Facebook Twitter RSS

இஸ்ரேலிய பாதுகாப்பு படை மீண்டும் பலஸ்தீன குழந்தைகள் மீது குறிவைக்க ஆரம்பித்துள்ளன...!

Israeli border policemen detain a Palestinian boy in the east Jerusalem Shuafat refugee camp. (AFP Photo / Jonathan Nackstrand)
ஸ்ரேல் மேற்குகரையில் மீண்டும் பலஸ்தீன சிறுவர்களை இலக்கு வைத்து தனது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலிய அரசு எதிர்ப்பு போராட்டங்களிலும், வாராந்த ஜும்மாவிற்கு பின்னரான அல்-குத்ஸ் மீட்பு எதிர்ப்பார்பாட்டங்களிலும் கலந்து கொள்ளும் சிறவர்களை குறியாக கொண்டு யூத இராணுவம் தனது செயற்திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்த தகவலை இப்போது சர்வதேச அமைப்பான யுனிசெப் United Nations Children Fund (UNICEF) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்படும் சிறுவர்கள சி்த்திரவதை செய்தல், உள உடல் ரீதியாக அவர்களை முடமாக்குதல் போன்ற சர்வதேச விதி முறைகளிற்கு அப்பால் இஸ்ரேலிய அரசு செயற்படுகிறன்றது. 

யுனிசெப் வெளியிட்டுள்ள இந்த ரிப்போட்டுடன் சேர்த்து அது 38 ஆலோசணைகளையும் முன்வைத்துள்ளது. சர்வதேசத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து தாக்குதல், கைது, சித்திரவதை நடாத்தும் சக்திகளிற்கு எதிரான திட்டங்கள் அந்த ஆலோசணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

சிறுவர்களை கைது செய்யும் போது அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், இஸ்ரேலிய அரசிற்கும் அதன் இராணுவத்திற்கும் எதிராக தாக்குதல்கள், புரட்சிகள் ஏற்பட உழைத்ததாகவுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன. 

வகை தொகையற்ற சிறுவர்கள் தடுப்பு முகாம்களில் வைத்து நீண்டகாலம் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் முகமாக சிவில் நீதிமன்றங்களிற்கு பதிலாக மிலிட்டரி நீதி மன்றங்களின் பாணியில், 12-13 வரையான சிறுவர்களை 24 மணித்தியாலத்திலும், 14-15 வயது சிறுவர்களை 48 மணிநேரத்தினுலும், 16-18 வயது வரையிலான சிறுவர்களை 72 மணிநேரத்தினுள்ளும் கோர்ட்டில் ஆஜார் செய்யப்பட்டு அவர்களது குற்றங்கள் விசாரிக்கப்ட்டு தண்டனை அல்லது விடுதலை வழங்கப்படல் வேண்டும் என அந்த யு.என். அறிக்கை குறிப்பிடுகிறது. 

காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் முதலில் குறிவைப்பது குழந்தைகளையே. அவர்களின் தலைகளை நோக்கிய இஸ்ரேலிய ரைபிள்கள் முழங்குவது வழமை. ஒரு பலஸ்தீன் குழந்தை நாளைய ஹமாஸின் போராளி என்பதே ஸியோனிஸ்ட்களின் பார்வை. அதனால் குழந்தைகளை கொல்வதன் ஊடாக எதிர்கால போராளிகளின் உருவாக்கத்தை தடுக்கலாம் என ஸியோனிஸ்ட்கள் நம்புகின்றனர். 

இந்த வேலைத்திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது அண்மைய பலஸ்தீன சுகாதார திணைக்களம் விடுத்த “குழந்தைகளின் பிறப்பு விகித அதிகரிப்பு” பற்றிய அறிக்கையாகும். அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு ஆட்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்ரேலிய அரசிற்கு எதிரான ஒரு அறிக்கையை வெளியிட்டமை புதுமையானதே. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: