Facebook Twitter RSS

அமெரிக்கா........... ஆ.....ஆ....ஆ...

      வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கையோடு, அரசின் பல இணையதளங்களும் தங்களின் சேவையை நிறுத்திக் கொண்டுள்ளன. 
       இ கவர்னன்ஸ் எனும் மின்னணுமயமாக்கப்பட்ட அமெரிக்க நிர்வாகம் இதனால் ஒரேயடியாக ஸ்தம்பித்து நிற்க, மக்கள்பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. 
       ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு குடியரசுக் கட்சி முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் மொத்தமாக அரசாங்கத்தையே முடக்கிவைத்திருக்கிறார் ஒபாமா. 
       இந்த ஷட்டவுன் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை (முன்பு க்ளிண்டன் ஆட்சியில் 21 நாட்கள் நீடித்தது). ஆனால் முடிவில் மக்களின் அமோக ஆதரவு ஒபாமாவுக்கே கிடைக்கும் நிலைதான் உள்ளது.                அரசின் முடக்கத்தால், பல அரசு இணையதளங்களும் முடங்கிப் போயுள்ளன. அட உலகமே ஆர்வத்துடன் பார்க்கும் நாசாவின் இணையதளம் கூட முடங்கிப் போயுள்ளது.

அதுபற்றிய விரிவான ஒரு பார்வை...

      அரசாங்கத்தின் சில இணைய தளங்கள் இயங்கினாலும், பெரும்பாலான தளங்கள், 'ஸாரி... ஷட்டவுன் காரணமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளது,' என்ற அறிவிப்புடன்தான் உள்ளன


அப்டேட் இல்லை.........  
       சில இணையதளங்கள் இயங்கினாலும், ஷட்டவுன் காரணமாக அப்டேட் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளன. காரணம் அப்டேட் செய்ய வேண்டிய பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதுதான்.

நாசா:
       உலகின் மிகப் பிரபலமான அரசு இணையதளங்களுள் ஒன்றான நாசாவின் www.nasa.gov முழுமையாக முடங்கிப் போயுள்ளது. மேலும் விவரங்களுக்கு அமெரிக்க அரசின் இணையதளத்தைப் பார்க்கச் சொல்லி குறிப்பு தந்துள்ளனர். அந்தத் தளத்தில் ஏன் இந்த ஷட்டவுன் என்ற விவரம் தரப்பட்டுள்ளது.


   அமெரிக்க அரசின் குடும்ப நலத்துறை, அமெரிக்க நீதித்துறை, அமெரிக்க விவசாயத்துறை, வெளிவிவகாரத் துறை உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முழுமையாக முடங்கியுள்ளன அல்லது அப்டேட் இல்லாமல் உள்ளன.

சிஐஏ:
  ஆனால் அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான சிஐஏவின் இணையதளம் மட்டும் முழுமையாக செயல்படுகிறது. அதில் அரசின் முடக்கம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அரசு கைவைக்காததால் இந்த நிலை.

     அரசின் இணையதளங்கள் முழுமையாக முடங்கிப் போயிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர், "இது மக்களை பரபரப்புக்குள்ளாக்கும் செயல். இதன் மூலம் நிலைமையின் தீவிரத்தை உணர வைக்கிறது அரசு. ஆனால் எப்படியும் இந்த நிலை ரொம்ப நாள் நீடிக்காது. எனவே அட்லீஸ்ட் இணையதளங்களையாவது முடக்காமல் இருக்கலாம்," என்று கூறியுள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: