Facebook Twitter RSS

“ஈரானுக்கு எதிரான போர் “இன்னும் மேசை மேல்” - நெதன்யாகூவை சமாதானப்படுத்தினார் ஒபாமா?


செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம், பணிநிறுத்த அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது பெரிதும் மறைக்கப்பட்டது, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தனியாகுஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை ஈரானுக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல்களையும் பொருளாதாரத் தடைகளையும் தக்க வைக்க மற்றும் மேலும் விரிவாக்கஅழுத்தம் கொடுத்ததுதான். ஒபாமா, தன்னுடைய நிர்வாகமும் முந்தையதும் ஈரானை அச்சுறுத்தப் பயன்படுத்திய அதே மந்திரத்தை மீண்டும் கூறிய வகையில் அதற்கு இசைந்தார். “இராணுவ நடவடிக்கை உட்பட, மேசையில் இருந்து எந்த விருப்பத் தேர்வையும் நாம் அகற்றவில்லை.” என்று அமெரிக்க ஜனாதிபதி ஒரு மணி நேரம் நெத்தனியாகுவுடன் பேசிய பின், செய்தி ஊடகத்துடன் குறுகிய நேரம் பேசியபோது குறிப்பிட்டார்.


நெத்தனியாகுவின் வருகை, சமீபத்தில் ஈரானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹசான் ருஹானியுடன் ஒபாமா ஒரு 15 நிமிட தொலைபேசி உரையாடலை நடத்திய மூன்றே நாட்களுள் வந்துள்ளது—அத்தகைய தொடர்பு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே 1979 ஈரானியப் புரட்சிக்குப்பின் முதல் தடவையாக வந்துள்ளது. இரு புறத்தின் கூற்றுக்களில் இருந்தும், இரு ஜனாதிபதிகளும் ஒரு உடன்பாட்டை பேச்சுக்களின் மூலம் முன்னேற்றுவிக்கும் விருப்பத்தை தெரிவித்தனர்; நீண்டகாலமாக ஈரானின் அணுத் திட்டம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர்.

P5+1 குழு என அழைக்கப்படுவதற்கும் (அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜேர்மனி) மற்றும் ஈரானுக்கும் இடையே முறையான பேச்சுக்கள் ஜெனிவாவில் அக்டோபர் 15 அன்று மீண்டும் தொடங்க உள்ளன. வாஷிங்டன், தெஹ்ரானிடம் இருந்து தொலைநோக்கான சலுகைகளை பெறமுடியும் என நம்புகிறதுஅதேவேளை ஈரானிய அரசாங்கம், ஈரானிய உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களைப் பெரிதும் பாதித்து, சமூக அமைதியின்மை ஆபத்தை தூண்டும் பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட வேண்டும் என  ஆர்வமாக உள்ளது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்த குறிப்பிடத்தக்க மாற்றம்,கடந்த மாதம் சிரியாவிற்கு எதிரான போரில் அமெரிக்க மக்களை தள்ள எடுத்த முயற்சி, பெரும்பான்மையான மக்கள் விரோதப் போக்கால் தடைக்கு உட்பட்டதை அடுத்து வந்துள்ளது. வாஷிங்டனின் நெருக்கமான நட்பு நாடான, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் போர் ஆதரவுத் தீர்மானம் முதலில் நிராகரிக்கப்பட்டதை முகங்கொடுத்து, பின் அமெரிக்க காங்கிரசிலும் இராணுவ சக்திப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் கிடைக்காமல் முன்னோடியில்லா வகையில் தோல்வி அடையலாம் என்ற நிலையில், நிர்வாகம் அதன் திட்டமிட்ட தாக்குதலில் இருந்து பின்வாங்க நேர்ந்தது. சிரியா அதன் இரசாயன ஆயுதங்களை அழிக்கத்தயார் என்ற ரஷ்ய முயற்சியை நிர்வாகம் தழுவிக்கொண்டது.

திலிருந்து, ஒபாமா நிர்வாகம், ஈரானின் அணுத் திட்டம் குறித்து ஒரு பேச்சுவார்த்தைகள் மூலம் வரும் உடன்பாட்டை வளர்க்க முயலகிறது. அமெரிக்கா பல தசாப்தங்களாக தண்டனை போன்ற பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியுள்ளதுடன், ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை அடித்தளமாகக் கொண்டு போர் அச்சுறுத்தலையும்செய்துள்ளது. தெஹ்ரானோ தொடர்ச்சியாக இக்குற்றச்சாட்டுக்களை மறுத்து, அதன் அணுத்திட்டம் சமாதான நோக்கங்களுக்கு மட்டுமே என வலியுறுத்தி வந்துள்ளது.

நெத்தனியாகு தலைமையிலான இஸ்ரேலிய ஆட்சி இதை எதிர்கொண்ட விதம் வெறித்தனமானது, தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே சமரச நடவடிக்கைக்கு அது விரோதப் போக்கை கொண்டுள்ளது.

அமெரிக்காவிற்கு பறப்பதற்கு முன் நெத்தனியாகு, இஸ்ரேலியச் செய்தி ஊடகத்திடம் கூறினார்: “நான் இஸ்ரேல் குடிமக்களை, நம் தேசிய நலன்களை, மக்கள் என்னும் முறையில் எமது உரிமைகளை, நம்மையும்,சமாதானத்திற்கான நம் நம்பிக்கையை காக்கும் உறுதியையும்பிரதிநிதித்துவப்படுத்துவேன்.”
திங்களன்று வாஷிங்டனிலும் செவ்வாயன்று ஐ.நா. பொதுமன்றத்திலும் தன் பணி, “உண்மையை பேசுவது. இனிய பேச்சுக்கள், சிரிப்புக்களுக்கு எதிராக உண்மைகள் கூறப்பட வேண்டும்”என்றார்.

ஒபாமாவை சந்தித்தபின், இஸ்ரேலிய பிரதம மந்திரி கூறினார்: “ஈரான்,இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது”; அமெரிக்கா இன்னும் மற்ற பிரதான சக்திகளுன் பேசுகையில் ஈரான் அதன் அணுத்திட்டத்தை தொடர்ந்தால், “பொருளாதாரத் தடைகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும்”என்றார் அவர். ஈரானிடம் காட்ட வேண்டிய ஒரே கொள்கை “நல்ல நம்பகத்தன்மை மிக்க இராணுவ அச்சுறுத்தல் மற்றும் வலுவான பொருளாதாரத் தடைகள்தான்” என்று அவர் வலியுறுத்தினார்.

வெள்ளை மாளிகையில் பேச்சுக்களுக்குப் பின்னர், நெத்தனியாகு காபிடோல் ஹில்லில் அமெரிக்க சட்டம் இயற்றுபவர்களுன் வெளியேறும் அமெரிக்கத்தூதர், அமெரிக்காவில் பிறந்த மைக்கேல் ஓரெனுக்கு நடத்தப்படும் விழாவில் பங்கு பெறச்சென்றார். குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்குள் விகிதத்தை மீறிய செல்வாக்கு உள்ளதை இஸ்ரேல் பயன்படுத்த விரும்புகிறது; இதையொட்டி வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே உடன்பாட்டில் தடைகளை ஏற்படுத்தலாம்  என்பது பற்றிக்கணக்கிடுகிறது.

இஸ்ரேலின் வலதுசாரி சியோனிச அரசாங்கத்தை பற்றிய நிலைப்பாட்டின் அப்பட்டமான அறிக்கை, அதன் முன்னாள் வெளியுறவு மந்திரி அவிக்டர் லிபர்மன்னிடம இருந்து வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு ஊழல் அவதூறில் சிக்கயதை ஒட்டி பதவியில் இருந்து இறங்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.

பேச்சுக்களை ஒட்டி வரக்கூடிய உடன்பாட்டிற்கு ஈரான் அளிக்கும் ஆதரவை “சமரசத்தின்மீது தாக்குதல்” என்று அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதி, “ஈரானியர்கள் நீண்டகாலமாக ஏமாற்று வகையைக் கடைப்பிடிக்கின்றனர்: பலவகை உறுதிமொழிகள் கொடுக்கும் தந்திர உத்தி, சர்வதேச சமூகத்திற்கு தவறான தகவலை மீண்டும் மீண்டும் கொடுத்து தாமதப்படுத்துல், அதேநேரத்தில் தங்கள் இலக்கான அணுவாயுதத்தை பெற முயற்சிகளை தொடர்தல் என்பவை உலக சமாதானத்தை அச்சுறுத்துவதாகும்.”

லிபர்மன் குறிப்பாக, 1981 ல் இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ஈராக்கின் ஓசிரிக் அணு உலைக்கூடத்தின் மீது நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு அறிவித்தார்: “ஈராக்கிய உலைக்கூடத்தை பொறுத்தவரை, இஸ்ரேல் ஒரு எச்சரிக்கை கொடுத்தது மட்டும் இல்லாமல், பின்னோக்கிக் காணும்போது, மற்றவற்றைப் போல் நாம்தான் சரி என்பதையும் கண்டோம் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.”

இக்கருத்து, இஸ்ரேல் அதேபோன்று அமெரிக்காவை போருக்கு இழுக்கும் நோக்கத்துடன் ஈரான் மீதான ஒருதலைப்பட்ச தாக்குதலை நடத்தத் தயார் என்ற அச்சுறுத்தலைத்தான் கொண்டுள்ளது என்பது அறியப்பட வேண்டும்.

இஸ்ரேல், வாஷிங்டனுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுக்கள் மூலம் வெற்றிகரமான உடன்பாடு வருவதை அகற்றும் நோக்கத்துடன்ஆத்திரமூட்டுதல்களை நடத்தும் என்னும் அச்சுறுத்தல், ஞாயிறன்று இஸ்ரேலின் பாதுகாப்புப் பிரிவு ஷின் பெட்டுடைய அறிவிப்பில் இருந்தது; அது ஈரானிய ஒற்றர் எனப்படுபவரை கைப்பற்றியதாகவும், அவரிடம் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் புகைப்படங்கள் இருந்தன என்றும் கூறியுள்ளது. இஸ்ரேலிய செய்தி அமைப்புக்கள் கூற்றுப்படி இக்கைது மூன்று வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.

டெல்அவிவில் உள்ள அச்சங்கள், வார இறுதியில் இஸ்ரேலின் நாளேடானHa’aretz   ல் “அமெரிக்காவுடன் சமரசம் என்பது ஈரானின் பிராந்திய சக்தியை அதிகரிக்கும், உலகில் நற்பெயரைக் கொடுக்கும்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கடந்த காலத்தில் அணுத்திட்டம், தேசிய அடையாளமாகவும் ஈரானின் வலுவில் அசைக்கமுடியாத அஸ்திவாரமாக இருந்தது என்றால், இப்பொழுது அத்திட்டத்தைத் தடைக்கு உட்படுத்தும் பேச்சுக்கள் ஈரானால் இன்னும் அதிக பிராந்திய செல்வாக்கு, அதிகாரத்தை அடையத்தான் பயன்படுத்தப்படும்.” என்று கட்டுரை கூறுகிறது.

இஸ்ரேலின் ஆளும் அரசியல் நடைமுறை, எந்த பிராந்திய சக்தியும் அணுவாயுதங்கள் மேல் தான் கொண்டிருக்கும் ஏகபோக உரிமையை சவாலுக்கு உட்படுத்தும் திறனுடன் வெளிப்படுவதை நிறுத்துவதில் உறுதியாக உள்ளது; அத்துடன் மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய தலைமைப்பங்கை அது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. அந்த இலக்கின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் வாஷிங்டன் அளிக்கும் 3.1 பில்லியன் டாலர் உதவிப் பணம் பெறுவதையும் நியாயப்படுத்த, (பெரும்பாலானது இராணுவத்திற்கு), அதற்கு தொடர்ச்சியான மோதல் நிலை தேவைப்படுகிறது.

திங்களன்று குறுகிய காலத்திற்கு ஒன்றாகத் தோன்றிய ஒபாமாவும் நெத்தனியாகுவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே “சமாதான வழிவகை” பற்றியும் பேசினர்; இதை அமெரிக்க நிர்வாகம் சமீபத்தில் புதுப்பிக்க முயன்றுள்ளது.

நெத்தனியாகுவை அவருடைய “பாலஸ்தீனிய அதிகாரத்துடன் நல்ல தன்மையுடன் பேச்சுக்கள் நடத்துவதற்கு” ஒபாமா பாராட்டியதுடன், இஸ்ரேலிய பிரதமரின் “அந்த இலக்கிற்காக முன்னேற்றப்படி எடுத்துவைக்கும் தைரியத்திற்கும்” தன் பாராட்டைத் தெரிவித்தார்.

பாலஸ்தீனிய நிலங்களை இரக்கமற்று திருடுவதில்தான் நெத்தனியாகு தன் “தைரியத்தை” காட்டியுள்ளார்; சியோனிச  குடியிருப்புக்கள், ஆக்கிரமிக்கப்பட்டமேற்குக்கரையிலும் ஜெருசெலத்திலும் வந்துள்ளன; அங்கு மக்கள்தொகை160,000ல் இருந்து 650,000 என சமாதான வழிவகை தொடங்கியபின் வளர்ந்துள்ளது.

ஈரானுடன் பேச்சுக்களை நடத்தும்போது, டெல் அவிவை சமாதானப்படுத்தும் நோக்கத்தில், வாஷிங்டன் பாலஸ்தீனிய மக்கள்மீது இஸ்ரேல் தாக்குதல்நடத்துவதற்கு இன்னும் கூடுதல் ஆதரவைக் கொடுக்கக் கூடும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: