Facebook Twitter RSS


அன்று (19/10/2012) "அக்பர் ஆபாதி" பள்ளிவாசல் தீர்ப்பு!


டெல்லி "சுபாஷ் பார்க்" வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய "அக்பர் ஆபாதி" பள்ளிவாசலை இடிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. (சென்னை "கோயம்பேடு" பஸ் நிலையம் எதிரில் "பூங்கா"விற்குள் பிரம்மாண்டமான "கோவில்" உள்ளது,கவனிக்கத்தக்கது). 400 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க இந்த பள்ளிவாசல், "முதல் விடுதலை போரின்போது" வெள்ளையரால் இடிக்கப்பட்டது.பிறகு இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களால் மறுநிர்மாணம் செய்யப்பட்டது. கடந்த ஜூன் 2012 வரை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ உள்ளிட்ட 5 நேரத்தொழுகைகள் நடைபெற்று வந்த நிலையில், கோர்ட்டு உத்தரவுப்படி பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை, இம்மாதம் அக்டோபர் 11 அன்று, டெல்லி ஹைகோர்ட்டில், நீதிபதிகள் எஸ்.கே.கோல், ராஜீவ் மற்றும் எம்.எல்.மெஹ்தா ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்றது. இறுதி விசாரணையின்போது, பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோர்ட் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை இன்றைக்கு (19/10) ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் மொத்தம் 5 தரப்பினர் சேர்ந்துக்கொண்டனர். முஸ்லிம்கள் தரப்பில், டெல்லி "மட்டியா மஹல்" தொகுதி எம்.எல்.ஏ.வான ஷுஐப் இக்பால், தனது வக்கீல்கள் மூலம், தொழுகை நடத்திட அனுமதி கோரினார். இதை "ஹிந்து மகாசபை" வக்கீல்கள், எஸ்.டி.பந்தீஷ் மற்றும் அமன் லக்கி ஆகியோர் எதிர்த்தனர். பழமை சின்னங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பள்ளிவாசலை இடிக்க தேவை இல்லை என்றும், முழுமையான ஆதாரங்கள் திரட்ட கால அவகாசம் கோரப்பட்டது. டெல்லி மாநகராட்சியின் வக்கீல் "சேத்தன் ஷர்மா" மற்றும் டெல்லி போலீசின் வக்கீல் "பவன் ஷர்மா" ஆகியோர் வாதிடுகையில், முஸ்லிம்களின் பிரதிநிதியான ஷுஐப் இக்பால், தனது பொறுப்பில் பள்ளியை இடிக்கும்படி, கோர்ட் உத்தரவிடவேண்டும்,என்று வாதிட்டனர். இது குறித்து எம்.எல்.ஏ., இக்பால் கூறும்போது, எனது உயிரை விட்டாலும், பள்ளிக்கு சிறு குந்தகம் ஏற்படவும் விடமாட்டேன் என்றார். அதே நேரம், இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ள நிலையில், அல்லாஹ்விடம் அதிமதிகம் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் எம்.எல்.ஏ. இக்பால் தலையிட்டுள்ளதால், அவருக்கு அரசின் சார்பில் பல தொல்லைகள் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: