Facebook Twitter RSS

ரஸ்ய குரூஸர் ஏவுகணைதாங்கி கடற்கலம் மத்தியதரைக்கடல் நோக்கி விரைவு..




  ரஸ்ய ஏவுகணை தாங்கி கடற் கலமான Moskva-வை மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதிக்கு விரையுமாறு ரஸ்ய கடற்படை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு துணையாக மேலும் 03 கடற்கலங்கள் கிழக்கு மெடிட்டேரியன் கடலை நோக்கி விரைகின்றன. இந்த தகவலை இன்டர்பக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஜிப்ரோல்டர் முனைக்கு நேராக பயணித்து இன்னும் சில தினங்களில் இது கிழக்கு மத்திய தரைக்கடலையடையும். அங்கு ஏலவே நிலை கொண்டுள்ள, கொள்ளவிருக்கும் ரஸ்ய கடற்கலங்களிற்கு பிளேக்ஸிப்பாக இது தொழிற்பட தயாராகிறது என ரஸ்ய இராணுவ வட்டாரங்களின் செய்திகளில் இருந்து தெரிய வருகிறது. 

சிரிய சமர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ரஸ்யாவின் Baltic Fleet மற்றும் Black Sea Fleet என்பவற்றுடன் மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்த குரூஸர் ஏவுகணைதாங்கி கலம் இணைந்து கொள்ளும். 

ரஸ்யா கடந்த செப்டம்பர் முதலாம் திகதி அதன் நவீன சட்டலைட் கண்காணிப்பு வசதிகள் அடங்கிய Priazovye எனும் வேவுக்கலத்தை மத்தியதரைக்கடலிற்கு அனுப்பியிருந்தது. இந்த கலம் அமெரிக்க போர்க்கலங்களின் நகர்வை கண்காணிக்கும் திறன் படைத்தது. 

கடந்த வாரமே ரஸ்ய பாதுகாப்பு அமைப்பு மேற்படி கடற்கலம் மத்தியதரைகடலிற்கு அனுப்பப்படும் என தெரிவித்திருந்தது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: