“குவாண்டனாமோ நோக்கிய பயணத்தில் அபூ அனஸ் அல் லிப்பி” - நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்!!

நேற்றைய தினம் (( 15/10/2013 )) நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்ட்டார். கறுப்பு ஸ்வெட்டரும் சாம்பல் ட்றவ்சரும் அணிந்த நிலையில் அவர் தனது நீதி விசாணையை எதிர் கொண்டுள்ளார். நீதிபதி லெவிஸ் கப்லான் இவர் மீதான குற்றச்சாட்டுக்களை வரிசையாக வாசித்துள்ளார் கிழக்காபிரிக்க நாடுகளான தன்சானியாவிலும், கென்யாவிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாகவே இவர் மீது அமெரிக்க சட்ட திணைக்களும் வழக்கு தொடர்ந்திருந்தது.
ஓகஸ்ட் 07-1998ல் கென்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 213 பேர் இறந்தனர். 5000 பேரளவில் காயமடைந்தனர். அதே நேரத்தில் தன்சானியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டு தாக்குதலில் 11 பேர் இறந்தனர். 70 பேர் காயமடைந்தனர். இதில் அபூ அனஸ் அல் லிப்பி நேரடியாக சம்மந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை. நிதிபதி கப்லான் வழக்கை வரும் ஒக்டோபர் 22இற்கு ஒத்திவைத்துள்ளார். இந்த தகவலை ஏ.எப்.பி. வெளியிட்டுள்ளது.
அமெரிக்க எப்.பீ.ஐ.-யினால் அபூ அனஸ் அல் லிப்பி பற்றி தகவல் தருபவர்களிற்கு 05 மில்லியன் அமெரிக்க டொல்ர்களை சன்மானமாக தருவதாக அறிவித்திருந்தது. அதன் மோஸ்ட் வோன்டட் பட்டியலில் இவரும் உள்ளடங்கியிருந்தார்.
அதிபர் ஒபாமா லிப்பிக்கு கிழக்காபிரிக்க தாக்குதல்களுடன் நேரடி தொடர்பிருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உண்டெனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அல்-லிப்பியின் கைது நிறைய உதவும் என நம்புகிறார் அமெரிக்க அதிபர் போலும்....
0 comments: