Facebook Twitter RSS

பெங்காஸியின் மிலிட்டரி பொலீஸ் தலைமை கொமாண்டர் சுட்டுக்கொலை !!


Ahmed al-Barghathi  துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். லிபியாவின் மத்தியதரைக்கடல் நகரான பெங்காஸியின் கிழக்கு பகுதியில் வைத்து பெங்காஸி மிலிட்டரி பொலீஸின் தலைமை கொமாண்டர் (Ahmed al-Barghathi ) சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து வெளியேறிய வேளையில் துப்பாக்கிதாரிகள் இவரை சுட்டுக்கொன்றுள்ளனல். அல்-காயிதா ஆதரவு செயற்பாட்டாளரான அல்-லிபியை அமெரிக்க பலாத்காரமாக லிபிய இறையாண்மையை மீறிய நிலையில் கடத்தி சென்று நியூயோர்க்கில் விசாரித்து வருகிறது. இதன் பின்னர் லிபியாவில் பல இடங்களில் அரச எதிர்ப்பு வன்முறைகள் மெல்ல ஆரம்பமாகி வருகின்றன. 


லிபிய அரசால் போராளிகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலைமையே காணப்படுகிறது. இஸ்லாமிய இயக்க போராளிகளையும், ஆயுதம் தரித்த பழங்குடி இனத்தவரையும் கட்டுப்படுத்துவது என்பது லிபிய இராணுவத்தால் முடியாத காரியமாக உள்ளது. லிபியாவின் பல உட்பிராந்தியங்களில் அரச இயந்திரம் முடக்கப்பட்டுள்ளது. அங்கு இராணுவம் தனது நடமாட்டங்களை முற்றாக தவிர்த்தும் விட்டது. உமர் முக்தாரின் ஆதரவு கிரமாங்களிற்கு செல்ல அன்றைய இத்தாலிய ஜெனரல்கள் பயந்தது போலவே இன்று லிபிய ஜெனரல்கள் பயப்படுகின்றனர்.

மொத்த லிபியாவிலும் பெங்காஸியில் தான் லிபிய இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சீ.ஐ.ஏ.யின் உயர்நிலை உளவாளியும் இதே பெங்காஸி அமெரிக்க துணை தூதராயத்தில் வைத்தே குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அல்-காயிதா போன்ற அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்களின் ஆதிக்கமும் அவர்களின் கருத்தியல் தாக்கமும் பெங்காஸியில் வலுவடைந்துள்ளன. 

Wissam Ben Hamid. முன்னாள் லிபிய சுதந்திர போராளி குழுவொன்றின் தலைவர். இப்போது லிபிய பாதுகாப்பு அமைச்சில் முக்கிய அதிகாரி. இவரது இல்லத்தை நோக்கி கொல்லப்பட்ட பொலிஸ் கொமாண்டரின் ஆதரவு இனகுழுவினர் ஆர்ப்பாட்ட பேரணியாக திரண்டு வந்து கல்வீச்சு நடாத்தி அவரது வீட்டிற்கு தீ மூட்டியுள்ளனர். கொமாண்டரின் மரணத்திற்கு இவர் தான் காரணமாக இருந்துள்ளார் என்பது அவர்களது வாதம். 

2001- ல் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் வகை தொகையின்றி சிறிய ரக ஆயுதங்களை லிபிய கடாபி அரசு எதிர்ப்பு தரப்பினரிற்கு அள்ளி வழங்கினர். அவர்களது நோக்கமெல்லாம் கடாபியை வீழ்த்துவது. இப்போது அந்த ஆயுதங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு லிபியா முழுவதும் பரந்துள்ளது. லிபிய போராட்டங்களின் போது உடைக்கப்பட்ட லிபிய இராணுவ களஞ்சியங்களில் இருந்து கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை ரைபிள்களும் இவர்கள் வசம் உள்ளன. கடாபியின் ஆட்சியின் போது ஒரு துப்பாக்கு ரவையாவது வெடிக்காத போது, இன்றைய அமெரிக்க கைப்பொம்மை ஆட்சியில் ஒவ்வொருவரும் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். பிறந்த தினம், மரண தினம், திருமணம் எல்லாவற்றிற்கும் வானை நோக்கி தங்கள் கலஷ்நிகோவ்களை உயர்த்தி சுடுகின்றனர். தேவையேற்பட்டால் அதனை பணித்து அரசை நோக்கியும் சுடுகின்றனர். 

மேற்குலகும் அமெரிக்காவும் லிபியாவில் எதனை சாதித்துள்ளன என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரு பிசாசை விரட்ட நூறு பேய்களை கொண்டு வந்து விட்ட கதையாகவே லிபியாவின் நிலை மாறியுள்ளது. கூலிப்படையினரிற்கும், மாபியாக்களிற்கும், பாதாள உலக கும்பல்களிற்கும் “சுதந்திர போராளிகள்” என்ற பட்டத்தை வழங்கி அவர்களிற்கான ஆயுத பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்கியது இந்த அமெரிக்காவே. 

அமெரிக்க பாடசாலையிலோ அல்லது சுப்பர் மார்க்கெட்டிலோ ஒரு ஆயுததாரி சடுதியாக நுழைந்து சரமாரியாக சுட்டு தீர்ப்பதன் ஊடாக 10 பேரோ அல்லது 30 பேரோ செத்து போய்விட்டால் அமெரிக்கா அலறுகிறது. அதன் மீடியாக்கள் அலறுகின்றன. “ஆயுத கலாச்சாரம் பற்றியும் அதன் பயன்பாடுகள்” பற்றியும் செனட் விவாதிக்கிறது. அப்பாவிகளின் இறப்பிற்காய் அதன் அரசியல் தலைவர்கள் அழுகின்றனர். அதை தடுப்பதற்கான அனைத்து முனை செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடுகின்றனர். எதற்காக? சில அமெரிக்க உயிர்கள் இடைக்கிடை அழிவதை தடுப்பதற்கான. 

அனால் இதே அமெரிக்கா தான் ஈராக்கில், லிபியாவில் என ஆயுத குழுக்களை உருவாக்கி தெருச்சண்டியர்களிடமெல்லாம் கைகளில் ஆயுதங்களை வழங்கி அவர்களை சுதந்திர போராளிகள் என்று நாமகரணம் செய்தது. இதனால் இந்நாடுகளில் தினமும் 50 பேர் மரணிக்கின்றனர். மரணிப்பவர்களில் கணிசமானவர்கள் அப்பாவி பொதுமக்கள். இவர்களின் மரணம் பற்றி அமெரிக்கா அக்கறை கொள்கிறதா?!!. இல்லவேயில்லை. மாறாக இன்னும் பல தேசங்களில் மீண்டும் மீண்டும் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கான கொலைக்களங்களை அதன் உளவமைப்புக்கள் திறந்து விடுகின்றன. காலனித்துவ ஏகாதிபத்திய நலன்களிற்காக கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 

இந்த சுழற்றிசியின் ஒரு நிகழ்வே லிபியாவின் பெங்காஸி நகர பொலிஸ் கொமாண்டரின் கொலலையும் கூட

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: