Facebook Twitter RSS

சிரியாவின் மீது அமெரிக்கா தொடுத்துள்ள ஆக்கிரமிப்பிற்கான காரணங்கள்



இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு  முன் சில உண்மைகளை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியமாகும்.
1. மற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுடன் ஒப்பிடும்போது, சிரியாவில் ஏற்பட்ட புரட்சி முற்றிலும் வேறுபட்டதாகும். இப்புரட்சி இஸ்லாத்தை மையமாக  கொண்டுள்ளதால் சிரிய புரட்சியை  இஸ்லாமிய புரட்சி என்றே அழைக்கலாம்.
2. புரட்சியாளர்கள் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு போராடுவதால், அமெரிக்கா தன் கைக்கூலியான பஸாரைக்கொண்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக படுகொலைகளை நிகழ்த்திய போதிலும், அது தன் இலட்சியத்தில் இருந்து திசை திருப்பப்படாமல்; அன்னிய சக்திகளின் கையகப்படுத்தலிலிருந்து தன்னை தற்காத்துக்கொண்டுள்ளது.
3. பஸாருக்கு பிறகு  ஆட்சியில் அமர வைக்க புதிய ஏஜெண்டுகளை அமெரிக்கா உருவாக்கிய போதிலும், புரட்சியாளர்கள்  தங்களுடைய போராட்டம் யாருக்கு எதிரானது என்று நன்கு உணர்ந்துள்ளமையால், அந்த ஏஜெண்டுகள் புரட்சியின் பாதையில் எந்த தலையீடும் செய்ய இயலாமல் உள்ளனர்.
4. கிலாஃபா மீண்டும் ஏற்பட வேண்டும் என்கின்ற அழைப்பு புரட்சியாளர்களிடையே அதிகரித்துக்கொண்டுவரும் அதே வேளையில், அதுவே இந்த புரட்சியின் வாயிலாக தாங்கள் அடைய விரும்பும் இறுதி இலட்சியம் எனவும், மேலும் சிரியாவோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஃபலஸ்தீனத்தை விடுதலை செய்ய முயல்வோம் என்றும் அறிவித்துள்ளனர். இவற்றை வைத்து ஆய்வு செய்வோமானால் இது ஒரு உண்மையான விடுதலைக்கான புரட்சி என்று உணர்கிறது. புரட்சியை கையகப்படுத்த அமெரிக்கா எடுத்த  முட்டாள்தனமான நடவடிக்கைகளும் பலனளிக்காமல் போனதோடு, இந்த புரட்சி இறுதி கட்டத்தை அடைந்து தன்னுடைய இலட்சியத்தில்  வெற்றி வாகைசூட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிரிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 30% க்கும் குறைந்த இடங்களும், ஏனைய இடங்களனைத்தும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழும்  உள்ளது. கடந்த சில வாரங்களில் புரட்சியாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி, அமெரிக்காவின் கைப்பாவை அரசான பஸாரின் வீழ்ச்சியையும், வரவிருக்கும்  பெரும் வெற்றிக்கான நற்செய்தியையும் அறிவிக்கின்றதாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் தான் இரசாயன ஆயுதம் உபயோகிக்கப்பட்ட சர்ச்சை கிளப்பட்டுள்ளது. வளைகுடாப்போருக்கு முன்பு சதாம் ஹுசைன், குவைத்தை கைப்பற்ற அமெரிக்கா எவ்வாறு அனுமதித்ததோ,  அதைப்போன்றே அமெரிக்காவின் அனுமதியின்றி கண்டிப்பாக கொடுங்கோலன் பஸார் இரசாயன ஆயுதத்தை பிரயோகித்திருக்க முடியாது.
இந்த நிலைமையில் பஸாருடைய ஆட்சி கவிழ்வது உறுதி என்பதையும், எந்நேரமும் அவன் வீழலாம் என்பதையும் அமெரிக்கா உணர்ந்துவிட்டது. இந்த வீழ்ச்சி  பஸாருடைய தனிப்பட்ட வீழ்ச்சியாக இல்லாமல் சிரியாவின் முழு அரசியலமைப்பின் வீழ்ச்சியாக அமையும். மேலும் மேற்கத்திய நாடுகள் கடந்த காலங்களில்  சிரிய அரசுக்கு கொடுத்து வந்த பெரும் ஆயுதங்களும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். சிரியா முழுவதுமாக அவர்களின் கட்டுப்பாட்டில் வருவதோடு  நிலையான அரசின் அனைத்து அங்கங்களும் இராணுவ தளங்களும் (vital centers of Power) சேர்ந்து புரட்சியாளர்களின் வசப்படும்.
எனவே அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட இராணுவ தலையீடு என்பது,அதிமுக்கிய அங்கங்களும் இராணுவ தளங்களும் புரட்சியாளர்களின் வசம் வருவதை தடுப்பதற்காகும். (இதே காரணத்திற்காக தான் இஸ்ரேல் முன்னர் சில குறிப்பிட்ட இடங்களில் விமானங்களை வைத்து தாக்குதல் செய்தது நாம் அறிந்த்ததே).அதோடு நிற்காமல் லிபியாவில் செய்ததைப்போல் முஜாஹிதீன்களையும் ,அவர்களுடைய முக்கிய பயிற்சி மற்றும் இராணுவ தளங்களையும் தாக்குவதே அமெரிக்காவின் குறிக்கோளாகும். இதற்காககவே ஜபதுன்னுஸ்ரா  அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று முன்னரே அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆகவே அமெரிக்காவின் இராணுவ தலையீடு என்பது ஒபாமா சொல்வதைப்போல் அப்பாவி சிரிய மக்களுக்கு உதவி புரிவதற்காக அல்ல. மாறாக இராக், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பல நாடுகளில்  நடைபெற்றதைப்போன்று  இதுவும் உம்மத்திற்கு எதிரான போராகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து நம்மை காப்பாற்றுவானாக ! மேலும் அவர்களின் சூழ்ச்சி அவர்களின் அழிவுக்கே காரணமாக அமைய வழிவகுப்பானாக !.
சிரியாவில் அல்லல்படும் மக்களுக்காகவும்,  இறுதி வெற்றி இஸ்லாத்திற்காக அமையவும் முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திப்போம். மேலும் இஸ்லாம் இந்த பூமியில் மீண்டும் மேலோங்க அல்லாஹ் அருள் புரிவானாக ! ஆமீன்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: