராகிறார்.


இஸ்ரேலுக்கு மூன்று நாட்கள் பயணித்தபின்ஈரானுக்கு எதிரான விரோத நிலைப்பாட்டை அதன் அணுசக்தி ஆயுதத் திட்டங்கள் குறித்து எடுத்தபின்,ஹாலண்ட் சர்வதேச சமூகத்தை மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR)"செயற்பாடுகளைவிமர்சிப்பதைவிடுத்து “செயலபடுமாறு” கருத்துத் தெரிவித்துள்ளார்.

CAR ல் பிரெஞ்சுத் தலையீடு, Bangui மற்றும் அதன் புறநகரங்களை இராணுவ நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றுதல்மற்றும் நாட்டின் வடமேற்குப்பகுதிகளில் சிறு நகரங்களைக் கைப்பற்றுவது என்றும் உள்ளது;இது CAR  ஐ Cameroon மற்றும் Chad உடன் இணைக்கும் மூலோபாய பாதைகளைஅணுகும் நடவடிக்கையை கொண்டிருக்கிறது.
தற்பொழுது பிரான்ஸ் CAR ல் 410 துருப்பினரைக் கொண்டுள்ளது

அவர்கள் CARதலைநகரான Bangui இன் விமான நிலையத்தைக் காக்கின்றனநேற்று பிரெஞ்சுப் பாதுகாப்பு மந்திரி Jean-Yves Le Drian “1000 துருப்புக்கள்” CAR க்கு ஏற்கனவே உள்ள 410 பிரெஞ்சுத் துருப்புக்களை தவிர அனுப்பப்படும்அவை குறைந்தப்பட்சம் மாதக்காலம் அங்கு இருக்கும் திட்டம் உள்ளது என்றார்.

CAR ல் இராணுவத் தலையீட்டிற்கு பிரான்ஸ் அழுத்தம் கொடுத்து ஐ.நா.ஆணையையும் நாடியது.நா.பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் டிசம்பர் தொடக்கத்தில் அண்டை நாடுகளை அனுமதிக்கும் ஒரு திட்டத்திற்கு வாக்களிக்க அது திட்டமிட்டுள்ளது—அதாவது ஆபிரிக்க ஒன்றியம் (AU),  மற்றும் பிரான்ஸ், மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR) தலையீடு செய்வதற்குஅது AU படைகள் CAR ல் செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்க, டிசம்பர் 6-7 திகதிகளில் பாரிஸ் 40 ஆபிரிக்க நாட்டு அதிகாரிகளுடன் உச்சிமாநாடு நடத்த உள்ளது.
பிரெஞ்சு இராணுவத் தலையீடு பாரிஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடக்கலாம்ஆனால் Le Nouvel Observateur பிரெஞ்சு அதிகாரி ஒருவர் “CAR  ல் தலையிட நாங்கள் தயாரித்து வருகிறோம்ஒருவேளை ஆபிரிக்க பாதுகாப்பு உச்சிமாநாடு எலிசேயில் டிசம்பர் 6-7 திகதிகளில் முடிந்தபின்தேவைப்பட்டால் முன்கூட்டியே” என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

தலையீட்டை தொடக்கு முன்பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு பினாமிகள் போல் செயல்படும் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் பாரிஸ் பேச்சுக்களை தீவிரப்படுத்தியுள்ளது.  மிஸ்மா என அழைக்கப்படும் 2,500 பேர் அடங்கிய அமைதி காக்கும் படைதற்பொழுது நாட்டில் நிலை கொண்டுள்ளதுநவம்பர்18 அன்று ஐ.நாதலைவர் பான் கி மூன் இன்னும் 6,000 சர்வதேசத் துருப்புக்கள் தேவை என்றார்.

மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR) இராணுவத் தலையீட்டிற்கு தயாரிக்கையில் பாரிஸ் செயற்பாட்டின் தன்மையை குறைத்துக்காட்ட முனைந்துள்ளதுஒரு குறுகிய காலத்திற்கு இது நடத்தப்படும்பின் துருப்புக்கள் பின்வாங்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிரெஞ்சு ஆதரவுடைய செலேகா (சாங்கோ தேசிய மொழியில் “கூட்டு”)முஸ்லிம் போராளிக்குழு ஜனாதிபதி பிரான்சுவா போசிசே மார்ச்சில் அகற்றியபின், மத்திய ஆபிரிக்க குடியரசு ஆழ்ந்த குறுங்குழுவாத வன்முறை,மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றில் சிக்கியுள்ளதுஒரு முஸ்லிமானசெலேகா தலைவர் மைக்கேல் ஜோடோடியாஆட்சி சதிக்குப்பின் தன்னை ஜனாதிபதி என அறிவித்துக் கொண்டார்.

ஆட்சி கவிழ்ப்பில் இருந்துசெலேகா எதிர்ப்புச் சக்திகளுக்கும் கிறிஸ்துவ சமூகங்கள் நிறுவிய போராளிகளுக்கும் இடையே வன்முறை மோதல்கள் பெருகியுள்ளனபிந்தையோர் மக்கட்தொகையில் 80% உள்ளனர்.
செலேகாவால் தூண்டப்பட்டு நடைபெற்று வரும் குறுங்குழுவாத இரத்தக்களரி சதிஆட்சிக்கவிழ்ப்பிற்கு பாரிஸின் ஆரம்ப ஆதரவில் இருந்த பிற்போக்குத்தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

அதேபோல் அதுCAR  ல் தலையீட்டில் ஈடுபடும் என்னும் அச்சுறுத்தலை அதிகப்படுத்தியிருப்பதையும் காட்டுகிறதுஇப்பொழுது அது ஆதரவு கொடுத்த ஆட்சி கவிழ்ப்பில் இருந்து வெளிப்பட்டுள்ள வன்முறையைப் பயன்படுத்திCAR ல் அதன் தலையீட்டை முடுக்கியுள்ளதுஇத்தலையீடு CAR மக்களுக்கு எதிராகவும் உள்ளது.

பிரான்ஸ் அதன் முன்னாள் காலனியை மீண்டும் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர நோக்கம் கொண்டுள்ளதுஇது உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றாகும்.ஆனால் இயற்கை வளங்களான வைரங்கள்தங்கம்யுரேனியம்நல்ல மரம்,எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டதுஹாலண்டின் உள்நாட்டில் அரசாங்கத்தின் ஆழ்ந்த செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்களுக்கு எதிரானஎதிர்ப்பில் இருந்து திசை திருப்பும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.அரசாங்கம், ஹாலண்டை உறுதியான போர்த்தலைவராக காட்ட முற்படுகிறது.(see “France seizes on murder of RFI journalists to intensify Mali war).

CAR  ல் பிரெஞ்சுத் தலையீடு, மோதலின் கீழ்நோக்கிய தன்மையை அதிகரிக்கத்தான் உதவும்அதேபோல் இனவழி குறுங்குழுவாத இரத்தக்களரியையும் அதிகரிக்கும்இது பிராந்தியத்தில் நாடுகளைப் பலமுறை பேரழிவில் தள்ளியுள்ளது
IRIN  செய்தி நிறுவனம் “மனிதாபிமான மற்றும் வளர்ச்சி குறியீடுகள் ஆட்சிசதிக்கு முன் தீவிரமாக இருந்தன

ஆனால் இப்பொழுது ஆயுதக் குழுக்களுக்கும் சமூகங்களுக்கும் மதவாதிளுக்கும் இடையே பெருகிய வன்முறை இருக்கையில்அவை இன்னும் மோசமாகி விட்டன.”

IRIN கருத்துப்படி, “கிட்டத்தட்ட முழு மக்கட்தொகையான 4.5 மில்லியனும் பாதிக்கப்பட்டுள்ளது; 1.1 மில்லியன் மக்கள் தலைநகர் Bangui க்கு வெளியே,கடுமையாக அல்லது சுமாரான முறையில் உணவுப் பாதுகாப்பு அற்று உள்ளனர். 40,000 மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர்இது சில மாதங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையைவிட இரு மடங்காகும்.”நிறுவனம் கிட்டத்தட்ட 65,000 மக்கள் அண்டை நாடுகளுக்கு, குறிப்பாக Cameroonக்கு சென்றுவிட்டனர் என்று கூறுகிறது.

CAR ல் உள்ள, .நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவரான அமி மார்ட்டின் கூறினார்: “CAR முன்பே தோல்வியுற்ற அரசு.... இப்பொழுது இன்னும் மோசமாகிவிட்டது... பல உதவிகள் தேவைப்படும் 1.5 மில்லியன் மக்கள் உள்ளனர் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்—அது சுகாதாரம்ஊட்டச்சத்துஇடம்பாதுகாப்பு எனஎதுவாயினும் சரி.

செப்டம்பர் தொடக்கத்தில் CAR இன் வடமேற்கு சிறுநகரமானபோசன்கோவாவில் குழுவாத மோதல்கள் வெடித்துள்ளனஅது இப்பொழுது மாநிலம் முழுவதும் பரவியுள்ளதுமாநிலம் முழுவதும் கிராமங்கள் மக்களின்றி உள்ளனபலவும் ஆயுதக்குழுக்களால் எரிக்கப்பட்டுள்ளன.
IRIN, எட்டு வயதுக் குழந்தையின் தந்தை பிரோபெட் என்கேபோலாவை மேற்கோளிட்டுள்ளது; “நாங்கள் இங்கு செலேகாவில் உள்ளோம்;  அவர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்துகொள்ளையடித்து அனைத்தையும் சேதப்படுத்தி பலரைக் கொன்றனர்.”

அவர் மேலும் கூறியது: “நாங்கள் எங்கள் வீடுகள்வயல்கள்பொருட்களை இழந்து விட்டோம். எங்கள் பொருட்களுடன் வீடுகள் எரிக்கப்பட்டன....எங்களை எப்படி அழைத்துக் கொள்வது என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லை.எங்களிடம் இப்பொழுது ஒன்றுமே இல்லைநான் என் வீட்டிற்கோ,வயல்களுக்கோ போகமுடியாதுஎங்களை அவர்கள் அங்கு பார்த்தால் கொன்றுவிடுவர்.”
இந்த மோதல் நாட்டின் 70% குழந்தைகளை கல்வி கற்பதில் இருந்து அகற்றியுள்ளதுகிட்டத்தட்ட 3,500 பேர் எதிர்த்தரப்பு சக்திகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்எண்ணிக்கை தெரியாத அளவு நபர்கள் பலாக்கா எதிர்ப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் —இது ஒரு புதிய முக்கிய கிறிஸ்துவ எழுச்சிக்குழுபோசிசே ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: