Facebook Twitter RSS

“நேவி சீல்” அணியினர் சோமாலிய கடற்கரையில் நடந்த சண்டையில் பலி - தோல்வியில் முடிந்த அமெரிக்க தாக்குதல்!!



முதல் Navy SEALs. அமெரிக்க கடற்படையின் முதன்மை தாக்குதல் அணி. கடல் ஆகாய தரை தாக்குதல்களை நடாத்தக்கூடிய திறன் வாய்ந்தது இந்த நேவி சீல். அமெரிக்க மரைன் போர்சஸிற்கும் இவர்களிற்கும் உள்ள வித்தியாசங்களில் முக்கியமானது  இவர்கள் தாக்குதல் நடாத்திய பின் உடனடியாகவே தங்கள் தளம் திரும்பி விடுவர் என்பதாகும். இவர்கள் நேற்றைய தினம் சோமாலியாவினுள் நுழைந்து அல்-ஸபாப் அமைப்பின் தலைவர் Sheikh Mukhtar Abu Zubayrஅவர்களை கொலை செய்ய அல்லது கைது செய்ய எடுதுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்துள்ளது. 



அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்து பலூன் போட்களில் விரைந்து வந்த இரண்டு நேவி சீல் அணியினர் சோமாலிய கடற்கரை நகரான Barawe ல் வைத்து அல்-ஸபாப் தலைவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். அவர்களிற்கு அதன் தலைவர் அங்குள்ள உல்லாச விடுதியில் இருப்பதாக கி்டகத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் இந்த ஒப்பரேஷனை திட்டமிட்டிருந்தனர். 

அமெரிக்க நகரினுள் நுழைந்ததும் தமக்கு ஆதரவு வழங்க சீ.ஐ.ஏ.யினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏஜென்டின் சிக்னல் கிடைத்தவுடன் சடுதியாக உள்ளே நுழைந்தனர். இவர்களது வரவை ஏலவே தெரிந்திருந்த அல்-ஸபாப் போராளிகள் இவர்கள் நுழைந்தவுடன் சடுதியாக அகோர தாக்குதலை மேற்கொண்டனர். அவர்களின் தாக்குதலிற்கு முன் தாக்கு பிடிக்க முடியா நேவி சீல் தாக்குதல் அணியினர் பின்வாங்க ஆரம்பித்தனர். ஏற்கனவே சர்வதேச கடற்பரபபில் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை கலத்தில் தங்கள் ஸ்பீ்ட் போர்ட்களின் உதவியுடன் நேவி சீல் அணியினர் தப்பி ஒடிவிட்டனர்.. 

இந்த தாக்குதலில் 06 நேவி சீல் கொலைக்குழுவின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒரு சோமாலிய போராளியும் பலியாகியுள்ளார். நேவி சீலுடன் நடை பெற்ற சண்டைகளின் பின்னர் நகரை சுற்றி வளைத்துள்ள அல்-சபாப் போராளிகள் வீடு வீடாக தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நேவி சீல் அணியினரிற்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஒருவர் இங்கேயே பதுங்கியுள்ளதனை போராளிகள் அறிந்ததன் விளைவே இந்த நடவடிக்கை.                                                                                                                                       

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: