Facebook Twitter RSS

சிரியாவின் உளவுத்துறை தளபதி ஜெனரல் Jama'a Jama'a சினைப்பர் தாக்குதலில் பலி !!

ஜெனரல் ஜமா ஜமா. சிரிய இராணுவத்தின் உளவு பிரிவிற்கு பொருப்பாகவிருந்தவர். சிரியாவின் உள்நாட்டு படுகொலைகள் முதல் சிரிய போராளிகளின் படுகொலைகள் வரை பல்லாயிரக்கணக்கான மனித கொலைகளிற்கும் சித்திரவதைகளிற்கும் பொருப்புதாரி. சிரிய இராணுவத்தில் மிக முக்கியமானவரும் அதிகபட்ச அதிகாரங்களை கொண்டவருமாக விளங்கினார் ஜெனரல் ஜமா ஜமா. அதிபர் பஸர் அல்-அஸாதின் பல கட்டளைகளை நிறுத்தும் அளவிற்கும், தாமதப்படுத்தும் அளவிற்கும் இவர் சிரிய அரசில் தாக்கம் செலுத்துபவராக இருந்தவர். பஸர் அல்-அஸாதின் தந்தையும் முன்னாள் சிரிய சர்வாதிகாரியுமான ஹபீஸ் அல்-அஸாதின் நம்பிக்கை மிகு தளபதியாகவும் இவர் விளங்கியவர். லெபனானில் வைத்து சிரியா நடாத்திய பல தாக்குதல்கள் பெனிட்ரேசன்களிற்கு கட்டளையிட்டவரும் இவரே. 2005-ல் லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரீரியின் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியும் இந்த ஜமா ஜமா தான். 


நேற்றைய தினம் சிரியாவின் கிழக்கு மாகாணமான Deir al-Zo-ல் நடாத்தப்பட்ட சினைப்பர் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது மரணம் சிரிய விடுதலை போராட்டத்தில் ஒரு மைல்கல் என “ஆயிஷா பின்த் அல்-ஸித்திக்கா பிரிகேட்டின்” தளபதி கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சுதந்திர சிரியனும் இவரது மரணத்தை கொண்டாடுவான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச மனித உரிமைகள்சார் அமைப்புக்கள் இவர் மீது பல மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன என்றும் இவர் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உரித்துடைய ஒரு நபர் என்றும் கருத்து வெளியிட்டுள்ளன. 

நான்கு தசாப்த அஸாதிய குடுப்ப ஆட்சியின் நிலைப்பிற்காக சுமார் 100,000 பேர் பலியாக்கப்பட்டிருப்பது சிரியாவின் பெரிய சோகமாகும். இதில் கணிசமான பங்கு இந்த ஜெனரல் ஜமா ஜமாவிற்கு உண்டு. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: