Facebook Twitter RSS

“ட்ரோன் அட்டாக்” எனும் பெயரில் நிகழ்த்தப்படும் அமெரிக்க பயங்கரவாதம் !

ரு ஜீப் வண்டி புளுதியை கிளப்பிக்கொண்டு விடியல் காலை செல்கிறது. சில நிமிடங்களில் அது வெடித்து சிதறுகிறது. எங்கும் புகை மண்டலம். சிதறடிக்கப்பட்ட கருகிப்போன ஜீப்பினுள் எட்டிப் பார்த்தால் ஒரு தாயும் அவள் குழந்தைகளும் அவள் கணவரும் பிணமாக எரிந்த நிலையில் கோரமாக காட்சி தருகின்றனர். விடயம் இது தான். அமெரிக்க கண்காணிப்பு சட்டலைட் தொழில் நுட் ப தகவல்களிற்கமைய, ஜீப்பில் செல்வது அல்-காயிதா ஆதரவு பயங்கரவாதிகள்.  ட்ரோன் ஆளில்லா கட்டுப்பாட்டியக்க விமான கமெராக்கள் மூலம் அந்த ஜீப் கண்காணிக்கப்பட்டு பின் இலக்கு வைக்கப்படுகிறது. ஒரு ஏவுகணை மூலம் இலக்கு அழிக்கப்படுகிறது. ஜீப்பினுள் ஏ.கே.47 ஒன்று மட்டும் கிடந்தால் போதும் அமெரிக்க அறிக்கையில் மிஷன் கொம்பிளீடட் என அறிக்கை வரும். இறந்தது பொது மக்களாக இருந்தால் ரியலி வீ ஆர் வொரியிங் திஸ் ஸ்ரஜடி என அறிக்கை வரும். அவ்வளவு தான். 



யெமனில் மீண்டும் அப்பாவிகள் ட்ரோன் விமான தாக்குதலில் பலியாக்கப்பட்டுள்ளதாக Human Rights Watch மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தனது எதிரிகளை ட்ரோன் மூலம் வேட்டையாடுவது இப்போததைய அமெரிக்க ஸ்டைலும் டெக்னிக்குமாகும். சட்டலைட் உதவியுடன் வழிப்படுத்தப்படும் கட்டளைகளிற்கிணங்க ட்ரொன் ஆட்கொல்லி விமானங்கள் தங்கள் லேசர் கைடட் ஏவுகணைகளை இலக்கு நோக்கி ஏவுகின்றன. 

102 பக்க அறிக்கையை ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பானது யெமன் மீதான அமெரிக்காவின் பொது மக்கள் படுகொலைகள் பற்றி பேசுகிறது.  அம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பும் 2013ல் அமெரிக்கா மேற்கொண்ட பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மற்றும் குனார் பிரதேசங்கள் மீதான ட்ரோன் தாக்குதலால் பலியாகியுள்ள அப்பாவி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பற்றி குற்றம் சுமத்துகிறது.

அமெரிக்காவின் லோ ஒப் வோர் எனும் சண்டைக்கான சட்டங்கள் ட்ரோன் தாக்குதலிற்கு தாராள அனுமதியை அளிக்கின்றன. அதை உயர்தரமான இழப்புக்கள் அற்ற, செலவு குறைந்த, துரிதகதியில் நிகழ்த்தப்படும் தாக்குதல் என நியாயப்படுத்துகிறது. “சேர்ஜிகல் ஸ்ரைக்” எனும் இவ்வகை தாக்குதல்கள் அமெரிக்க லோ ஒப் வோரில் முதன்மை ரக தாக்குதல்களில் ஒன்றாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. 

அமெரிக்க தாக்குதல்களில் பயங்கரவாதிகளை விட பொதுமக்களே அதிகம் மரணிக்கின்றனர் என ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு சாடியுள்ளது. ட்ரோனினால் இலக்கு வைக்கப்படுபவர்களில் 70 விகிதமானவர்கள் அப்பாவி பொதுமக்கள் எனவும் மிகுதி 30 விகிதமானவர்களே பயங்கரவாதிகள் என்றும் அந்த அமைப்பு புள்ளி விபரங்களுடன் உறுதிபட தெரிவிக்கின்றது. 

 அமெரிக்க தாக்குதல்களில் அவர்கள் எதிரிகளை கொன்றதை விட எதிலும் சம்மந்தம் இல்லாத சாதாரண பொது மக்களை கொன்றதே அதிகம் 
People gather at the site of a drone strike on the road between Yafe and Radfan districts of the southern Yemeni province of Lahj August 11, 2013. (Reuters)
ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பின் இந்த அறிக்கையிடல் பாராட்டத்தக்க ஒரு செயற்பாடாகும். அதே வேளை அமெரிக்காவின் எதிரிகளை “பயங்கரவாதிகள்” என்று எந்த அளவுகோலின் அடிப்படையில் அது குறிப்பிடுகிறது என்பது நியாயமிக்க கேள்வியாகும். ஒரு யெமனியிடமோ அல்லது ஒரு வசிரிஸ்தான் வாசியிடமோ இறந்தது யார் என்றால் அது ஒரு புனித போராளி என்பான். இறந்தவரை கண்ணியமாக “அஷ்-ஷஹீத்” என்று சங்கையாக விளிப்பான். ஆக இறந்தவர் ஒரு தரப்பினரிற்கு புனித போராளி. மறு தரப்பினரிற்கு பயங்கரவாதி. இதில் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பும், அம்னஸ்டி இன்டர்னஷனலும் அமெரிக்க எதிர்தரப்பினரை அமெரிக்கா குத்தும் முத்திரைகளான “பயங்கராவாதி, முஸ்லிம் அடிப்படைவாதி” போன்ற பதப்பிரயோகங்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் அடிப்படை பார்வைகள் என்ன என்பத பற்றிய கேள்விகள் எழுவதும் நியாயமானதே. 

மனித குலத்திற்கு எதிரான ஒரு அப்பட்டமான ஒரு இனஅழிப்புசார் குற்றத்தை அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் நடாத்திகொண்டிருக்கிறது. டிஜிட்டல் மெக்கானிக்கள் உபகரணங்கள் இன்று ஒரு முஸ்லிமின் உயிரை எடுப்பதா விடுவதா என்று தீர்மானிக்கின்றன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: